"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் - 2

 


நேசம் என்னிடம் -  2

அங்கே சிறிது அமைதி நிலவ... வம்சி அமைதியை கலைத்தான்...

வம்சி : குரு உன்னைய இஷா பாக்கனும் னு வர சொன்னா...

குரு : "யாரு என்னைய வா...சரி தான்.."என்று வம்சியை ஒரு மார்க்கமாக பார்க்க...

வம்சி : "என்ன டா.."என்று 😠😠😠முறைக்க

குரு : ஒன்னு இல்லையே...ஒன்னுமே இல்ல...இஷா கிட்ட நா வரேன் சொல்லு...

நேரம் நகர்ந்து கொண்டே செல்ல... 

Break time முடிந்து வம்சி கோவமாக வந்து அமர்ந்தான்‌....

குரு : என்ன டா ஒரு மாதிரி இருக்க...

வம்சி : Nothing... உன் வேலைய பாரு‌...

குரு : கோவமா இருக்கீயே டா...

வம்சி : "நா தான் ஒன்னும் இல்ல னு சொல்றேன் ல... விடேன்‌.‌.."என்று கத்த...

குரு 🤷🏻🤷🏻🤷🏻 தோளை உலுக்கி கொண்டு அவன் வேலையை பார்த்தான்...

மாலை நேரத்தில் வம்சி வேக வேகமாக கிளம்பினான்...

குரு system மை shutdown செய்து யோசனையாக அமர்ந்திருந்தான்...

வம்சி குரு முதுகில் தட்ட..குரு வேகமாக திரும்பி பார்த்தான்..

குரு : எதுக்கு டா இப்ப அடிச்ச...

வம்சி : அடிக்கல...தட்டினேன்...

குரு :சரி எதுக்கு தட்டுன...

வம்சி : அப்படி என்ன டா deep thinking...

குரு : nothing...

வம்சி : இல்ல என்னமோ இருக்கு...

குரு : அது தான் ஒன்னும் இல்ல னு சொல்றேன் ல அப்புறம் என்ன...

வம்சி : "சரி வா போலாம்..."என்று அவன் கையை பிடித்து இழுக்க...

குரு புரியாமல் "எங்க டா..."என்று கேட்க..

வம்சி : எங்கே யா சரியா போச்சு போ... இஷா உன்னை ய வர சொன்னா டா...வா போலாம்...

குரு 🙄🙄🙄 திருதிருவென முழிக்க...

வம்சி அவனே உற்று பார்த்து விட்டு " என்ன reaction டா இது...வந்து தொலை.."என்று இழுக்க...

குரு : அடேய் இரு டா..என் bag எடுத்துட்டு வரேன் டா..

வம்சி : "எடுத்து வா...நா parking ல நிக்கிறேன்..."என்று சொல்ல "முழிய பாரு ஆந்தை முழிக்கிற‌ மாதிரி முழிக்கிறான்..."என்று சொல்லி கொண்டே செல்ல...

குரு அவனை பார்த்து கொண்டே "போச்சு டா...இன்னக்கி செத்தோம் டா..."என்று 🤦🤦🤦 தலையில் கை வைத்து அமர..

அங்கே வந்த நாகராஜ் அவனை பார்த்து "என்ன Mr. குமரகுருபரன் headache ஹ.."என்று கேட்க..

குரு அவனை 😠😠😠 முறைத்து விட்டு "டேய் snakeக்கு ஓடி போயிரு...இருக்குற கோபத்துக்கு என்ன பண்ணுவேன் கூட தெரியாது பாத்துக்கோ..."என்று சொல்ல...

நாகராஜ் : ம்ப்ச் குரு என்ன ஆச்சு னு சொல்லு... என்னால் ஏதாவது பண்ண முடியுமா னு பாக்குறேன்..‌

குரு : அட ஏன் டா நீ வேற... வம்சி அவனோட வீட்டுக்கு கூப்டுறான்...

நாகராஜ் : "கூப்டா போக வேண்டியது தானே‌‌..‌."என்று water bottle எடுத்து தண்ணீர் குடிக்க...

குரு : அட லூசு snake... அவரே இஷா என்னைய கூப்டா னு சொல்லி வர சொல்றான் டா பக்கி...

நாகராஜ் குடித்த தண்ணீர் புரை ஏற... தண்ணீரை கூப்பி விட்டு தலையை தட்டி கொண்டு "என்னது‌.."என்று  அதிர்ச்சியாக 😳😳😳 பார்க்க...

குரு : அவே கூப்டது கூட பிரச்சனை இல்ல டா நாகராஜா... ஆனா இஷா கூப்டா னு சொன்னது தான்... மண்டை வெடிக்கிது... அது எப்படி முடியும்‌‌...

நாகராஜ் : I think வம்சி இஷா வ imagine ல வச்சு இருக்காரோ...

குரு : என்ன டா உலர்ற...

நாகராஜ் : உலர் ல... English movie எல்லாம் பாக்க மாட்டீங்களா...ஒரு உடம்புக்குள் ஹ ரெண்டு மூனு பேரு இருப்பாங்களே...

குரு : லூசு...நீ பேய் படத்தை சொல்றீயா... அதுவே imagine தானே டா...

நாகராஜ் : sorry மாத்தி சொல்லிட்டேன்...எப்படி சொல்றது... ஹான் இல்லாத ஒன்ன இருக்குறதா imagine பண்றது...

குரு : என்ன டா சொல்ற...

நாகராஜ் : தனக்கு தானே பேசிக்கிறது... 

குரு : டேய் அப்போ வம்சி ய‌ நீ பைத்தியம் னு சொல்றீயா‌..

நாகராஜ் : cha cha... நா அப்படி சொல்லல... வம்சி ய சுத்தி இஷா மட்டும் தான் இருக்கா... இஷா வம்சி கூட பேசுற மாதிரி imagine பண்ணிக்கிறான்... அவ்ளோ தான்... 

குரு 🤔🤔🤔யோசிக்க...

நாகராஜ் : y silent...

குரு : "நீ சொல்றது correct தான்... கடந்த ஒரு‌ வருஷமா அவே இப்படி நான் இருக்கான்...இஷா இப்படி பண்ணா இஷா அப்படி பண்ணா... இன்னக்கி நா இஷா கூட சண்டை போட்டேன்... ரெண்டும் பேரும் பேசிக்கவே இல்ல... 

   அப்புறம் என்னால இஷா கூட பேசாம இருக்க முடியால... அதனால நான் பேசுவேன்... அவ அழுதுக்கிட்டே என் கூட பேச இப்போ தான் தோணுச்சா னு என்னைய அடிச்சா... இஷா உன்னையே வீட்டுக்கு வர சொன்னா‌...

   இப்படி ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பான்... நா முத அதை அவ்ளோ serious ஹ எடுத்துக்கல... அப்புறம் போக போக அதிகமாச்சு... ஒரு தடவ என்ன ஆச்சு னு தெரியுமா‌‌...இப்போ தான் ஒரு three months இருக்கும்...

   அப்போ நீ இங்க join பண்ணல ல... சொல்ல போனா இது யாருக்குமே தெரியாது... நா ஒரு வேலையா வெளிய போயிட்டேன்‌‌... வம்சி எனக்கு விடாம call பண்ணிக்கிட்டே இருந்தான்‌...

   நா கோவத்துல phone silent ல போட்டுட்டேன்... அப்பவும் call பண்ணிக்கிட்டே இருந்திருக்கான்... நா தான் silent ல போட்டுட்டேன் ல... உனக்கு தெரியல... Office க்கா வந்து பார்த்து Mobile எடுத்து பார்த்தா 50 missed call...

   வம்சி தான் call பண்ணி இருக்கான்...நா கடுப்புல அவ கிட்ட போய் எதுக்கு டா call  பண்ணிக்கிட்டே இருக்க னு கேட்டா... அவ நிதானமா இஷா இங்க வந்தா டா...தூக்கி வாரி போட்டுச்சு... 

  என்ன டா சொல்ற னு கேட்டா... நீ தான் வீட்டுக்கு ரொம்ப வர்றது இல்லையே... அவளும் வீட்டுக்குள்ளேயே bore அடிக்கிது... நானும் வரட்டா... அப்படியே குருவையும் பாக்கனும்... ரொம்ப நாள் ஆச்சு னு வந்தா...

   இங்க வந்து பார்த்தா நீ இல்ல... இவ்ளோ நேரம் wait பண்ணிட்டு இதோ இப்ப தான் போறா... உன்னைய தான் கேட்டுக்கிட்டே இருந்தா... போடா‌... எங்க தான் டா போன... இன்னக்கி ஒழுங்கா வீட்டுக்கு வந்து இஷா வ பாரு னு சொன்னா...

  எனக்கு ஒன்னுமே புரியல... CCTV footage ஹ check பண்ணேன்... அது ல அவே தனியா பேசிக்கிட்டு வந்தான்... அப்புறம் ஒரு one week அவனை watch பண்ணேன்... Normal ஹ இருந்தான்...

   இருந்தாலும் அவனை தனியா விட்றது இல்ல... எப்பவும் அவன் கூடவே இருப்பேன்... இன்னக்கி காலைல அவே எனக்கு call பண்ணி லாரி போகுது டா... நா இங்க பாத்தேன் னு சொன்னான்‌...

   எனக்கு புரிஞ்சுருச்சு... அவனுக்கு பழசு ஞாபகம் வந்து இருக்கு னு‌... அது தான் அவே எங்க இருக்கா னு கேட்டுட்டு உன்னையும் இழுத்துட்டு அவனை கூப்ட போனேன்... அவனுக்கு இதுல இருந்து எப்போ விடுதலை னு தெரியல..."என்று உண்மையான வருத்தத்தில் சொல்ல..‌

நாகராஜ் : வம்சி சரி ஆக இஷாவால தான் முடியும்... எதுவும் பண்ண முடியாதா குரு...

குரு "முடியாது..."என்பது போல் தலையை ஆட்டினான்...

வம்சி குருவிற்க்கு call செய்ய...

குரு எடுத்து பார்த்து நாகராஜ் இடம் காட்டி attend செய்து"என்ன டா.."என்று கேட்க...

வம்சி : "அரைமணி நேரமா wait பண்றேன்...இன்னும் மேல என்ன டா பண்ற..."என்று கத்த...

குரு mind voice : அய்யய்யோ அரைமணி நேரமா வா இப்படி உட்காந்து இருக்கேன்...

வம்சி : டேய் உன்னைய தான்...பேசு டா பக்கி..

குரு : "இதோ வந்துட்டே இருக்கேன்... அப்படியே slow motion திரும்பு நா வர்றது தெரியும்..."என்று சொல்லி கொண்டே எழுந்து ஓடினான்...

நாகராஜ் : "என்ன ஆச்சு..."என்று கத்த...

குரு ஓடியவாறு "கீழ இருந்துக்கிட்டு இன்னுமா வரல னு கத்துறான்... நா போறேன்..."என்று சொல்ல...

நாகராஜ் : "பாத்து போயிட்டு வா..." என்று அவனும் கிளம்பினான்...

வம்சி bike அருகில் நிற்க... குரு வேகமாக ஓடி வந்தான்...

வம்சி : எவ்ளோ நேரம் டா...

குரு : நா இல்ல டா... நா இல்ல டா அந்த snake king தான்... என்னைய பிடிச்சுக்கிட்டு வெட்டி கதை பேசிட்டு இருந்தான்‌...

நாகராஜ் bike key ஐ ஆள் காட்டி விரலில் மாட்டி சுழற்றி கொண்டே விசில் அடித்து கொண்டு வர‌....

அவர்கள் இருவரும் Pillar பின்னால் நின்றதால் அவனுக்கு தெரியவில்லை...

வம்சி நாகராஜ் ஐ பார்த்து "டேய் snake..."என்று அழைக்க...

நாகராஜ் அப்படியே நின்று தலையை வலது இடது புறம் திரும்பி பார்த்து விட்டு "யாரு டா இது... இந்த பேரை வம்சி குரு தவிர வேற யாரும் கூப்ட மாட்டார்களே... அவங்க போயிட்டாங்களே..."என்று 🤔🤔🤔 யோசித்து "டேய் யாரு டா... I'm நாகராஜ்...ஒழுங்கா கூப்டுங்க டா‌..."என்று கத்த...

குரு : டேய் பக்கி...

நாகராஜ் : "இதுவும் வம்சியும் குருவும் தான் சொல்லுவாங்க..."என்று சுற்றி தேட...

வம்சி Pillar முன்னால் வந்து கையை கட்டி கொண்டு நிற்க...

நாகராஜ் : "நீ தான் கூப்டியா... "என்று அருகில் வந்து "சொல்லு என்ன விசயம்..."என்று கேட்க..

குரு பின்னால் இருந்து "போ..."என்று சைகை செய்தான்...

தொடரும்...

# நானிஷா...


Post a Comment

0 Comments