கள்வனின் காதலி - 19

ராம் : டாக்டர் ஜானுக்கு என்ன ஆச்சி...

டாக்டர் : "கவலபடாதீங்க குட் நியூஸ் தான் அவங்க கன்சீவ்வா இருக்காங்க..." 👨‍⚕️

ராம் : ஐஐஐ நான் அப்பா ஆகிட்டேன் 🤗 ( டாக்டர தூக்கி சுத்தி கிஸ் பண்றான் 😚 )

டாக்டர் : "ஹலோ மிஸ்டர் என்ன பண்றீங்க உங்க வொய்ஃப் உள்ள இருக்காங்க என்ன விடுங்க..."

ராம் : சாரி டாக்டர் ஒரு ஆர்வத்துல...😁

அமுதா : "ஐயோ! அப்பா நீ ஏற்கனவே அப்பா ஆகிட்ட மானத்த வாங்காத வா..."

வருண் : "ஏன்டா இப்படி அவரு பாவம்ல..."

ராம் : சாரி டா என்னதா அமுதா இருந்தாலும் அவ பிறந்த வளர்ந்தத நான் பார்க்கலல அதான்...😌

"எல்லாரும் ரூம்க்கு போறாங்க..."

ஜானு : மயக்கத்துல இருக்கா...😴

ராம் : டாக்டர் டாக்டர்...

வருண் : "ஏன்டா இப்ப அவர கூப்பிடுற..."

ராம் : "ஜானு இன்னும் எழுந்திரிக்கவே இல்லயே..." 🙃

வருண் : "டேய் நீ பண்ண அலப்பறைல டாக்டர் இந்நேரம் வீட்டுக்கே போய்ருப்பாங்க..."

ரேவதி : "ராம் கொஞ்சம் நேரம் அமைதியா இரு அவளே மயக்கம் தெளிஞ்சி பேசுவா பாரு..."

ராம் : ம்ம்ம்...
( ஜானு பக்கத்துல சோகமா உட்காருறான் )

அமுதா : "சைலன்டா அவ பக்கத்துல உட்கார்ந்துருக்கா..."

ரேவதி : "அமுதா கூட அமைதியா இருக்கா இவன் என்ன டா இப்படி இருக்கான்..." 🤔

வருண் : "விடுமா இவ்ளோ வருஷம் பிரிஞ்சி இருந்தான்ல அவள மிஸ் பண்ண கூடாதுனு நினைக்குறான்..."

ஜானு : "லைட்டா கண்ண முழிச்சு பார்க்குறா..." 🙄

ராம் : "உனக்கு ஒன்னும் ஆகலல..."

ஜானு : "இல்லங்க..."

ராம் : வேற ஏதாவது பண்ணுதா டாக்டர் கூப்பிடவா ?

ஜானு : "எனக்கு ஒன்னும் இல்லங்க ஜெஸ்ட் மயக்கம் தான்..."

ரேவதி : "வெறும் மயக்கம் இல்லமா நீ கன்சீவ்வா இருக்க..."

ஜானு : உண்மையா 😊
( ராம்ம பார்த்து கேட்குறா )

ராம் : ஆமா ☺️
( ரொம்ப சந்தோசமா சொல்றான் )

அமுதா : "அம்மா எனக்கு தம்பி பாபா வர போறானா..." 😊

அமுதா : ஆமாடா செல்லும் 😚 ( அவ நெத்தியில முத்தம் குடுக்குறா )

ராம் : "அம்மாவ இனி நம்மதான் கேர்ஃபுல்லா பாத்துக்கணும் சரியா..."

அமுதா : ம்ம்ம் சரிப்பா...

ரேவதி : ஜானு தலைல கிஸ் பண்றாங்க ரொம்ப சந்தோசமா...😚

ராம் : 😁 "ரொம்ப சந்தோசமா இருக்கான்...."

வருண் : "சரி, வாங்கமா நம்ம  போலாம் அவங்க தனியா பேசட்டும்..."

ராம் : "டேய் அண்ணா நீ தான் டா என்னைய நல்லா புரிஞ்சு வச்சிருக்க.."

வருண் : தெரியும் டா இப்போ நாங்க போகலனாலும் நீயே எங்கள தொறத்திவிட்டுருவ...😒

ராம் : கரேட்டா சொன்ன 😉

ஜானு : ஏங்க சும்மா இருங்க...😊

ரேவதி : "இருக்கட்டும் மா நீங்க பேசுங்க நாங்க போறோம்..."

ஜானு : "சரிங்க அத்தை..."

"எல்லாரும் வெளில போய்ட்டாங்க..."

ராம் : 😊 ஜானு இப்போ நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா ?

ஜானு : "உன் பேஸ் பார்த்தாலே தெரியுது..."

ராம் : அமுதா உனக்குள்ள இருக்கும் போது நீ தனியா எவ்ளோ கஷ்டபட்டிருப்ப...😌

ஜானு : "அதலாம் இல்லங்க நான் சந்தோசமா தான் இருந்த..."

ராம் : "பொய் சொல்லாத மா ..."

ஜானு : உன்னோட நினைவுகள மனசுலையும் உன்னோட உயிர் வயித்துலையும் சுமக்கும் போது நான் எப்படி கஷ்டபடுவேன்

ராம் : கண் கலங்குறான் 😰😰😰

ஜானு : "அமுதாவ தனியா வளர்த்திருக்கலாம் ஆனா இந்த பாப்பாவ நம்ம இரண்டு பேரும் சேர்ந்து வளர்க்கலாம் சரியா..."

ராம் : உன்னைய எப்படி தாங்குறேனு மட்டும் பாரு...😊

வருண் : அதலாம் அப்பறம் தாங்கிகலாம் இப்போ வீட்டுக்கு போகலாமா ?

ராம் : ( வருண பார்த்து மொறைக்குறான் ) 😠 என்னைய டிஸ்டர்ப் பண்றதே இவனுக்கு வேலையா போய்டுச்சு...

ஜானு : சிரிக்குறா 😂😂😂

அமுதா : "அம்மா போகலாம் எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல..."

"ஜானுவ டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க..."

ரேவதி : "ஆரத்தி எடுத்து ஜானுவ உள்ள அழைச்சிட்டு போய்ட்டாங்க..."

மீரா : ஜூஸ் போட்டுட்டு வந்து அவளுக்கு குடுக்குறாங்க...🍹

ரேவதி : "பேபி ஃபார்ம் ஆகி 45 நாள் ஆகுது அதனால ரொம்ப கேர் ஃபுல்லா இருக்கனும் மா..."

ஜானு : சரிங்க அத்தை...☺️

ரேவதி : ராம்...

ராம் : சொல்லுமா ?

ரேவதி : ஜானு மாடி படிலாம் ஏற கூடாது அதனால  உங்க ரூம்ம கீழ மாத்திடு..

ராம் : சரிம்மா இப்பவே ரெடி பண்றேன் ( போய்ட்டான் )

ரேவதி : "வருண் நீ ஜானு வீட்டுக்கு ஃபோன் பண்ணி இந்த குட் நியூஸ்ஸ அவங்க கிட்ட சொல்லிடு..."

வருண் : "சரிமா அமுதா வா நம்ம தாத்தா கிட்ட பேசலாம்..."

அமுதா : ம்ம்ம் வாங்க பெரியப்பா அக்கா நீயும் வா...

ரேவதி : என்னங்க நீங்க என்ன பண்றீங்கனா ?

ராஜா : போதும் போதும் எல்லார்டையும் ஆர்டர் போட்டா மாதிரி என்டையும் ஆர்டர் போடாத...😏

ரேவதி : அவர பார்த்து மொறைச்சாங்க 😠

ராஜா : ஜானுக்கு தேவையான பொருட்கள் எல்லா வாங்கிட்டு வரனும் அதான...☺️

ரேவதி : அதே தான் 😌

ராஜா : "ஷாப்பிங் போய்ட்டாரு..."

ரேவதி : மீரா...

மீரா : அத்தை நான் போய் சமைக்குறேன் ( ஓடிட்டா )

ஜானு : மீரா போறத பார்த்து சிரிக்குறா 😂

ரேவதி : "ஜானு நீ போய் என்னோட ரூம்ல கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுமா..."

ஜானு : "சரிங்க அத்தை..."

"ஜானு அம்மா அப்பா இந்த நியூஸ்ஸ கேட்டு உடனே வந்துட்டாங்க அவ்ளோ சந்தோஷம் அவங்களுக்கு..."

" எல்லாரும் ஜானுவ ரொம்ப நல்லா பார்த்துகிட்டாங்க..."

இப்படியே நாட்கள் ரொம்ப அழகா போகுது ஜானுக்கு இப்போ 3வது மாதம்... இந்த மாத செக்கப் க்கு ராம் ஜானுவ ஹாஸ்பிட்டல்க்கு அழைச்சிட்டு வந்திருக்கான்...

டாக்டர் : மிஸ்ஸஸ் ஜானு இப்போ எப்படி இருக்கீங்க வாமீட் வருதா ?

ராம் : அப்போ அப்போ வாமிட் பண்றா டாக்டர்

டாக்டர் : நான் ஜானு கிட்ட கேட்டேன் கொஞ்சம் நேரம் சைலன்ட்டா இருங்க

ஜானு : ( சிரிக்குறா ) எப்போயாவது வாமிட் வருது டாக்டர்

டாக்டர் : ஓகே அதுக்கு டேப்ளட் எழுதி தரேன் சரி ஆகிடும், ஜானு இப்போ என்கூட வாங்க

ராம் : டாக்டர் எங்க அழைச்சிட்டு போறீங்க ?

டாக்டர் : "மூன்று மாதம் ஆகுதுல ஸ்கேன் பண்ணி பார்க்கலாம் நீங்க நான் கூப்பிடும் போது வாங்க..."

தொடரும்...

# Ram krs