அவள் - 13

அவளுக்கு நடந்த எதுவும் திரவியத்திற்கு இப்போ தான் தெரிந்திருந்தது... இனி அவளின் சந்தோஷம் அவன் கையில் தான்...

குமுதவல்லி குற்றவாளி போல் நடுவில் தலை குனிந்து நிற்க...

திரவியம் சிவா துளசி ராஜபாண்டி யோகநாதன் அனைவரும் சுற்றி நின்றனர்....

துளசி : என்ன ஒரு வில்லத்தனம்... அத்தை செம்ம போங்க... கலக்கிட்டீங்க... உங்களை யாராலும் அடிச்சுக்க முடியாது... எப்படி எல்லாம் யோசிச்சு இருக்கீங்க... எங்களுக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்... பின்னாடி use ஆகும்...

துளசி பின்னால் இருந்த ரஞ்சனி "துளசி அண்ணி முடியல... கொஞ்ச நேரம் நீங்க அமைதியா இருங்க‌‌... இந்த நேரத்துல நா சிரிச்சா... என்னைய தான் லூசு னு சொல்லுவாங்க..."என்று சிரிப்பை அடக்க முடியாமல் சொல்ல...

துளசி திரும்பி பார்த்து கண் அடித்து சிரித்தாள்‌...

சிவா : துளசி 

துளசி : சொல்லு மாமோய்‌‌...

சிவா :உன்னைய என்ன பண்றது‌...

துளசி : என்னைய ஒன்னும் பண்ண வேணாம்... அங்க பாருங்க...

திரவியம் : சொல்லு மா... நீ என்ன நா நினைச்சுட்டு இருக்க... 

குமுதவல்லி : தம்பி நா வேணும் பண்ணல பா... நா தான் சொல்றேன் ல... அவளுக்கு எல்லாம் வேலையும் தெரியனும் தான் அப்படி சொன்னேன் தவிர வேற எந்த ஒரு நோக்கமும் இல்ல பா...

துளசி : அட அட அட... முடியல... சமாளிக்க முடியல...

சிவா : துளசி

துளசி : வாய மூடிட்டேன்...

ராஜபாண்டி : திரவி இத நம்பாத... அவ பொய் சொல்றா‌...

குமுதவல்லி : "இல்ல தம்பி..."என்று வேகமாக பதற...

யோகநாதன் : திரவியம்... நா சொல்றேன் யா... உன் அம்மா சொன்னது எல்லாம் பொய் தான்... அவளோட சொந்த தாய்மாமன் நா சொல்றேன்‌... சின்ன வயசுல இருந்தேன் இவளை நா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்... எப்பப்போ எப்படி பேசுவா னு எனக்கு நல்லாவே தெரியும்...

குமுதவல்லி : என் மாமா நீங்க இப்படி சொல்றீங்க... நா அப்படிப்பட்டவ இல்ல மாமா... என் மருமகளுக்கு நல்லது கெட்டது தெரியனும் தான் அப்படி பண்ணேன்‌‌...

சிவா : எது அவ எல்லா வேலையும் செய்யும் போதே எதுவும் பண்ணல... நா தான் பண்ணேன் வத்தி வச்சீங்களே அதுவா... எனக்கு தெரிஞ்சு இது நல்லது கெட்டது சொல்லி தர்றது இல்லையே...

குமுதவல்லி பொய் கண்ணீர் வடித்து "திரவி செல்லம்... அம்மா நா அப்படி பண்ணுவேனா... ஆளாளுக்கு உன் அம்மா வ நிக்க வச்சு கேள்வி கேக்குறாங்க பாரு... என்ன னு கேட்காம பேசாம இருக்கீயே யா..."என்று தன் முத்தானையால் வராத கண்ணீரை துடைக்க...

துளசி : அச்சச்சோ அத்தைக்கு போய் chair எடுத்துட்டு வாங்க... நின்று கால் வலிக்கும் போல... அதுக்கு தான் இப்படி சொல்றாங்க... மன்னிச்சுருங்க அத்தை... உங்களை நிக்க வச்சதுக்கு...

குமுதவல்லி : நீ முத வாய மூடி டி மலடி...

அவள் : "அத்தை..."என்று கத்தயவளை பார்த்த அனைவருக்கு அவள் ஒரு அக்னியாய் தெரிந்தாள்...

அவள் கண்கள் சிவந்திருக்க...  

குமுதவல்லி முறைந்தவாறு "வார்த்தை வார்த்தை முக்கியம் அத்தை... நீங்களும் ஒரு பெண் தான் ஞாபகம் இருக்கட்டும்...ஒரு பெண்ணாக இருந்துட்டு இன்னொரு பெண்ணை போய் இப்படி பேசுறீங்களே... ச்சீ..."என்று திரும்பி துளசியை பார்க்க...

துளசி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் சிலையாகி இருந்தாள்...

அவள் துளசி அருகில் சென்று "அக்கா இங்க பாருங்க கா... அவங்க சொன்னதை காதுல வாங்கிக்காதீங்க... நீங்க என்னைய ஒரு குழந்தை மாதிரி தானே பாத்துக்கிறீங்க... அப்போ நான் உங்க பொண்ணு தான்... துளசி கா மனசுல எதுவும் வச்சுக்காதீங்க கா‌.."என்று அவள் கன்னத்தை கையில் ஏந்தினாள்...

சிவா மனமுடைந்து போய் துளசி அருகே சென்று தன்னுடன் அணைத்து கொண்டான்‌...

ராஜபாண்டி : ச்சீ... நீ எல்லாம் என்ன ஜென்மம் டி... உன்னையே பாக்கவே அருவருப்பா இருக்கு...

யோகநாதன் பேச பிடிக்காமல் முகத்தை திருப்பி கொண்டார்...

ரஞ்சனி : அம்மா நீ இப்படி பேசுவ னு நா கொஞ்சம் கூட‌ நினைச்ச பாக்கல மா... ரொம்ப தப்பு மா... 

திரவியம் : ஏன் மா... உன் வார்த்தையில எதுக்கு இவ்ளோ விஷம்‌... இதே உன் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்து ரெண்டு வருசமா குழந்தை இல்லாம இருந்திருந்தா... இதே மாதிரி யாராவது உன் பொண்ணை சொல்லி இருந்தா உனக்கு எப்படி இருக்கும்...

குமுதவல்லி : டேய் என்ன டா இது... நா இப்ப என்ன சொல்லிட்டேன்... உண்மைய தானே சொன்னேன்... பொய்யா சொன்னேன்... கல்யாணம் மூனு வருசம் வர போகுது... இன்னும் குழந்தை இல்ல... அப்போ மல்டி தானே‌...

அவள் : அத்தை போதும் நிறுத்துங்க... ஒரு அளவு தான்... அந்த வார்த்தை மட்டும் சொல்லி சொல்லி காட்டாதீங்க... என்னைய பொறுத்த வரைக்கும் இந்த வார்த்தை ரொம்ப ரொம்ப தீய வார்த்தை...

குமுதவல்லி : ம்ஹீம்.... இனம் இனத்தோடு தானே சேரும்... நீயும் அதோட சேர்ந்தவ தானே... அவளுக்கு கல்யாணம் ஆகி மூனு வருசம் ஆக போகுது னா...உனக்கு ஒரு வருசம் ஆச்சு... இன்னும் ஒன்னுமே இல்ல... அப்போ நீயும் மல்டி தானே‌...

துளசி :"வாய் மூடு... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனா‌... நல்லா இருக்காது..."என்று வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு கத்தினாள்‌‌...

அதே நேரம் "குமுதவல்லி..." என்று கத்திய திரவியம் கண்கள் சிவக்க அவரை பார்த்து "என் பொண்டாட்டி ய பத்தி ஏதாவது ஒரு வார்த்தை தப்பா பேசுன... அப்புறம் அம்மா னு கூட பாக்க மாட்டேன்... எங்களுக்கு குழந்தையே இல்லைனாலும் பரவா இல்ல‌... அவ தான் எனக்கு எல்லாமே...

     அவளை பத்தி யாராவது தப்பா பேசுறீங்க... நா மனுசனா இருக்க மாட்டேன்‌... இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க... இனிமே என் பொண்டாட்டி இந்த வீட்டுல எந்த வேலையும் பாக்க மாட்டா... 

குமுதவல்லி : இவ பாக்காம வேற யாரு டா பாப்பாங்க‌‌...

திரவியம் : ஏன் அது தான் நீ ரெண்டு பொம்பள பிள்ளைய பெத்து வச்சு இருக்கீயே... அது செய்ய சொல்லு...

குமுதவல்லி : என் பொண்ணுங்க எதுக்கு டா செய்யனும்‌...

திரவியம் : அப்போ என் பொண்டாட்டி மட்டும் ஏன் செய்யனும்...

குமுதவல்லி அமைதியாக இருக்க..

திரவியம் : நீ உன் பிள்ளைய பெத்து வளர்த்த மாதிரி தானே அவளையும் அவ அம்மா பெத்து வளர்த்து இருப்பா... உனக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயமா... பேசாம அடங்கி இருக்குறதுனா இருங்க... இல்லையா வீட்டை விட்டு வெளியே போங்க... 

குமுதவல்லி : வீட்டை விட்டு வெளியே போக சொல்ல நீ யா டா...

திரவியம் : இது அய்யா கட்டுன வீடு... இது எனக்கு தான் சொந்தம்...எனக்கு உரிமை இருக்கு

ஜனனி : எங்களுக்கும் உரிமை இருக்கு... என் அம்மா என் கூட தான் இருப்பாங்க... உன் வேலை என்னவோ அது மட்டும் பாரு‌... 

ரஞ்சனி : ஜனனி பெரியவங்க பேசும் போது எதுக்கு தேவை இல்லாம நீ குறுக்க பேசுற...

ஜனனி : யார் பெரியவங்க‌‌... இந்த திரவியம் லூசா மாதிரி பேசுற இந்த துளசி‌... அப்புறம் இங்கே இருக்கானே சிவா இதுங்க தான் பெரியவங்களா...

திரவியம் : ஜனனி மரியாதையா பேசு... இது நல்லா இல்ல... நா ஒரு நேரத்த போல இருக்க மாட்டேன்‌...

ஜனனி : என்ன டா ரொம்ப பேசுற... முன்னாடி எல்லாம் உன்னையே எவ்ளோ பேசுனாலும் எதுவுமே கண்டுக்காம போயிடுவ‌... இப்ப என்ன டா எதிர்த்து பேசுற... என்ன உன் பொண்டாட்டி உனக்கு சொல்லி கொடுத்தாளா...

சிவா : ஜனனி இது சரி இல்ல... யாருக்குமே மரியாதை கொடு பேச மாட்ற... அவன் உனக்கு அண்ணா‌‌... இது அண்ணி... கொஞ்சம் மரியாதையோடு பேசு...

ஜனனி : இங்க பேச உனக்கு உரிமையே இல்ல... 

திரவியம் : ஜனனி போதும்... 

ஜனனி : நா இப்படி தான்‌‌... என்னைய பொருத்தவரைக்கும் நா தான் எல்லாமே...

சிவா : ஆணவம்...

ஜனனி : வாய மூடு டா...

துளசி : ஜனனி இனி என் புருஷனை மரியாதை இல்லாம பேசுன நா சும்மா இருக்க மாட்டேன்...

ஜனனி : என்ன பண்ணுவ‌‌... சொல்லு என்ன பண்ணுவ...

அவள் : துளசி கா... எதுக்கு வீண் பேச்சு... மல்லாக்க படுத்து எச்சிலை துப்புனா அது நம்ம மேல தானே விழும்...

ஜனனி : "யார பாத்து எச்சில் னு சொல்ற‌... நீ தான் டி எச்சில்‌... கட்டுன புருஷனை விட்டு இந்த சிவா கூட சிரிச்சு பேசி கூத்தடிச்சுக்கிட்டு இருக்குற... உனக்கு வெக்கமா இல்ல..."என்று சொல்லிய அடுத்த நொடி சிவா ஜனனி கன்னத்தில் அறைய... 

கண்கள் சிவக்க ஜனனி முன் வந்து மறு கன்னத்தில் அறைந்தாள் அவள்...

இரு கன்னத்தையும் பிடித்து கொண்டு நின்ற ஜனனி பார்த்து கடும்கோவத்துடன் அவளை உதைத்தான் திரவியம்....

துளசி அருவருப்புடன் அவளை பார்த்தாள்...

ரஞ்சனி ஜனனியை முறைத்தவாறு தூக்கி விட...

ஜனனி எழுந்து நின்றவள்... அனைவரையும் பார்த்து "எவ்ளோ தைரியம் இருந்தா ‌எல்லாம் என்னைய அடுப்பீங்க..."என்று அவளை பார்த்து "முத நீ யாரு எனக்கு... என்னைய கை நீட்டி அறையுற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா..."என்று சிவா பக்கம் திரும்பி "உண்மைய சொன்னா கசக்க தான் செய்யும்... யாருமே செஞ்ச தப்பை ஆமா பண்ணேன் னு ஒத்துக்குவாங்க... கோவம் தான்‌‌... அது தான் நீயும் பண்ணி இருக்க... நீயும் என் அண்ணிக்காரியும் பண்ற அசிங்கம் எனக்கு தெரியாதா என்ன‌‌..."என்று சொல்ல...

மறுபடியும் இரு கன்னத்தில் அறை விழ...எதிரே பத்ரகாளியாய் துளசியும் அவளும் நின்றனர்....

 

 ‌          தொடரும்........

# நானிஷா‌....