காதல் கண்ணாமூச்சி - 53

அரவிந்த் : என்ன‌ டா அப்படி பாக்குற..

அர்ஜூன் : இல்ல ..அபி ஏற்கெனவே இந்த மாதிரி தா மாத்திரை சாப்பிட்டா..

அரவிந்த் : என்ன சொல்ற டா..

அர்ஜூன் : ஆமா டா..அத்தை மாசம் மாசம் அனுப்புவாங்க டா..

அரவிந்த் : அப்போ... கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த டிஸிஸ் பத்தி தெரியுமா..

அர்ஜூன் : எனக்கு ஒன்னுமே புரியல டா..அப்படி இருந்து இருந்தா என்கிட்ட சொல்லி இருப்பாங்க..

அரவிந்த் : அபிக்கு தெரியுமா..

அர்ஜூன் : இல்ல டா..சரி வா வீட்டுக்கு போலாம்..
ன்னு அரவிந்த் ஐ வீட்டுக்கு கூட்டிட்டு போறான்..

அரவிந்த் : வீடு நல்லா அழகா இருக்கு டா..இந்த பெயிண்டிங்.. சூப்பர் டா..

அர்ஜூன் : அபி பண்ணது தா..

அரவிந்த் : ஓ..மீன் தொட்டி ஐ பாக்குறான்..

மீன்க்கு புஃட் வைக்குறான்..

அர்ஜூன் போய் செடிக்கு வைச்சு இருந்தா தண்ணீ பாட்டில்ல தண்ணீயை ஊத்துறான்.

அரவிந்த் : ஹே..செம டா.. வாட்டர் பாட்டில் லா கொஞ்சம் கொஞ்சமா தண்ணீ விடுற ஐடியா..

அர்ஜூன் : இதுவும் அபி பண்ணது தா..

அரவிந்த் : ரொம்ப லக்கி டா நீ..

அர்ஜூன் விரக்தியா சிரிக்குறான்.

அரவிந்த் : ஏன் இப்படி சிரிக்குறனு புரிது..நீ வேணும்னா பாரு..அபியை சரி பண்ணி காட்டுறேன்.

அர்ஜூன் : அது மட்டும் பண்ணிடு டா காலம் முழுக்க உனக்கு நன்றி கடன் பட்டு இருப்பேன்.

அரவிந்த் : அடி வாங்குவ டா..

அர்ஜூன் : இந்தா..கிடைச்சுருச்சு !! ன்னு அபியோட மாத்திரை யை எடுக்குறான்..

அரவிந்த் : ரெண்டும் சேம் தான் டா..

அர்ஜூன் : மாமா ஒரு ரெண்டு தடவை  ஏதோ சொல்ல வந்தாரு..ஆனா சொல்லவே இல்ல... ஒருவேளை இது பத்தியா இருக்குமா..

அரவிந்த் : பங்கு.. அப்போ உடனே ஊருக்கு போடா..கையோட அபியை கூட்டிட்டு அவ ரிப்போர்ட் வாங்கிட்டு வாடா.. அப்போ தா அவளோட கன்டிசன் எப்படி இருக்குன்னு தெரியும்.. அப்போ தான் அடுத்து என்ன பண்றதுன்னு தெரியும்.

அர்ஜூன் : ம்ம்..சரி டா..போறேன்.

அரவிந்த் : ஆனா ஒன்னு..அபிக்கு தெரியுமா பாத்துக்கோ..அவ ஃபீல் பண்ணா அவளோட ப்ராப்ளம் சீக்கிரம் அதிகம் ஆகும்..

அர்ஜூன் : ம்ம்..சரி டா... அரவிந்த்.. உன்னை தான் டா நம்பி இருக்கேன்..ப்ளீஸ் எப்படியாவது அபியை நல்ல படியாக சரி பண்ணி கொடுத்துடு டா..

அரவிந்த் : டோன்ட் வோரி டா..அது என்னோட பொறுப்பு. அவளுக்கு பாஸ்போர்ட் மட்டும் ரெடி பண்ணு..மத்தது லா நான் பாத்துக்கிறேன்.

அர்ஜூன் : ம்ம் சரி டா.. நான் போய்ட்டு வரேன்.

அரவிந்த் : ஹே..இரு டா.. நானும் வரேன்.

அர்ஜூன் : ம்ம்..சரி வா..

அரவிந்த் அர்ஜூன் ரெண்டு பேரும் ஒன்னா கார்ல போறாங்க..

க்ரிஷ் கால் பண்றான்...

அர்ஜூன் : மச்சா நான் அபியை பாக்க ஊருக்கு போய்ட்டு இருக்கேன்..இங்க இருக்க வோர்க் நீ பாத்துக்கோ டா..

க்ரிஷ் : ஓகே மச்சா..நீ பாத்து போய்ட்டு வா..ன்னு வைச்சுடுறான்.

இவங்க கால் பேசிட்டு இருக்கும் போது அபி அர்ஜூனுக்கு கால் பண்றா.. அப்போ பிஸின்னு வருது..

அபி : ஹே...பிஸின்னு வருது.. அப்போ இந்தியா வந்துட்டாரு.. அப்போ க்ரிஷ் அண்ணாக்கு பண்ணா லாம் ன்னு க்ரிஷ் க்கு பண்றா...அந்த நேரத்துல அர்ஜூன் கால் கட் பண்ணதால க்ரிஷ்க்கு ரிங் போகுது.

க்ரிஷ் : ஹாய் மா..நல்லா இருக்கீயா..

அபி : நீங்க பேசாதீங்க அண்ணா.. ரொம்ப கோவமா இருக்கேன்...ஒரு போன் கூட பண்ண தோணாலை தானே.. இப்போ என்ன ??

க்ரிஷ் : சாரி மா..அங்க நம்ம சிம் வோர்க் ஆகாது..அதா பேச முடியலை.. பாவம் அர்ஜூன் டெய்லி புலம்பிட்டே இருந்தான்.

அபி : இப்போ என்ன பண்றாரு.. இந்தியா எப்போ வந்தீங்க.

க்ரிஷ் : இப்போ தான் மா.. கொஞ்ச நேரம் முன்னாடி..அவன் உன்ன பாக்க தான் வந்துட்டு இருக்கான்.

அபி : அப்படியா !! ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. நீங்க ஏன் வரலை..

க்ரிஷ் : அவன் என்கிட்ட சொல்லவே இல்ல மா.. இப்போ கால் பண்ணும் போது தா சொன்னா..

அபி : சேரி அண்ணா...

க்ரிஷ் : ஆமா..வாய்ஸ் லா ஏதோ டிப்ரன்ஸ் தெரியுது..

அபி : ம்ம்..ஆமா.

க்ரிஷ் : என்னன்னு இந்த அண்ணாகிட்ட சொல்லக் கூடாதா..

அபி : நீங்க இங்க என்னை பாக்க வரலை..அதோட பாரின் போனாதுல இருந்து பேசவே இல்ல.அதுக்கு தண்டனை வேண்டாமா..சொல்ல மாட்டேன்...ன்னு கட் பண்றா..

அபி : அத்தை மாமா அவரு இங்க தா வந்துட்டு இருக்காரு...

கணபதி : ரொம்ப நல்லது மா..

அசோக் : அண்ணி !! அண்ணா வந்ததும் உடனே சொல்ல வேண்டா..அவரை கொஞ்சம் டிஸ் பண்ணாலா !!

ப்ரியா : ஹா..

ஆர்த்தி : ஆமா..

அபி : உங்க இஷ்டம்..எனக்கு ஒன்னும் இல்ல..

கௌசல்யா : பாத்து பா..

நளினி : அதுலா ஒன்னும் ஆகாது...

அபி : அம்மா.. நான் சமைக்கட்டா..

கௌசல்யா : அதுலா ஒன்னும் வேண்டா..நீ கம்முன்னு ரெஸ்ட் எடு.. டாக்டர் சொன்னாது ஞாபகம் இருக்கு இல்ல.. இதுவும் இரட்டை குழந்தைங்க.. ரொம்ப பத்திரமா இருக்கணும். மாடி கூட ஏற வேண்டா நீ..

அபி : அம்மா..என் ரூம் தா எனக்கு வேணும்.. நான் மெதுவா ஏறி இறங்குறேன் மா..

நளினி : சரி மா..ஆனா கொஞ்சம் பொறுமையா நட..வேகமா கூட நடக்க வேண்டா.. ட்ரவல் பண்ண வேண்டா..

அபி : அத்தை பெங்களூர்..

மோகன் : வேண்டா மா.. காலேஜ் க்கு கால் பண்ணி நாங்க சொல்லிடுறோம்..நீ இங்கேயே இரு.

அபி : அப்போ அவரு..

பாட்டி : நான் போய் அவனை பாத்துக்குறேன்.

அபி : பாட்டி...நீங்களா..இல்ல நான்

கௌசல்யா : சொன்னா கேளு மா..

அபி : ( ஆச்சோ இந்த 10 நாளே அவரை பாக்க மா இருக்க முடியலை..இவங்க வேற...சரி அவரு வரட்டும்..அவரு எப்படியும் கூட்டிட்டு போவாரு..ன்னு நினைச்சுக்குறா )

நேரம் போய்ட்டே இருக்கு...

ப்ரியா ஆர்த்தி, அசோக் அர்ஜூனை எப்படி கிண்டல் பண்றதுன்னு ப்ளான் போட்டுட்டு இருக்காங்க.

அபி அர்ஜூன் வருவான்னு வாசல்லயே பாத்துட்டு இருக்கா..

நளினி : அவன் அவரும் போது வருவான் மா...நீ ஏன் இப்படி உட்கார்ந்து ட்டே இருக்க..

வா வந்து சாப்பிடு.. மாத்திரை சாப்பிடணும் தானே.

அபி : அவரு வந்த அப்பறம் சாப்பிடுறேன் அத்தை.

நளினி : இங்க பாரு மா இப்போ நீ தனி ஆள் இல்ல..உன்ன நம்பி இரண்டு ஜீவன் இருக்கு.‌..பாவம் இல்ல..வா மா.

அபி : ம்ம்..சரி அத்தைன்னு சாப்பிட்டு மாத்திரை சாப்பிடுறா..

அப்படியே அவளுக்கு தூக்கம் வருது..

கௌசல்யா : போய் படு மா.. மாப்பிள்ளை வந்த அப்பறம் எழுப்புவாரு இல்ல..

அபி : இல்ல மா... நான் வைட் பண்றேன்னு சோஃபா லாயே தூங்கிட்டா..

அர்ஜூன் கார் வர வழியே பஞ்சர் ஆகிடுச்சு..

அதானால லேட் ஆகுது...

ஒவ்வொருத்தரா தூங்கிடுறாங்க..டோர் கூட க்ளோஸ் ப்ணணாமா..

அரவிந்த் பசிக்குதுன்னு சொன்னாதால வர வழியே ரெண்டு பேரும் சாப்பிட்டு வராங்க..

அபி வீட்டுக்கு வரும் போது எல்லாரும் தூங்கி இருந்தாங்க..

அர்ஜூன் : உள்ள வா டா..

அரவிந்த் : என்ன டா கதவு திறந்து இருக்கு.

அர்ஜூன் : தெரியலை டா.

அரவிந்த் : ஹே..அங்க பாரு..உங்க அப்பா !!

அர்ஜூன் : ஆமா..

அரவிந்த் : உன் தம்பி கூட இருக்கான்.

அர்ஜூன் : ஆமா எல்லாரும் இருக்காங்க போல இருக்கு.. ஏதாவது விஷேசம் மா..

அரவிந்த் : சரி தூங்கட்டும்..

கௌசல்யா மட்டும் இவங்க சத்தம் கேட்டு எழுந்திருக்குறா..

வாங்க பா.. இவ்வளவு நேரம் ஆய்டடுச்சு..

அர்ஜூன் : காலையில பேசிக்கலாம்..இவன் என் ப்ரண்டு..இவன் தூங்க ரூம்..

கௌசல்யா : வாங்க தம்பி..இந்த ரூம் எடுத்துக்கோங்க ன்னு அவங்க ரூம்மை காட்டுறாங்க..

அரவிந்த் : ஓகே மா.. தேங்க்ஸ்...பங்கு நீயும் தூங்கு.. காலையில பேசிக்கலாம்.

அர்ஜூன் : ம்ம்..சரி டா... நானும் போய் தூங்குறேன்..ன்னு அபி அம்மா கிட்ட சொல்லிட்டு போறான்.

சோஃபா லா அபியை பாக்குறான்..

அர்ஜூன் அவளை டக்குன்னு தூக்குறான்.

கௌசல்யா : அச்சோ பாத்து..பா... மெதுவா..

அர்ஜூன் : எனக்கு தெரியும்.. புதுசா ஒன்னும் தூக்கலை ன்னு அவங்க முகத்தை கூட பாக்க மா அவளை தூக்கிட்டு போய் படுக்க வைக்குறான்...

அபி நல்லா தூங்கிட்டு இருக்கா..

அபி முகத்தை பார்க்க பார்க்க அர்ஜூனுக்கு அழுகையா வருது..அவ கை விரல்களை எடுத்து அவன் முகத்துல வைச்சுட்டு சத்தமே இல்லமா அழுகுறான்..

அப்படியே அவளை கட்டி பிடிச்சு தூங்கிடுறான்..

தொடரும்...

# Bhuvi