காத்திருந்த கண்கள் - 4

அடுத்தநாள் காலை,

மகி : சிவா ரூம்க்கு இரண்டு கப் காபி எடுத்துட்டு வந்தா...☕☕

சிவா : ( அப்போ தான் ஃப்ரஸ் ஆகிட்டு வந்தான்) என்ன நீ காபி கொண்டு வர...

மகி : எல்லாரும் வேலையா இருக்காங்க அதான்...

சிவா : சரி ( காபி எடுத்து குடிச்சான்)

மகி : டேய் க்ரிஷ் எழுந்திரி...🧐

க்ரிஷ் : மாமா கொஞ்ச நேரம் ப்ளீஸ்...

மகி : டேய் எறும நான் உன் அக்கா முதல்ல எழுந்திரி...🤨

க்ரிஷ் : ( எழுந்தான்) நீயே 8 மணி வரை இழுத்து போத்திட்டு தூங்குவ நீ என்னை எழுப்புறது அதிசயம் தான்.

சிவா : 😂😂😂 சிரிச்சான்...

மகி : மானத்தை வாங்காத போய் ஃப்ரஸ் ஆகிட்டு வா ஓடு ( அவன பெட்ல இருந்து புடிச்சி இழுத்தா)

க்ரிஷ் : ஃப்ரஸ் ஆக போய்ட்டான்...

மகி : மாமா...😊

சிவா : திரும்பி திரும்பி பார்த்தான்...

மகி : யார தேடுற...

சிவா : மாமானு சொன்னியே அதான் என் அப்பா வந்திருக்காங்களானு பார்த்தேன்...

மகி : விளையாடாத மாமா உன்னை தான் கூப்பிட்டேன்...

சிவா : நானே கூப்பிட சொன்னாலும் கூப்பிட மாட்ட இப்போ என்ன நீயே கூப்பிடுற...

மகி : நாளைக்கு நாங்க ஊருக்கு போறோம்...

சிவா : சந்தோஷம் தான...😒

மகி : என்ன...

சிவா : உங்களுக்கு தான் இங்க வர புடிக்கல நாங்க தான் கம்பல் பண்ணி அழைச்சிட்டு வந்தோம்னு அத்தை, மாமா சொன்னாங்க சோ இப்போ ஹேப்பி தான...😒

மகி : அது இங்க வரதுக்கு முன்னாடி அப்படி சொன்னோம் இப்போ ரொம்ப புடிச்சிருக்கு..😊

சிவா : அதுக்கு என்ன பண்ண முடியும் பொங்கல்காக வந்தீங்க முடிஞ்சதும் போய் தான ஆகனும்...

மகி : 😔😔😔 ம்ம்ம்..

சிவா : இரு உனக்காக ஒன்னு வச்சிருக்கேன் ( அவன் கப்போர்ட திறந்து ஒரு மர பெட்டி எடுத்துட்டு வந்தான்)

மகி : அதுல என்ன இருக்கும்னு ரொம்ப ஆர்வமா பார்த்தா...

சிவா : அதை ஓபன் பண்ணி ஒரு குட்டி வொய்ட் ஃப்ராக் எடுத்தான்...

மகி : வாவ் அழகா இருக்கு யாரோடது...😍

சிவா : உன்னோடது தான்...

மகி : என்னோடதா...🤔

சிவா : ஆமா உனக்கு 3 வயசு இருக்கும் போது நான் உனக்காக வாங்கி குடுத்தேன்... உனக்கு இந்த ட்ரெஸ்னா ரொம்ப புடிக்கும் எங்க போனாலும் இந்த ட்ரெஸ் தான் போட்டுட்டு போவ... நீ வளரவும் இந்த ட்ரெஸ் உனக்கு பத்தாம போய்டுச்சி அதுக்கு ஒரு நாள் ஃபுல்லா உட்கார்ந்து அழுத...

மகி : 😍 எனக்கு அந்த ட்ரெஸ் அவ்ளோ புடிக்குமா ( அதை தடவி பார்த்துட்டே கேட்டா)

சிவா : இல்ல அந்த ட்ரெஸ் வாங்கி குடுத்த என்னை தான் உனக்கு புடிக்கும் ( அவள பார்த்துட்டே சொன்னான்) 😍😍😍

மகி : 😍😍😍 அவளும் அவனை தான் பார்த்துட்டு இருந்தா...

க்ரிஷ் : என்னை விட்டுட்டு இரண்டு பேரும் என்ன பார்க்குறிங்க...

சிவா : உங்களோட திங்ஸ் தான் இங்க பாரு இதான் உன்னோட பாலாடை...

க்ரிஷ் : என்னோடதா அப்போ நானே எடுத்துக்கவா...

சிவா : எடுத்துக்க...

மகி : இன்னும் அந்த பெட்டில என்னலாம் இருக்குனு பார்த்தா ( அவளோட குட்டி கொலுசு , குட்டி வளையல், காலுல போட்ருந்த காப்பு, பால்மனி இப்படி நிறைய இருந்தது) 😍😍😍 அது எல்லாத்தையும் பார்க்க அவளுக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்தது...

அப்பறம் ஒரு பாக்ஸ் எடுத்தா அதுக்கும் மேல மகிழினினு எழுதி இருந்தது, அதே போல இன்னொரு பாக்ஸ்ல கிருஷ்ணா ( க்ரிஷ்) னு இருந்தது...

க்ரிஷ் : என்ன பாக்ஸ் மாமா இதெல்லாம் எங்க பேர் போட்ருக்கு..

சிவா : திறந்து பாருங்க...

மகி அவ பேர் போட்ருந்த பாக்ஸையும், க்ரிஷ் அவன் பேர் போட்ருந்த பாக்ஸையும் திறந்தாங்க அதுல அவங்களோட தொப்புள் கொடி இருந்தது...

க்ரிஷ் : 😍 மாமா இதை இன்னமும் பத்திரமா வச்சிருக்கீங்களே...

சிவா : நீங்க இரண்டு பேரும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா... மகி பிறந்தப்ப பாப்பாவ நான் தான் வச்சிப்பேன் வேற யார்கிட்டயும் தர மாட்டனு அடம்பிடிப்பேன் அவளும் என்கூடவே தான் இருப்பா...

க்ரிஷ் பிறந்தப்ப மகிக்கு 4 வயசு நான் க்ரிஷ்ஷ தூக்குனாலே அழுவா எப்போதும் அவ கூடவே இருக்கனும்னு நினைப்பா என்னை க்ரிஷ் கிட்ட நெருங்கவே விட மாட்டா...

க்ரிஷ் : மகிய அடிச்சா...

மகி : ஏன் டா அடிச்ச...

க்ரிஷ் : மாமாவ என்னை தூக்க விடாமா என் கூட விளையாட விடாம எவ்ளோ டார்ச்சர் பண்ணிருக்க...

மகி : டேய் அது ஏதோ குட்டி பாப்பாவா இருந்தப்போ நடந்தது அதுக்கு இப்போ அடிப்பியா...

க்ரிஷ் : ஆமா...

சிவா : 😂😂😂 சரி சரி விடுங்க...

மகி : ஒரு ஃபோட்டோ எடுத்தா ( அந்த ஃபோட்டோ ப்ளாக் அண்ட் வொய்ட்ல இருந்தது ஒரு பையன் கைய ஒரு குட்டி பையன வச்சிட்டு இருப்பான் பக்கத்துல ஒரு பாப்பா நிக்கும் ) யார் இவங்களாம்..

சிவா : தெரியலையா நம்ம மூனு பேரும் தான்... நான் க்ரிஷ்ஷ கைல வச்சிட்டு இருப்பேன் என் பக்கத்துல நிக்குறது நீ தான்...

க்ரிஷ் : மாமா இதெல்லாம் நாங்க எடுத்துட்டு போகட்டுமா...

சிவா : ம்ம்ம் எடுத்துட்டு போங்க...

மகி : அவனோடது மட்டும் அவன் எடுத்துக்கட்டும் என்னோடது எல்லாம் உங்கள்டயே இருக்கட்டும்...

சிவா : ஏன்...

மகி : நமக்கு பொறக்க போற குழந்தைக்கு வச்சிக்கலாம் 🏃🏻‍♀️( சொல்லிட்டு ஓடிட்டா)

சிவா : 😱😱😱 அவ போறதையே பார்த்தான்...

க்ரிஷ் : 😱 இது எந்த மாதிரியான ப்ரொபோசல் மாமா..

சிவா : அதான் டா எனக்கும் தெரியல...🤔

க்ரிஷ் : நடிக்காத மாமா நீயும், அந்த நிலாவும் சேர்ந்து என் அக்காவ வெறுப்பேத்தி எப்படியோ லவ் சொல்ல வச்சிட்டீங்க...

சிவா : 😁😁😁 மச்சான் கண்டுபுடிச்சிட்டியா...

க்ரிஷ் : ஆமா நீங்க பேசும் போது ஒட்டு கேட்டேன்...😌

சிவா : அவள்ட சொல்லிடாத டா...

க்ரிஷ் : அப்போ எனக்கு உங்க புல்லட் ஓட்ட சொல்லி குடுங்க...

சிவா : வா சொல்லி தரேன்...

அவன அழைச்சிட்டு போய் சொல்லி குடுத்தான் அவனும் நல்லா கத்துகிட்டான்...

அப்படியே நைட் ஆச்சி ஊருக்குள்ள உள்ள அம்மன் கோவில் முன்னாடி நிறைய பெண்கள் எல்லாரும் பாட்டு பாடி கும்மி கொட்டுனாங்க அப்பறம் விளையாட்டு போட்டிகள்லாம் வச்சாங்க...

ம்யூசிக் சேர், லெமன் வித் ஸ்பூன், கோ-கோ, கபாடி, ஸ்லோவ் சைக்கிள், ஓட்டப்பந்தயம் இப்படி நிறைய போட்டிகள் வச்சாங்க....

சிவா,  மகி, க்ரிஷ் கூட அதுல கலந்து கிட்டு நிறைய பரிசு பொருள் எல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு போனாங்க...

தொடரும்....

# Sandhiya