மைவிழி பார்வையிலே -84

அடுத்தநாள் காலை,

கயல் : முதல்ல எழுந்தா...

கௌதம் : தூங்கிட்டு இருந்தான்

கயல் : "அவன் நெத்தில கிஸ் பண்ணிட்டு குளிக்க போய்ட்டா..."

கௌதம் : நல்லா தூங்கிட்டு இருந்தா...

கயல் : ( அழகா ரெட் கலர் டிசைனர் சேரி கட்டி தலை துவட்டிட்டே வந்தா)  கௌதம் எழுந்திரி கோவில்க்கு போகனும்..

கௌதம் : அம்மு 5 மினிட்ஸ் டி ப்ளீஸ்...

கயல் : அவ தலைல சொட்டிட்டு இருந்த தண்ணிய அவன் முகத்துக்கு நேரா ஆட்டுனா...

கௌதம் : ( தண்ணி முகத்துல படவும் எழுந்தான்) 😍😍😍 பொண்டாட்டி காலைலயே இவ்ளோ அழகா இருக்கியே டி ( அவ கைய புடிக்க போனான்)

கயல் : தொடாத கோவில் போகனும் போய் குளிச்சிட்டு வா.

கௌதம் : 😏😏😏 ரொம்ப தான் பண்ற டி ( டவல் எடுத்துட்டு பாத்ரூம் போய்ட்டான்)

கயல் : 😄 அவனுக்கு போய் காபி எடுத்துட்டு வந்தா.

கௌதம் : குளிச்சிட்டு வந்தான்.

கயல் : "அவன பெட்ல உட்கார வச்சி தலை துவட்டி விட்டா..."

கௌதம் : "அவ இடுப்புல கிள்ளிட்டான்..."

கயல் : ஆஆஆ ( அவன் முடிய புடிச்சி இழுத்தா) ஏன்டா கிள்ளுன.

கௌதம் : "தொட கூடாதுனு சொன்னில அதான்..."

கயல் : 😏 இந்தா காபி குடி ( அவன் கைல காபிய குடுத்துட்டு கப்போர்ட்ல போய் அவனுக்காக வாங்குன ட்ரெஸ் எடுத்துட்டு வந்தா ) கௌதம் இந்த ஷர்ட் நல்லா இருக்கா ( ஒரு ரெட் கலர் ஷர்ட் அவன்ட குடுத்தா)

கௌதம் : வாவ்! "சூப்பர் அம்மு எனக்காக நீயே வாங்குனியா..."

கயல் : ஆமா, " நீ குடுத்த பாக்கெட் மனி எல்லாம் சேர்த்து வச்சி அதுல வாங்குன ஷர்ட் தான் இது..."

கௌதம் : அந்த ஷர்ட் போட போனான்.

கயல் : அதை வாங்கி போட்டு விட்டா.

கௌதம் : ☺☺☺ " ரொம்ப சந்தோசமா இருந்தது..."

கயல் : இந்தா வேஷ்டிய கட்டிக்க நான் கிளம்புறேன் ( ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி உட்கார்ந்து வளையல், செயின், தோடு எல்லாத்தையும் போட்டுட்டு இருந்தா)

கௌதம் : அவ பின்னாடி நின்னு கண்ணாடி வழியா கயல பார்த்துட்டு இருந்தான் 😍😍😍

கயல் : என்ன அப்படி பார்க்குற? 😊

கௌதம் : என் பொண்டாட்டி அழகா இருக்காளே அதான்...

கயல் : நான் போட்ருக்கது எல்லாமே என் புருஷன் வாங்கி குடுத்தது அதான் அழகா இருக்கேன் ( பேசிட்டே குங்கும சிமில் எடுத்தா)

கௌதம் : அதை வாங்கி அவ முன்னாடி வந்து அவனே அவ நெத்தி, வகுடு, தாலில குங்குமம் வச்சி விட்டான்...

கயல் : ☺☺☺ போலாமா.

கௌதம் : போலாம் வா.

கீழ போய் லெட்சுமி அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு கோவிலுக்கு போனாங்க...

கயல் : எப்போதும் போற ரூட் இல்லாம வேற ரூட்ல போக சொன்னா.

கௌதம் : அவ சொன்ன வழிலயே போனான்.

10 நிமிஷத்துல வர வேண்டிய கோவில்க்கு 30 நிமிஷம் கழிச்சி வந்தாங்க.

கௌதம் : ஏன்டி இப்படி பண்ற இப்போ இவ்ளோ லேட் ஆகிடுச்சி பாரு.

கயல் : இன்னைக்கு சனிக்கிழமை காலேஜ் லீவ் ஜாப்க்கும் போகல அப்பறம் என்ன ?

கௌதம் : அதுக்கு இப்படியா ஊர் சுத்தி கூட்டிட்டு வருவ.

கயல் : ரொம்ப பேசாத வா உள்ள போலாம்.

கௌதம் : அர்ச்சனை தட்டு வாங்க வேண்டாமா?

கயல் : அப்பறம் வாங்கிகலாம் வா இப்போ உள்ள போலாம் ( அவன இழுத்துட்டு போனா)

கௌதம் : ஹேய் என்னடி பண்ற ( உள்ள போனதும் அப்படியே நின்னுட்டான்)  😱😱😱 அங்க அவங்களோட மொத்த ஃபேமிலியும் இருந்தாங்க.

இவங்க எல்லாம் இங்க என்ன பண்றாங்க.

கார்த்திக் : அதை நாங்க சொல்லுறோம் வா..

கௌதம்ம கார்த்திக்,  சரண், ஹரி, அகிலன், மித்ரன் ஐந்து பேரும் ஒரு ரூம்க்கு இழுத்துட்டு போய்ட்டாங்க.

கௌதம் : ஏய் என்ன டா பண்றீங்க...

ஹரி : பேசாம இரு அண்ணா ( அவன் ஷர்ட் பட்டனை கழட்டுனான்)

கௌதம் : 😱 டேய் டேய் என்னடா பண்ற

அகிலன் : அண்ணா உன்னை ஒன்னும் பண்ண மாட்டோம் அமைதியா இரு.

கௌதம்க்கு பட்டு சட்டை பட்டு வேஷ்ட்டி கட்டி விட்டு கழுத்துல மாலை போட்டு அக்னி முன்னாடி உட்காரவச்சாங்க.

( இன்னைக்கு கௌதம், கயல்க்கு எல்லார் முன்னாடியும் பெரியவங்க சம்மதத்தோட கல்யாணம் நடக்க போகுது கயல் தான் இந்த ஏற்பாட்டை பண்ணா)

கௌதம் : ஐயர் சொல்ற மந்திரத்தை திரும்ப சொல்லிட்டு இருந்தான்...

கயல் : அழகா ரெட் கலர் பட்டு புடவை கட்டி ப்ரைடல் மேக்கப் போட்டு வெக்கத்துல தலை குனிஞ்சி வந்தா அவள மீரா, மகா, ராகவி அழைச்சிட்டு வந்தாங்க.

கௌதம் : 😍😍😍 கயல பார்த்துடே இருந்தான்...

கயல் : அவன் பக்கத்துல வந்து உட்கார்ந்தா...

கௌதம் : 😍😍😍 கயலயே பார்த்துட்டே இருந்தான்..

கயல் : மாமா எல்லார் முன்னாடியும் நமக்கு இன்னொரு முறை கல்யாணம் உனக்கு சந்தோஷம் தான.

கௌதம் : என்னடி இப்படி கேட்டுட்ட இப்படி ஒரு நாள் நம்ம வாழ்க்கைல வராதுனு நான் எவ்ளோ நாள் ஃபீல் பண்ணிருக்கேன் தெரியுமா.

கயல் : 😊😊😊 ம்ம்ம்

அப்பறம் ஐயர் தாலி எடுத்து குடுத்தாரு மூனு முடிச்சியும் கௌதம் தான் போட்டான் அப்பறம் அக்னி சுத்தி வந்து முதல்ல லெட்சுமி அம்மா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாங்க அப்பறம் கயல் அப்பா, அம்மா, கார்த்திக்  அப்பா,அம்மா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கிட்டாங்க.

அப்படியே மதியம் ஆகிடுச்சி எல்லாரும் வீட்டுக்கு போய்ட்டாங்க.

கயல் : கடிகாரத்தையே அடிக்கடி பார்த்துட்டு இருந்தா.

கௌதம் : ஏன் டைம் பார்த்துட்டே இருக்க.

கயல் : ஒன்னும் இல்ல ( அப்போ காலிங் பெல் சத்தம் கேட்டுது) 😄  கௌதம் நீ போய் டோர் ஓபன் பண்ணு

கௌதம் : ஏன் நான் போனும்..

கயல் : போ உனக்கே தெரியும்...

கௌதம் : ( டோர் ஓபன் பண்ணான்)  😢😢😢

           : 😢😢😢

கௌதம் : மச்சான் ( வந்தவங்கள இறுக்கி கட்டிகிட்டான்)  மிஸ் யூ டா 😭😭😭

         : மிஸ் யூ டூ மச்சி.

லெட்சுமி அம்மா,  கயல் தவிர வேற யாருக்குமே அது யார்னு தெரியல.

கௌதம் : ( அவங்கள உள்ள அழைச்சிட்டு வந்தான் ) இவன் என் ஸ்கூல் ஃப்ரண்ட்டு பேர் அருண்.

( அருண், கௌதம் சின்ன வயசுல இருந்து +2 வரை ஒன்னா படிச்சவங்க... கௌதம் காலேஜ் படிக்க சேலம் வரவும் கௌதம் இல்லாத சென்னைல நானும் இருக்க மாட்டனு அருண் பெங்களூர் படிக்க போய்ட்டான்.. இரண்டு பேரும் அடிக்கடி ஃபோன்ல பேசிப்பாங்க கயல் கிட்டயும் அருண் பத்தி கௌதம் சொல்லிருக்கான் இப்போ கௌதம்க்கு சர்ப்ரைஸ் தர லெட்சுமி அம்மா கிட்ட அருண் நம்பர் வாங்கி அவன இங்க வர வச்சா... நாலு வருஷத்துக்கு பிறகு இப்போ தான் நேர்ல மீட் பண்றாங்க)

அருண் : எல்லாருக்கும் ஹாய் சொல்லிட்டு லெட்சுமி அம்மா கிட்ட போனான்.

லெட்சுமி : 😏😏😏 "அவன பார்த்து முகம் சுழிச்சிகிட்டாங்க..."

அருண் : அம்மா சாரி மா காலேஜ்ல எக்ஸாம் அது இதுனு சரியா பேச முடியல சாரி ( காதுல கைய வச்சி சாரி கேட்டான்)

லெட்சுமி : 😄 சரி சரி மன்னிச்சிட்டேன்.

அருண் : ஸ்வீட் மாம் ( கன்னத்தை கிள்ளி கிஸ் பண்ணான்)

லெட்சுமி : சரி உட்காரு எல்லாருக்கும் ஜூஸ் எடுத்துட்டு வரேன் ( போய்ட்டாங்க )

கௌதம் : "எல்லாரையும் இன்ரோ பண்ணி வச்சான்..."

நைட் இவங்களுக்கு வெட்டிங் பார்ட்டி ஏற்பாடு பண்ணிருந்தாங்க மத்த எல்லாரும் பார்ட்டிக்கு கிளம்பி வரனும்னு வீட்டுக்கு போய்ட்டாங்க கௌதம், அருண் நிறைய பேசிட்டு இருந்தாங்க.

கயல் : கௌதம் மொபைல்ல இருந்து ஆதிராக்கு கால் பண்ணா.

ஆதிரா : ( கௌதம் தான் கால் பண்றானு நினைச்சிட்டா) 😍 ஹலோ கௌதம்.

கயல் : அக்கா நான் கயல் பேசுறேன்.

ஆதிரா : சொல்லு மா.

கயல் : நைட் எங்க வீட்டுல பார்ட்டி இருக்கு மறக்காம வந்துடுங்க அட்ரஸ் செண்ட் பண்றேன்...

ஆதிரா : என்ன பார்ட்டி?

கயல் : கால் கட்..

ஆதிரா : அச்சோ என்ன பார்ட்டினு சொல்லாமலே வச்சிட்டாலே... என்ன பார்ட்டியா இருந்தா என்ன கௌதம் வீட்டுக்கு போறோம் அங்க அவன் அம்மா,  தங்கச்சி கிட்ட இப்பவே நல்லா பேசி பழகனும்...☺☺☺

ஆதிரா : ஈவ்னிங் அழகா சேரி கட்டி தலை நிறைய பூ வச்சி குட்டி செயின்,குட்டி தோடு கை நிறைய வளையல் போட்டுட்டு சிம்பிளா அழகா இருந்தா ( அவ ஸ்கூட்டில கயல் அனுப்புன அட்ரஸ்க்கு கிளம்புனா)

கௌதம் வீட்டுல கார்த்திக் அப்பா, அம்மா, கார்த்திக், சரண் அப்பா, சரண், மகா, ஹரி, அகிலன், மித்ரன், ராகவி எல்லாரும் அவங்க பேரன்ட்ஸ்ஸ அச்சிட்டு வந்திருந்தாங்க.

பேரன்ட்ஸ் எல்லாரும் தனியா பேசிட்டு இருந்தாங்க.

நம்ப பாய்ஸ் குரூப் கௌதம்ம கிண்டல் பண்ணி அவன ரெடி பண்ணிட்டு இருந்தாங்க... கேர்ள்ஸ் க்ரூப் கயல ரெடி பண்ணிட்டு இருந்தாங்க.

அருண் : வீட்டுக்கு வெளில நின்னு ஃபோன் பேசிட்டு இருந்தான்.

ஆதிரா : அவன் காலு கிட்ட ஸ்கூட்டிய ஸ்டாப் பண்ணா.

அருண் : 😱 ஏன் மா விட்டா ஆள ஏத்தி கொன்னுடுவ போலயே.

ஆதிரா : ஸ்கூட்டி ஏத்துன சாக மாட்டீங்க மிஸ்டர் அடுத்த முறை லாரி விட்டு ஏத்துறேன்.

அருண் : ஆத்தி ஃப்ரண்ட பார்க்க ஆசையா வந்தா இந்த பொண்ணு  எனக்கு சங்கு ஊதிடும் போலயே ( முனுமுனுத்தான்)

ஆதிரா : உள்ள போனும்.

அருண் : போங்க

ஆதிரா : "வழி விடு டா முண்டமே வாசல மறைச்சிட்டு நிக்குறான் பாரு..."

அருண் : 😳 போமா தாயே ( வழி விட்டு நின்னான்)

ஆதிரா : 😏😏😏  உள்ள போய்ட்டா 

கயல் : ( ஆதிராவ இதுக்கு முன்னாடி பார்த்தது இல்ல இருந்தாலும் ஒரு கெஸ்ஸிங்ல வந்து கேட்டா)  நீங்க தான ஆதிரா.

ஆதிரா : ஆமா

கயல் : நான் தான் கயல்.

ஆதிரா : ஹேய் கயல் இப்போ தான் நேர்ல பார்க்குறேன் ( அவள ஹக் பண்ணா)  அழகா தேவதை மாதிரி இருக்க.

கயல் : தேங்க்யூ நீங்களும் அழகா இருக்கீங்க.

ஆதிரா : 😊😊😊 என்ன பார்ட்டி நடக்க போது.

கயல் : தெரியாம தான் கிஃப்ட் வாங்கிட்டு வந்தீங்களா.

ஆதிரா : ஆமா பார்ட்டினு சொல்லிட்ட எப்படி சும்மா வரது.

கயல் : சரி வாங்க.

ஆதிரா : கௌதம்ம தேடுனா.

கௌதம் : இன்ஸ்ட்டியூட் பசங்க சில பேர் வந்திருந்தாங்க அவங்கள்ட பேசிட்டு இருந்தான்.

கொஞ்ச நேரத்துல கௌதம், கயல் சேர்ந்து கேக் கட் பண்ணாங்க எல்லாரும் விஷ் பண்ணி கிஃப்ட் குடுத்தாங்க... ஆதிராக்கு அப்போ தான் எல்லா உண்மையும் தெரிஞ்சது அழுதுட்டே ஒரு சேர்ல உட்கார்ந்தா.

தொடரும்....

# Sandhiya