என் இதயத்தில் நீ - 28
அஸ்வின் ஸ்னேகா வீட்ல தனியா தான் இருக்கானு தெரிஞ்சிகிட்டு. ஃபோனை எடுத்துட்டு வீட்டு மொட்டை மாடிக்கு போனான்...
"அஸ்வின் காலிங் ஸ்னேகா..."
ஸ்னேகா : "ஹலோ அத்தை..."
அஸ்வின் : "அத்தை இல்ல நான் அஸ்வின்..."
ஸ்னேகா : ம்ம்ம்... சொல்லுங்க ?
அஸ்வின் : எக்ஸாம் எல்லா முடிச்சிச்சா?
ஸ்னேகா : ம்ம்ம்...எப்பயோ முடிஞ்சிச்சே? இன்னும் இரண்டு மாசம் அப்பறம் பப்ளிக் எக்ஸாமே ஸ்டார்ட் ஆக போகுது...இப்போ கேட்குறீங்க?
அஸ்வின் : அப்போ ஏன் மெஸேஜ் பண்றதே இல்ல ?
ஸ்னேகா : பண்ணனே ?
அஸ்வின் : எது பண்டிகை function wishes வரது விஷ் பண்ணது சொல்றியா ?
ஸ்னேகா : 😁 ஆமா...
அஸ்வின் ( M.V) : "நான் எத கேட்டா இவ எதையோ சொல்றா பாரேன்." 😏
அஸ்வின் : ம்ம்ம்... சரி.
ஸ்னேகா : எதுக்கு கால் பண்ணிங்க?
அஸ்வின் : சும்மா தான்...😁
ஸ்னேகா : ஓஓஓ..
அஸ்வின் : அண்ணிக்கு அடுத்த வாரம் வளைகாப்பு வைக்குறாங்க... நீயும் வருவீயா?
ஸ்னேகா : "என்ன கிழமை ?..."
அஸ்வின் : தெரியலையே?
ஸ்னேகா : "சரி, பரவால அப்பறமா கேட்டு சொல்லுங்க..."
அஸ்வின் : "கேட்டுட்டு வாட்ஸ் அப்ல மெஸேஜ் பண்றேன்..."
அஸ்வின் : ம்ம்ம்... என்ன பண்ற ?
ஸ்னேகா : "கதை படிக்குறேன்..."
அஸ்வின் : ஃபோன்ல வா ?
ஸ்னேகா : ஆமா...😌
"அஸ்வின்க்கு இதுக்கு அப்பறம் என்ன பேசுறதுனு தெரியல... சரி படி."
ஸ்னேகா : ( ஐந்து செகன்ட் வைட் பண்ணா ) அஸ்வின் எதாவது பேசுவானானு பார்த்தா அப்பறம் கால் கட் பண்ணிட்டாள்..."
அஸ்வின் : ஐயோ! கால் கட் பண்ணிட்டாளே ஏதாவது பேசலாம்னு நினைச்சா என்ன பேசுறதுனு தெரியலயே?
அஸ்வின் : "சரி, வாட்ஸ் அப்ல பேசிக்கலாம் னு அங்க இருந்து நகர்ந்தா..."
ஸ்னேகா வீடு,
ஸ்னேகா : ஃபோன்ல கதை படிச்சிட்டு இருந்தாள்...📲
பரதன் : கால் முட்டி கிட்ட அடி பட்டுட்டு நொன்டிட்டே கொஞ்ச இரத்ததோட ஹால்க்கு வந்தான்...
ஸ்னேகா : பரதன்க்கு அடிபட்டத பார்த்து... டேய்! என்ன டா ஆச்சி ? எப்படி அடி பட்டது?
பரதன் : "விளையாடும் போது கீழ விழுந்துட்டேன்..." ( வலியோட சொன்னா )😥
ஸ்னேகா : அச்சோ! பார்த்து விளையாட மாட்டியா....அவன பிடிச்சி சோபால உட்கார வச்சி... ரூம்க்கு போய் பஸ்ட் எய்டு பாக்ஸ் எடுத்துகிட்டு வந்தாள்...
பரதன் சோபா மேல கால் நீட்டி போட்டுட்டு முதல்ல டெடால வச்சி அடிபட்ட இடத்துல க்ளின் பண்ணா...
பரதன் : ஐயோ! வலிக்குதே?
ஸ்னேகா : கொஞ்ச வலிக்க தான் செய்யும் கத்தாதடா...எரும 🤫
பரதன் : "சரி சரி சீக்கிரம் மருந்து போட்டு விடு..."
ஸ்னேகா : ஆயில் மென்ட் போட்டுட்டு ஒரு வெள்ள துணிய எடுத்து அடிபட்ட இடத்துல இருக்கி சுத்தி கட்டு போட்டுவிட்டாள்...
ஸ்னேகா : அவ்ளோ தான் முடிச்சிட்டு... இதுக்கு போய் கத்துற...😏
பரதன் : ம்ம்ம்... சரி எனக்கு டிவி போட்டு விடுறியா கொஞ்ச நேரம் பாக்குறேன்...
ஸ்னேகா : எழுந்து டிவி ஆன் பண்ணிட்டு கிட்சன் பக்கம் சென்றாள்...
பரதன் : "டிவியும் மொபைலையும் யூஸ் பண்ணிட்டு இருந்தா..." 📺📲
ஸ்னேகா : "மிக்ஸில ஆப்பிள் பழத்தை போட்டு அரைச்சிட்டு ஜூஸ் ரெடி பண்ணிட்டு ஒரு டம்ளர்ல பரதன்க்கு கொண்டு வந்தாள்..." 🍹
பரதன் : "என்னது இது..."
ஸ்னேகா : ஜூஸ் டா...குடி ?
பரதன் : நீ குடிச்சியா?
ஸ்னேகா : நான் குடிச்சிட்டேன் டா...நீ குடி?
பரதன் : வாங்கி ஜூஸ் குடிச்சா...😋
ஸ்னேகா : இப்ப கால் வலிக்குதா ?
பரதன் : லைட்டா...☹️
ஸ்னேகா : "கொஞ்ச நேரம் தூங்கு சரி ஆகிடும்..."
பரதன் : ம்ம்ம்...☺️
ஸ்னேகா : "டம்ளர் வாங்கி கழுவிட்டு கதை படிக்க ஸ்டார்ட் பண்ணா..."📲
அஸ்வின் கிட்ட இருந்து வாட்ஸ் அப்ல மெஸேஜ் வந்தது...📨
ஸ்னேகா : "வாட்ஸ் அப் ஓபன் பண்ணி பார்த்தா..."
அஸ்வின் : "அண்ணிக்கு வளைகாப்பு வியாழன் கிழமை வைக்குறாங்களாம்..."
ஸ்னேகா : ஏன் லீவ் நாள்ள வைக்க சொல்லாம்ல?
அஸ்வின் : நான் என்ன பண்ண அவங்க அம்மா வீட்டுல எடுத்த முடிவு...
ஸ்னேகா : ம்ம்ம்....
அஸ்வின் : வருவியா ?
ஸ்னேகா : சாரி...ஸ்கூல் இருக்கு வர முடியாது...
அஸ்வின் : "ஒரு நாள் தான லீவ் போட்டுட்டு வந்தா என்னவாம்.."
ஸ்னேகா : ம்ம்ம்...ட்ரை பண்றேன்...
அஸ்வின் : நீ கண்டிப்பா வரனும் சொல்லிட்டேன்...
ஸ்னேகா : வந்தா என்ன தருவீங்க...🤨
அஸ்வின் : உனக்கு நாவல் படிக்க பிடிக்கும் தான...என்கிட்ட நிறைய நாவல் புக் இருக்கு தரேன்...
ஸ்னேகா : அப்படியா! 🥰 அப்போ கண்டிப்பா வரேன்..."
அஸ்வின் : சரி, ஸ்டோரி படிக்கனும் னு சொன்னீயே படிச்சி முடிச்சிட்டியா ?
ஸ்னேகா : இல்ல படிக்கலாம்னு பார்த்த அதுக்குள்ள என் தம்பிக்கு அடிபட்டுச்சா அவனுக்கு ஆயில் மென்ட் போட்டுட்டு இப்போதான் படிக்கலாம் னு உக்கார்ந்த...
அஸ்வின் : பரதன்க்கு என்ன ஆச்சி ?
ஸ்னேகா : "கிரிக்கெட் விளையாடும் போது கீழ விழுந்துட்டா..."
அஸ்வின் : ம்ம்ம்... கால் பண்ணவா?
குமார், சங்கீதா வீட்டுக்கு வந்துட்டாங்க...
ஸ்னேகா : அம்மா அப்பா வந்தாச்சி பாய்... அப்பறம் சாட் பண்றேன் ( ஆன்-லைன் விட்டு வெளில போய்ட்டா )
அஸ்வின் : ம்ம்ம்... பாய்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு அஸ்வின் குமார்க்கு கால் பண்ணிட்டு பேச சொல்லி நிவேதா கிட்ட குடுத்தா....
நிவேதா : "என் மருமகளுக்கு வளைகாப்பு வைக்க போறோம் வந்துருங்கனா..."
குமார் : ம்ம்ம்... வரேன் மா..
இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசி முடிச்சிட்டாங்க... நிவேதா ஃபோனை அஸ்வின் கிட்ட குடுத்துட்டு சென்றாங்க..
தொடரும்...
# Ram krs
1 Comments
சூப்பர்
ReplyDelete