அவள் - 18


திரவியம் சந்தோஷத்தில் என்ன‌ செய்வது என்று புரியாமல் குதித்தான்...

நிலா : ஏங்க என்ன பண்றீங்க...

"திரவியம் : "என்னால முடியல நிலா... ரொம்ப சந்தோஷமா இருக்கு..."என்று அவள் அருகில் அமர..."

நிலா அவன் முகத்தையே பார்த்தாள்...

"திரவியம் அவளை பார்த்து 😀😀😀 சிரித்து விட்டு அவள் கன்னத்தை பிடித்து 😗😗😗 முத்தமிட்டு எழுந்து வேகமாக வெளியே ஓடினான்‌..."

"நிலா கன்னம் சிவக்க... ☺️☺️☺️ சிரித்து கொண்டே அவன் போவதை பார்த்தாள்‌..."

திரவியம் வெளியே ஓடி வந்து "அய்யா... அய்யா எங்க இருக்கீங்க...அப்பா வேகமாக வாங்க..."என்று கத்த...

யோகநாதன் பதறி அடித்து கொண்டு ஓடி வந்து "என்ன பேராண்டி... என்ன ஆச்சு...எதுக்கு இப்படி கத்துற..."என்று கேட்க...

திரவியம் : "அய்யா...‌அங்க நிலா... நிலா..."என்று திக்க...

யோகநாதன் என்ன ஆச்சோ என்று நினைத்துக் கொண்டு உள்ளே போய் பார்க்க...

நிலா கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க...

யோகநாதன் : பேத்தி...

நிலா வேகமாக எழுந்து நிற்க...

யோகநாதன் : அம்மாடி பாத்து மா... மெதுவா தாயி...

நிலா : அய்யா என்ன வேணும்...

யோகநாதன் : எனக்கு ஒன்னும் வேணாம்... இந்த திரவி கத்திக்கிட்டு வந்து நிலா னு சொன்னான்... அது தான் உனக்கு எதாவது ஆகிருச்சோ னு வந்தேன்... க்கு ஒன்னும் இல்லையே...

நிலா : எனக்கு என்ன நா நல்லா தான் இருக்கேன்‌..‌

ராஜபாண்டியும் திரவியமும் உள்ள வர‌‌...

ராஜபாண்டி : மருமகளே என்ன ஆச்சு மா...

நிலா திரவியத்தை முறைக்க...

திரவியம் : அய்யோ... அவளுக்கு ஒன்னும் இல்ல... நல்லா தான் இருக்கா...

ராஜபாண்டி : அப்போ எதுக்கு டா...அந்த கத்து கத்திக்கிட்டு வந்த...

திரவியம் : நா ஒன்னும் சும்மா கத்த... நா ஒரு விசயம் சொல்ல வந்தேன்...

ராஜபாண்டி : என்ன னு பட்டு னு சொல்லு டா...

திரவியம் : அப்பா நீங்க அய்யா ஆகிட்டீங்க...

ராஜபாண்டி : என்ன யா சொல்ற‌‌...

திரவியம் : ஆமா பா‌...

ராஜபாண்டி : மருமகளே ரொம்ப சந்தோஷம் மா‌...

நிலா :"ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா..."என்று குனிய...

ராஜபாண்டி : "அம்மாடி..."என்று அவள் தோளை பிடித்து நிறுத்தி "என் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும் மா..."என்று தலையில் கை வைத்தார்‌‌...

நிலா : "தாத்தா..."என்று குனிய போக...

யோகநாதன் : பேத்தி நீ தான் முதவே ஆசிர்வாதம் வாங்கிட்டீயே மா... 

வெளியே நின்று பார்த்து கொண்டு இருந்த ஜனனிக்கு எரிச்சலாக இருந்தது...

ஜனனி mind voice : சொந்த பேத்தி யாரும் இல்லாத அனாதை மாதிரி இருக்கேன்‌... யாரோ ஒருத்திக்காக என்னைய ஒதுக்கி வச்சுட்டீங்க... வயித்தெரிச்சலா இருக்கு... 

குமுதவல்லி நிலா அறை வாசலில் நின்று அவளை பார்த்தாள்...

குமுதவல்லி mind voice : மாசமா இருக்குற‌ பொண்ணை யா‌ நா கஷ்டப்படுத்தி இருக்கேன்... என்னைய நினைச்சா எனக்கு அசிங்கமா இருக்கு... வீட்டுக்கு வந்த மருமகளை இப்படி கஷ்டப்படுத்தி இருக்கேனே... எனக்கும் ரெண்டு பொண்ணு  இருக்கு னு தோணாம போச்சே...நம்ம பண்ற தப்பு தான் பின்னாடி நம்ம பிள்ளைக்களுக்கும் போய் சேரும்... நா பண்ண தப்பால என்‌ பொண்ணுக்களுக்கு ஏதாவது ஆகிருமா...

குமுதவல்லி யோசனையாக அமர்ந்திருக்க... அருகில் அமர்ந்த ஜனனி அவள் தோளை சொரிந்தாள்...

ஜனனி : அம்மா என்ன நடக்குது...

குமுதவல்லி : நீ அத்தை ஆக போற...

ஜனனி : அது எனக்கு தேவை இல்ல...

குமுதவல்லி : என்ன டி பேசுற... 

ஜனனி : யாரோ பிள்ளைய பெத்துக்க போறாங்க... அதுக்கு நா என்ன பண்றது... 

குமுதவல்லி : தப்பு பண்ணிட்டேன்...ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்... நா பெத்த பொண்ணா இருந்தாலும் பெத்த அம்மா னு கூட யோசிக்காம என்னைய கண்டிச்சா‌.. அம்மா நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல‌... 

    ஜனனி பேசு வார்த்தை எதுவும் எனக்கு சரியா படல... அவ யாருக்குமே மரியாதை கொடுக்காம அவ இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கா... நீயும் அவ கூட சேர்ந்துக்கிட்டு பேசுற... பின்னாடி அது உனக்கே அது பிரச்சனையா ஆக போகுது... 

    அவளை கண்டிச்சு வை... அப்புறம் உன்‌ பேரு தான் கெட்டு போகும் னு சொன்னா... நா தான் கேட்கல... இப்ப நானே சொல்றேன்... உன்னையே மாத்திக்கோ... 

ஜனனி : என்ன மா புதுசா பேசுற... சரி இல்லையே... என்ன திருந்திட்டியா... உனக்கு இது set ஆகல... நீ அப்படியே இரு மா...

குமுதவல்லி : "போதும் நிறுத்து டி‌..."என்று கத்த...

அனைவரும் உள்ளே இருந்து வெளியே வந்தனர்...

குமுதவல்லி : இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் நீ இப்படி இருக்கேனா‌... நா தான் தப்பு பண்ணிட்டேன்... என் வளர்ப்பு சரி இல்ல... மூனு பிள்ளைகளௌ பெத்தேன்‌.. உன்னையே மட்டும் சரியா வளர்க்காம போயிட்டேன்...

"சரியா சொன்ன..."என்று சத்தம் வர...

அனைவரும் சத்தம் திசை பக்கம் பார்க்க...

ஒருவன் கை கட்டி கொண்டு நின்றான்....


*****************************


சிவா சாப்பாத்தியை சாப்பிட்டு கொண்டு யோசனையில் இருந்தான்...

துளசி எடுத்து வந்து வைத்து விட்டு அமர்ந்து "மாமா இன்னொரு சாப்பாத்தி..."என்று கேட்க...

சிவா : இல்ல இது முத நீ பதில்‌... என்ன யோசிச்சாலும் பிடிப்படல...

துளசி : சாப்டுற நேரத்துல என்ன யோசனை...

சிவா : நீ எப்படி அப்படி சொன்ன...

துளசி : நா என்ன சொன்னேன்...

சிவா : நிலா இனிமே தான் வருத்தப்படுவா னு ஏன் சொன்ன‌‌..‌

துளசி : ஆமா உண்மை தானே‌ சொன்னே...

சிவா : அது தான் எப்படி சொன்ன னு கேட்டேன்...எத வச்சு அப்படி‌ சொன்ன...

துளசி : யோவ் மாமா... நிலா பத்தி எனக்கு நல்லா தெரியும்... அவளுக்கு அவளை பொறுத்த வரைக்கும் அவளுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் ஏத்துக்குவா... ஆனா அவளை சுத்தி இருக்குறவங்களுக்கு ஏதாவது நா தாங்க மாட்டா‌... 

    இப்ப அங்க நடந்த விசயம் அவ குடும்பத்துல அதுவும் அவளை வச்சு... தன்னால இப்படி ஆகிருச்சே னு பொழுதுக்கும் வருத்தப்படுக்கிட்டே இருப்பா‌... இதுல ரொம்ப பாதிக்கப்பட்டது நா தான்...

சிவா : நீயா‌...

துளசி : நீங்க பாட்டுக்கு நாட்டாமை தீர்ப்பு சொன்ன மாதிரி சொல்லிட்டீங்க... அதுக்கு அப்புறம் எனக்கு என்ன வந்தது னு நீங்க உங்க வேலைய பாத்துக்கிட்டு போயிட்டு நீங்க... அவ வந்து என் கிட்ட தான் புலம்புவா...

அக்கா என்னால தானே இப்படி ஆச்சு‌... அந்த புள்ளை பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா... எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருக்கனும் னு நினைக்கிற...அவ நினைக்கிறது ஒன்னு நடக்குது ஒன்னா இருக்கு...நா அடிச்சு சொல்றேன்... நீங்க வேணும் னா பாருங்க... நிலா கண்டிப்பா ஏன் இப்படி பண்ணீங்க னு திரவியத்தை பாத்து கேள்வி கேட்பா... நாளைக்கி காலைல வேணும் னா திரவி ய கூப்டு கேளுங்க...

சிவா : அவ சந்தோஷமா இருக்கனும் தானே நாங்க இப்படி பண்ணோம்‌..

துளசி : எது இதுவா‌‌.... நல்லா சொன்னீங்க போங்க... இதே பதிலை நீங்க அவ கிட்ட சொல்லுங்க....

சிவா : சொன்னா என்ன...

துளசி : சொன்னா என்ன வா... அவ என்ன சொல்லுவா னு நா சொல்லட்டுமா...

சிவா : சொல்லு...

துளசி : நீங்க என்ன சந்தோஷத்துக்காக வேணும் னா இத நீங்க பண்ணி இருக்கலாம்... ஆனா இதுல எனக்கு சந்தோஷமே இல்ல... அவங்க என்னைய கஷ்டப்படுத்த கோவத்தை காட்டவாவது என் கிட்ட பேசிக்கிட்டு இருந்தாங்க... இப்ப அதுவும் இல்லாம பண்ணிட்டீங்க... ஏதோ தனியா யாருமே இல்லாத அனாதை யா இருக்குற மாதிரி இருக்கு னு ஒரு வரி கூட மாத்தாம சொல்றாளா இல்லையா னு பாருங்க...

சிவா துளசியை யே பார்க்க...

துளசி : மாமோய் என்ன யா அப்படி பாக்குற...

சிவா : அந்த அளவுக்கு நீ நிலா வ புரிஞ்சு வச்சு இருக்கீயா‌‌...

துளசி : நா மட்டும் இல்ல... நிலாவும் என்னைய நல்லா புரிஞ்சு வச்சு இருக்கா‌‌...

சிவா : சரி விடு... எல்லாம் சரி ஆகிரும்‌... சித்தி திருந்திட்டா பிரச்சனையே இருக்காது... 

துளசி : ம்ம்ம்...

சிவா : ஆமா ஒன்னு கேட்கும் நினைச்சேன்‌... நிலா எதுவும் பிரச்சனை யா...

துளசி : அவளுக்கு என்ன பிரச்சினை...அது தான் எல்லாம் பேசிட்டீங்களே...

சிவா : இல்ல வேற ஏதோ இருக்கு...

துளசி யோசித்து விட்டு "ஓ... உங்களுக்கு தெரியாது ல... அது ஒன்னும் இல்ல மாமா... நீங்க பெரியப்பா ஆக போறீங்க... அது தான் விசயம்..."என்று சொல்ல...

சிவா : "ஓ... அப்படியா... நல்ல விசயம்..."என்று சாப்பாத்தியை வாயில் வைத்து விட்டு வேகமாக நிமிர்ந்து அவளை பார்க்க...

துளசி : நீங்க நினைக்கிறது தான்‌‌... 

சிவா : நிலா சொல்லவே இல்லையே...

துளசி : அவளுக்கே முத தெரியல... 

சிவா : நா போய் நிலா வ பாத்துட்டு வரேன்‌...

துளசி : யோவ் சாப்டு போயா...

சிவா : "இல்ல வேணாம்... நீ சொன்ன விசயத்துலேயே என் வயிரு full ஆகிருச்சு‌..."என்று எழுந்து ஓட...

துளசியும் பின்னாலேயே சென்றாள்...

சிவா வீட்டை விட்டு வெளியே வந்து பாதைக்கு வந்து நிலா வீட்டை நெருங்கியவன் அப்படியே நின்றான்...

பின்னால் வந்த துளசி அவன் மோதி நிற்க...

துளசி : மாமா என்னய்யா...

சிவா : குமரேசன் மாமா தானே அது‌...

துளசி : ஓ வந்துட்டாரா...

சிவா : அவரு ஊருக்கு தானே போய் இருந்தாரு...

துளசி : ஆமா‌... நா தான் call பண்ணி சொன்னே... அது தான் வந்துட்டாரு...

சிவா : வேலைக்கு போன மனுசனுக்கு call பண்ணி எதுக்கு சொன்ன‌‌...

துளசி : அவங்க குமரேசன் சித்தப்பாக்கு மட்டும் தான் அடங்குவாங்க.... இப்ப அந்த ஜனனி நம்ம கிட்ட என்ன பேச்சு பேசுனா... குமரேசன் சித்தப்பா கிட்ட வாய் திறக்க மாட்டா பாருங்க...

சிவா : சரி ஏதோ ஒன்னு... ஏதோ சம்பவம் இருக்கு... வா போய் பாக்கலாம்‌...

துளசி : கண்டிப்பா... ஜனனி பேசுனது மட்டும் சித்தப்பாக்கு தெரிஞ்சுச்சு என்ன ஆகும் னு தெரியல...

சிவா : சரி வா...

இருவரும் அங்கே சென்றனர்‌...


            தொடரும்.........

# நானிஷா.....