காதல் கண்ணாமூச்சி - 55

அர்ஜூன் : பாட்டி..ப்ளீஸ்..அவ காலேஜ் போகணும்.. இப்போவே நிறைய லீவ் போட்டுட்டா..

நளினி : அதுலா போகலான்னா பரவால்ல..அப்பா பேசிப் பாரு..நீ பாட்டியை கூட்டிட்டு கிளம்பு.

அர்ஜூன் : மா..கம்முன்னு இருங்க மா..
அபி நீ  வரீயா இல்லையா..

அபி : அது..வரேன்..ஆனா அத்தை..

நளினி : அபி இரட்டை குழந்தைங்க மா.. விளையாட்டு விஷயம் இல்ல..அவன் கேட்கலான்னா பரவால்ல..நீ புரிஞ்சுக்கோ மா..

அபி : ம்ம்..சரி அத்தை.

அர்ஜூன் : அபி..

கௌசல்யாக்கும் கணபதிக்கு ம்ம் என்ன சொல்றதுன்னே தெரியலை.. அர்ஜூன் ரொம்பவே கோவமா இருந்தான்.அதோட அவங்ககிட்ட அர்ஜூன் முகம் கொடுத்தே பேசலை.. அதையும் அவங்க கவனிக்க மாலா இல்ல..

அரவிந்த் : அர்ஜூன்.. இங்க வா..ன்னு தனியா கூட்டிட்டு போறான்.

அபி பாவமா யாருக்கு ஆதரவா பேசுறதுன்னு தெரியமா அர்ஜூனையே பாக்குறா..

அர்ஜூன் : சொல்லு டா..

அரவிந்த் : பங்கு.. ஏன் டா இவ்வளவு டென்ஷன் ஆகுற.. பாவம் உன் வைப்..அங்க பாரு..யார் சொல்றதை கேட்குறதுன்னு புரியமா முழிக்குறா..

அர்ஜூன் : புரியுது மச்சா..அவளை இங்கு இருந்து கூட்டிட்டு போனா தானே நீ அவளை செக் பண்ண முடியும்.

அரவிந்த் : அப்படிலா இல்ல மச்சா.. இங்கேயே இருந்தா கூட பண்ணலாம்..உன் அத்தை மாமா கிட்ட அவளோட பழைய ரிப்போர்ட் கேளு..முடிஞ்சா நான் அவங்க கூட பேச ஏற்பாடு பண்ண முடியுமா..அவங்ககிட்ட அபிக்கு எப்போ இருந்து இந்த பிரச்சினை இருக்குன்னு தெரியணும்.

அர்ஜூன் : ம்ம் சரி டா.. அப்போ அபியை பெங்களூர் கூட்டிட்டு போக வேண்டாமா ??

அரவிந்த் : இப்போதைக்கு வேண்டா...எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை டா...நீ அப்பா ஆக போறா..ஆனா அதை சந்தோஷப்படுற நிலைமையில நீ இல்லன்னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு.

அர்ஜூன் : ஆமா டா..என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது டா..ஆமா இப்போ அபிக்கு லேசர் பண்ணா குழந்தைங்களுக்கு ஒன்னும் ஆகாது இல்ல.

அரவிந்த் : கர்ப்பமா இருக்கும் போது லேசர் பண்ண முடியாது டா.. பண்ணவும் மாட்டாங்க.

அர்ஜூன் : டேய்.. அப்பறம் அபி

அரவிந்த் : அபியை காப்பாத்தணும்ன்னா ஆபாஷன் பண்ணணும்..இல்ல குழந்தை வேணும்னா அபியை நீ இழக்கணும்.

அர்ஜூன் : இதுக்கு நான் கம்முன்னு செத்துரலாம் டா..

அரவிந்த் : டேய்..லூசு மாதிரி பேசதா..வைட் பண்ணு.. பாக்கலாம். இன்னோரு ஆப்ஷன் இருக்கு..உன் குழந்தைங்க ஸ்டெம் செல் வைச்சு ஆப்ரேஷன் பண்றது..ஆனா அதுல ஒரு சிக்கல்..அது வரைக்கும் அபியோட கன்டிஷன் நல்லா இருக்கணும்.

அர்ஜூன் : நீயே இப்படி சொன்னா எப்படி டா..

மோகன் ; அர்ஜூன்..என்ன டா பேசுறீங்க அப்படி... ஏதாவது பிரச்சனையா ??

அரவிந்த் : அப்படிலா இல்ல பா..நாங்க இப்போ பெங்களூர் போகல.. இன்னும் 2 இல்ல 3 நாளைக்கு அப்புறம் தா...

நளினி : அதுக்கு தா இவ்வளவு ஆட்டம்மா டா..போங்க போய் வேலையை பாருங்க..

அபி சாப்பிட டைனிங் டேபிள் லா உட்காரு ரா..

அவளுக்கு ஆளு ஆளுக்கு கவனிக்குறாங்க..அவளோட கண்ணுலா அர்ஜூன் மேல தான் இருக்கு..

ஏன் இப்படி இருக்கான்னு ஒன்னுமே புரியல..

அசோக் : அண்ணா..வாங்க சாப்பிடலாம் ன்னு‌ இழுத்துக்கிட்டு வர.. அர்ஜூன் அரவிந்த் சாப்பிடுறாங்க..

சாப்பிட்டு எல்லாரும் ஜாலியா பேசிட்டு இருக்காங்க.

அர்ஜூன் : மாமா...உங்க கிட்ட பேசணும்.

கணபதி : சொல்லு பா..

அர்ஜூன் : அபியோட ரிப்போர்ட் தாங்க..

கணபதி : எந்த ரிப்போர்ட் பா.. இப்போ ஹாஸ்பிடல் போனாதா..

அர்ஜூன் : இல்ல..அபியோட முதல் ரிப்போர்ட்... அவ சாக போறான்னு சொன்னா ரிப்போர்ட்.

கணபதி : 😳😳 மாப்பிள்ளை...

அர்ஜூன் : எவ்வளவு முக்கியமான விஷயத்தை மறைச்சு..அவ உயிருக்கு நீங்களே எமனா வந்து நிக்குறீங்க..உங்களை பாக்க கோவம் கோவமா வருது..என் அபியோட அப்பா ன்னு ஒரே ஒரு காரணத்துக்காக தான் அமைதியா இருக்கேன்..

கணபதி : மாப்பிள்ள

அர்ஜூன் : தயவு பண்ணி அப்படி கூப்பிடாதீங்க.. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. எப்படிங்க இவ்வளவு பெரிய விஷயத்தை மறைக்க மனசு வந்தது..இனி என்கிட்ட பேசர வேலை வேண்டா..அவ ரிப்போர்ட் தாங்கா..அதோட நான் இங்க இருந்து கிளம்பும் போது அபி என்கூட வரணும்..இனி நீங்க அங்க வரக்கூடாது.. அப்பறம் அபி மட்டும் என்னை விட்டு போனா..உங்களை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.

கணபதி மனசு கனக்க..பிரோலா இருந்து அபியோட ரிப்போர்ட் எடுத்து தராரு..

அர்ஜூன் அதை எடுத்துக்கிட்டு போய் அரவிந்த் கிட்ட தரான்.
அதை முழுசா பாக்குறான்..அதோட மனோ டாக்டர் க்கு கால் பண்ணி பேசுறான்.

அவரு அரவிந்த் யை அவரு ஹாஸ்பிடல் க்கு வரச் சொல்றாரு..அர்ஜூனும் கூட போறான்.

மனோ : உங்களுக்கு எப்படி தெரியும்.

அர்ஜூன் : ஏன் ?? எங்களுக்கு தெரியமாலே இருந்து இருக்கணும்னு நினைக்குறீங்களா..

மனோ : அப்படி இல்ல பா..வீணா உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்னு தா..

அர்ஜூன் : எங்க நீங்க டாக்டர் தானே.. உங்களுக்கு கொஞ்சமாவது ஏதாவது இருக்கா.. அவளுக்கு என்ன பிரச்சினை என்ன பண்ணா சரி ஆகும்ன்னு தெரியும் தானே..அப்படி இருக்கும் போது நீங்க என்ன பண்ணீ இருக்கனும்... முதல்ல என்னை தானே கூப்பிட்டு..தம்பி இப்படி இருக்கு பா..அதுக்கு அவ அம்மா ஆகணும்..இல்லன்னா உடனே லேசர் ட்ரிட்மண்ட் பண்ணணும்னு சொல்லணும்மா இல்லையா..

மனோ : ப்ளீஸ் அர்ஜூன்.. உட்காருங்க...கோவப்படாதீங்க..அபி எனக்கு ப்ரண்டு பொண்ணு மட்டும் இல்ல..என் பொண்ணு மாதிரி..அவளை அப்படி எல்லாம் விட்டுற மாட்டேன்.... அரவிந்த் சொல்ற மாதிரி லேசர் பண்ணா சரி ஆகாலாம்..ஆனா முழுசா இல்ல..எனக்கு எதுவும் தெரியமா இல்ல..அது மறுபடியும் வர வாய்ப்பு இருக்கு. அதோட அதுல நிறைய சைடு எஃபேக்ட் இருக்கு. இதுக்கு ஒரே வழி அபி அம்மா ஆகுறது தா..

அர்ஜூன் : அதுதா முதல்லயே சொல்லி இருக்க வேண்டியது தானே..நாங்க லேட் பண்ணி இருக்க மாட்டோம் இல்ல.

மனோ: அது எங்க தப்புதான்..எங்க இது தெரிஞ்சா அபியை கல்யாணம் பண்ணிக்க மாட்டியோன்னு தா..

அர்ஜூன் : லூசா சார் நீங்க.

அரவிந்த் : டேய்..ஏன் டா ?? இவ்வளவு கோவப்படுற..

அர்ஜூன் : மச்சா எனக்கு யார் பொய் சொன்னாலும் பிடிக்காது டா.. அதுவும் அவ உயிர் கூட ..

மனோ : இங்க பாரு அர்ஜூன்.. இப்போ அபி சந்தோஷமா நிம்மதியா இருக்கணும்..அவளோட லேட்டஸ் ரிப்போர்ட்..அவ கண்டிப்பா இன்னும் 7 மாசத்துக்கு ரொம்பவே நல்லா இருப்பா..ஆனா கொஞ்சம் கொஞ்சமா வீக் ஆகா ஆரம்பிப்பா..
அவ வாய்ல இருந்து எப்போ ரத்தம் வருதோ.. அப்போ உடனே அட்மிட் பண்ணிடு..நாமா குழந்தையை வெளியே எடுத்து அபிக்கு ஆப்ரேஷன் பண்ணா அவ பிழைச்சுப்பா.

அர்ஜூன் : ம்ம்.. தேங்க்ஸ்..அவளை மட்டும் எப்படியாவது காப்பாத்திடுங்க..எனக்கு அது போதும்.

மனோ : அது என் பொறுப்பு.

அர்ஜூன் : குழந்தைங்களுக்கு ஒன்னும் ஆகாது தானே.

மனோ : எல்லாம் இப்போவே உறுதியா சொல்ல முடியாது பா..அது பத்தி எதுவும் நினைக்காமா அபிகூட சந்தோஷமா இரு.

அர்ஜூன் கொஞ்ச நேரம் அமைதியா கண்ணை மூடி உட்கார்ந்து இருந்துட்டு மனோவை பாக்குறான்.

அர்ஜூன் : சாரி அங்குள்..ஏதோ கோவம்.. என்னையும் அறியாம கண்டப்படி பேசிட்டேன்.

மனோ : பரவால்ல பா.. எனக்கு எந்த வருத்தமோ கவலையோ இல்ல..நீ இந்த அளவுக்கு அபி மேல பாசமா இருக்கறதை நினைச்சு சந்தோஷமா தா இருக்கு.

அப்பறம் அங்க இருந்து அர்ஜூனும் அரவிந்த் தும் கிளம்புறாங்க..

வரும் போது நிறையா ஸ்வீட்லா வாங்கிட்டு வந்து வீட்டுல எல்லாருக்கும் தராங்க..

அபி மட்டும் துளியுண்டு எடுத்துக்குறா..

அபி அர்ஜூன் மட்டும் தனியா வெளியே இருக்க சோஃபா லா உட்காருராங்க..

அபி : என்ன ஆச்சு ??

அர்ஜூன் : ஒன்னும் இல்லையே !!

அபி : அப்பறம் ஏன் ஒரு மாதிரி இருக்கா.. காலையில என்கிட்ட கூட அப்படி கத்துன்ன..

அர்ஜூன் : சாரி..மா..ஏதோ டென்ஷன்.

அபி : அதுதா என்ன ன்னு கேட்டேன்.

அர்ஜூன் : அதுலா இப்போ எதுக்கு.. சந்தோஷமா இருக்க நேரத்துல..ப்ளீஸ் அது பத்தி வேண்டா..

அபி : சரி கேட்கலை...சொல்லு.

அர்ஜூன் : என்ன சொல்றது ??

அபி : ஐ லவ் யூ.. என் மாமுல்

அர்ஜூன் சிரிச்சுட்டு ஐ லவ் யூ டி தங்கம்...ன்னு அவ முகம் முழுக்க முத்த மழை பொழியுறான்..

அபியும் சிரிச்சுக்கிட்டே அவனை கட்டி பிடிச்சுக்குறா..

அபி : ஹே..பாப்பா தம்பி வந்ததும்.. நான் தான் பஸ்ட்..எனக்கு வர மாமுல் எப்பவும் நிறுத்த கூடாது சரியா.

அர்ஜூன் : சரி டி என் பொண்டாட்டி..

இவங்க ரெண்டு பேரும் ஒற்றுமை யா இருக்கிறதை ஒரு பக்கம் அபியோட அம்மா அப்பா வும் , இன்னோரு பக்கம் அரவிந்த் தும் பாத்து சந்தோஷப்படுறாங்க..

அர்ஜூன்  க்ரிஷ் கிட்ட விஷயத்தை சொல்லி ஆப்பிஸ் லா பெரிய ட்ரீட் வைக்குறான்..அதேட அவன் வேலையை பெங்களூர் போகாமா அபி கூடவே இருந்து பாத்துக்குறான்.. நாட்களும் வேகமா போக ஆரம்பிக்குது..அபிக்கும் வயிறு பெருசாகுது.. தினமும் ஒரு நாள் கூட விடமா அர்ஜூன் அவனோட குழந்தைங்க கிட்ட பேசிட்டு தான் தூங்குவான்..அது அவனோட பழக்கமாவே ஆகுது

ஆனா அபியோட அப்பா அம்மா கிட்ட பேசுறதே இல்ல.. அவங்களுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு..இது அபிக்கு தெரியமா பாத்துக்குறாங்க..

அபிக்கு வளைகாப்பு பண்ண ஒரு நல்ல நாள் பாக்குறாங்க...

அதே சமயம் அர்ஜூனுக்கு ரொம்பவே பயமாவும் இருக்கு..ஏன்னா அவளோட நாள் நெருங்கிட்டே இருந்தது..அபி நாளு நாளுக்கு வீக் ஆகா ஆரம்பிச்சுட்டா...

அர்ஜூன் அவளை விட்டு ஒரு நிமிஷம் கூட எங்கேயும் போகமா கூடவே இருந்தான்.

தொடரும்.

# Bhuvi

கதையின் இறுதி பகுதிக்கு வந்துட்டோம்..