என் இதயத்தில் நீ - 31
ஈவ்னிங்,
ஸ்னேகா வீடு,
"ஸ்னேகா ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்ததும் ஃப்ரஸ் ஆகிட்டு ஹால்ல வந்து உட்கார்ந்தாள்..."
பரதன் : "கிரிக்கெட் பேட்,பந்து எடுத்துட்டு இருந்தான்..." ஸ்னேகாவ பார்த்ததும் அஸ்வின் ஸ்னேகா கிட்ட நாவல் புக் குடுக்க சொன்ன நியாபகம் வந்ததால அவள்ட நாவல் புக்கை குடுத்துட்டு விளையாட போய்ட்டான்..."
ஸ்னேகா : 😍 "அந்த நாவல் புக்கை பார்த்துட்டு ரொம்ப சந்தோசம்..."
"ஸ்னேகா மொபைலை எடுத்து மாடிக்கு சென்றாள்..."
"ஸ்னேகா காலிங் அஸ்வின்..." 📲
அஸ்வின் : ( கிரிக்கெட் விளையாட க்ரவுன்ட்க்கு பைக்ல போய் கொண்டு இருந்தான் ) ஸ்னேகா கால் பண்ணவும் பைக்கை ஸ்டாப் பண்ணி ஹலோ...
ஸ்னேகா : ஹலோ...
அஸ்வின் : ஹலோ ஸ்னேகா நீயா பேசுறது ?
ஸ்னேகா : "ஆமா நான் தான்..."
அஸ்வின் : "அதிசயமா இருக்கு கால்லா பண்ணி இருக்க..."
ஸ்னேகா : ஏன் பண்ண கூடாதா?
அஸ்வின் : தாராளமா பண்ணலாம்...
ஸ்னேகா : ம்ம்ம்..
அஸ்வின் : எங்க இருக்க ?
ஸ்னேகா : வீட்டு மொட்டை மாடியில இருக்க... நீங்க எங்க இருக்கீங்க ?
அஸ்வின் : க்ரவுண்டுல...
ஸ்னேகா : ம்ம்ம்... அண்ணிக்கு வளைகாப்பு எல்லா எப்படி நடந்தது ?
அஸ்வின் : "ரொம்ப சிறப்பா நடந்து முடிச்சிட்டு... நீ வராதது தான் ஒரே குறையே..."
ஸ்னேகா : சாரி... நானும் வந்திருக்கலாம் அந்த மிஸ் பேச்ச கேட்டதால தான் வரல...
அஸ்வின் : க்ளாஸ்ல எல்லாரும் வந்தாங்களா?
ஸ்னேகா : இல்லையே...7 பேரு ஆப்ஷன்ட்...
அஸ்வின் : நான் அப்பவே சொன்னல...
ஸ்னேகா : சரி க்ளாஸ் பத்தி பேச வேண்டா எனக்கு டென்ஷன் தான் ஆகுது....
அஸ்வின் : ம்ம்ம்...சரி.
ஸ்னேகா : நான் படிக்கனும் ரொம்ப எதிர் பார்த்துட்டு இருத்த நாவல் குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்...
அஸ்வின் : பரவால இருக்கட்டும்...
ஸ்னேகா : இந்த " பொன்னியின் செல்வன்" நாவல் தான் படமா வர போகுதாம்...
அஸ்வின் : ஆமா, தெரியும்...இதுல மொத்தம் 5 பாகம் இருக்கு உன் கிட்ட குடுத்தது ஃபர்ஸ்ட் பாகம் மட்டும் தான்...
ஸ்னேகா : ஓஓஓ... ஓகே.
அஸ்வின் : நீ இந்த நாவலை படிச்சதும் சொல்லு உனக்கு இரண்டாவது பாகத்தோட நாவல் புக்கை தரேன்...
ஸ்னேகா : ம்ம்ம்...சரி.
சாப்டிங்களா?
அஸ்வின் : இந்த டைம்லயா?
ஸ்னேகா : இல்ல மதியம் கேட்டேன்....
அஸ்வின் : ம்ம்ம்...சாப்டனே... பொங்கல்,புளிசாதம்,லெமன் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், லட்டு, கூட்டு பொரியல் எல்லாமே சாப்டேன்...
ஸ்னேகா : நீங்க மட்டும் சாப்டா போதுமா.... நான் தான் வரல எனக்காக பார்சல் கட்டி எங்க அம்மாட்ட குடுத்து அனுப்பனும்னு கூட தெரியாதா உங்களுக்கு...
அஸ்வின் : நீ தான் வரல அது உன்னோட தப்பு... நாங்க ஏன் குடுத்து அனுப்பனும் ..
ஸ்னேகா : ஓஓ...
அஸ்வின் : 😅😅😅 கோச்சிக்கிட்டியா...
ஸ்னேகா : "இல்லையே..."😏
அஸ்வின் : "எங்க அம்மா நீ உங்க அம்மா இப்படி கேட்பியோ என்னோ தெரியல ஆனா,நீ சாப்டுவனு எல்லாத்தை பார்சல் பண்ணி உங்க அம்மா கிட்ட குடுத்தாங்க...கிட்சன்ல போய் பாரு எல்லாமே இருக்கும்..."
ஸ்னேகா : அப்படியா ? "சரி போய் பார்க்குறேன்..."
அஸ்வின் : ம்ம்ம்...
"இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசி முடிச்சிட்டு கால் கட் பண்ணிட்டாங்க..."
தொடரும்...
# Ram krs
2 Comments
சூப்பர்
ReplyDeleteNxt episode epo varum
ReplyDelete