அவள் - 15
பலரின் ஆசை நிலா வெண்ணிலா சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான்...
திரவியம் யோசனையாக அமர்ந்திருக்க...
துளசி : திரவி இதுல யோசிக்க என்ன இருக்கு...
திரவியம் பெருமூச்சு விட்டு ராஜபாண்டியையும் யோகநாதனையையும் பார்த்து "அப்பா அய்யா என்ன பண்ணலாம்..."என்று கேட்க...
ராஜபாண்டி : நாங்க என்ன சொல்லனும்...
யோகநாதன் : பாதிக்கப்பட்டது உன் பொண்டாட்டி டா... நா கூட உன் மேல தான் தப்பு இருக்கு நினைச்சு நீ தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்க போல னு உன்னைய ரொம்ப திட்டிட்டேன்... ஆனா இப்ப தானே தெரியுது...இதுல நாங்க முடிவு எடுக்க முடியாது... நீ தான் மா முடிவு எடுக்கனும்... என்ன முடிவு எடுத்தாலும் நாங்க ஒத்துக்குறோம்...
திரவியம் சிவா வை பார்த்து "சிவா அண்ணா ஒரு நிமிசம் என் கூட வாங்க..."என்று அழைத்து கொண்டு உள்ளே சென்று கதவை சாத்தினான்...
சிவா : சொல்லு திரவியா...
திரவியம் தனக்கு தோன்றியதை சொல்லி "நீங்க என்ன சொல்றீங்க அண்ணா... இது தப்பு இல்லையே..."என்று கேட்க...
சிவா : தப்பே இல்ல திரவியா... இது நல்லா தண்டனை தான்...
திரவியம் : அப்படியா சொல்றீங்க...
சிவா : ஆமா திரவியா... நா கூட நீ தனிக்குடித்தனம் போயிடுவீயோ னு நினைச்சேன்... ஆனா இப்படி யோசிப்ப னு நா கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல திரவியா...
திரவியம் : அப்போ சரி னு சொல்றீங்களா...
சிவா : "அட வா டா... வந்து நீயே சொல்லு..."என்று அவன் கையை பிடித்து இழுத்தான்...
இருவரும் அமைதியாக தலை குனிந்து கொண்டு வெளியே வர...
அனைவரும் அவர்களையே பார்த்தா கொண்டு இருந்தனர்...
திரவியம் ராஜபாண்டி யை பார்த்து "அப்பா நா ஒரு முடிவு எடுத்து இருக்கேன்... இது எனக்கு என் நிலாவுக்கு தான் மட்டும் தான்... நீங்களோ இல்ல அம்மாவோ இத பண்ண தேவை இல்ல... இது என் நிலாவுக்காக நா எடுத்த முடிவு..."என்று சொல்ல...
துளசி சிவா தோளை சொரிந்து "என்ன..."என்று சைகையில் கேட்க...
சிவா : 🤫🤫🤫
துளசி முகத்தை திரும்பி கொண்டு நிலா அருகில் போய் நின்றாள்...
துளசி : அடியேய் ஒரு வேளை தனிக்குடித்தனமா இருக்குமோ...
நிலா : வாய்ப்பே இல்ல கா...
துளசி : "வேற எதுவா இருக்கும்..."என்று யோசித்து 🤔🤔🤔 கொண்டு "any guesses..."என்று கேட்க
நிலா : No idea...
யோகநாதன் : நீ எந்த முடிவு எடுத்தாலும் நாங்க ஒத்துக்குறோம்...
திரவியம் நிலா அருகில் சென்று அவள் கையை பிடித்து "நல்லா கேட்டுக்கோங்க... இவ தான் எனக்கு எல்லாமே... இத்தனை வருசம் அய்யாவும் அப்பாவும் என் காட்டுன பாசம் உங்க யாருக்கிட்டையும் நா பாக்கல...
உண்மைய சொல்லனும் னா பெத்த அம்மாவே என்னைய பார்த்துக்கிட்டு இல்ல... என் அத்தைங்க என்னைய வளர்த்தாங்க... ஏதோ கடமைக்கு னு தான் என்னைய பெத்து இருக்கீங்க...
இது வரைக்கும் பாவமா ஒரு வார்த்தை என் கிட்ட நீக்க பேசி இருப்பீங்களா... இல்லையே... கூப்டும் போதே கோவமா தான் கூப்டுவீங்க... உங்க கிட்ட நா பாசத்தையே பார்த்தது இல்ல... ஏதோ அனாதையா மாதிரி தான் எனக்கு தோணுச்சு...
அப்போ தான் என் நிலா வந்தா... அவ என்னைய எவ்ளோ நல்லா பாத்துக்கிட்டா னு தெரியுமா... எப்பவுமே சிரிச்ச முகத்தோட... இந்த வீட்டுல ரஞ்சனியை தவிர எல்லாருமே முகத்தை உர்ர்ர் னு தான் வச்சு இருப்பீங்க...
சாயங்காலம் வீட்டுக்கு வந்து பார்த்தா வீடு வீடா இருக்காது... ஏதோ குடி இல்லாத வீடு மாதிரி கேவலமா இருக்கும்... ஆனா எப்போ என் நிலா இந்த வீட்டுக்கு வந்தாளோ... வீடு கோவில் மாதிரி இருக்கு... வீட்டுக்குள்ள நுழைச்சா ஒரு மண்ணு கால்ல ஒட்டாது...அவ்ளோ சுத்தாமா இருக்கும்...
வந்து பார்த்தா குளிச்சு நெத்தில பொட்டு வச்சு தலையில பூ வச்சு சிரிச்ச முகத்தோட இருப்பா... அத பாக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கும்... இன்னக்கி நா இவ்ளோ கோவப்பட்டேனா அது காரணம் எப்பவுமே நா வரும் போது மகாலெட்சுமி மாதிரி என் முன்னாடி இருப்பா... இன்னக்கி இல்லையே னு தான் கோவம்...
என் நிலா இந்த வீட்டுக்கு வந்து ஒரு வருசம் ஆச்சு... நீங்க இப்படி என் நிலா வ இந்த அளவுக்கு கொடுமைப்படுத்தி இருக்கீங்கனா... அவ எனக்கு தெரியாத அளவுக்கு பாத்துக்கிட்டா... அதுக்கு காரணம் குடும்பத்துல பிரச்சனை வரக்கூடாது... குடும்பம் பிரிக்கூடாதுங்குற எண்ணம் தான்...
எங்கிருந்தோ வந்து இவளுக்கு இந்த குடும்பத்துல இருக்கும் அன்பு பாசம் மதிப்பு ஏன் இங்க இருந்து உங்களுக்கு இல்ல...காலங்காலமா வீட்டுக்கு வந்த மருமகளை கொடுமைப்டுத்திக்கிட்டே இருங்கீங்க... அதுக்காக எல்லாருமே அப்படி னு சொல்லல... ஒரு சில மட்டும் தான்... அதுல நீங்களுக்கு ஒரு ஆள்...
என் மேல பாசத்தை காட்டுன அவளுக்கு இதுவரைக்கும் நா பாசத்தையும் காட்டுனது இல்ல... எதுவும் பண்ணதும் இல்ல...உண்மைய சொல்லனும் னா இதுவரைக்குமே அவளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது னு எனக்கு தெரியாது... அதுக்காக அவ இப்ப வரைக்கும் வருத்தப்பட்டது கிடையாது...
நானும் எத்தனையோ பொண்ணுங்களை பார்த்து இருக்கேன்... பேசி இருக்கேன்... ஆனா நிலா மாதிரி எந்த ஒரு பொண்ணையும் நா பாத்தது இல்ல... அவளுக்கு அடிப்பட்டா கூட அந்த வலியை நம்ம கிட்ட காட்ட மாட்டா... நம்மளால அடிப்பட்டுருச்சே னு நம்ம நினைக்க கூடாது தான் நினைப்பா... அப்படிப்பட்ட மனசுள்ள ஒரு பொண்ணை கஷ்டப்படுத்தி இருக்கீங்களே....
இதுக்கு மேலையும் நா சும்மா பேசாம இருந்தா நல்லா இருக்காது... இத்தனை நாளா அமைதியா இருந்துட்டேன்...இனிமேலும் நா பேசாம இருந்தா நா மனுசனே இல்ல... அதனால தான் இந்த முடிவு..."என்று பேச்சை நிறுத்தி அனைவரையும் பார்க்க...
துளசி : இவன் வேற நேரா main road ல போவானா அது விட்டுட்டு short route ல சுத்திக்கிட்டு போறான்... நேரா போனாலே குழப்பா இருக்கும்... இதுல சுத்திக்கிட்டு போனா அவ்ளோ தான் பைத்தியம் தான் பிடிக்கும்...விசயத்துக்கு வருவானா அத விட்டுட்டு முன்னுரை விளக்கவுரை மாதிரி பேசிட்டு இருக்கான்...
அனைவரும் அவளை திரும்பி பார்க்க...
துளசி : என்ன இது எல்லாரும் நம்மளை பாக்குறாங்க... நம்ம mind voice ல தானே பேசிட்டு இருந்தோம்...
சிவா அவள் தலையில் தட்டி "லூசு... நீ mind voice ல பேசல... சத்தமா பேசுன..."என்று சொல்ல...
துளசி 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️ தலையில் அடித்து கொண்டாள்...
திரவியம் : நீங்க நினைக்கலாம்... நாங்க இந்த வீட்டை விட்டு போய் தனிக்குடித்தனம் இருக்க போறோம் னு... ஆனா அது இல்ல... நாங்க இங்க தான் இருக்க போறோம்...
குமுதவல்லி வேகமாக "அப்போ எங்களை மன்னிச்சிட்டீயா திரவியம்..."என்று கேட்க...
திரவியம் முறைத்தவாறு "நா அப்படி சொல்லவே இல்லையே..."என்க..
குமுதவல்லி : திரவியம் நாங்க பண்ணது தப்பு தான் யா... எங்களை மன்னிச்சுரு யா...
ஜனனி : அம்மா மன்னிப்பு கேட்டுறதா இருந்தா நீ கேளு... நாங்க னு எதுக்கு என்னையும் சேர்க்குற... நா எதுக்கு மன்னிப்பு கேட்கனும்... என்னைய பொறுத்தவரைக்கும் நா எந்த தப்பு பண்ணல...நா பேசுனது எல்லாம் சரி தான்... அவங்க தப்பா நினைச்சதுக்கு நா பண்ண முடியாது...
துளசி : இவ கொழுப்பு குறையே மாட்டேங்குதே... அடங்க மாட்றாளே இவ...
திரவியம் : ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு குணம் இருந்தா நல்லது இல்ல... உன்னையே மாத்திக்கோ... இல்ல பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவ...
துளசி : டேய் திரவி உன்னோட முடிவ இப்ப சொல்லுவீயா இல்ல late ஆகுமா...
திரவியம் ஏற இறங்க பார்க்க...
துளசி : இல்ல late ஆகும் னா நா போய் சாப்டு வருவேன்... ரொம்ப பசிக்குது டா...
நிலா சிரிப்பை அடக்க முடியாமலா திணறினாள்...
சிவா துளசி கையில் கிள்ள..
துளசி : ஸ்...ஆ...
சிவா : "வாய கொஞ்சம்..."என்று வாயில் கை வைத்து காட்ட...
துளசி :🤐🤐🤐
சிவா : இனி இவ பேச மாட்டா... நீ சொல்லு... ஆனா நீ எடுத்த அந்த முடிவு எங்களுக்கு தான்... நாங்களும் அத follow பண்ணுவோம்...
திரவியம் : "சிவா அண்ணா நீங்க..."என்று சொல்லு போது...
சிவா : எதுவும் சொல்ல வேணாம்... நீ சொல்ல வேண்டி விசயத்தை பட்டு னு சொல்லு...
திரவியம் சிறிது அமைதிக்கு பின் "நல்லா கேட்டுக்கோங்க... நாங்க இநாத வீட்டுல தான் இருப்போம்... ஆனா உங்க ரெண்டு பேரு கூட மட்டும் பேச மாட்டோம்...
நிலா : என்னங்க என்ன இது...
திரவியம் : நா பேசி முடிக்கிற வரைக்கும் யாரும் பேச வேணாம்...
துளசி : நா பண்ண வேலை நீயும் பண்ணனுமாம்...
நிலா : அக்கா சும்மா இருங்க கா... நீங்க வேற...
திரவியம் : நல்லா கேட்டுக்கோங்க... நாங்க இந்த வீட்டுல தான் இருப்போம்... ஆனா பேசவே மாட்டோம்... இது கொஞ்ச நாள் மட்டும் தான் னு நினைக்காதீங்க... உங்க ஆயுசு முழுக்க... உங்களுக்கு இது தான் தண்டனை... ஒரு நல்லது நடந்தா கூட உங்களை ஒதுக்கி வைச்சு தான் நடக்கும்...
இந்த ஊருல இருக்குற எல்லாரும் கேட்பாங்க ல... நீங்க பண்ணத சொல்லுங்க... இதனால எங்கள ஒதுக்கி வச்சுட்டான்... அப்புறம் பெத்த தாய்க்கு சோறு போடலையே இவன் னு யாரும் என்னைய சொல்ல கூடாது... அதனால என் பொண்டாட்டி உங்களுக்கும் சேர்த்து தான் சமைச்சு வைப்பா...
ஆனா அவ உங்களுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சு கொடுப்பா னு கொஞ்சம் கூட நினைக்காதீங்க... நீங்க தான் உங்களுக்கான சாப்பாடை போட்டுக்கணும்... எப்பவும் போல உட்காந்து கிட்டு நிலா கிட்ட வேலை வாங்கனும் நினைக்காதீங்க... உங்களுக்கு தேவையா நீங்களே போய் எடுத்துக்கனும்...
கிட்டத்தட்ட இந்த ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம்... அன்னம் தண்ணி யாரும் புழங்க கூடாது னு நாட்டாமை படத்துல தீர்ப்பு சொல்லுவாங்க ல... அது மாதிரி தான் இதுவும்... நாங்களும் பேச மாட்டோம்... நீங்களும் பேச கூடாது... என்ன நாட்டாண்மை சொன்ன தீர்வு ல ஒரு சிறு திருத்தம்... நீங்க இங்க அன்னம் தண்ணி புழங்கிக்கலாம்...
இந்த வீட்டுல உங்க சத்தம் கேட்டுச்சு... என்ன பண்ணுவேன் னு எனக்கும் தெரியாது... அப்புறம் என்ன குறை சொல்ல கூடாது...சொல்லிட்டேன்... ஹான் அப்புறம் சொல்ல மறைந்துட்டேன்... முக்கியமா என் நிலா கிட்ட இருந்து சுத்தமாவே விலகி இருக்க... அது தான் உங்களுக்கு நல்லது...
அதுவரைக்கும் அமைதியாக இருந்த ஜனனி வாயை திறந்தாள்...
ஜனனி : என்ன டா விட்டா ரொம்ப பேசிட்டு இருக்க... எங்களை ஒதுக்கி வைக்க நீ யாரு டா... நீ முத வீட்டை விட்டா வெளியே போடா ****** எங்களை ஒதுக்கி வைக்கிறீயோ...
நிலா கோவத்தில் ஜனனி கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள்...
தொடரும்......
# நானிஷா.
3 Comments
Semaa sissy🥰🥰🥰🥰🥰 nala mudivu eduthurka thiravi 👍sprrr ...anna va pathu epdi pesuthu itha janani inum nalu adi potu nila 🤬🤬janani ku inum thimuru adakala ithuku ethachu perusaa panuka apotha thiruthum
ReplyDeleteGood decision dhiravi👍👏👏 indha janani adangavay maatala epdi peasura chaa 😡😡 thappay pannalanu sollura innum enna panna thappa therium avaluku 😤 thirundhadhu pola veeta vittu thorathunalum ipdi dha sollitu irupa 😠 nila adichitangana appo evlo thappa peasirupa enna ponno chee 😏😏 evlo adichalum thirundha maatudhu 😬😒
ReplyDeleteThiravi nee avangala jail la potrukanum..thappu panita man😐😐😐😡👿👿👿👿👿
ReplyDelete