வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 32
"கார்ல போன மூனு பேரும் எதுவும் பேசிக்கல பெரும் அமைதி..."
அர்ஜுன் : "இரண்டு நாள் இருந்த சந்தோஷம் இன்னைக்கு இல்லாம போய்டுச்சேனு வருத்தத்துல கார் ஓட்டுனான்..." 🚗
அஞ்சலி : "மிரு அப்பா, அம்மா மேல அளவில்லாத கோவம் அதை காட்ட விடாம அண்ணன் அழைச்சிட்டு வந்துட்டானேனு உர்னு இருந்தா..."
தமிழ்மாறன் : "யாழினி கிட்ட சொல்லாம வந்துட்டோமே அவளுக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவாளேனு இந்த நிலைமைலயும் அவளுக்காக யோசிச்சான்..."
"மிருனாழினி அவ அப்பா, அம்மா கூட பேச புடிக்காம ரூம்க்கு போய்ட்டா அப்பறம் தான் தமிழ் அஞ்சலி நியாபகம் வரவும் அர்ஜுன் வீட்டுக்கு போனா..."
மிருனாழினி : அர்ஜூ ( கத்திட்டே உள்ள போனா)
"வீடே அமைதியா இருக்கவும் அ. அம்மா ரூம்க்கு போனா..."
மிருனாழினி : "பெரியம்மா..."
அ. அம்மா : "என்ன மா..."
மிருனாழினி : "என்ன வீடே அமைதியா இருக்கு எங்க யாரையும் காணும்..." 🤔
அ. அம்மா : "ஏன் மிரு உனக்கு தெரியாதா உன்கிட்ட சொல்லிட்டு போலயா..."
மிருனாழினி : "எங்க போய்ருக்காங்க பெரியம்மா..."
அ. அம்மா : "தமிழும் அஞ்சலியும் ஊருக்கு கிளம்பிட்டாங்க மிரு அவங்களை விட தான் அர்ஜுன் போய்ருக்கான்..."
மிருனாழினி : 😱😱😱 "திடீர்னு ஏன் பெரியம்மா போனாங்க என்கிட்ட கூட சொல்லல..."
அ. அம்மா : "தெரியல மா எதோ அவசரம்னு சொன்னாங்க என்ன ஆச்சினு தெரியல..."
மிருனாழினி : சரி பெரியம்மா ( அப்படியே வெளில வந்தா)
முதல்ல அஞ்சலிக்கு கால் பண்ணா ஆனா அஞ்சலி கட் பண்ணிட்டா திரும்ப கால் பண்ணும் போது மொபைல் ஸ்விட்ச் ஆஃப்னு வந்தது...
"தமிழ்மாறன் கிட்ட மொபைல் இருக்கு ஆனா அவ்ளோவா யூஸ் பண்ண மாட்டான் அதனால அவன் சென்னை வரும் போது மொபைலும் கொண்டு வரல..."
"அர்ஜுன்க்கு கால் பண்ணா ஆனா அவன் போற அவசரத்துல மொபைல்ல வீட்டுலயே வச்சிட்டு போய்ட்டான்..."
"ஹால்ல உள்ள டேபிள்ல ஃபோன் ரிங் ஆகவும் தான் அர்ஜுன் மொபைல்ல எடுத்துட்டு போலனு அவளுக்கு தெரிஞ்சது..."
மிருனாழினி : "என்ன பண்ணுறது ஏன் அவங்க அவசரமா போனாங்க இப்படி ஒன்னுமே புரியாம அர்ஜுன் வீட்டு வாசல்லயே தலைல கைய வச்சிட்டு உட்கார்ந்துட்டா.."
"அர்ஜுன், தமிழ், அஞ்சலி மூனு பேரும் பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கிட்டாங்க..."
"அவங்க பஸ் ஸ்டாண்ட் வந்த போது தான் அஞ்சலிக்கு மிரு கால் பண்ணா..."
அஞ்சலி : "கட் பண்ணிட்டு மொபைல்ல ஸ்விட்ச் ஆஃப் பண்ணா..." 📴
தமிழ்மாறன் : "யாரு கால் பண்ணா ஏன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணுன..." 🤔
அஞ்சலி : "மிரு தான் அண்ணா கால் பண்ணுறா..."
தமிழ்மாறன் : "அதுக்கு ஏன் பேசாம கட் பண்ண..."
அர்ஜுன் : "ஏன் அஞ்சலி உனக்கு மிரு மேல கோவமா அவ அப்பா, அம்மா பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்குறேன் மா அதுக்காக மிருவ வெறுத்துடாத மா..."
அஞ்சலி : "இல்ல அர்ஜுன் எனக்கு மிரு மேல எந்த கோவமும் இல்ல அவ எப்போதும் என் ஃப்ரண்டு தான் ஆனா இப்போ பேசுனா அவ பேரண்ட்ஸ் மேல உள்ள கோவத்தை அவள்ட காட்டிடுவனோனு பயமா இருக்கு அதான் கட் பண்னேன்..."
தமிழ்மாறன் : "அர்ஜுன் நீ யாழினி கிட்ட சொல்லிடு எங்கள்க்கு அவ மேல எந்த கோவமும் இல்லனு... என்ன இப்ப நடந்த சம்பவத்துல கொஞ்சம் வருத்தமா இருக்கு அது எங்க ஊருக்கு போனதும் சரியாகிடும் நாளைக்கு நாங்க யாழினி கூட பேசுறோம்னு சொல்லிடு..."
அர்ஜுன் : "சரி தமிழ், வரும் போது சந்தோஷமா வந்தோம் இப்போ உங்களை இப்படி அனுப்பவே எனக்கு கஷ்டமா இருக்கு.."
தமிழ்மாறன் : "விடு அர்ஜுன் நாங்க ஊருக்கு போனதும் உனக்கு கால் பண்ணுறோம் இப்போ நீ போ..."
அர்ஜுன் : "இருங்க வரேன்..."
"ஓடிபோய் வாட்டர் பாட்டில், ஸ்னாக்ஸ், பிஸ்கட் எல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்தான்..."
தமிழ்மாறன் : "இதெல்லாம் நானே வாங்கிப்பேன் அர்ஜுன் உனக்கு ஏன் கஷ்டம்..."
அர்ஜுன் : "கஷ்டம் இல்ல தமிழ் வாங்க பஸ் எங்க இருக்குனு பார்க்கலாம்..."
"அப்பறம் தஞ்சாவூர் பஸ் எங்க இருக்குனு பார்த்து அவங்களை ஏத்தி விட்டுட்டு பஸ் போன பிறகு தான் அர்ஜுன் அவன் வீட்டுக்கு போனான்..."
"மிரு அர்ஜுன் காரை பார்த்ததும் வேகமா அவன் கிட்ட ஓடி வந்தா..."
அர்ஜுன் : ( அவசரமா கார்ல இருந்து இறங்குனான்) என்ன மிரு ஏன் இப்படி ஓடி வர...
மிருனாழினி : "என்ன அர்ஜுன் ஏன் தமிழ், அஞ்சலி என்கிட்ட கூட சொல்லாம போனாங்க..."
அர்ஜுன் : "அது மிரு..."
மிருனாழினி : "தயங்காம சொல்லு அர்ஜூ..."
அர்ஜுன் : "மதியம் நான் அவங்களை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன் அப்போ சித்தி, சித்தப்பா பேசுனதை இரண்டு பேரும் கேட்டுட்டாங்க ..."
மிருனாழினி : 😱😱😱 அதிர்ச்சியாகி அவனை பார்த்தா..."
அர்ஜுன் : "அஞ்சலிக்கு செம்ம கோவம் ஆனா தமிழ் அவளை வெளில அழைச்சிட்டு போய்ட்டாங்க நானும் அவங்க பின்னாடியே போனேன்..."
"அப்போ தமிழ் நாங்க இப்பவே ஊருக்கு போனும் பஸ் ஸ்டாண்ட்ல விட்டுடுனு சொன்னாங்க நான் எவ்ளவோ தடுக்க பார்த்தேன் ஆனா அவங்க ஊருக்கு போயே ஆகனும்னு சொல்லிட்டாங்க என்னால அதுக்கும் மேல ஒன்னும் பண்ண முடியல மிரு அதான் நானே விட்டுட்டு வந்தேன்..."
மிருனாழினி : "மாறன்க்கும் என்மேல கோவமா அர்ஜூ..." 😨😨😨
அர்ஜுன் : "இல்ல மிரு நாளைக்கு உன்கூட பேசுறனு சொன்னாங்க..."
மிருனாழினி : "அப்போ அஞ்சலிக்கு கோவமா அதான் நான் கால் பண்ணப்போ கட் பண்ணிட்டாளா..."
அர்ஜுன் : "இல்ல மிரு அவளுக்கும் உன்மேல கோவம் இல்ல ஆனா சித்தி, சித்தப்பா மேல கோவமா இருக்கா அந்த கோவத்துல உன்னை எதுவும் சொல்லிட கூடாதுனு தான் கட் பண்ணதா சொன்னா..."
மிருனாழினி : "நம்ம மேல தப்பு இருந்தும் அவங்க ஒன்னுமே சொல்லாம போய்ருக்காங்க அர்ஜூ அவங்க ஊர்லயே அவங்க எவ்ளோ பெரிய ஆளுங்க அவங்களை போய் அப்பா, அம்மா இப்படிலாம் பேசுராங்களேனு நினைச்சா எனக்கு கஷ்டமா இருக்கு..."
அர்ஜுன் : "விடு மிரு பார்த்துக்கலாம்..."
மிருனாழினி : "ம்ம்ம்..."
"அன்னைக்கு நைட் தமிழும், அஞ்சலியும் தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட்ல இறங்குனாங்க..."
"தேவேந்திரன் கார் அவங்களுக்காக ரெடியா இருந்தது..."
"கார்ல போகும் போதே தமிழ் அங்க நடந்த விஷயத்தை அப்பா, அம்மா, ஆச்சி, தாத்தா கிட்ட சொல்ல வேண்டானு அஞ்சலி கிட்ட சொல்லிட்டான் அவளும் சரி சொல்லிட்டா..."
"தமிழ் வீட்டுக்கு போனதும் அர்ஜுன்க்கு கால் பண்ணி சொல்லிட்டான்... ஆனா மிரு கூட பேசல நாளைக்கு பேசலாம்னு விட்டுட்டான்..."
மிருனாழினி : 'பால்கனில நின்னு நிலவை பார்த்துட்டு இருந்தா..." 🌝
தமிழ்மாறன் : "அவனும் கிணறு மேல உட்கார்ந்து வானத்தை தான் வெறிச்சி பார்த்துட்டு இருந்தான்..." ✨
மிருனாழினி : சாரி மாறன் இன்னைக்கு நடந்தது எதுவும் சரியில்ல அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகனும் அப்பா, அம்மா மேல உள்ள கோவத்துல என்னை வெறுத்துடாத மாறன் 😢😢😢 ( நிலாவை பார்த்து வருத்தப்பட்டு பேசுறா) 🌝
தமிழ்மாறன் : "எனக்கு உன்மேல கோவம் இல்ல யாழினி ஆனா உன் அப்பா, அம்மா பேசுனதை என்னால அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது..."
அந்த இடத்துல வேற யாராவது இருந்துருந்தா இந்நேரம் நடந்துருக்குறதே வேற உனக்காக தான் அவங்களை சும்மா விடுறேன் ( அவனுக்கும் அவ குரல் கேட்டா மாதிரி நிலாவை பார்த்து பதில் சொல்லிட்டு இருந்தான்)
"இரண்டு பேருக்கும் இது என்ன மாதிரியான உணர்வுனே தெரியாம ஒருத்தர் இன்னொருத்தருக்காக வருத்தப்பட்டாங்க..."
"அப்பறம் இரண்டு பேரும் அவங்கங்க ரூம்க்கு போய் தூங்கிட்டாங்க..." 😴
தொடரும்...
# Sandhiya.
5 Comments
Wow semma stry
ReplyDelete😢😢😢😢😢😢😢😢thamizh paavam
ReplyDeleteWow semma stry
ReplyDeleteSprr sissy 🥰..pavam miru 🥺
ReplyDeleteசூப்பர் இந்த காதல் ஜோடி எப்படி ஒன்னு சேருவாங்க இனிமேதான் கதையில சுவாரஸ்யம் வரப்போகுது மாறன் ஆண்டு யாழினி எப்படி சேர போறாங்க வெயிட் பண்ணிப் பார்ப்போம்
ReplyDelete