அவள் - 14

தன்னால் யாருக்கும் மனக்கஷ்டம் வர கூடாது என்று நினைத்தாள்‌... ஆனா இன்று கை நீட்டி அடிக்கிற அளவுக்கு சென்றதை நினைத்து வருந்தினாள்‌....

ஜனனி கன்னத்தில் கை வைத்து கொண்டு அனைவரையும் முறைத்து கொண்டு இருந்தாள்...

திரவியம் : என் கண்ணு முன்னாடி நிக்காத... என் பொண்டாட்டி ய தப்பா பேச நீ யாரு... அதுவும் சிவா அண்ணாவையும் அவளையும் சேர்த்து வைச்சு பேசி இருக்க... ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட... அவங்க ரெண்டு பேருக்கும் என்ன உறவு னு எனக்கு நல்லா தெரியும்... முத  நீ ஒழுங்கா னு பாரு... அதுக்கு அப்புறம் அடுத்தவங்களை பத்தி குறை சொல்லு...

ஜனனி : என்னைய பத்தி அப்படி என்ன தெரியும்... நா ஒழுங்கா இல்ல னு நீ பாத்தியா...

துளசி : ஒரு விசயத்தை பத்தி தெரியாம நாங்க பேச மாட்டோம்...

ஜனனி : நீ பேசாத... உனக்கு பேசுற அருகதையே இல்ல...

சிவா : உனக்கு மட்டும் இருக்கா‌‌... உன்னையே நா ஒரு வாயாடி‌ பிள்ள... எதுவாக இருந்தாலும் பட்டு பட்டு னு பேசுற பொண்ணு நினைச்சேன்... அப்போ நீ என்னையும் உன் அண்ணியையும் சேர்த்து வைச்சு பேசினீயோ அப்பவே உன்னைய வெறுத்துட்டேன்... அவ பேருக்கு ஏத்த மாதிரி மெண்மையானவ... அவ என் தங்கச்சி மாதிரி... இன்னொரு தடவ இது மாதிரி பேசுன... நா பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்‌...

ஜனனி : என்ன விட்டா ரொம்ப பேசுற... இது எல்லாம் நல்லா இல்ல...நீங்க பண்ற தப்பை மறைக்க நா தான்‌ கிடைச்சேனா...

சிவா :" you cross your limits..." என்று எச்சரிக்க...

ஜனனி : நா அப்படி தான் பேசுவேன்... நீ என்ன டா பண்ணுவ...

திரவியம் ஜனனி கன்னத்தில் அறைந்து "நானும் போனா போகுது னு பேசாம இருந்தா... ரொம்ப பேசுற... உன் வயசுக்கு தகுந்த மாதிரி பேசு... வயசுல மூத்தவங்க னு மரியாதை வேணாம்... இப்படி யா பேசுவாங்க... என்னைய விளையாட்டுத்தனமா இருக்கேன் சொல்லுவீங்க... ஆனா இப்ப நீ எப்படி நடந்துக்குற...

   நா ஏற்கனவே சொல்லிட்டேன்‌... மறந்து போச்சுனா‌‌... மறுபடியும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க... என் கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னது தான்‌‌... நீங்க எப்படி னு எனக்கு தெரியும்... ஆனா வர போற என் மனைவிக்கு தெரியாது... அவ நகரத்துல வாழ்ந்தவ... அவ வாழ்ந்த விதம் வேற... நம்ம வாழ்ற விதம் வேற...

   அவ அத பண்ணல.. இத பண்ணல னு யாரும் எதுவும் சொல்ல கூடாது...அவளுக்கு தெரிஞ்சதை பண்ணட்டும்... உங்களை பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் யாருமே எனக்கு பொண்ணு தரல... எனக்காக கொடுத்தாலும் உங்களை நினைச்சு யாருமே கொடுக்க மாட்டேன் னு சொல்லிட்டாங்க... 

  உங்களோட வில்லதனம் எல்லாம் எனக்கு தெரியும்... நிறைய விசயத்துல பேசாம பொறுமையா போயிட்டேன்... இந்த விசயத்துல அதே மாதிரி இருப்பேன் னு கொஞ்சம் கூட எதிர்ப்பாக்காதீங்க... 

அனைவரும் அவன் பேசியதை கேட்டு அதிர்ச்சியாக நின்றனர்...

அவள் அமைதியாக திரவியம் அருகில் வந்து "வாங்க போலாம்... எதுக்கு பிரச்சனை... மனசு கஷ்டமா இருக்கு... என்னால பிரச்சனை வந்து வேணாங்க..."என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்...

திரவியம் ஜனனியை முறைத்தவாறு "கேட்டுக்கோ இது தான் இது தான் நிலா... என்னோட வெண்ணிலா... நீ அவளை பத்தி தப்பா பேசியும் பிரச்சனை வேணாம் னு ஒதுங்கி போகனும் னு நினைக்கிறா பாரு... அங்க நிக்கிறா..."என்று சொல்ல...

துளசி : இங்க தானே நிக்கிறா...

சிவா slow motion ல் திரும்பி துளசியை பார்த்து "இவ்ளோ ரணகளத்துலையும் உனக்கு குதுக்களம் கேட்குதா..."என்று கேட்க...

துளசி : யோவ் மாமா இது மாதிரி பேச்சு எல்லாம் நிறையா கேட்டுட்டேன்... இது எல்லாம் எனக்கு தூசு மாதிரி... அதுக்காக இவளை நா மன்னிச்சுட்டேன் னு நினைக்காதீங்க... என்னைய பேசுனது கூட‌ நா மறந்துருவேன்... 

   ஆனா எப்போ உங்களையும் நிலாவையும் சேர்த்து வைச்சு பேசுனாளோ... வெறுத்துட்டேன்... அவ முகத்தை பார்க்கவே அருவருப்பா இருக்கு... அவ உடம்பு முழுக்க விஷம்... நீ எல்லாம் மனுஷியே இல்ல... 

ஜனனி கோவமாக திரும்பி "அய்யா என்ன யா இது... ஆளாளுக்கு நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டு என்னையவே அடிச்சுட்டு அசிங்கமா பேசுறாங்க... நீங்களும் பாத்துட்டு பேசாம இருக்கீங்க..."என்று கேட்க...

யோகநாதன் : அவங்க பேசுனதுல எதுவுமே தப்பு இல்ல... நா பண்ண நிறைச்சது தான் அவங்க இப்ப பண்ணி இருக்காங்க... அதனால தான் நா அமைதியா இருக்கேன்...

ஜனனி :"ச்சை..."என்று ராஜபாண்டி யை பார்த்து "அப்பா நா உன்‌ பொண்ணு தானே என்ன னு கேளுங்க பா..."என்று அழுக...

ராஜபாண்டி : என் பொண்ணா... நீ என் பொண்ணே இல்ல... என்‌ ரஞ்சனி மட்டும் தான்... இப்படி ஒரு தேள் எனக்கு மகளா வந்து பொறந்து இருக்கே னு நினைக்கும் போது அசிங்கமா இருக்கு...

வெண்ணிலா : மாமா என்ன இது... பெத்த பொண்ணை போய் தேள் அது இது னு சொல்லிக்கிட்டு இது எல்லாம் நல்லா இல்ல மாமா... ரொம்ப தப்பு...

ஜனனி :"வாய மூடு டி..."என்று கத்த...

திரவியம் ஜனனியை அறைய... ராஜபாண்டி குமுதவல்லியை அறைந்தார்...

வெண்ணிலா திரவியத்தை பிடித்து கொண்டு "என்னங்க இது..."என்று இழுக்க...

திரவியம் வெண்ணிலா வை பார்த்து "தயவுசெய்து நீ இப்படி இருக்காத நீ இப்படி இருக்குறதால தான் இதுங்க எல்லாம் இப்படி நடந்துக்கிதுங்க..."என்று கோவமாக சொல்ல...

வெண்ணிலா பாவமாக முழித்தாள்...

குமுதவல்லி கன்னத்தில் கை வைத்து கொண்டு ராஜபாண்டி யை பார்க்க...

ராஜபாண்டி : நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை மட்டும் குறை சொல்ல உனக்கு வாய் வரும்... நீ பெத்த பொண்ணு எப்படி பேசுது னு பாரு... அடக்க மாட்ட... இப்ப மட்டும் ஏன் டி வாய மூடிக்கிட்டு இருக்க... உன்னையே மாதிரியே பெத்து வச்சு இருக்கீயே டி...

குமுதவல்லி : நா என்னங்க பண்ணேன்...

ராஜபாண்டி : இத்தனை நாள் பண்ணது கூட போகட்டும்... ஆனா இப்போ ஜனனி பேசுனது செஞ்சது எல்லாம் சரியா னு படுதா உனக்கு‌‌... ஒரு வார்த்தை கண்டிச்சியா...

குமுதவல்லி பதில் பேச முடியாமல் தலை குனிந்தாள்...

தெய்வானை : போனது போகட்டும்... இதுக்கு மேல எதுவும் நடக்காது... இதோட விடுங்க...

திரவியம் : எப்படி விட முடியும்‌... நா இருக்கும் போதே இவ இப்படி பேசுறா... நா இல்லாத நேரத்துல எப்படி எல்லாம் பேசி இருப்பா‌‌...

துளசி : correct திரவி... இவ இன்னக்கி என்ன பண்ணா னு தெரியுமா...

வெண்ணிலா : அக்கா பேசாம இருங்க... எதுவும் சொல்ல வேணாம்... 

துளசி : நீ பேச இரு டி.. உனக்கு இதே வேலையா போச்சு‌...எது நடந்தாலும் நீ அதை மறைக்கிறனால தான் இப்போ இந்த அளவுக்கு வந்து இருக்கு‌... இப்படி நடக்குறத நீ முதலேயே திரவி கிட்ட சொல்லி இருந்தா ஆரம்பத்திலேயே தட்டி வச்சு இருக்கலாம்‌...

திரவியம் : துளசி என்ன நடந்துச்சு...

வெண்ணிலா : அது எல்லாம் ஒன்னும் நடக்கல...நீங்க வேலைக்கு போயிட்டு வந்து ரொம்ப tired ஹ இருப்பீங்க... மணி வேற ஆச்சு... நீங்க வாங்க...

திரவியம் : நிலா நீ அமைதியா இரு...துளசி நீ சொல்லு‌‌...

வெண்ணிலா : அது தான் ஒன்னும் இல்ல னு சொல்றேன் ல... விடுங்க...

திரவியம் வெண்ணிலா வை பார்க்க...அவள் அமைதியானாள்...

திரவியம் : நீ சொல்லு துளசி...

துளசி ஜனனி நடந்து‌ கொண்டதை சொன்னாள்... 

திரவியம் ஜனனியை முறைக்க...ஜனனி பயந்தவாறு ரெண்டடி பின்னால் நகர்ந்தாள்...

துளசி : அவ பண்ணத அப்பவே மாமாக்கிட்டையும்‌‌ தாத்தாக்கிட்டையும் call பண்ணி விசயத்தை சொல்லவும் தான்... இனிமே சும்மா இருக்க கூடாது ஒரு முடிவுக்கு கொண்டு வரனும் தான்... இப்படி பண்ணாங்க...

திரவியம் தலையில் கை வைத்து கொண்டு அமர... 

வெண்ணிலா : "அய்யோ என்னங்க ஆச்சு..."என்று பதறி அருகில் அமர்ந்து கையை பிடிக்க...

திரவியம் : முடியல நிலா‌... என்னால இத கேட்க முடியல...  நீ எப்படி இத எல்லாம் பொறுத்துக்கிட்டா இருந்த‌... என் கிட்ட சொல்லி இருக்கலாம் ல... ஏன் நிலா அமைதியா இருந்த... நா உனக்கு support பண்ண மாட்டேன் னு‌ நினைச்சுட்டியா...

வெண்ணிலா :"அய்யோ இல்லங்க..."என்று பதற...

திரவியம் : அப்புறம் ஏன் நிலா... உன் கிட்ட நா ஏற்கனவே சொல்லி இருக்கேன்... என் குடும்பத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி அவங்க பண்றது எனக்கே பிடிக்காது... உன்னைய ஏதாவது சொன்னா என் கிட்ட சொல்லு நா பாத்துக்கிறேன் னு சொல்லி இருக்கேன்... அப்புறம் ஏன் இப்படி பண்ண...

வெண்ணிலா : இல்லங்க... என்னால பிரச்சனை வர வேணாம் னு நினைச்சேன்...

துளசி : கிழிச்ச... இங்க பாரு திரவி இவ என் கிட்டையும் சொல்லி இருக்கா... என் குடும்பத்துல எல்லாரும் ஒவ்வொரு திசையில போறாங்க... அவங்கள follow பண்ணவே முடியல... எல்லாரும் ஒரே திசையில போன கூட நம்ம மட்டும் தான் தனியா போறோம் னு நினைக்கலாம்... ஆனா இவங்க தனி தனியா போறாங்க... என்னால முடியல கா னு சொன்னா‌... 

திரவியம் : என்ன பிரச்சினை வரும்‌... அவங்களால உனக்கு பிரச்சனை வந்தா சரியா... நீ ஒத்துக்குவீயா... நீ சண்டை வேணாம் னு நினைக்கிற... ஆனா அவங்க உன்னையே வச்சே சண்டை போடனும் நினைக்கிறாங்க... 

துளசி : நா அவங்க கிட்ட பல தடவ சொல்லிட்டேன்... அவ கேட்டா தானே... எப்போ எது சொன்னாலும் வேணாம் கா எதுக்கு வீணா பிரச்சனை னு line ஹ மனப்பாடம் பண்ணி வச்சு சொல்ற மாதிரி அதேயே தான் சொல்லுவா...அப்போ அவளை பாக்கும் போதா பாவமா இருக்கும்... நா கூட சொல்லுவேன்... எல்லாரும் உன்னைய மாதிரி இருக்க மாட்டாங்க டி... கேட்கலையே‌.. நா ஒரு தப்பு பண்ணிட்டேன்... இவ கிட்ட பேசுனதுக்கு பதிலாக உன் கிட்ட வந்து எல்லாத்தையும் சொல்லி இருக்கனும்... 

சிவா : இத இப்ப சொல்லு...

துளசி : அப்ப முடியல... இப்ப சொல்லிட்டேன்... ஆக மொத்ததுல சொல்லிட்டேன் ல அப்புறம் என்ன...இதுக்கு மேல என்ன பண்ணலாம் னு யோசிங்க...

திரவியம் யோசினையில் ஆழ்ந்தான்...

              ‌‌தொடரும்......

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...   

  அவ பேரு வெண்ணிலா...

# நானிஷா....