"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 11

 


வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 11

"உதய் அம்மா சீதாவுக்கு கூட பிறந்த அண்ணன் ஒருத்தர் இருக்காரு பேரு ராஜாராமன் அவர் மனைவி மல்லிகா அவங்களுக்கு இரண்டு பிள்ளைகள்..." 🧒👧

மூத்தவன் கதிரேசன் இளையவள் கனிமொழி...👫

சின்ன வயசுல இருந்தே கனிமொழிக்கு உதய்னா ரொம்ப புடிக்கும் அதனால மாமா மாமானு இவனையே தான் சுத்தி வருவா...😍

கனிமொழி, அஞ்சலிக்கு ஒரே வயசு தான் இரண்டு பேரும் நல்ல தோழிகளும் கூட...🤝

தமிழ், உதய் எங்க போனாலும் கூடவே கனிமொழியும், அஞ்சலியும் சேர்ந்தே சுத்துவாங்க...👫

ஆனா கதிரேசன் அப்படி இல்ல எப்போதும் தனியா தான் இருப்பான் இவங்க கூட சேர மாட்டான்...😑

தமிழும், உதய்யும் 12 வது படிக்கும் போது கனிமொழியும் அஞ்சலியும் ஒன்பதாவது படிச்சாங்க...

அந்த நேரம் தான் ஊருக்குள்ள பஞ்சாயத்து எலக்ஷன் நடக்க இருந்தது...

"அதுல தமிழ் அப்பா தேவேந்திரனுக்கு எதிரா ராஜாராமன் நின்னாரு..."🧍🏻‍♂️

"உதய் அப்பா பேரு முருகன்னு வச்சிக்கலாம்..."

முருகனும் தேவேந்திரனும் நண்பர்களா இருந்ததால முருகன் எப்போதும் நேவேந்திரன் கூடவே இருந்து எலக்ஷன்ல தேவேந்திரன் வெற்றி பெற உதவினார்...

"இதனால ராஜாராமன் முருகன் மேல கோவமா இருந்தாரு..." 😠

"இந்த நேரத்துல தான் புயல் வந்து பயிர் அழிஞ்சதால முருகன் நெஞ்சுவலி வந்து இறந்து போக அவர் மேல இருந்த கோவத்துல ராஜாராமன் அவர் இறுதி சடங்குக்கு வந்துட்டு போனாவர் அப்பறம் அவங்க வீட்டு பக்கமே வரல..."

"தன் தங்கச்சியும் அவ பையனும் கடன் குடுத்தவங்களால கஷ்டப்படும் போது கூட உதவி பண்ண வரல..."

அதுக்கு அப்பறம் தமிழ் அப்பா தான் அவங்க நிலத்தை விக்க உதவி பண்ணி உதய் காலேஜ் படிக்கவும் உதவினார்...

இதனாலயே ராஜாராமன் குடும்பத்துக்கும் அவர் தங்கச்சி சீதா குடும்பத்துக்கும் இடையே உள்ள உறவு முறிஞ்சிடுச்சி...

தேவேந்திரன் குடும்பத்தால தான் தன் தங்கச்சி என்னை விட்டு பிரிஞ்சிட்டானு கதிரேசன் மனசுல விஷத்தை விதைச்சிட்டாரு...

"இப்போ கதிரேசன் தமிழ எங்க பார்த்தாலும் மொறைச்சிட்டு தான் போவான்..."

அதை கேட்டு கனிமொழியும் அஞ்சலி கூட சண்டை போடவும் உதய் அவளை மொத்தமா வெறுத்துட்டான்...

"அஞ்சலியும் அதுக்கு பிறகு  கனிமொழி கூட பேசுறது இல்ல..." 🤐

"முதல்ல தமிழ் குடும்பத்து மேல கோவமா இந்த கனிமொழிக்கு சீதாக்கும் உதய்க்கும் தமிழும், தேவேந்திரனும் பண்ற உதவிய பார்த்து தான் தப்பா புரிஞ்சிகிட்டதை உணர்ந்து எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டா..."

ஆனா உதய்யும், அஞ்சலியும் மட்டும் அவளை மன்னிக்கவே இல்ல... இதனால தான் உதய்யும், அஞ்சலியும் அவளை பார்த்து முறைச்சாங்க...😠

( இப்போ கதைக்கு போலாம் ஃப்ரண்ட்ஸ்)

கனிமொழி : "ஏன் மாமா அப்பா மேல உள்ள கோவத்தை என்மேல காட்டுற..." 😔

உதய் : ஏய் ( அவளை அடிக்க கை ஓங்கிட்டு போனான்)

தமிழ்மாறன் : "அவனை தடுத்து புடிச்சிகிட்டான்..."

உதய் : "தமிழ் தயவு பண்ணி அவளை போக சொல்லு..." 😬

கனிமொழி : மாமா 😭😭😭

உதய் : "என்னடி மாமா நாங்க செத்துட்டோம இல்ல உயிரோட தான் இருக்கோமானு உன் அப்பன் பார்த்துட்டு வர சொன்னானா..." 😬

கனிமொழி : "தமிழ் அண்ணா நீங்களாவது மாமாவ என்மேல கோவ பட வேண்டானு சொல்லுங்க..." 😰

உதய் : "இப்போ ஏன்டி அவனை இழுக்குற உன் அப்பன் பேச்சை கேட்டு என் தமிழையும் அவன் குடும்பத்தையும் தப்பா பேசுனவ தான நீ..." 😠

கனிமொழி : "அப்போ எதோ தெரியாம பேசிட்டேன் மாமா..." 😔

உதய் : "சின்ன வயசுல இருந்து தமிழையும் அஞ்சலியயும் உனக்கு தெரியும் தான உன் அப்பன் ஒருவார்த்தை சொன்னதுக்காக எப்படி உன்னால அஞ்சலி கூட சண்டை போட முடிஞ்சது..."

கனிமொழி : "அஞ்சலிய பாவமா பார்த்தா..." 😥😥😥

அஞ்சலி : " கைய முறுக்கி கிட்ட அவளை முறைச்சி பார்த்துட்டு இருந்தா..." 😠😠😠

உதய் : "நாங்க கஷ்டப்படும் போது வேடிக்கை மட்டும் தான பார்த்துட்டு இருந்தீங்க... இப்போ மட்டும் ஏன் டி உறவு கொண்டாடிட்டு வர..." ☹️

கனிமொழி : "அப்போ நான் சின்ன பொண்ணு மாமா எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியல..."

உதய் : ( அஞ்சலிய கிட்ட இழுத்தான்) இவளும் சின்ன பொண்ணு தான் இவ கழுத்துல காதுல கைல போட்ருந்த தங்க நகை எல்லாத்தையும் கழட்டி குடுத்தா காலுல போட்ருந்த கொலுச கூட... ஆனா நீ உங்க அப்பா எங்க வீட்டுக்கு போக கூடாதுனு சொல்லவும் உன் வீட்டுலயே இருந்துட்டல எங்க வீட்டு பக்கம் வரவே இல்ல...

கனிமொழி : தலை குனிஞ்சி நின்னா...😔

உதய் : நான் பழசு எதையும் பேச விரும்பல அது எனக்கு தேவையும் இல்ல.. எனக்கு தேவைபடும் போது கிடைக்காத உங்க உதவி இப்போ தேவையும் இல்ல அதனால வீனா இங்க வந்து என்னை டென்சன் பண்ணாத...

கனிமொழி : அத்தை நீங்களாவது மாமா கிட்ட சொல்லி என்னை மன்னிக்க சொல்லுங்க...

சீதா : உதய் பாவம் டா அவ சின்ன பொண்ணு...

உதய் : 😠😠😠 என்ன மா பேசுறிங்க அப்பா இறந்த பிறகு நாம பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து போய்டுச்சா... உன்னை இங்க தனியா விட்டுட்டு நான் எங்கயோ போய் வேலை பார்த்துட்டு இருக்கனே அதை மறந்துட்டியா...

எனக்கு மட்டும் என்ன ஆசையா மா நம்ம ஊரை, உன்னை, தமிழ விட்டு அவ்ளோ தூரம் போய் வேலை பார்க்க 😓😓 எல்லாம் நம்ம நிலத்தை வாங்க தான இவ்ளோ கஷ்டப்படுறேன்...

இவ அப்பா மட்டும் உதவி பண்ணிருந்தா நான் நிலத்தை வித்துருக்கவே மாட்டேன் மா நானும் தமிழ் மாதிரி விவசாயம் பண்ணி நம்ம ஊர்ல சந்தோஷமா இருந்திருப்பேன் 😭😭😭 ( கோவமா ஆரம்பிச்சி அழுகையோட முடிச்சான்)

தமிழ்மாறன் : ( அவனை கட்டி புடிச்சான்) டேய் உதய் அழாத டா...

அஞ்சலி : ஹேய் கனி உன்னால தான்டி என் மாமா அழறான் ஒழுங்கா போய்டு 😠😠😠 ( கோவமா சொல்லிட்டு உதய்ய உள்ள இழுத்துட்டு போய்ட்டா)

கனிமொழி : 😭😭😭 அவளும் அழுதுட்டே அங்க இருந்து போய்ட்டா...

மத்த எல்லாரும் உள்ள போனாங்க...

உதய் : அஞ்சலி மடில படுத்து அழுதுட்டு இருந்தான்...

அஞ்சலி : அவ கண்ணுல வழியுற கண்ணீரை கூட துடைக்காம உதய் தலை முடிய கோதிட்டு இருந்தா...

தமிழ்மாறன் : _அவன் பக்கத்துல உட்கார்ந்து உதய் கைய புடிச்சிகிட்டான், அப்படியே அஞ்சலி கண்ணீரையும் துடைச்சி விட்டான்..."

"உதய்யும் அவன் கைய இறுக்கி புடிச்சான்..."

"அர்ஜுன், மிருனாழினிக்கு தான் அங்க உள்ள சூழ்நிலைய பார்க்க கஷ்டமா இருந்தது..."

சீதா : "டேய்! உதய் அழாத டா உங்க அப்பா இறந்தப்ப கூட நீ இருக்கிற தைரியத்துல தான் இருந்தேன் நீயே இப்படி அழுதா நான் என்ன டா பண்ணுறது..." 😰😰😰

உதய் : சாரி மா ( எழுந்து அவங்களை ஹக் பண்ணிகிட்டான்)

சீதா : "உன்னால அஞ்சலியும் அழறா பாரு..." 🧐

உதய் : பாப்பா அழாத ( அவ கண்ணீரை துடைச்சி விட்டான்)

அஞ்சலி : நீ முதல்ல அழாத மாமா என் மாமா எப்போதும் கெத்தா இருக்கனும்...😉

உதய் : ( சட்டை காலரை தூக்கி விட்டான்) இது ஓகே வா...😉

அஞ்சலி : 😄😄😄 சூப்பர்...

தமிழ்மாறன் : "ஏன்டா இப்படி பண்ணுற மிச்ச பணத்தை நான் தரேன் நீ இப்பவே வேலைய விட்டு வந்துடு டா..."

உதய் : மச்சான் நீ எனக்கு நிறைய பண்ணிட்ட டா அதை சாகுற வரை என்னால மறக்க முடியாது... இன்னும் மூனு மாசம் தான் அப்பறம் இங்க மொத்தமா வந்துடுவேன் அதுக்கு பிறகு உங்களை பிரிஞ்சி எங்கயும் போக மாட்டேன்...

தமிழ்மாறன் : இனிமேல் உனக்கு எந்த கஷ்டமும் வராது டா படாத கஷ்டமெல்லாம் சின்ன வயசுலயே அனுபவிச்சிட்ட இனிமேல் உன் வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான் இருக்கும்...

உதய் : நீ என் கூட இருக்குற வரை எனக்கு எந்த கஷ்டமும் வராது டா ( அவனை ஹக் பண்ணிகிட்டான்)

அஞ்சலி : நானும் நானும் ( அவங்க கூட சேர்ந்துகிட்டா)

உதய் : நீங்களும் வாங்க டா ( உதய் கை நீட்ட)

"அர்ஜுனும் மிருனாழினியும் அவங்க கூட சேர்ந்துகிட்டாங்க..." 👫👫🧍🏻‍♂️

சீதா : "பசங்களோட ஒற்றுமைய சந்தோஷமா பார்த்தாங்க..."

தொடரும்...

# Sandhiya.

 


Post a Comment

5 Comments

  1. Udhay kova padrathu crt than ava appa pecha ketutu apo entha helpum pannama koodave palaguna tamizh familyum thititu ippo vanthu mama nu pesuna avan pesiruvana

    ReplyDelete
  2. சூப்பர் உதய் பண்ணது சரிதான் கனிமொழி அவ அப்பா பேச்சை கேட்டு இப்படி பண்ணிருக்கபடாது

    ReplyDelete
  3. sprr sissy😍😍❤️uday kovama CRT tha 🥰🥰kovama pogama kocha nalu agum

    ReplyDelete
  4. Udhai nudaiya kovam seriyanadhu...anjali udhai ku pair ah vendam arjun ku pair ah varanum

    ReplyDelete