வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 21

🇮🇳🇮🇳🇮🇳 "அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பர்களே..." 🇮🇳🇮🇳🇮🇳

"காலைல சாப்பிட்டதும் தமிழ் வயல்க்கு போய்ட்டான் மிரு, அர்ஜுன், அஞ்சலி மூனு பேரும் கொல்லைபுறம் மரத்தடில உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க..."

"நேத்து நைட்டே மிருனாழினியோட ப்ளவுஸ் எல்லாத்தையும் டவுன்க்கு உரம் வாங்க  போய்ருந்த தமிழ் வாங்கிட்டு வந்துட்டான்... அதுல ஒரு பச்சை கலர் தாவணிய மிரு கட்டிருந்தா அது அவளுக்கு ரொம்ப அழகா இருந்தது..."

அர்ஜுன் : "அவன் மொபைல்ல செல்ஃபி எடுத்துட்டு இருந்தான்..." 🤳

மிருனாழினி : "அர்ஜூ உன்னை மட்டும் எடுக்காத என்னையும் எடு..."

அர்ஜுன் : "உன் மொபைல்ல எடுத்துக்க..." 😒

மிருனாழினி : 😏😏😏 ச்சி ப்பே...

"அஞ்சு வா டி நாம செல்ஃபி எடுத்துக்கலாம்..."

அஞ்சலி : ம்ம்ம் வா...🤳

முதல்ல அவங்க தனியா செல்ஃபி எடுத்துகிட்டாங்க... அப்பறம் அஞ்சலி மிருவ தனியா நிக்க வச்சி அவ ஃபுல் ஹால்ஃப் சேரியும் தெரியுறா மாதிரி எடுத்தா அப்பறம் கைல வச்ச மருதாணி தெரியுறா மாதிரி எடுத்தா.. அப்பறம் அர்ஜுனும் அவங்க கூட ஜாயின் பண்ணிகிட்டான்...

"இது எல்லாத்தையும் மிரு அவ வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல வச்சிருந்தா..."

அதை பார்த்துட்டு அவ ஃப்ரண்ட்ஸ் நிறைய பேர் அவளுக்கு அழகா இருக்க, தாவணி சூப்பர் மருதாணி சூப்பர் இப்படிலாம் மெசேஜ் பண்ணிருந்தாங்க...💬

"அர்ஜுன் அம்மாவும் பார்த்துட்டு அவளுக்கு கால் பண்ணாங்க..." 📲

மிருனாழினி : "ஹலோ பெரியம்மா..."

பெரியம்மா : "மிரு குட்டி நல்லா இருக்கியா டா..." 🤔

மிருனாழினி : நல்லா இருக்கேன் பெரியம்மா நீங்க பெரியப்பா எல்லாரும் நல்லா இருக்கீங்களா ?

பெரியம்மா : நல்லா இருக்கோம் டா அர்ஜுன் எங்க ?

மிருனாழினி : "இங்க தான் மொபைல்ல கேம் விளையாடிட்டு இருக்கான்... பெரியப்பா எங்க..."

பெரியம்மா : "ஆபிஸ் போய்ட்டாரு மா... தாவணி உனக்கு ரொம்ப அழகா இருக்கு டா..."

மிருனாழினி : "தேங்க்ஸ் பெரியம்மா..." 🥰

பெரியம்மா : "அங்க உனக்கு எந்த கஷ்டமும் இல்லல டா..."

மிருனாழினி : "இல்ல பெரியம்மா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..." ☺️

பெரியம்மா : "சரி, டா நான் அப்பறம்மா பேசுறேன்..."

மிருனாழினி : சரி பெரியம்மா ( கால் கட்)

"அப்படியே ஈவ்னிங் ஆச்சி ஃபோட்டோ எல்லாத்தையும் ஸ்டேட்டஸ்ல வச்சிருந்தாலும் அவ அப்பா, அம்மாக்கு தனியா அனுப்பிருந்தா ஆனா அவங்க இன்னும் பார்க்கவே இல்ல..."

நிறைய பேர் கூட சேட் பண்ணதால மொபைல்ல ஜார்ஜ் கம்மியா இருந்தது இதுக்கு மேலயும் அவங்க அம்மா, அப்பா ஃபோட்டோ பார்க்க போறது இல்லனு நினைச்சி அவ ஃபோன்க்கு ஜார்ஜ் போட போகும் போது சரியா அவங்க அம்மா ஆன்லைன் வந்து அவ ஃபோட்டோ பார்த்ததுக்கான அறிகுறியா புளூ டிக் காமிச்சது...

அவ அம்மா பார்த்த சந்தோஷத்துல அவங்க என்ன சொல்லுவாங்கனு எதிர் பார்த்துட்டு இருக்கும் போது அவங்க கிட்ட இருந்து கால் வந்தது
உடனே அட்டன் பண்ணி காதுல வச்சா...

மிருனாழினி : "ஹலோ மா..."😍😍😍

மி. அம்மா : மிரு என்ன பழக்கம் இது ஏன் இப்படிலாம் பண்ணுற...😒

மிருனாழினி : "என்ன மாம் நான் என்ன பண்ணேன்..." 🤔

மி. அம்மா : என்ன ட்ரெஸ் அது...😏

மிருனாழினி : ஏன் மாம் நல்லா இல்லயா 😔😔😔

மி. அம்மா : அங்க கிராமத்துக்கு போகவும் நீயும் பட்டிகாடா மாறிட்டியா மிரு எவ்ளோ காஸ்ட்லியான ட்ரெஸ் எல்லாம் உனக்கு இருக்கும் போது அந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் ஏன் போடுற... போட்டதும் இல்லாம எல்லாரும் பார்க்குறா மாதிரி ஸ்டேட்டஸ் வேற வச்சிருக்க...😒

மிருனாழினி : மாம் எல்லாரும் ட்ரெஸ் நல்லா இருக்கு நானும் அழகா இருக்கனு தான் சொன்னாங்க நீங்க தான் இப்படி சொல்லுறிங்க... அப்பறம் நான் இங்க வந்ததுல இருந்து நீங்க இப்போ தான் பேசுறிங்க அதுவும் நான் எப்படி இருக்கேன் எனக்கு இங்க ப்ளேஸ் எல்லாம் புடிச்சிருக்கா இல்லயா ஒன்னுமே கேட்கல இது தான் நீங்க என் மேல காட்டுற அக்கறையா ??? 😠😠😠

மி. அம்மா : ( அவ கோவத்துல இருக்குற உண்மை புரியவும் கொஞ்ச நேரம் அமைதியா இருந்தாங்க) மிரு அங்க அர்ஜுன் இருக்கான் அவன் உன்னை நல்லா பார்த்துப்பான்னு நம்பிக்கைல தான் மிரு நான் எதுவும் கேட்கல மத்தப்படி அம்மாக்கு உன்மேல பாசம் அக்கறை எல்லாம் இருக்கு டா...

மிருனாழினி : இருந்தாலும் நீங்க ஒருவார்த்தை கேட்டா நான் சந்தோஷப்படுவேன்ல...

மி. அம்மா : "சரி அங்க உள்ளவங்க எல்லாம் எப்படி உன்கிட்ட நல்லா பேசுவாங்களா..."

மிருனாழினி : எல்லாருமே சூப்பர் டைப் மாம் நான் போட்ருக்க நகை எல்லாம் அஞ்சலி அம்மா தான் குடுத்தாங்க அவங்க ரொம்ப ஸ்வீட் டைப் மாம்...

மி. அம்மா : "நீ பணகாரினு தெரிஞ்சி இப்படிலாம் பண்ணுறாங்க போல மிரு ஜாக்கிரதையா இரு காரியம் இல்லாம உனக்கு இப்படிலாம் நகை போட்டு அழகு பார்க்க மாட்டாங்க..."

மிருனாழினி : "மாம் நீங்க ரொம்ப டூ மச்சா பேசுறிங்க என்னையும் அவங்க பொண்ணு மாதிரி நினைச்சி எவ்ளோ பண்ணுறாங்க தெரியுமா அது தெரியாம இஷ்டத்துக்கு பேசுறிங்க..." 😠😠😠

நீங்க கால் பண்ணதும் எவ்ளோ சந்தோஷமா அட்டன் பண்னேன் தெரியுமா இதுக்கு நீங்க பேசாமலே இருந்துருக்கலாம்...

ப்ளீஸ் இங்க வந்த பிறகு தான் நான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன் இன்னொரு முறை கால் பண்ணி அதை கெடுத்துடாதீங்க... இனி நான் சென்னை வர வரைக்கும் நீங்க கால் பண்ண வேண்டா...😠😠😠

அவங்க பதில் கூட எதிர் பார்க்காம கட் பண்ணிட்டா... அவ கால் கட் பண்ணவும் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகவும் சரியா இருந்தது...

மொபைல் ஆஃப் ஆகிடுச்சேனு நிமிர்ந்து பார்க்கும் போது தான் அவளுக்கு அவ அம்மா கிட்ட பேசிட்டே வீட்டை விட்டு ரொம்ப தூரம் வந்தது புரிஞ்சது...

மொபைலல் சிக்னல் இல்லயேனு வீட்டை விட்டு பேசிட்டே வெளில வந்தவ அவ அம்மா பேசுன பேச்சுல அவங்க மேல உள்ள கோவத்துல நடக்க ஆரம்பிச்சவ இப்போ எங்க இருக்குறோம்னு தெரியாம நின்னா...

"அர்ஜுன், அஞ்சலிக்கு கால் பண்ணலாம்னு பார்த்தா மொபைல் வேற ஆஃப் ஆகிடுச்சி என்ன பண்ணுறது யார் கிட்ட வழி கேட்குறதுனு தெரியாம முழிச்சிட்டு நின்னா..." 🚶🏻‍♀️

தொடரும்...

# Sandhiya.