வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 34
"ஞாயிற்றுகிழமை காலைல அர்ஜுன் வீட்டுலயும் மிரு வீட்டுலயும் தஞ்சாவூர் கிளம்புனாங்க..." 🚗
அர்ஜுன் அப்பா, அம்மா பேர் நட்ராஜ், அருணா...
மிருனாழினி அப்பா, அம்மா பேர் ராஜன், மாலதி...
மிரு வீட்டுல கிளம்பி வெளில வர நேரம் அவங்க ஆபிஸ்ல எதோ ப்ரச்சனைனு அவ அப்பா, அம்மா வந்தே ஆகனும்னு சொல்லிட்டாங்க...
ராஜன் : மிரு ஆபிஸ்ல எதோ ப்ராப்ளம் டா நாங்க போயே ஆகனும் நீ பெரியப்பா, பெரியம்மா கூட போயேன்...
மிருனாழினி : "நோ டாட், மாம் நீங்க வந்தே ஆகனும்..."
மாலதி : "மிரு ஏன் இப்படி அடம் பண்ணுற..."
மிருனாழினி : "நான் உங்களுக்கு ஒரே பொண்ணு தான யாருக்காக இப்படி ஓடி ஓடி சம்பாதிக்குறது எல்லாம் எனக்காக தான நான் ஆசை பட்ட ஒரே விஷயம் உங்க கூட இருக்குற அந்த கொஞ்ச நேரத்துக்காக தான்...
சரி இப்போ ஊருக்கு போய்ட்டா நீங்க பிஸ்னஸ் பத்தி பேச மாட்டீங்க என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்கனு பார்த்தா இப்பவும் பிஸ்னஸ் தானா..." 😭😭😭
மிரு இவ்ளோ ஃபீல் பண்ணி பேசவும் அவங்களுக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சி...
ராஜன் : "மிரு நான் உன் கூட ஊருக்கு வரேன் அம்மா ஆபிஸ் போய் என்ன ப்ரச்சனைனு பார்த்துட்டு நாளைக்கு இல்ல அதுக்கும் மறுநாள் ஊருக்கு வரட்டும் உனக்கு ஓகே தான..."
( மாலதிக்கு அந்த ஊருக்கு போக சுத்தமா விருப்பம் இல்ல எல்லாரும் கம்பெல் பண்ணதால தான் வரனு சொன்னாங்க... இப்போ இப்படி ஆபிஸ் ப்ராப்ளம் வரவும் அவங்களுக்கும் இங்க இருக்குறது தான் நல்லதா பட்டுச்சி)
மாலதி : ஆமா, மிரு நான் என்ன ப்ரச்சனைனு பார்த்துட்டு முடிஞ்ச அளவு சீக்கிரம் வரேன்...
மிருனாழினி : ஓகே மாம்...
அர்ஜுன் அவன் அப்பா, அம்மா ஒரு கார்லயும் மிருவும் அவ அப்பாவும் ஒரு கார்ல போனாங்க...
அன்னைக்கு மாலையே எல்லாரும் தமிழ் வீட்டுக்கு வந்துட்டாங்க...
கார் சத்தம் கேட்டு ஆச்சி, தாத்தா, தேவேந்திரன், மகாலெட்சுமி வெளில வந்தாங்க...
அர்ஜுன் அப்பா, அம்மா, மிரு அப்பா கார் விட்டு இறங்குனதும் தமிழ் வீட்டை பார்த்துட்டு ஷாக் ஆகிட்டாங்க...😱
ஏன்னா சென்னைல பக்கத்து பக்கத்துல இருந்த அவங்க இரண்டு வீட்டையும் சேர்த்து ஒரே வீடா இருந்தது அந்த பழமையான ஓட்டு வீடு...
தமிழ் வீட்டுல உள்ள எல்லாரும் வாசல்க்கே வந்து இவங்களுக்கு வணக்கம் சொல்லி உள்ள அழைச்சிட்டு போனாங்க...
உள்ள போனதும் அர்ஜுனும் மிருவும் ஆச்சி, தாத்தா, தேவேந்திரன், மகாலெட்சுமி காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாங்க...
அர்ஜுன் அப்பா, அம்மாவும் மிரு அப்பாவும் நம்ம புள்ளைங்களா இவங்கனு ஆச்சர்யமா பார்த்தாங்க...
மிருனாழினி : எங்க மாறனை காணும்னு வீட்டை சுத்தி தேடுனா...
தேவேந்திரன் : யாரை மா தேடுற...
மிருனாழினி : எங்க மாமா அஞ்சலி, மாறன் இரண்டு பேரையும் காணும்...
தேவேந்திரன் : புது துணி வாங்க டவுன்க்கு போய்ருக்காங்க...
அர்ஜுன் : மாமா உதய் வந்துட்டாங்களா...
தேவேந்திரன் : வந்துட்டான் அர்ஜுன் அவனும் டவுன்க்கு தான் போய்ருக்கான்...
அர்ஜுன் : சரி மாமா...
அர்ஜுன் அவன் அப்பா, அம்மா மிரு அப்பாவ தமிழ் குடும்பத்தார் கிட்ட அறிமுக படுத்துனான்... அப்பறம் அர்ஜுன் அப்பா, அம்மா மிரு அப்பா கூட பேச ஆரம்பிச்சாங்க...
மகாலெட்சுமி : எல்லாருக்கும் டீ போட்டு கொண்டு வந்தாங்க...
அண்ணா, அண்ணி எடுத்துக்கோங்க...
நட்ராஜ், அருணா : 😊😊😊 வாங்கி குடிச்சாங்க...
மகாலெட்சுமி : அண்ணா நீங்களும் எடுத்துக்கோங்க...
ராஜன் : எனக்கு வேண்டா மா...
மிருனாழினி : அப்பா டீ சூப்பரா இருக்கும் டேஸ்ட் பண்ணி பாருங்க...
மகாலெட்சுமி : நல்லா இருக்கும் குடிங்க அண்ணா பசும்பால்ல இஞ்சி, நாட்டு சர்க்கரை கலந்து டீ போட்டுருக்கேன் இவ்ளோ தூரம் கார்ல வந்துருக்கீங்கள கலைப்பா இருப்பீங்க...☕
ராஜன் : ம்ம்ம் சரி மா ( வாங்கி குடிச்சாரு)
அருணா : "ஆமா ரொம்ப நல்லா இருக்குங்க..."
மகாலெட்சுமி : நன்றி அண்ணி...
அருணா : நானும் உங்களை அண்ணா, அண்ணினு கூப்பிடவா...
தேவேந்திரன் : தாராளமா கூப்பிடு மா நீ எனக்கு தங்கச்சி மாதிரி தான்...
அந்த நேரம் தமிழோட புல்லட் சத்தம் கேட்கவும் மிரு, அர்ஜுன் வெளில போனாங்க...
தமிழ்மாறன், அஞ்சலி : கை நிறைய துணி பைகளோட நின்னுட்டு இருந்தாங்க...
அர்ஜுன், மிரு இரண்டு பேருக்கும் ஹாய் சொல்லிட்டு மிரு அஞ்சலியயும் அர்ஜுன் தமிழையும் ஹக் பண்ணிட்டு விலகுனாங்க...
தமிழ்மாறன் : எப்ப டா வந்தீங்க...
அர்ஜுன் : இப்போ தான் 10 நிமிஷம் இருக்கும்...
தமிழ்மாறன் : உள்ள வாங்க...
நாலு பேரும் உள்ள போனதும் தமிழ்மாறன்,அஞ்சலி அர்ஜுன் அப்பா, அம்மா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாங்க...
தமிழ்மாறன் : மிரு அப்பாவை பார்த்ததும் சென்னைல நடந்தது நியாபகம் வந்தது இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்களை அவமதிக்க கூடாதுனு அவர் காலுலயும் விழுத்தான்...
ஆசிர்வாதம் பண்ணுங்க சார்...
அவன் சார்னு சொன்னதை மிருவும் அவ அப்பாவையும் தவிர வேற யாரும் கவனிக்கல...
ராஜன் : நல்லா இரு பா...
அஞ்சலி அவர் பக்கமே திரும்பல அர்ஜுன் அப்பா, அம்மாவோட பேசிட்டு இருந்தா...
அந்த நேரம் உதய்யும் அவன் அம்மாவும் சண்டை போட்டுட்டே வீட்டுக்குள்ள நுழைஞ்சாங்க...
சீதா : "பாரு டா புள்ளைங்க வந்துட்டாங்க அவங்க வரதுக்கு முன்னாடி இங்க இருக்கனும்னு சொன்னேன் எல்லாம் உன்னால தான்..." 😏
உதய் : என்ன மா ட்ரெஸ் வாங்கிட்டு வந்த கையோட உன்னை இங்க அழைச்சிட்டு வந்துட்டேன் ஒரு டீ கூட குடிக்கல...
சீதா : "போடா உன் அத்தை போட்டு வச்சிருப்பா வாங்கி வாய்க்குள்ள ஊத்திக்க..."
உதய் : "அம்மா நீ என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணுற..."
மகாலெட்சுமி : "அடடா வரும் போதே சண்டை தானா அம்மாக்கு புள்ளைக்கும்..."
அர்ஜுன், மிருனாழினி : அம்மா ( ஓடி வந்து சீதாவ ஹக் பண்ணாங்க)
சீதா : "புள்ளைங்களா நல்லா இருக்கீங்களா..." 🤔
அர்ஜுன், மிரு : "நல்லா இருக்கோம் மா நீங்க.."
சீதா : நல்லா இருக்கேன் பா நீங்க வரதுக்கு முன்னாடி வரலாம்னு பார்த்தா இந்த பையன் லேட் பண்ணிட்டான்...
உதய் : "இங்க நானும் ஒருத்தன் இருக்கேன் யாரும் கண்டுக்க மாட்றாங்க பா..." 🤷🏻♂️
மிருனாழினி : நான் இருக்கேன் அண்ணா ( அவனை போய் ஹக் பண்ணா)
உதய் : நீ தான் என் செல்ல தங்கச்சி ( அவ தலை முடிய கோதி விட்டான்)
அர்ஜுன் : 😏 "நானும் உங்க தம்பி தான்..."
உதய் : "ஆமா ஆமா செல்ல தம்பி தங்க கம்பி..."
அர்ஜுன் : பச் கிண்டல் பண்ணாதீங்க உதய் வாங்க அப்பா, அம்மாவ இன்ரோ குடுக்குறேன்...
அப்பறம் அவங்களுக்குள்ள அறிமுகம் படலம் எல்லாம் முடிஞ்சி எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க...
தொடரும்...
# Sandhiya.
3 Comments
Nalla vela miru amma varala illana tamizh family pathi thappa pesirupanga ippo ava appavum seriyave pesala tamizh kooda sir nu kopdran ellarukum naduvula miru than matitu kasta padra
ReplyDeleteசூப்பர் எல்லாரும் தமிழ் வீட்டுக்கு வந்துட்டாங்க உதய்யும் வந்துட்டான்
ReplyDeleteThamizh mass
ReplyDelete