காத்திருந்த கண்கள் - 3
பொங்கல் எல்லாம் சாப்பிட்டு முடிச்ச பிறகு சிவா வயலுக்கு கிளம்புனான், அவன் கூடவே க்ரிஷ்ம் கிளம்புனான்...🏝️🎋
இரண்டு பேரும் சிவாவோட புல்லட்ல கிளம்புனாங்க அப்போ மகி ஓடி வந்தா ஹேய் எங்க போறீங்க...🙋🏻♀️
சிவா : வயல்க்கு...☺️
மகி : டேய் க்ரிஷ் நீயும் ஏன் போற எனக்கு போர் அடிக்கும் நீ இங்கயே இரு...😐
க்ரிஷ் : உனக்கு போர் அடிச்சா நான் என்ன பண்றது எனக்கு மாமா கூட வயலுக்கு போகனும்னு ஆசையா இருக்கு...😌
மகி : அப்போ நானும் வரேன்...😌😌
சிவா : "சரி வா மூனு பேரும் நடந்தே போலாம் கொஞ்ச தூரம் தான்..."
"மூனு பேரும் வயல்க்கு போனாங்க... வயல் பக்கத்துலயே ஒரு தோப்பு இருக்கு அங்க மாமரம், தென்னை மரம், கொய்யா மரம் இப்படி நிறைய மரம் இருந்தது...."
மகி : என்ன மாமரத்துல மாங்காயே இல்ல...🤔
சிவா : இது சீசன் இல்ல... இருங்க இளநி பறிச்சி தர சொல்லுறேன்...🌴
அங்க வேலை பார்க்குறவங்கள கூப்பிட்டு இளநி பறிச்சி தர சொன்னான், அவங்க பறிச்சி சீவி குடுத்தாங்க...
சிவா : மகி, க்ரிஷ்க்கு ஒன்னொன்னு குடுத்துட்டு அவனும் எடுத்துகிட்டான்...
மகி : ஸ்டா இல்லயா...
க்ரிஷ் : எப்படி மாமா குடிக்குறது...🤔
சிவா : வாய்ல வச்சி குடி ( குடிச்சி காமிச்சான் )
க்ரிஷ் : அவனும் அதே போல குடிச்சான்...
மகி : என்னால அப்படி குடிக்க முடியாது எனக்கு வேண்டா..😐
சிவா : ஹேய் குடி ஈசி தான் ( அவள குடிக்க வச்சான்)
மகி : வாவ் சூப்பரா இருக்கு...
சிவா : சரி இங்கயே உட்கார்ந்து இருங்க கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடுறேன்...
மகி, க்ரிஷ் : சரி...
அப்பறம் சிவா அவன் வேலைய முடிச்சிட்டு வந்ததும் அவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க...
இவங்க வீட்டுக்கு போனதும் ஒரு பொண்ணு வந்து சிவாவ ஹக் பண்ணுச்சி அந்த பொண்ணு பேர் நிலா, சிவா பக்கத்து வீட்டு பொண்ணு...
நிலா : மாமா செம்ம ஹேண்ட்சம்ம இருக்க உன்னை பார்க்க எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா எங்க போய்ட்ட...
மகி : 😠😠😠 ( m.v ) அதை கட்டி பிடிச்சி தான் கேட்பாளா தள்ளி நின்னு கேட்டி அவன் காதுல விழாதா இவனும் ஈஈஈ னு நிக்குறான் பாரு... 😏
சிவா : "இவங்கள வயல்க்கு அழைச்சிட்டு போனேன் அதான்..."
நிலா : மாமா எவ்ளோ அழக இருக்க வா இப்பவே கல்யாணம் பண்ணிகலாம் ( அவன் கைய புடிச்சி இழுத்தா)
மகி : ( அவ கைய எடுத்து விட்டா) ஹலோ பாப்பா முதல்ல நல்லா படிச்சி வளர்ர வேலைய பாரு அப்பறம் கல்யாணத்தை பத்தி பேசலாம்...
நிலா : "நான் ஒன்னும் பாப்பா இல்ல +2 படிக்குறேன்..."
மகி : இவனும் +2 தான் படிக்குறான் இவன கட்டிக்க ( க்ரிஷ்ஷ புடிச்சி அவ சைடு தள்ளி விட்டா)
க்ரிஷ் : ஏய் என்ன திமிரா யார யார் கூட கோர்த்து விடுற கொன்னுடுவேன் ( அவன் ரூம்க்கு போய்ட்டான்)
நிலா : எனக்கும் அவன் வேண்டா ( அவளும் போய்ட்டா)
சிவா : ஏன் அவள துறத்தி விட்ட....🤔
மகி : நான் எங்க துறத்தி விட்டேன் அவளே தான் போனா ( அவளும் போய்ட்டா)
சிவா : ( m.v ) கேடி பண்றதும் பண்ணிட்டு எங்க மாட்டிப்போம்னு நினைச்சி ஓடுறா பாரு...
அடுத்த நாள் மாட்டு பொங்கல், அவங்க வீட்டுல 10 மாட்டுக்கு மேல இருக்கு அதை எல்லாம் சிவாவும் அந்த வீட்டுல வேலை பார்க்குறவங்களும் சேர்ந்து குளிப்பாட்டி மஞ்சள், குங்கும பொட்டு வச்சி விட்டாங்க...
மாட்டுக்கு கட்டிருந்த பழைய கயிறு எல்லாத்தையும் அவிழ்த்துட்டு புது கயிறு மாத்துனாங்க...
அப்பறம் பொங்கல் வச்சி மாட்டுக்கு நெட்டி மாலை, வேப்பிலை மாவிலை கலந்து கட்டுற மாலை அப்பறம் பூ மாலை எல்லாம் வச்சி சாமி கும்பிட்டுட்டு மாட்டுக்கு போட்டு விட்டுட்டு ஒரு இடத்துல எல்லா மாட்டையும் சேர்த்து கட்டுனாங்க...🐄🐄🐄
அப்பறம் மாட்டுக்கு சூடம் சாம்பிராணி எல்லாம் காட்டி பொட்டு வச்சாங்க அது எல்லாம் முடிஞ்சி மாட்டை அது இடத்துல கட்டி வைக்கோல் போட்டுட்டு எல்லாரும் வீட்டுக்குள்ள போனாங்க...
அப்பறம் எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டாங்க...🍱
சிறிது நேரத்திற்க்கு பிறகு,
மகி : எங்க இந்த நிலா, சிவா இரண்டு பேரையும் காணும் ( தேடிட்டு போனா)
க்ரிஷ் : அந்த வழியா போனான்...
மகி : டேய் க்ரிஷ்...
க்ரிஷ் : என்ன...
மகி : சிவாவ பார்த்தியா...
க்ரிஷ் : இல்ல.
மகி : அப்போ அந்த நிலா..
க்ரிஷ் : அவள பத்தி என்கிட்ட ஏன் கேட்குற 😠 ( அவன் போய்ட்டான்)
மகி : இப்போ என்ன கேட்டுட்டனு இந்த எருமை இப்படி கத்திட்டு போறான்...
( மாடில இருக்கானானு பார்க்க போனா)
சிவா : ( படிலயே நின்னான்) என்னையா தேடுற...🧐
மகி : இல்லயே...😏
சிவா : அப்போ சரி ( படி ஏறி மாடிக்கு போய்ட்டான் )
மகி : அய்யயோ போய்ட்டானே ( அவளும் பின்னாடியே போனா)
சிவா : ( அங்க சைடு கட்டைல உட்கார்ந்து இருந்தான்) என்னை தேடலனு சொன்ன அப்பறம் ஏன் இங்க வந்த...
மகி : நான் சும்மா காத்து வாங்க வந்தேன்....
சிவா : ஓஹோ...
இரண்டு பேரும் கொஞ்ச நேரம் அமைதியா இருந்தாங்க...
மகி : சிவா...
சிவா : என்ன...
மகி : நிலாவ தான் நீ கல்யாணம் பண்ணிக்க போறியா...
சிவா : இல்லயே ஏன் அப்படி கேட்குற...🤔
மகி : காலைல சொன்னாலே அதான்...
சிவா : "அவ எப்போதும் அப்படி தான் வம்பு பண்ணிட்டு இருப்பா ஆனா அவ எனக்கு தங்கச்சி மாதிரி..."
மகி : ஓஓஓ
க்ரிஷ் : மாமா மாமா ( கத்திட்டே வந்தான்)
மகி : ( m.v ) வந்துட்டான் 😏
சிவா : என்ன டா...
க்ரிஷ் : வா கேம் விளையாடலாம் ( இரண்டு பேரும் கேம் விளையாட ஆரம்பிச்சிட்டாங்க)
மகி : ( m.v ) காலைல இருந்தே வேலை இருந்ததால சிவா கூட சரியா பேச முடியல, சரி பேசலாம்னு வந்தா இப்போவும் அது முடியலையே ( கீழ போய்ட்டா)
சிவா : போற அவளயே குட்டி ஸ்மைலோட பார்த்துட்டு இருந்தான்...
தொடரும்....
# Sandhiya
9 Comments
Semma story romba interesting-aa poguthu sis
ReplyDeleteSuper sister eppovume unga story vera level than
ReplyDeleteSema jollya pothu😁😁 cute possessiveness😍😍😍
ReplyDeleteSuper akka
ReplyDeleteSemma interesting sis...
ReplyDeleteSemmmaaa sis😍😍😍
ReplyDeleteSemmmaaayyyya irukkuu... Very interesting
ReplyDeleteAii vera level possessiveness ah iruke...😁🤩🤩🤩nila ku tharala siva ah..appo enaku theriya...plz..i love siva😉
ReplyDeleteசூப்பர் ஸ்டோரி வேற லெவல் சிவா அண்ட் மஹி காம்பினேஷன் சூப்பர்
ReplyDelete