நேசம் என்னிடம் - 3
நாகராஜ் புரியாமல் 🙄🙄🙄 குருவையே பார்க்க...
குரு : "அட லூசு பயலே போய் தொல டா..."என்று நினைத்து கொண்டு "ஓடிடு டா..."என்று சைகை செய்ய...
நாகராஜ் : என்ன குரு சொல்ற...
வம்சி திரும்பி குருவை பார்க்க...
குரு அசடு வழிய சிரித்து கொண்டு "பக்கி பய கோத்து விட்டானே... மாட்டிக்கிட்டு சாவு டா.."என்று நினைத்து கொண்டு "ஒன்னும் இல்லையே... ஒன்னுமே இல்ல...நீ வம்சி கிட்ட பேசிட்டு இருந்த நா போய் என் bike ஹ எடுத்துட்டு வரேன்..."என்று வேகமாக 🏃🏻🏃🏻🏃🏻ஓட...
வம்சி கையை முறுக்கி கொண்டு நாகராஜ் ஐ 😠😠😠 முறைத்தான்...
நாகராஜ் குரு ஓடிவதை பார்த்து "எதுக்கு இப்படி ஓடுறான்.."என்று 🤔🤔🤔யோசித்து கொண்டு திரும்ப...
வம்சி அவனை 😠😠😠 முறைத்து கொண்டு இருக்க...
நாகராஜ் : என்ன வம்சி...அப்படி பாக்குற...
வம்சி : பாக்கல... முறைக்கிறேன்...
நாகராஜ் : ஓ அப்படியா... எதுக்கு முறைக்கிற...
வம்சி அவன் தலையில் "ணங்..."கொட்டி கொண்டு இருக்க...
நாகராஜ் ரெண்டு கையையும் தலையில் 🙆🏻♂️🙆🏻♂️🙆🏻♂️ வைத்து மூடி கொண்டு கீழே அமர...
தூரத்தில் இருந்து பார்த்த குரு "right திமிரு பட வடிவேலு மாதிரி இவனோட மண்டை வீங்க போகுது...பேசாம இப்படியே ஓடிடலாமா... விட மாட்டானே..."என்று bike ஐ தள்ளி கொண்டு வர...
நாகராஜ் : யோவ் வம்சி ஏன் யா இப்படி கொட்டுற...
வம்சி : "கொன்னு புடுவேன் கொன்னு... சேட்டை உனக்கு... தேவை இல்லாம பேசிக்கிட்டு இருந்த நசிக்கிடுவேன்... கிளம்பு..."என்று கத்தி விட்டு நகர...
நாகராஜ் : "நா என்ன பண்ணேன்... என்னைய அடிச்சுட்டு என்னைய திட்டமிட்டு போறாரு..." என்று 😳😳😳 முழிக்க...
குரு அருகில் வந்து 😀😀😀சிரிக்க..
நாகராஜ் : எல்லாம் உன் வேலே தானா...
குரு : நானே தான்... சும்மா time pass க்கு உன்னைய கோத்து விட்டேன்...
நாகராஜ் : நல்லா வருவ... ரெண்டு பேரும் ஒரே Apartment ல இருக்குறதுனாலேயும் வேலை இல்லாம இருந்த எனக்கு இங்க வேலை வாங்கி கொடுத்தனாலேயும் உன்னைய சும்மா விடுறேன்...
குரு : இல்லை னா என்ன பண்ணுவ...
நாகராஜ் : என்ன பண்ண முடியும்... ஏதாவது பண்ணா இந்த வம்சி ய இதே மாதிரி கொட்ட விடுவ...
குரு : இது வரைக்கும் எனக்கு அந்த யோசனை இல்ல...இது நல்ல idea வ இருக்கே...
நாகராஜ் : தவளை தன் வாயால கெட்டுருச்சு...
வம்சி : "குரு..."என்று கத்த..
நாகராஜ் : "அய்யய்யோ ஆபத்து... மறுபடியும் கொட்டு வாங்க முடியாது..நா போறேன்..."என்று எழுந்து 🏃🏻🏃🏻🏃🏻 ஓட...
குரு : "இவே ஓடிட்டான்... நா மாட்டிக்கிட்டேன்..."என்று திரும்ப "ஏன் டா கத்துற..."
வம்சி : வா போலாம்...
குரு : எங்க டா...
வம்சி : வீட்டுக்கு டா.. இஷா உன்னைய வர சொன்னா டா...
குரு :"அய்யோ..."என்று தலையை சொரிந்து கொண்டு "சரி வா போலாம்..."என்று bike ஐ எடுத்தான்...
வம்சி முன்னால் செல்ல...குரு பின்னால் செல்ல...வம்சி வீட்டிற்கு செல்லாமல் வண்டியில் சுற்றி கொண்டே இருந்தான்...
குரு :"என்ன டா இது இவன் என்ன எனக்கு ஊர் சுற்றி காட்டிக்கிட்டு இருக்கானா...இவன் வீடு எங்கேயோ இருக்கு...இவன் எங்கேயோ போறான்... கேட்டா வாயிலேயே குத்துவான்...எதுக்கு வம்பு முழுசா வீடு போயி சேரனும்..."என்று புலம்பி கொண்டே சென்றான்...
வம்சி ஒரு பூக்கடையில் நிறுத்த.. குரு அவனை பார்த்து "என்ன டா..."என்று கேட்க...
வம்சி : இல்ல டா குரு...இஷாவுக்கு முல்லை பூ னா ரொம்ப பிடிக்கு டா...அது தான் வாங்கலாம் னு..
குரு அவனை 😠😠😠முறைக்க...
வம்சி : டேய் முறைக்காத டா...வாங்கிட்டு போயிடலாம்...
குரு : இத வாங்க one hour ஹ சுத்த வச்சிட்டீயே டா...
வம்சி : டேய் எந்த பூக்கடையிலும் முல்லை பூ இல்ல டா... அத தானே தேடிக்கிட்டு இருந்தேன்...
குரு : அடப்பாவி இத வாங்க தான் ஊர் சுற்றி காட்டிட்டு இருந்தீயா...
வம்சி : "ஆமா மச்சி..."என்று 😁😁😁இழிக்க...
குரு :"அய்யோ..."என்று 🤦🤦🤦 என்று தலையில் அடித்து கொண்டான்...
குரு : "போடாங்கு..."என்று கடுப்புடன் பக்கத்தில் இருந்த கடையில் ☕ டீ சொல்லி 🚬சிகரெட் எடுத்து பற்ற வைத்து அமர்ந்தான்...
வம்சி : டேய் சிகரெட் பிடிக்கிறதுக்கு மட்டும் இஷாவுக்கு தெரிஞ்சா...அவ்ளோ தான் ரொம்ப கோவப்படுவா...
குரு : "ம்ப்ச்..."அவனை 😠😠😠 முறைக்க...
வம்சி அவன் அருகில் அமர்ந்து "எனக்கும் டீ சொல்லு டா..."
குரு : ம்ம்ம் அத நீயே சொல்லலாம்... அவருக்கு காது கேட்கும்...
வம்சி அவனை 😠😠😠 முறைத்து கொண்டே டீ சொல்லி விட்டு "இப்ப எதுக்கு டா இவ்ளோ கோவமா இருக்க..."என்று கேட்க...
குரு : பசிக்கிது டா...ஏதோ tension ல Lunch சரியா சாப்டல... வீட்டுக்கு போ நல்லா நிம்மதியா வயிறு நிறைய சாப்டலாம் னு நினைச்சா... நீ இப்படி ஊர் சுத்தி காட்டிக்கிட்டு இருக்க...இப்ப ஒன்னும் இல்ல நீ இப்படி உன் வீட்டுக்கு போ... நா என் வீட்டுக்கு போறேன்...
வம்சி : டேய் என்ன டா இப்படி சொல்ற... இஷா உன்னையே பாக்கனும் னு சொன்னா டா...
குரு : இஷா எங்கேயும் போக மாட்டா... இன்னொரு நாள் வந்து பாக்குறேன்...
வம்சி : அவ உன் மேல ரொம்ப பாசமா இருப்பா ல... நீ அவளுக்கு friend தானே டா...
குரு : யார் இல்ல னு சொன்னது...
வம்சி : இஷா நீ இப்படி பேசுறது தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா டா...
குரு : டேய் எனக்கு மட்டும் இஷா மேல் பாசம் இல்லையா என்ன... நா வர மாட்டேன் னு சொல்லலேயே... இன்னொரு நாள் வரேன் தானே சொல்றேன்...
வம்சி : "உனக்கு எல்லாம் ஞாபகம் இருந்தா இப்படி பண்ண மாட்ட..."என்று சோகமாக சொல்ல...
குரு அமைதியாக தலை குனிய... அவன் கண் கலங்க... வம்சிக்கு தெரியாமல் கண்ணை துடைத்தான்...
சிறிது நேரம் அங்கே அமைதி நிலவ...அவர் முன் டீ ஆறி கொண்டு இருந்தது...
வம்சி : குரு நீ போ டா... நா இஷா கிட்ட சொல்லிக்கிறேன்...
குரு : டேய் நீ இப்படி இருக்குறது தான் டா எனக்கு கோவம் வருது... ஏன் டா... எனக்கு உன்னைய பாக்கும் போது கஷ்டமா இருக்கு... குற்ற உணர்ச்சி ய இருக்கு டா...
வம்சி : குரு என்ன டா நீ... ஒன்னும் இல்ல டா... நீ என்ன டா தப்பு பண்ண...
குரு : "நா தானே டா காரணம்..."என்று 😭😭😭அழுக...
சுற்றி இருந்தவர்கள் அவனை பார்க்க...
வம்சி :"குரு இங்க பாரு டா... எல்லாருமா பாக்குறாங்க வா போலாம்..."என்று அங்கே இருந்து வேகமாக கிளம்பினர்...
வம்சி : குரு நீ போ... நா இஷா கிட்ட சொல்லிக்கிறேன்...
குரு ; ம்ப்ச் இது தான் உன் பிரச்சனை... இஷா கிட்ட சொல்றேன்... இஷா கிட்ட பேசுறேன்... இஷா அப்படி பண்ணா... இஷா இப்படி சொன்னா னு வேணாம் டா...
வம்சி : எது டா வேணாம்... என் இஷா டா... அவ என்னோட இஷானி...
குரு : யார் இல்ல னு சொன்னா... சரி வா போலாம்...
வம்சி : எங்க...
குரு : இஷானி ய பாக்க... உன் வீட்டுக்கு...
வம்சி சந்தோஷமாக "வா டா..."என்று வேகமாக வண்டியை எடுத்தான்....
குரு அவனை பரிதாபமாக பார்த்து கொண்டு பின்னால் சென்றான்...
இரவு 8 மணி...
வம்சி bike ஐ நிறுத்தி விட்டு "வா டா குரு..."என்று சொல்லி உள்ளே செல்ல...
குரு பின்னால் சென்றான்...
வம்சி calling Bell ஐ அடிக்க...ஒருத்தி வந்து கதவை திறந்தாள்...
வேலைகாரி மல்லிகா : வாங்க தம்பி
வம்சி : என்ன மல்லிகா அம்மா...வேலை எல்லாம் முடிஞ்சுருச்சா...
மல்லிகா : முடிஞ்சுருச்சு தம்பி... சாப்பாடு எல்லாம் பண்ணிட்டேன்... கை கால் கழுவிட்டு வந்து சாப்டுங்க...
குரு : என்ன மல்லி மா நல்லா இருக்கீங்களா...
மல்லிகா : அட குரு தம்பி... நீங்களும் வந்து இருக்கீங்களா... நீங்களும் கை கால் கழுவிட்டு வாங்க... சாப்டலாம்...
குரு : ம்ம்ம்...சாப்டலாம்... என்ன பண்ணி இருக்கீங்க...
மல்லிகா : சப்பாத்தி காய்கறி குருமா தேங்காய் சட்னி...
குரு : அட...அட..அட செம்மயா இருக்கும்...
வம்சி : சரி மல்லிகா அம்மா...நீங்க கிளம்புங்க time ஆச்சு...
மல்லிகா : சரிங்க தம்பி...
குரு : தனியா போயிடுவீங்களா மல்லி மா...
மல்லிகா : ஒரு தெரு தள்ளி தானே யா இருக்கு... போயிடுவேன்...
வம்சி : அப்புறம் மல்லிகா அம்மா ...இஷா எங்க இருக்கா...
மல்லிகா : உள்ள room ல இருக்காங்கயா... நா கிளம்புறேன்...
வம்சி : ம்ம்ம்...
மல்லிகா : குரு தம்பி போயிட்டு வரேன்... சாப்டு போங்க...
குரு : கண்டிப்பா மல்லி மா...
மல்லிகா கிளம்ப... குரு sofa வில் அமர...
வம்சி : என்ன டா உட்கார்ந்துட்ட... வா வந்து fresh ஆகு...
குரு : இல்ல டா..
வம்சி : பிச்சுடுவேன் படவா... மேல் உன் room க்கு போ...
குரு : clean ஹ இருக்கா...
வம்சி : நீ அப்பப்போ வந்துட்டு போனாலும் நீ எப்பவும் வந்தா தங்குவ னு clean பண்ணி தான் வச்சு இருக்கோம்...
குரு : "ம்ம்ம் சரி..."என்று எழுந்து மேலே சென்றான்...
குரு fresh up ஆகி கீழே வர... வம்சி பேச்சு குரல் கேட்க... குரல் வந்த திசையை நோக்கி சென்று எட்டி பார்க்க...
வம்சி : என்ன இஷா உனக்கு பிடிக்கும் தானே உனக்கு முல்லை பூ வாங்கிட்டு வந்தேன்... இத வாங்க one hour சுத்துனேன்... பாவம் குருவையும் சேர்த்து அழைய விட்டுட்டேன்... சரி நானே உனக்கு பூ வச்சு விடுறேன்...
குரு அறை வாசலில் நின்று அவனை பரிதாபமாக பார்த்தான்...
தொடரும்....
# நானிஷா...

0 Comments