மைவிழி பார்வையிலே - 2
அத்தியாயம் - 105
"கல்யாணத்துக்கு இன்னும் மூனு நாள் தான் டைம் இருக்கு அதனால மூனாவது நாள் பந்தகால் நட்டு நலங்கு வைக்குற பன்க்ஷன் ஏற்பாடு பண்ணிருந்தாங்க..."
"ஊர்ல இருந்து தாத்தா, பாட்டிஸ் எல்லாருமே வந்துட்டாங்க..." 😊
பொண்ணு, மாப்பிள்ளை நாலு பேருமே ஒரே அப்பார்ட்மெண்ட்ல இருக்கிறதால மாடில பந்தல் போட்டு அங்க தான் நலங்கு வைக்க போறாங்க...
அன்னைக்கு காலைலயே எல்லாரும் சீக்கிரம் எழுந்து முதல்ல பந்தகால் நட்டுட்டு மேல மாடிக்கு போனாங்க...
அங்க இரண்டு சேர் கொஞ்சம் பக்கத்து பக்கத்துல வச்சி கீழ நலங்கு வைக்க தேவையான மஞ்சள், குங்குமம், பூ எல்லாமே வச்சிருந்தாங்க...
முதல்ல நிஷாந்த், மயூரனை அந்த சேர்ல உட்காரவச்சாங்க...
நிஷாந்த், மயூரன் : ஷர்ட் போடாம வெறும் பனியன் மட்டும் போட்டு லேஷ்டி கட்டிருந்தாங்க...
நிஷாந்த் : அம்மா ஷர்ட் போட கூடாதா கூச்சமா இருக்கு மா...
மீரா : நாங்க தான டா இருக்கோம் ஏன் கூச்சப்படுற கொஞ்ச நேரம் பொறுத்துக்க...
நிஷாந்த் : சரி மா...
மயூரன் : ஆமா ஆர்த்தி எங்க காணும்...
நிஷாந்த் : ஆமா சரண்யாவயும் காணும் மத்த எல்லாரும் இருக்கீங்க...
கயல் : மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்குறதை கல்யாண பொண்ணுங்க பார்க்க கூடாது...
நிஷாந்த் : அப்போ அவங்களுக்கு வைக்குறதை நாங்களும் பார்க்க கூடாதா...
மகா : ஆமா கண்டிப்பா பார்க்க கூடாது...
மயூரன் : இதெல்லாம் ரொம்ப அநியாயம்...
ராகவி : இன்னைக்கு மட்டும் இல்ல டா கல்யாண வரைக்குமே பார்க்க கூடாது...
மயூரன் : அம்மா மூனு நாள் பார்க்க கூடாதா 😱 ( ஷாக் ஆகி வாய தொறந்தான்)
மகதி : அவன் வாய்ல நிறைய சர்க்கரைய அள்ளி போட்டுட்டா " அப்படியே கொஞ்ச நேரம் பேசாம இரு "
மயூரன் : ம்ம் ம்ம் ( பேச முடியாம திணருனான்)
மகதி : அம்மா அவன் பேசுறதுக்கு முன்னாடி சீக்கிரம் ஆரம்பிங்க...
முதல்ல நிஷாந்த், மயூரன்க்கு நலங்கு வச்சி கீழ வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க அடுத்து சரண்யா, ஆர்த்திய அழைச்சிட்டு வந்து அவங்களுக்கும் நலங்கு வச்சி கீழ அழைச்சிட்டு போய்ட்டாங்க...
மறுநாள் ஈவ்னிங் எல்லாரும் மண்டபத்துக்கு கிளம்புனாங்க...
முதல்ல நிஷாந்த், சரண்யாக்கு நிச்சயம் பண்ண போறாங்க...
நிஷாந்த் : வொய்ட் ஷர்ட் ப்ளூ ஜீன்ஸ் போட்டு உட்கார்ந்து இருந்தான் அவன் கூட கார்த்திக், மீரா, நிரூபன் உட்கார்ந்து இருந்தாங்க...
எதிர்ல சரண்யா பச்சை கலர் பட்டு புடவை கட்டி சிம்பிள் மேக்கப் போட்டு தலை நிறைய பூ வச்சி அழகா இருந்தா... அவ கூட சரண், மகா உட்கார்ந்து இருந்தாங்க...
முதல்ல பத்திரிக்கை வாசிச்சிட்டு அடுத்து தட்டு மாத்திகிட்டாங்க...
அடுத்து மயூரன், ஆர்த்திக்கும் அதே போல நிச்சயம் பண்ணி தட்டு மாத்திகிட்டாங்க...
மணமகன் அறை,
மயூரன் : எல்லாரும் தூங்கிட்டாங்களானு பார்த்து மெதுவா எழுந்தான்...
நிஷாந்த் : எங்க டா போற...
மயூரன் : நீ இன்னும் தூங்கலையா...
நிஷாந்த் : இல்ல நீ எங்க போற...
மயூரன் : நான் ஆர்த்திய பார்க்க போறேன் நீயும் வரியா சரண்யாவ பார்க்கலாம்...
நிஷாந்த் : நான் வரல போடா யாராவது பார்த்தா ப்ரச்சனை ஆகிடும்...
மயூரன் : ச்சி பே ( மெதுவா நடந்து போனான்)
மணமகள் அறைக்கு வெளில நின்னு ஆர்த்திக்கு கால் பண்ணான்...
ஆர்த்தி : 😪 என்ன மாமா இந்த நேரத்துல கால் பண்ணிருக்க...
மயூரன் : ரூம் வெளில தான் இருக்கேன் வா...
ஆர்த்தி : போ மாமா யாராவது பார்த்துடுவாங்க எனக்கு தூக்கம் வருது...
மயூரன் : ஒழுங்கா வெளில வா டி இல்லனா உள்ள வந்து தூக்கிட்டு போய்டுவேன்...
ஆர்த்தி : அச்சோ மாமா இரு வரேன்...
மயூரன் : சீக்கிரம் வா ( கால் கட்)
ஆர்த்தி : அவ ஷால் எடுத்து தலைல போட்டுகிட்டு பெட்ல இருந்து எழுந்தா...
சரண்யா : ஹேய் எங்க டி போற...
ஆர்த்தி : அக்கா நீ தான பயந்துட்டேன் இன்னும் தூங்கலையா நீ...
சரண்யா : தூக்கம் வரல டி நீ தனியா எங்க போற...
ஆர்த்தி : மாமா ரூம் வெளில இருந்து கால் பண்ணாரு அதான் போறேன்...
சரண்யா : நிஷாந்த் கூட வந்திருக்கானா...
ஆர்த்தி : மாமா அப்படி எதுவும் சொல்லல அக்கா...
சரண்யா : சரி இரு நானும் வரேன்...
இரண்டு பேரும் வெளில போனாங்க...
மயூரன் : ஆர்த்தி உன்னை மட்டும் தான கூப்பிட்ட இவளை ஏன் அழைச்சிட்டு வந்த...
ஆர்த்தி : 😖 மாமா நான் கூப்பிடல அவங்க தான் வந்தாங்க...
சரண்யா : டேய் அடங்குறியா ரொம்ப குதிக்காத நாளைக்கு எங்களுக்கும் தான் மேரேஜ் இந்த நிஷாந்த் எங்க போனான்...
மயூரன் : அவனையும் கூப்பிட்டேன் அவன் தான் வரலனு சொல்லிட்டான்...
சரண்யா : அவனுக்கு கொழுப்பு அதிகமாகிடுச்சி நானே போய் பார்த்துட்டு வரேன்...
மயூரன் : எதோ பண்ணுங்க நீ வா ( ஆர்த்திய மாடிக்கு அழைச்சிட்டு போய்ட்டான்)
சரண்யா : நேரா மணமகன் அறைக்கு போனா...
நிஷாந்த் : தூக்கம் வராம மொபைல் யூஸ் பண்ணிட்டு இருந்தான்...
சரண்யா : அவ மொபைல்ல புடுங்குனா...
நிஷாந்த் : கத்த போனான்...
சரண்யா : அவன் வாய மூடி வெளில இழுத்துட்டு போய்ட்டா...
நிஷாந்த் : ( அவ கைய எடுத்தான்) என்ன டி பண்ணுற யாராவது பார்த்துட போறாங்க...
சரண்யா : மயூ ஆர்த்திய பார்க்க வந்தான்ல நீ ஏன்டா வரல...
நிஷாந்த் : கல்யாணத்துக்கு முன்னாடி இப்படிலாம் பார்த்து பேசிக்க கூடாது டி...
சரண்யா : யார் சொன்னா...
நிஷாந்த் : அம்மா, அத்தை எல்லாரும் தான்...
சரண்யா : கொஞ்ச நேரம் என்கூட பேசு...
நிஷாந்த் : எனக்கு தூக்கம் வருது டி...
சரண்யா : நீ மட்டும் இப்போ பேசலனா எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லனு லெட்டர் எழுதி வச்சி ஓடி போய்டுவேன் டா...
நிஷாந்த் : 😱😱😱 யார் கூட...
சரண்யா : ம்ம்ம் நம்ம வாட்ச்மேன் தாத்தா கூட...
நிஷாந்த் : அவரால வேகமா ஓடி வர முடியாதே வேணும்னா நான் கூட வரேன்...
சரண்யா : எரும எரும ( அவனை அடிச்சா)
நிஷாந்த் : 😂😂😂 சும்மா சொன்னேன் டி அடிக்காத வா...
அவளை தனியா அழைச்சிட்டு போய் பேச ஆரம்பிச்சான்... சரி வாங்க மயூரன், ஆர்த்தி என்ன பண்ணுறாங்கனு பார்க்கலாம்...
ஆர்த்தி : ஏன் மாமா இப்படி பண்ணுற யாராவது பார்த்துட போறாங்க...
மயூரன் : என்ன டி உன்னை பார்க்க ஆசையா வந்தா இப்படி சொல்லுற...
ஆர்த்தி : சாரி மாமா ( அவனை ஹக் பண்ணிகிட்டா)
மயூரன் : இன்னைக்கு தான் நாம லவ்வர்ஸ்ஸா இருக்குற லாஸ்ட் டே நாளைல இருந்து கணவன், மனைவி ஆகிடுவோம் டி அதான் மீட் பண்ணனும்னு வர சொன்னேன்...
ஆர்த்தி : சரி சொல்லு லவ்வர்ஸ்ஸா என்ன பண்ணனும்...
மயூரன் : ஒரு முத்தம் குடு...
ஆர்த்தி : அவன் கைய புடிச்சி குடுத்தா...
மயூரன் : 😠😠😠 அவளை முறைச்சி பார்த்தான்...
ஆர்த்தி : 😁 சாரி சாரி ( எக்கி அவன் கன்னத்துல குடுத்தா) 😘😘😘
மயூரன் : 😠 அப்பவும் முறைச்சான்...
ஆர்த்தி : இன்னொரு கன்னத்துல குடுத்தா 😘😘😘
மயூரன் : 😠 அப்பவும் முறைச்சிட்டு தான் இருந்தான்...
ஆர்த்தி : மாமா நீ என்ன ப்ளான் பண்ணுறனு புரியுது ஆனா லிப்ஸ்லலாம் இப்போ தர முடியாது...
மயூரன் : 😄 சரி சரி தர வேண்டா வா ( அவ கை கோர்த்து மாடில உள்ள கட்டைல உட்கார்ந்தா)
ஆர்த்தி : இதுக்கு தான் கூப்டீங்களா...
மயூரன் : ஆமா கொஞ்ச நேரம் எதாவது பேசு...
ஆர்த்தி : அவன் கோர்த்து இருந்த கைய இறுக்கி புடிச்சி அவன் தோள்ல சாஞ்சி கதை பேச ஆரம்பிச்சா...
மயூரன் : அவனும் தன்னோட காதலிய நிலவொளில ரசிக்க ஆரம்பிச்சான்...
தொடரும்...
நாளைக்கு நிஷாந்த், சரண்யா அண்ட் மயூரன், ஆர்த்திக்கு மேரேஜ் எல்லாரும் மறக்காம வந்துடுங்க ரீடர்ஸ்...
# Sandhiya.

6 Comments
Super sis ma ❤️❤️ vanthurom nalaiku marriage Ku 😊😊
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMarriage preparation la super ah poitu iruku nalaiku marriage la meet pannalam 💖
ReplyDeleteசூப்பர் கண்டிப்பா வந்தரோம்
ReplyDeleteSprrr sissy❤️ so cuteee😻😻😍kandipaa marriage ku vathurom😍😍😍
ReplyDeleteSo happy congratulations to both couples 🤩🥰🥰😍🥳🥳🥳🥳🥳
ReplyDelete