காதல் கண்ணாமூச்சி - 47
அடுத்த நாள் காலை விடியுது.. அர்ஜூன் அபி நல்லா இழுத்து போர்த்தி தூங்குறாங்க..
யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டு..அபி எழுந்து அர்ஜூனை எழுப்புறா..
அர்ஜூன் : என்ன மா..
அபி : கதவா தட்டுறாங்க.. நீங்க எழுந்து போய் பாருங்கன்னு அவ எழுந்து ரெஸ் ரூம் போறா..
அர்ஜூன் அவ ட்ரஸ் சரி பண்ணிட்டு போறான்..கதவை திறக்குறான்..
வெளியே ரேகா இருக்கா..
அர்ஜூன் : என்ன வேணும்..
ரேகா அவன் கேள்விக்கு பதில் சொல்லமா..உள்ள ரூம்மை பாக்குறா..பேட்லா கலைஞ்சு இருக்கு... அர்ஜூன் கன்னத்துல அபியோட ஸ்டிக்கர் பொட்டு இருக்கு..
இதை பாத்து ரேகா முகம் கோபத்துல சிவக்குது.
அர்ஜூன் : ஏய்.. எதுக்கு டி காலையிலேயே வந்து நின்னு சீன் போடுறா..
ரேகா : சந்தோஷமா இருந்து இருக்க.. நான் நைட் ஃபுல் லா தூங்கலை தெரியுமா..
அர்ஜூன் : அதுக்கு நான் என்ன பண்றது..
ரேகா : என் கூட வந்துரு டா..ஐ லவ் யூ..
அர்ஜூன் : சரி தா போ டி..
ரேகா : இல்லன்னா உங்களை நிம்மதியா வாழ விட மாட்டேன் டா..அவளை உன்கிட்ட இருந்து பிரிச்சுருவேன்..
அர்ஜூன் : ஏய்..உனக்கு நல்ல விதமா சொன்னா புரியாதா... ஏன் டி உயிரை வாங்குற...இங்க பாரு இந்த ஜென்மத்துல இல்ல இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அபி தான் என் பொண்டாட்டி..உன் முகத்தை கூட நான் பாக்க விரும்பால..
ரேகா : அப்படி என்ன டா என்கிட்ட இல்லதாது அவகிட்ட இருக்குன்னு அவ பானியனை பிடிக்குறா..
அப்போ அவ நெஞ்சுல இருக்க அபி நேம்மை பாக்குறா..
ரேகா : அவ பேரை பச்சை குத்தி இருக்க..
அர்ஜூன் : முதல்ல கையை எடு..போ..ன்னு அவளை தள்ளிட்டு கதவை சாத்துறா..
அபி வெளியே வாரா..
அபி : யாரு டா..
அர்ஜூன் : எல்லா அந்த ராட்சசி தா..
அபி : பாவம் டா... உன்னை ரொம்ப லவ் பண்றா போல இருக்கு..பேசி புரிய வைக்கலாம் தானே.
அர்ஜூன் : ஹே..நீ வேற.. அவளுக்கு எப்படி சொன்னாலும் புரியாது..
அபி : நான் பேசி பாக்குறேன் டா..
அர்ஜூன் : வேண்டா.. சொன்னா கேளு..அவளா மனுஷி மாதிரி இருக்க அரக்கி..
அபி : சரி டென்ஷன் ஆகாதா.. பாத்துக்கலாம்..விடு..
அர்ஜூன் : ம்ம்..சரி இரு நான் ரெடி ஆகி வரேன்.. வெளியே போலாம் ன்னு போய் ரெடி ஆகி வரான்.
இவங்க வரும் போது மத்த எல்லாரும் வராங்க..
எல்லாரும் ட்ராவல்ஸ் லா ஏறி சுத்தி பாக்க போறாங்க...
ரேகா அபியை முறைச்சுட்டே வரா..
அபியும் அது பாத்துட்டு பாக்கதா மாதிரி வரா..
எல்லாரும் டீ சாப்பிட நின்னுட்டு இருக்கும் போது..
அபி ரேகா பக்கத்துல வரா..
அபி : ஹாய்..
ரேகா முறைக்குறா..
அபி : எதுக்கு இவ்வளவு கோவமா இருக்கீங்க.. புரியுது உங்க கஷ்டம்..ஆனா ஏத்துக்கிட்டு தானே ஆகணும்.. அர்ஜூன் க்கு உங்களை பிடிக்கலை..அதோட கல்யாணம் ஆகிடுச்சு.. இனியும் அவனை டிஸ்டர்ப் பண்றது நல்லவா இருக்கு...நம்ம லவ் பண்ண வாங்க நமக்கு கிடைக்கலன்னு அவங்களை கஷ்டப்படுத்தமா அவங்களை தொந்தரவு பண்ணமா போனதும் லவ் தான்.
ரேகா : என்னால அப்படி எல்லாம் விட முடியாது..எனக்கு அர்ஜூன் வேணும்..நீ போய்டு..
அபி : முடியாது...நீ அவனுக்கு செட் ஆகா மாட்டா..இல்லன்னா கூட யோசிக்கலாம்..ஆனா நீ கண்டிப்பா அவனுக்கு ஒத்து வர மாட்டா..நல்ல விதமா சொல்றேன்..உனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு அதை பாரு.. எங்களை தொந்தரவு பண்ணதா.
ரேகா : இல்லன்னா என்ன பண்ணுவ..
அபி : ரொம்ப பீல் பண்ணுவ..
ரேகா : அவ்வளவு பெரிய ஆளா நீ..
அபி : போக போக தெரியும்..
ன்னு அங்க இருந்து போறா..
ரூம்க்கு வந்த அப்பறம் ரேகாவை பத்தி கேட்குறா.. அர்ஜூன் கிட்ட
அர்ஜூன் : அவளை பத்தி ஏன் கேட்குற..
அபி : சொல்லு டா..
அர்ஜூன் : அவ சொந்த ஊரு சென்னை... நான் காலேஜ் அங்க தான் படிச்சேன்.. அப்போ தான் அவளை தெரியும்.. வீட்டுக்கு ஒரே பொண்ணு..
அபி : அவ அம்மா அப்பா கிட்ட நாமா பேசுனா என்னா ??
அர்ஜூன் : பேசுனா மட்டும்..இவ கேட்கவா போறா..
அபி : சரி பாத்துக்கலாம் விடு.. இன்னைக்கு எடுத்த ஃபோட்டோஸ் லா எனக்கு அனுப்பு டா.. நான் ஸ்டேட்டஸ் ல போடுறேன்...
அர்ஜூன் : ஹா..ஹா..இது வேற யா..இரு அனுப்புறேன் ன்னு அனுப்புறான்...
அபியும் ஸ்டேட்டஸ் ல போடுறா..அது பாத்துட்டு அவ அம்மா அப்பா எல்லாரும் கால் பண்ணி பேசுறாங்க..
அர்ஜூன் அம்மா அப்பா ஆர்த்தி அசோக் லா பேசிட்டு இருக்காங்க.. அன்னைக்கு நாள் அப்படியே போகுது..
அங்க இருக்க லேக் பக்கத்துல இருக்காங்க..
ரேகா : ஏய்..அவ வரலா..
அடிமை : ஹா..வரா டி..
ரேகா : ஓகே...
அடிமை : என்ன பண்ண போற ரேகா..
ரேகா : அந்த அபியை தண்ணிலா தள்ளப் போறேன்..
அடிமை : ஏய்.. வேண்டா டி..ஐஸ் தண்ணி.. ஏதாவது ஆகிட போது.
ரேகா: லூசா நீ.. ஏதாவது ஆகணும் ன்னு தான் தள்ளி விட போறேன். அவ இருக்க வரை அர்ஜூன் என்னை திரும்பி கூட பாக்க மாட்டான்.
அடிமை : அதுக்குன்னு இதுலா வேண்டா ரேகா.. பெரிய பிரச்சினை ஆகிட போது..
ரேகா : ஏய்.. உன்கிட்ட நான் அட்வைஸ் கேட்கலை..நீ போ.. நான் பாத்துக்கிறேன்.
அர்ஜூன் அபி கைக்கோர்த்து கிட்டு வேடிக்கை பார்த்துட்டே வராங்க..
அபி : அர்ஜூன் நான் ரூம்க்கு போகட்டா..
அர்ஜூன் : ஏன் டி..
அபி : ஒரு மாதிரி இருக்கு.. மயக்கம் வர மாதிரி..
அர்ஜூன் : என்ன திடீர்னு..ஆமா நீ அத்தை தந்த மாத்திரை சாப்பிடுறீயா இல்லையா..
அபி : இல்ல.. மறந்துட்டேன்..
அர்ஜூன் : அறிவே இல்லையா டி...ஏன் இப்படி பண்ற.. இப்படி உட்காரு.. நான் கொஞ்சம் தண்ணி வாங்கிட்டு வரேன்.. ன்னு போறான்.
அபி உட்காராமா லேக் பக்கத்துல வந்து நிக்குறா...அவ வயித்துல கை வைச்சுட்டு விரல்களை விட்டு எண்ணிட்டு இருக்கா..
அவளுக்கு பின்னாடி ரேகா மெல்ல வந்துட்டு இருக்கா..
க்ரிஷ் அவன் ப்ரண்ஸ் கூட ஜாலியா பேசிட்டு இருக்கான்..
அர்ஜூன் வரதை பாத்து அவன்கிட்ட காமெடி பண்ணி சிரிச்சுட்டு இருக்கான்..
அபி ரேகா வராது தெரியமா நின்னுட்டே இருக்கா..
தொடரும்...
# Bhuvi
2 Comments
Achoo Antha Rekha Enna Panna poralo 😒😒 pavam abi 😒 I think abi pregnant ah irukalo 🤔🤔
ReplyDeleteSprr sissy❤️ abi pregnant irukakla🤔🤔🤔itha rekha ena pana pothu thalli viturmaa😡😡😡😡ayio abi pavam😞😞
ReplyDelete