"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 30

வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 30

"சர்டிஃபிகேட் வாங்கி முடிச்சதும் மிரு ஃப்ரண்ட்ஸ் வெளில போலானு சொன்னதால எல்லாரும் சேர்ந்தே வெளில போனாங்க..."

"காலேஜ்ல இருந்து மூவிக்கு போய்ட்டு அப்படியே அவங்கவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க..."

தமிழ்மாறன் : "அதான் சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கியாச்சே நாங்க ஊருக்கு கிளம்புறோம்..." 😌

மிருனாழினி : "மாறன் நாளைக்கு தான் அப்பா, அம்மா வீட்டுக்கு வராங்க அதனால நாளைக்கு ஃபுல்லா எங்க வீட்டுல இருந்துட்டு நைட் ஊருக்கு போலாம் சரியா..."

தமிழ்மாறன் : "அதெல்லாம் வேண்டா யாழினி வயல்ல நிறைய வேலை இருக்கும் அப்பாக்கு தான் கஷ்டமா இருக்கும் நாங்க இன்னைக்கே கிளம்புறோம்..."

மிருனாழினி : "ப்ளீஸ் மாறன் நாளைக்கு ஒருநாள்..."

அர்ஜுன் : "தமிழ் அதான் மிரு சொல்லுறாள நாளைக்கு சித்தி, சித்தப்பா வந்ததும் அவங்கள்டயும் ஒருநாள் இருந்து பேசிட்டு போங்க..."

தமிழ்மாறன் : சரி அர்ஜுன்....

அடுத்தநாள் காலை,

அர்ஜுன் அம்மா காலைல எழுந்து வரும் போது கிட்சன்ல லைட் எரியுறதை பார்த்தாங்க " கிட்சன்ல யார் இருக்கா " யோசனையோட கிட்சன் உள்ள போனாங்க...🚶🏻‍♀️

தமிழ்மாறன் தான் கேஸ் ஆன் பண்ணி எல்லாருக்கும் காபி போட்டுட்டு இருந்தான்...

அ. அம்மா : "தமிழ் அதுக்குள்ள எழுந்துட்டியா..." 🤔

தமிழ்மாறன் : ஆமா அத்தை இன்னைக்கு நீங்க லேட் அதான் நானே காபி போட்டுட்டேன் எப்படி இருக்குனு சொல்லுங்க ( அவங்க கிட்ட ஒரு காபி கப் நீட்டுனான்)

அ. அம்மா : "சூப்பரா இருக்கு தமிழ் என்னை விட நல்லா போடுறியே..." 👌

தமிழ்மாறன் : "நன்றி அத்தை... வீட்டை சுத்தி தோட்டம் நல்லா பெருசா இருக்கே அத்தை பூ செடி மட்டும் வைக்காம எதாவது காய்கறியும் தோட்டத்துல வளர்க்கலாம்ல கலப்படம் இல்லாத நல்ல காய்கள் கிடைக்குமே..."

அ. அம்மா : "காய்கறியா அதெல்லாம் பராமரிக்குறது கஷ்டமே இருக்குமே தமிழ்..."

தமிழ்மாறன் : "அப்படி இல்ல அத்தை ஈசி தான் நான் சொல்லி தரேன்..."

அ. அம்மா : "அப்படியா அப்போ அர்ஜுன் எழுந்ததும் அவனை அழைச்சிட்டு போய் நீயே வாங்கிட்டு வந்துடுறியா..."

தமிழ்மாறன் : சரி அத்தை...

"அப்பறம் அர்ஜுன் எழுந்து வந்ததும் இரண்டு பேரும் போய் கத்தரிக்காய், தக்காளி, பச்ச மிளகாய் இதெல்லாம் செடியாவும் அவரைக்காய், கொத்தவரங்காய், பாகற்க்காய், புடலங்காய், வெண்டைக்காய் இதெல்லாம் விதையாவும் வாங்கிட்டு வந்தாங்க..." 🌴🍁🌴

"மிருனாழினி லேட்டா தான் எழுந்தா, அவ ரூம் பால்கனில வந்து காபி குடிச்சிட்டு இருந்தா..." ☕

மிருனாழினி : "வானத்துல காக்கா, குருவி எல்லாம் பறக்குறதை பார்த்துட்டு இருந்தா..." 🕊️🕊️🕊️

கீழ எதோ சத்தம் கேட்கவும் கீழ பார்த்தா அங்க தமிழ்மாறன் அர்ஜுன் அவன் அம்மா வோட நின்னு செடிய ஒவ்வொரு இடத்துல வச்சி தண்ணி ஊத்திட்டு விதையயும் ஒவ்வொரு இடத்துல புதைச்சிட்டு தண்ணி ஊத்துனான், அதுல பாகற்க்காய், புடலங்காய், அவரைக்காய் எல்லாம் கொடி ஓடும் அதனால அதுக்கும் மேல நாலு பக்கமும் கழி ஊனி பந்தல் மாதிரி கட்டுனான்...

அப்பறம் அதுக்கெல்லாம் என்ன உரம் போடனும் எப்போ தண்ணி விடனும் இதெல்லாம் அர்ஜுன் அம்மாக்கு சொல்லி குடுத்தான்...

தமிழ்மாறன் அர்ஜுன் அம்மா கூட நெருங்கி பழக ஆரம்பிச்சிட்டானு மிருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது அதே மாதிரி அவ அப்பா, அம்மா கிட்டயும் பழகனும்னு ஆசை பட்டா...

அப்பறம் காலை சாப்பாடு அர்ஜுன் வீட்டுல சாப்பிட்டுட்டு மிரு தமிழ் மாறனையும் அஞ்சலியயும் அவ வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டா...

அங்க போனதும் அவ மொத்த வீட்டையும் இரண்டு பேருக்கும் சுத்தி காட்டுனா...

ஃபுல்லா பார்த்துட்டு ஹால்ல வந்து உட்காரும் போது சமையல் அம்மா மூனு பேரும் ஜூஸ் கொண்டு வந்து குடுத்துட்டு போனாங்க...

அந்த நேரம் வெளில கார் சத்தம் கேட்டவும் மிரு எழுந்து வெளில ஓடுனா...

தமிழ்மாறன், அஞ்சலி : எழுந்து நின்னாங்க...

மிருனாழினி : 😄😄😄 மம்மி, டாடி ( ஹக் பண்ணா)

மி. அம்மா : மிரு எப்போ வந்த...🤔

மிருனாழினி : டூ டேஸ் ஆகுது மம்மி...😊

மி. அப்பா : "மிரு நல்லா இருக்கியா டா..."

மிருனாழினி : ஃபைன் டாட்...😊

மி. அம்மா : சரி உள்ள வாங்க...

உள்ள தமிழ், அஞ்சலி நிக்குறதை பார்த்ததும் மிரு அப்பா, அம்மா யோசனையோட அவங்களை பார்த்தாங்க...

மிருனாழினி : மாம், டாட் இவ என் ஃப்ரண்டு அஞ்சலி அவங்க அவளோட அண்ணன் தமிழ்மாறன்...

அஞ்சலி : ஹலோ ஆன்ட்டி ஹாய் அங்கிள்...

மிரு அப்பா, அம்மா : ஹாய் மா...

தமிழ்மாறன் : வணக்கம் அத்தை, மாமா ( அர்ஜுன் அப்பா, அம்மாவ அத்தை, மாமானு கூப்பிடுறதால இவங்களையும் அப்படியே கூப்பிட்டான்)

மிரு அப்பா, அம்மா : அவன் வணக்கம் சொல்லவும் அவனை ஒரு மாதிரி பார்த்தாங்க... அத்தை, மாமானு உறவு முறை சொல்லுறதும் அவங்களுக்கு புடிக்கல...😑

தமிழ்மாறன் : பதில் வணக்கம் சொல்லாம ஒருமாதிரி பார்க்கவும் அவனுக்கு லைட்டா கோவம் வந்தது ஆனா மிருக்காக வெளிகாட்டிக்கல...

மிரு அப்பா, அம்மா : எதுவும் பேசாம ரூம்க்கு போய்ட்டாங்க...🚶🏻‍♀️🚶🏻

மிருனாழினி : சாரி மாறன் அவங்க கொஞ்சம் டயர்டா இருக்காங்க ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிடும் அப்பறம் நல்லா பேசுவாங்க...😊

தமிழ்மாறன் : ம்ம்ம்...

அஞ்சலி : நீ உன் மாம், டாட் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு மிரு நாங்க அர்ஜுன் வீட்டுல இருக்கோம்...

அவ பதில் கூட எதிர் பார்க்காம தமிழ் கைய புடிச்சி அழைச்சிட்டு போய்ட்டா ஏன்னா அவளுக்கும் மிரு அப்பா, அம்மாவோட நடவடிக்கை புடிக்கல...

மிருனாழினி : 😢😢😢 "என்ன பண்ணுறதுனு புரியாம நின்னா..." 🚶🏻‍♀️

தொடரும்...

# Sandhiya.  

Post a Comment

10 Comments

  1. Miru parents enna ipdi behave panranga veetuku vanthavanga kita ipdithan behave pannuvangala pavam miru than feel panra

    ReplyDelete
  2. Miru parents ippadi behave pantrathala pavam miruku than kastama iruKum 😒😒😒😒

    ReplyDelete
  3. Anjali Pannathu correct than avunga Anna than important nana irunthalum Appadi than panniruppen 1 minutes kuda anga Iruka vida matten kudittu vanthuruppen 😡😡😡😡😤😤😤😤😤

    ReplyDelete
  4. Sprr sissy❤️ miru parents over tha poraka atleast oru hi sona enavaa 😏😏rombatha ponga anjali tamizh kuptu ponathu crtt

    ReplyDelete
  5. 😡😡😡😡miru amma appa na enna venumna Panalama👿👿👿chi...manners theriyadha padicha kootam

    ReplyDelete