"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 5

 


வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 5

எல்லாரும் சாப்பிட்டுட்டு பேசிட்டு இருந்தாங்க...

தமிழ் : எழுந்து கொல்லைக்கு போனான்...

மாடு எல்லாம் இவனை பார்த்து கத்தவும் அதுங்களுக்கு வைக்கோல் அள்ளி போட்டான்...

அர்ஜுன் : தமிழ்...

தமிழ் : என்ன அர்ஜுன் எதாவது வேணுமா...

அர்ஜுன் : அது நான் வெளில எங்கயாவது தங்கிட்டு அப்பப்போ வந்துட்டு போகவா...

தமிழ் :  ஏன் அர்ஜுன் இந்த வீடு உனக்கு புடிக்கலயா...

அர்ஜுன் : அச்சோ நான் அந்த அர்த்தத்துல சொல்லல இது கிராமம் வயசு பொண்ணு ( அஞ்சலிய சொல்லுறான்)   இருக்குற வீட்டுல நான் தங்குனா எதாவது தப்பா பேசுவாங்க...

தமிழ் : அப்போ நான் கூட தான் வயசு பையன் நான் இருக்குற வீட்டுல தான உன் தங்கச்சிய விட்டுட்டு போற அப்போ எதாவது பேச மாட்டாங்களா...

அர்ஜுன் : நீங்க இந்த ஊர் பையன் உங்களை பத்தி எல்லாருக்கும் நல்லா தெரியும் அப்படி எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்க...

தமிழ் : அர்ஜுன் நீ இங்க வந்து கொஞ்ச நேரம் தான் ஆகுது நீ எப்படி பட்டவனு எனக்கு தெரியாது ஆனா தப்பான பையன் இல்லனு மட்டும் எனக்கு நல்லாவே தெரியுது...

அப்பறம் நீ உன் தங்கச்சிக்காக தான இங்க வந்துருக்க...

அர்ஜுன் : எப்படி உங்களுக்கு தெரியும்...

தமிழ் : நானும் ஒரு அண்ணன் தான் தன் தங்கச்சி அவளோட தோழி வீட்டுக்கே போனாலும் அந்த வீட்டுல உள்ளவங்க எப்படினு தெரியாம அங்க தங்க வைக்க கொஞ்சம் பயமா தான் இருக்கும்...

அர்ஜுன் : ஆனா நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க தமிழ் எனக்கு எந்த பயமும் இல்ல...

தமிழ் : நீ உன் தங்கச்சி கூடவே இரு அப்போ தான் அவங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்...

அப்பறம் உன்னை வெளில தங்க வச்சா என் தங்கச்சி மேல எனக்கு நம்பிக்கை இல்லாத மாதிரி ஆகிடும் அதனால நீ எங்கயும் போக கூடாது சரியா... வா உள்ள போலாம்...

அர்ஜுன் : சரி...

அப்பறம் எல்லாரும் அவங்கவங்க ரூம்ல தூங்க போய்ட்டாங்க... அஞ்சலி ரூம்ல மிருவும் தமிழ் ரூம்ல அர்ஜுனும் தங்கிகிட்டாங்க...

மிருக்கு மட்டும் புது இடம்ங்குறதால தூக்கம் வரவே இல்ல...

மிருனாழினி : புரண்டு புரண்டு படுத்துட்டு இருந்தா..

அஞ்சலி : ஊருக்கு வந்த சந்தோஷத்துல நிம்மதியா தூங்கிட்டு இருந்தா...

மிருனாழினி : ( எழுந்து உட்கார்ந்து அஞ்சலிய பார்த்தா) நான் இங்க தூக்கம் வராம தவிக்குறேன் இவ எப்படி நிம்மதியா தூங்குறா பாரு...

இவளுக்கு தூக்கம் வராம மொபைல் எடுத்து யூஸ் பண்ணுறது ஜன்னல் வழியா வெளில வேடிக்கை பார்க்குறதுனு எதேதோ பண்ணிட்டு இருந்தா...

காலைல 5 மணிக்கு எப்போதும் போல பாட்டு சத்தம் கேட்டு தமிழ் எழுந்தான்...

அர்ஜுன் : குளிர்ல கொஞ்சம் நடுங்கிட்டு இருந்தான்...

தமிழ் : அவனுக்கு போர்வைய போத்தி விட்டுட்டு வெளில போனான்...

மிருனாழினி : அவளுக்கும் தூக்கம் இல்லாததால பாட்டு சத்தம் கேட்டு வெளில வந்தா...

தமிழ் : என்னங்க அதுக்குள்ள எழுந்துட்டிங்களா...

மிருனாழினி : இல்லங்க புது இடம் தூக்கம் வரலங்க அதான்...

தமிழ் : ஓஓஓ ஆனா அர்ஜுன் நைட் எனக்கு முன்னாடியே தூங்கிட்டான் இப்பவும் நல்லா தூங்குறான்...

மிருனாழினி : அவன் அப்படி தான்ங்க படுத்த உடனே தூங்கிடுவான்...

தமிழ் : ம்ம்ம்...

மிருனாழினி : தலைல துண்டு எல்லாம் கட்டிகிட்டு எங்க கிளம்பிட்டீங்க...

தமிழ் : பால் கறக்க போறேன்...

மிருனாழினி : நானும் வந்து பார்க்கலாமா...

தமிழ் : ம்ம்ம் வாங்க...

மிருனாழினி : அவன் கூட போனா...

தமிழ் : மாட்டு கொட்டகைக்கு போனதும் ஒரு மாட்டோட கன்றுகுட்டிய அவிழ்த்து விட்டான்...

அது ஓடி போய் மாட்டு மடில பால் குடிக்க ஆரம்பிச்சது...

தமிழ் : கன்று குட்டிய புடிச்சி கட்டிட்டு பால் கறக்க ஆரம்பிச்சான்...

மிருனாழினி : கன்றுகுட்டிக்கு பால் போதுமா...

தமிழ் : கறந்ததும் மிச்ச பாலை குடிக்க வச்சிடலாம்ங்க ( சொல்லிட்டே சொம்புல கறந்த பாலை பால் கேன்ல ஊத்துனான்)

மிருனாழினி : இந்த கேன்ல உள்ள பாலை என்ன பண்ணுவீங்க...

தமிழ் : அப்பறமா பால் சொசைட்டில இருந்து ஆள் வந்து எடுத்துட்டு போய்டுவாங்க...

மிருனாழினி : ஓஓஓ...

தமிழ் : அடுத்த மாடு கறக்க இன்னொரு கன்றுகுட்டிய அவிழ்த்து விட்டான்...

மிருனாழினி : நான் கறக்கவா...

தமிழ் : கறக்க தெரியுமா...

மிருனாழினி : இல்ல நீங்க கறக்குறதை பார்த்ததும் ஆசையா இருக்கு...

தமிழ் : சரி வாங்க...

மிருனாழினி மாட்டு மடில கை வைக்கவும் மாடு கால்ல தூக்குனுச்சி...

மிருனாழினி : 😱 எழுந்துட்டா...

தமிழ் : ஒன்னும் இல்லமா நீ புதுசா இருக்கவும் பயப்பிடுது அதான் ( அவன் மாட்டு மூக்கு கயித்தை புடிச்சிகிட்டான்)

மிருனாழினி : அவ எவ்ளோ ட்ரை பண்ணியும் பால் வரவே இல்ல...

தமிழ் : இந்த விளக்கெண்ணைய கைல தடவிக்கங்க...

மிருனாழினி : 😄😄😄 ஐஐஐ இப்போ வருது...

தமிழ் : ம்ம்ம்...

மிருனாழினி : கை வலிக்குதுங்க...

தமிழ் : சரி எழுந்திரிங்க நான் கறக்குறேன்...

மிருனாழினி : பால் கறக்க கஷ்டமா இருக்குங்க நீங்க எப்படி கறக்குறிங்க...

தமிழ் : எனக்கு பழகிடுச்சி...

மிருனாழினி : நாங்க எல்லாம் பாக்கெட் பால் தான் குடிச்சிருக்கோம் பசும்பால் இதுவரை குடிச்சது இல்ல...

தமிழ் : இங்க இருக்குற வரை பசும்பால் தான் குடிக்க போறிங்க...

மிருனாழினி : ம்ம்ம்...

தமிழ் : வீட்டுக்கு தேவையான பால் சொம்புல எடுத்துட்டு வீட்டுக்குள்ள போக போனான்...

மிருனாழினி : குடுங்க நான் எடுத்துட்டு வரேன்...

தமிழ் : சரி இந்தாங்க ( பால் கேன் எடுத்து உள்ள வச்சிட்டு அவ கூட போனான்)

மகாலெட்சுமி : என்னமா மிருனாழினி அதுக்குள்ள எழுந்துட்டியா...

தமிழ் : அவங்களுக்கு புது இடம்னு தூக்கம் வரலயாம் மா...

மகாலெட்சுமி : அச்சோ இப்போ போய் தூங்கு டா...

மிருனாழினி : வேண்டாம் மா எனக்கு தூக்கம் வரல...

மகாலெட்சுமி : சரி மா..

மிருனாழினி : இந்தாங்க பால்...

மகாலெட்சுமி : சரி மா நீ போய் பல்விலக்கிட்டு முகம் கழுவிட்டு வா நான் காபி போடுறேன்...

மிருனாழினி : ம்ம்ம் சரி மா...

அப்பறம் எல்லாரும் எழுந்து வந்துட்டாங்க அர்ஜுன், அஞ்சலி தவிர, எல்லாரும் காபி குடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்க...

தமிழ் : அம்மா வயல்ல களை எடுக்குற வேலை இருக்கு காலைல சாப்பிட வர மாட்டேன் யார்கிட்டயாவது சாப்பாடு குடுத்தனுப்புங்க...

மகாலெட்சுமி : சரி பா...

மிருனாழினி : நானும் உங்க கூட வரவா...

தமிழ் : ஏன் மா...

மிருனாழினி : அஞ்சலி இன்னும் எழுந்திரிக்கல எனக்கு போர் அடிக்குது அதான்..

தமிழ் : அப்போ அம்மா அஞ்சலி கிட்ட சாப்பாட்டை குடுத்து அனுப்புங்க நான் இவங்களை நம்ம வயலுக்கு அழைச்சிட்டு போறேன்...

மகாலெட்சுமி : சரி பா...

தமிழ் : வாங்க போலாம்...

இரண்டு பேரும் சேர்ந்து வயலுக்கு போனாங்க...

தொடரும்...

# Sandhiya.

 

Post a Comment

3 Comments

  1. Arjun crt ah than pesuran puthusa oru aal vanthu iruntha apdi than pesuvanga tamil solrathum unmai than avanga familyla yaarum ethuvum sollalaye appo ingaye irukalam miru neraya puthu visayangala kathukira

    ReplyDelete
  2. Woow🥰🥰🥰🥰thamizh maadhiri oruthan venum anna na..romba asaiya iruku

    ReplyDelete