அவள் - 20 (இறுதி பாகம் )

குமரேசன் ராஜபாண்டி யை பார்த்து "மாமா ரஞ்சனிக்கு ஒரு வரன் வந்து இருக்கு... நல்ல இடம்..."என்று பேசி கொண்டே ராஜபாண்டியை உள்ளே அழைத்து செல்ல...

குமரேசன் தலை மறைய...

ஜனனி : டேய் திரவி என்ன டா ரொம்ப பேசுற...என்ன சொன்ன அந்த தேவாவுக்கு கல்யாணமா என்னைய வேணாம் னு சொல்லிட்டு வேற ஒருத்தி ய கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்துருவானா...

குமுதவல்லி ஜனனி 👋👋👋 அறைந்தார்...

ஜனனி : "அம்மா..."என்று கத்த...

குமுதவல்லி : பேசாத... சத்தம் வந்துச்சு... நா பொல்லாதவளா ஆகிடுவேன்... என் தம்பி சொன்ன மாதிரி என் வளர்ப்பு தான் சரி இல்ல... 

குமரேசன் : "இத நீ முன்னவே பண்ணி இருக்கனும்... இப்ப ரொம்ப தாமதம்... ரொம்ப முத்தி போச்சு... ஒன்னும் பண்ண முடியாது..."என்று அங்கே வர...

குமுதவல்லி : "தப்பு பண்ணிட்டேன் தம்பி..."என்று கண் கலங்க...

குமரேசன் : கை மீறி போயிடுச்சு... 

குமுதவல்லி : என்ன தம்பி பண்றது...

குமரேசன் ராஜபாண்டி யை‌ பார்க்க...

ராஜபாண்டி கோவமாக "இந்த கழுதைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி அனுப்பி வைக்கனும்... அப்போ தான் அவளுக்கு புரியும்..."என்று சொல்ல...

திரவியம் : ம்ப்ச் என்ன பா பேசுறீங்க... அந்த பையன் பாவம் இல்லையா...

சிவாக்கு சிரிப்பு வர... வாயை மூடிக்கு கொண்டு சிரிப்பை அடக்கி கொண்டான்...

யோகநாதன் : "அது எப்படி பா முடியும்... பெரியவ இருக்கும் போது..."என்று இழுக்க...

ராஜபாண்டி : அப்பா பெரியவளுக்கு நல்ல இடம் அமைஞ்சு இருக்கு...நாளைக்கு வர சொல்லி குமரேசன் பேசி இருக்கான்... கையோட அந்த கழுதைக்கும் ஒரு பையனை பாத்து முடிச்சு அனுப்பனும்...

திரவியம் : ஏன் இந்த விஷ பரீட்சை... இவளால நம்ம நாறி போய் இருக்குறது பத்தாதா...ஒரு குடும்பத்தை கெடுத்த பாவம் நமக்கு எதுக்கு... 

சிவா : "டேய் திரவியா... முடியல டா..."என்று சிரிப்பை அடக்க முடியாமல் கேட்க...

திரவியம் : சிவா அண்ணா உண்மைய தானே சொன்னேன்... 

சிவா : அது என்னமோ உண்மைய தான்... இருந்தாலும் நீ சொல்லும் போது சிரிப்பு தான் வருது...

ஜனனி : "வரும் சிரிப்பு வரும்...என்னைய பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது...உங்க வேலைய பார்த்துக்கிட்டு போங்க டா... என்னைய குறை‌ சொல்லிட்டு வரிங்க..."என்று கத்த...

குமரேசன் : "ஜனனி... அடுத்தவங்க சொல்லும் போது கூட அவ்ளோ வா தெரியல... இப்ப என் கண்ணால பாக்கும் போது தான் தெரியுது... நா இருக்கும் போதே இப்படி பேசுறீயே... அப்போ..."என்று முறைத்து கொண்டு "திரவியம் சொல்றது தான் சரி... எக்கேடோ கெட்டு போ னு தண்ணி தெளிச்சு விட்டா தான்‌... இவ அடங்குவா...டேய் திரவியம் நீ எடுத்த முடிவு தான் டா சரி..."என்று கடுகடுக்க...

சிவா சிரித்து கொண்டே "யோவ் மாமா நீ என்ன இதுக்கே இவ்ளோ tension ஆகுற... இது வெறும் sample தான்... Main picture ஹ இன்னும் பாக்கல ல... இந்த சின்ன விசயத்துக்கு போய் இப்படி கத்துற.. இது எல்லாம் எங்களுக்கு சும்மா எறும்பு கடிச்சு மாதிரி..."என்று சொல்ல...

குமரேசன் : "இவ இதை பேசுறதுக்கே எனக்கு அப்படி ஒரு கோவம் வருது.‌.. இதையே நீ சின்ன விசயம் னு சொல்றனா..."என்று இழுக்க

சிவா : இழுக்காதே மாமா... நீ நினைக்கிறது தான்...இவ இதுக்கு மேல படு கேவலமா பேசுவா...

குமரேசன் பெருமூச்சு விட்டு "டேய் திரவியம் நா உன் கிட்ட பல தடவ சொல்லி இருக்கேன்... வீட்டுக்கு ஒத்த ஆம்பள பிள்ளை தனிக்குடித்தனம் எதுவும் போயிடாத டா னு... ஆனா இப்ப தானே சொல்றேன்‌ டா‌.. நீ இவங்களை ஒதுக்கி வச்சா மட்டும் பத்தாது... தனிக்குடித்தனம் போயிட்டு டா..."என்று சொல்ல...

திரவியம் :"மாமா..."என்று 😧😧😧 அதிர்ச்சியாக பார்க்க...

குமரேசன் : அப்போ சொன்னதை எல்லாம் கேட்ட... இப்ப சொல்றதையும் கேளு டா‌...அந்த புள்ளையா கூட்டிட்டு வேறயா போ டா... நீ நிம்மதியா சந்தோஷமா இருக்கனும் னு நினைச்சா...

திரவியம் : அய்யோ மாமா... அது இல்ல... இதுக்கு நானே ஒத்துக்கிட்டாலும் நிலா ஒத்துக்க மாட்டா... இப்ப நா இவங்களை ஒதுக்கி வச்சதுக்கே என்னைய என்ன சொல்ல போறாளோ னு தெரியல... இதுல தனி குடித்தனம் னு சொன்னே அவ்ளோ தான்...

குமரேசன் : என்ன டா பயப்படுற...

சிவா : திரவியா சொல்றது சரி தான் மாமா... நிலாவுக்கு இது பிடிக்காது... எந்த ஒரு காரணத்தை கொண்டும் குடும்பம் பிரிச்சு போறத அவ ஏத்துக்க மாட்டா...

குமரேசன் : எப்படி இவ்ளோ நம்பிக்கை யா சொல்ற...

சிவா : "கொஞ்சம் இருங்க..."என்று நிலா துளசி இருக்கும் அறை கதவை தட்ட...

துளசி திறந்தாள்...

துளசி : என்ன மாமா‌‌...

சிவா : ரெண்டு பேரும் வெளிய வாங்க...

துளசி : ஏன் என்ன ஆச்சு..‌

சிவா : வா னு சொன்னேன்...

துளசி : "நிலா வா..."என்று அழைக்க...

இருவரும் வெளியே வந்தனர்...

சிவா நிலா வை பார்த்து "நிலா நீங்க வேணும் னா தனியா போயிடுறீங்களா..."என்று கேட்க..

நிலா : சிவா மாமா... என்ன பேசுறீங்க நீங்க‌... வாய்ப்பே இல்ல... இன்னொரு தடவ இது மாதிரி பேசாதீங்க... கனவுல கூட இப்படி எல்லாம் நினைச்சு பார்க்காதீங்க...

துளசி : ஏன் மாமா உனக்கு இந்த வேலை... ஆகுற காரியத்தை பேசுனாலும் பரவா இல்லை... வெட்டி பேச்சு எதுக்கு...

சிவா குமரேசனை பார்க்க...

குமரேசன் : உன் பார்வையிலே புரியுது... நா சொன்னேன்லங்குற... அப்படி தானே‌‌...

சிவா : ஆமா...

குமரேசன் : வேற என்ன தான் பண்றது...

சிவா : அது தான் எனக்கும் புரியல...

திரவியம் : எதுவும் யோசிக்க வேணாம்... நா சொன்னது தான்... இதுக்கு மேலையும் யாரும் இத பத்தி பேச வேணாம்... மாமா இதோட விடுங்க... இதுக்கு மேல ஏதாவது நடந்தா அப்போ பாத்துக்கலாம்...

குமரேசன் பெருமூச்சு விட்டு "சரி திரவியம்... நிலா வ பாத்துக்கோ... இனிமேலாவது அவ சந்தோஷமா இருக்கனும்... பாத்துக்கோ டா... யாராவது ஏதாவது பேசுனா யோசிக்காத... அப்போ உனக்கு என்ன தோணுதோ... அப்படியே பண்ணிடு... யாரு என்ன கேட்குறாங்க னு நானும் பாக்குறேன்..."என்று ஜனனியை முறைத்து ரஞ்சனி அருகில் சென்று "ரஞ்சனி நாளைக்கி உன்னையே பொண்ணு பாக்க வாரங்க... வேலைக்கு leave சொல்லிடு..."என்று சொல்ல...

ரஞ்சனி தலையை ஆட்ட...

குமரேசன் : என்னடா மாமா ஒரு வார்த்தை கூட கேட்கமா பண்றாரே னு கோவிச்சிக்கிட்டியா...

ரஞ்சனி : ச... ச இல்ல மாமா... 

நீங்க என்ன எங்களுக்கு கெட்டதா நினைப்பீங்க... நீங்க ஒரு பையனை பாத்து உனக்கு தான் னு முடிவு பண்ணிட்டு வந்துட்டேன் னு சொன்னா கூட நா கோவப்பட மாட்டேன் மாமா... நாங்க நல்லா இருக்கனும் னு நீங்க நல்ல பையனா தானே பாத்து இருப்பீங்க...

குமரேசன் : "ரொம்ப சந்தோஷம் ரஞ்சனி..."என்று சிவா வை பார்த்து "சிவா வர்றவங்களுக்கு ஸ்வீட் காரம் எல்லாம் வாங்கனும்... நீ தான் டா பாத்துக்கணும்... வர்றங்களுக்கு எந்த குறையும் இருக்க கூடாது..."என்று சொல்ல...

சிவா : சரி மாமா நா பாத்துக்குறேன்...

திரவியம் : நா பாத்துக்கிறேன் மாமா...

குமரேசன் : இல்ல நீ நிலா கூடவே இரு... இப்ப நீ அவ கூட தான் இருக்கனும்...

துளசி : டேய் திரவி சித்தப்பா தான் சொல்றாரு ல... கம்மு னு இரு டா...

குமரேசன் : "சரி நாளைக்கி எல்லாம் ready பண்ணிருங்க..."என்று ஜனனி யை முறைத்தவாறு சொல்ல...

சிவா துளசியை அழைத்து கொண்டு செல்ல... அனைவரும் அங்கே இருந்து நகர‌...

நிலா அங்கேயே நிற்க... திரவியம் அவள் கையை பிடித்து "வா மா..."என்று அழைத்து சென்றான்...

தனித்து விடப்பட்ட ஜனனி கோவமாக வெளியே வந்து திண்னையில் அமர்ந்தாள்...

நடுநிசி 12 மணி...

உறக்காமல் விழித்திருந்த திரவியம் தன்னை அணைத்து கொண்டு தூங்கிய நிலாவில் தலையை வருடி கொண்டே உறங்கி போனான்...

காலை 7 மணி...

தன் முகத்தில் அடித்து வெளிச்சத்தில் கண் விழித்தாள் நிலா...

மணியை பார்த்து பதறி அடித்து எழ...

திரவியம் cup உடன் உள்ளே நுழைந்தான்...

நிலா : ஏங்க என்னைய எழுப்பி விட்டுருக்கலாம் ல... மணிய பாருங்க... அய்யோ போச்சு... பால் கறக்கல...

திரவியம் : அது எல்லாம் கறந்தாச்சு...

நிலா : யாரு பண்ணா...

திரவியம் : சொன்னா shock ஆகிருவ...ஜனனி...

நிலா எதுவும் பேசாமல் காபியை குடித்து விட்டு குளித்து விட்டு வந்தாள்...

திரவியம் : நா சொன்னது உனக்கு shock ஹ இல்லையா...

நிலா : "இல்ல..."என்று சேலை கட்டி கொண்டு இருந்தாள்...

திரவியம் : அப்புறம் வாசலை பெருக்கி சாதம் வடிச்சு குழம்பு விச்சுட்டா... 

நிலா : ம்ம்ம்...

திரவியம் : என்ன எந்த reaction ம் இல்ல...

நிலா : என்னங்க அவ கண்டிப்பா மாறிருவா னு தெரியும்... 

திரவியம் : பார்ரா... சரி வா சாப்லாம்...

நிலா : ஜனனி‌ என்ன சமைச்சா...

திரவியம் : அவ சமைச்சத‌ யாரு சாப்டுறேன் னு சொன்னது... துளசி சமைச்சு வச்சு இருக்கா... உன்னையே கூட்டிட்டு வர‌ சொன்னா...

நிலா : ஏங்க வீட்டுல தான் சமைச்சு இருக்கே...

திரவியம் : நிலா நா நேத்தே சொல்லிட்டேன்...

துளசி வேகமாக உள்ளே வந்து "அடியே என்ன பண்ற... நானும் நீ வருவ வருவ னு‌ பாத்துக்கிட்டே இருக்கேன்... இங்கேயே என்ன பண்ற..."என்று கேட்க...

நிலா : உனக்கு எதுக்கு இந்த வேலை...

துளசி : எனக்கு என்ன... நா போய் என் வீட்டுக்காரரை அனுப்பி வைக்கிறேன்...

நிலா : அய்யய்யோ வேணாம் நா வரேன்...‌சிவா மாமா வந்தா அவ்ளோ தான்...

துளசி :"அஃது..." என்று செல்ல...

திரவியம் நிலா வை அழைத்து கொண்டு வெளியே வர...‌ ஜனனி வீட்டை பெருக்கி கொண்டு இருந்தாள்...

திரவியம் : நிலா போலாமா...

நிலா : "ம்ம்ம்..."என்று நகர...

திரவியம் : "நிலா இரு phone எடுத்துட்டு வரேன்..."என்று உள்ளே செல்ல...

ஜனனி : அண்ணி...

நிலா திரும்பாமல் அப்படியே நிற்க...

ஜனனி : என்னைய‌‌ மன்னிச்சுருங்க... தப்பு பண்ணிட்டேன்... எனக்கு உங்க மேல் கோவம் இருந்தது உண்மை தான்... ராத்திரி யோசிச்சு பாத்தேன்... எல்லாரும் என்னைய‌ வெறுக்குறாங்க... ஆனா உங்க கிட்ட அன்பா பாசமா இருக்காங்க... அது ஏன் னு யோசிச்சேன்...

  அப்போ தான் தெரிஞ்சுச்சு... நீங்க எல்லார்‌‌ கிட்டையும் நல்ல விதமா பாசமா நடந்துக்கிட்டீங்க... ஆனா நா யாரையும்‌ மதிக்காம எதிர்த்து பேசிக்கிட்டு மரியாதை இல்லாம நடந்துக்கிட்டேன்...

   விடியற்காலை ல தான் எனக்கு புத்தி வந்துச்சு... அப்போ தெரிஞ்சுக்கிட்டேன்...

இது தான் உங்க குணம்... என்னால நடிக்க முடியாது... ஆனா முயற்சி செய்யலாம் ல... நடிக்க இல்ல மாற...

‌எல்லாரையும் மதிக்கனும்.. எதிர்த்து பேச கூடாது...‌மரியாதையா நடந்துக்கனும் னு தோணுச்சு...

திரவியம் phone காதில் வைத்து கொண்டு "ஆக மொத்ததுல பொண்ணா லட்சணமா நடந்துக்கனும்..."என்று சொல்லி கொண்டே வெளியே வந்து நிலாவை பார்த்து "வா மா போலாம்..."என்று முன்னால் செல்ல...

நிலா அமைதியாக வெளியேற...

ஜனனி : அண்ணி என்னைய மன்னிச்சுருங்க..

நிலா நின்று திரும்பி பார்த்து விட்டு சென்றாள்...

ரஞ்சனி ஜனனி தோளில் கை வைக்க...

ஜனனி : அண்ணி எதுவும் பேசல...

ரஞ்சனி : நீ பண்ணது நினைச்சு பாரு... அவங்க எதுவும் பேசல னு கவலைப்படுற...

ராஜபாண்டி : நல்ல சொல்லு மரமண்டை ல ஏறட்டும்...

ஜனனி திரும்பி பார்க்க...

ராஜபாண்டி யோகநாதன் குமுதவல்லி தெய்வானை நின்றனர்...

ஜனனி : அப்பா நா...

ராஜபாண்டி : பேசாத நாங்க சொல்லும் போது எல்லாம் காதுல வாங்காம இப்ப நா மாறிட்டேன் னு சொன்னா யாரு தான் கேட்பா...

யோகநாதன் : நீ சொல்லும் போது கூட நா நம்பல... ஆனா இப்ப நீ மன்னிப்பு கேட்கும் போது தான் நம்புனேன்...

ஜனனி தலை குனிந்து நிற்க...

ரஞ்சனி : இப்ப தலை குனிந்து ஆக போறது இல்ல... ஆனா ஒன்னு அண்ணி பேசாம போயிட்டாங்க னு நினைக்காத... அண்ணி என்னைக்குமே உன்னைய தப்பா நினைக்க மாட்டாங்க... அவங்க உன்னை மேல கோவப்பட்டா தானே மன்னிக்க...

ஜனனி ரஞ்சனிய பார்க்க...

ரஞ்சனி : வெளிய போய் பாரு...

ஜனனி வேகமாக வெளியே சென்று பார்க்க...

நிலா துளசி வீட்டு ஜன்னலில் வழியே அவளை பார்த்து சிரித்தாள்...

ஜனனி ரஞ்சனியை பார்க்க...

ரஞ்சனி : நா தான் சொன்னேன் ல...‌அண்ணி எப்பவுமே உன் மேல கோவப்பட மாட்டாங்க... அதுக்கு தான் நீ காலைல எழுந்து உடனே என் கிட்ட கேட்கவும் நா மன்னிப்பு கேளு னு சொன்னேன்...

   ஆனா நா ஒன்னு மட்டும் சொல்றேன்... நீ ராத்திரி வரைக்கும் எல்லாரையும் எதிர்த்து பேசிட்டு முறைச்சுக்கிட்டு இருந்த... ஆனா தீடீர் னு ஞானோதயம் வந்த மாதிரி நா திருந்திட்டேன்... 

  நா இனிமே எல்லார் கிட்டையும் நல்ல விதமா நடந்துக்குவேன்‌... தப்பு பண்ண மாட்டேன் னு சொன்ன... எல்லாரும் உன்னையே நம்பலாம்... எனக்கு நம்பனும் னு தோணல...

ஜனனி : இல்ல ரஞ்சனி நா உண்மையா...

ரஞ்சனி : "பேச்சை விடு... எனக்கு வேலை இருக்கு..."என்று நகர்ந்தாள்...

நிலா ஜன்னலை விட்டு நகர்ந்து திரும்ப... துளசி கையை கட்டி கொண்டு அவளை முறைத்து கொண்டு இருந்தாள்...

நிலா "என்ன.."என்பது போல் பார்க்க...

துளசி : நீ எல்லாம் எவ்ளோ பட்டாலும் திருத்த மாட்ட ல... 

நிலா : அக்கா மன்னிப்பு னு கேட்டதுக்கு அப்புறம் ஒதுக்கி வைச்சா நல்லா இருக்காது கா... 

துளசி : உண்மையா மனசார மன்னிப்பு கேட்டு இருப்பா னு நினைக்கிறீயா...

நிலா : இல்லை னு தான் தோணுது... 

துளசி : அப்புறம் ஏன் இப்படி...

நிலா : அவ சின்ன பொண்ணு கா... அவ வாழ்க்கையில் பாக்க இன்னும் எவ்வளவோ இருக்கு... போக போக தெரியும்...

சிவா : "இந்த பூவின் வாசம் 

         புரியும்..."என்று பாட...

சிவா தோளில் கை போட்டு திரவியம் நிற்க...

சிவா : அம்மா கொழுந்தியாளே பசிக்கிறது சாப்டலாமா...

நிலா : "அச்சச்சோ வாங்க மாமா..."என்று முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகி கொண்டு நகர...

துளசி அவள் கையை பிடித்து நிறுத்தி "நீ போய் உட்காரு...‌ நா எடுத்து வைக்கிறேன்..."என்று சொல்லி சென்றாள்...

திரவியம் : madam வரிங்களா...

நிலா அமைதியாக வந்து அமர...

சிவா : எல்லாத்தையும் நானும் பாத்தேன்... அவ என்ன‌ மனசு ல நினைச்சுக்கிட்டு இப்படி பண்ணா னு தெரியல... அவ மன்னிப்பு கேட்டும் சிரிப்பை கொடுத்து இருக்க... பின்னாடி என்ன நடக்குமோ அது தெரியல... ஆனா ஒன்னு மட்டும் தெரியுது...

நிலா : என்ன மாமா...

சிவா : உன்‌ நல்ல மனசுக்கு நீ எப்பவும் நல்லா இருப்ப... உன்னைய இருக்குறது ரொம்ப கஷ்டம்...

துளசி சாப்பாடு எடுத்து வந்து பரிமாற... அனைவரும் சாப்பிடு இருவரும் வீடு திரும்ப...

நிலா முகத்தில் சந்தோஷத்துடன் வீட்டிற்க்குள் நுழைந்தாள்...

(அவள் வாழ்க்கையில் இனி சந்தோஷம் மட்டுமே... ஜனனி திருந்தினாளோ இல்லையோ அது அவளுக்கு மட்டுமே தெரிந்தது...)

         ....முற்றும்.....

# நானிஷா....

உங்களோட சில வார்த்தை பேச வேண்டும்... அடுத்த பகுதி சந்திக்கிறேன்...

  ‌