வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 94

உதய் வீட்டுல இருந்து வந்த கதிர் வயல்க்கு உரம் வாங்க டவுன்க்கு வந்துட்டான், வந்த வேலை முடிஞ்சி வீட்டுக்கு போற வழில மிரு படிக்குற காலேஜ் வாசல்ல தமிழ்மாறன், மிருனாழினி, நிவின், யாதவ் நின்னு பேசுறதை பார்த்தான்...

மிருனாழினிய காலேஜ்ல விட வந்த தமிழ் எப்போதும் நிவின், யாதவ் கூட பேசிட்டு அவங்க மூனு பேரும் உள்ள போன பிறகு தான் வீட்டுக்கு போவான்...

இன்னைக்கும் அவங்க அப்படி பேசிட்டு இருக்கும் போது கதிர் அவங்களை பார்த்துட்டான், நாலு பேரும் சிரிச்சி பேசிட்டு இருக்கவும் அவனையும் மறந்து அவங்களையே பார்த்துட்டு இருந்தான்...

கதிர் எதேச்சையா திரும்பும் போது தான் அவனை மாதிரியே இன்னும் இரண்டு பேரு வெவ்வேறு இடத்துல நின்னு அவங்க நாலு பேரையும் பார்த்துட்டு இருந்ததை கவனிச்சான்...

அவங்களை பார்த்ததும் கதிர்க்கு டவுட் வந்துட்டு அவங்க இரண்டு பேரையும் பார்த்ததுமே கண்டு புடிச்சிட்டான் அவங்க இந்த ஊர் இல்லனு பார்க்க ரவுடி மாதிரியும் தெரிஞ்சாங்க...

தமிழ்மாறன் : மூனு பேரும் காலேஜ் உள்ள போனதுமே அவன் பைக் எடுத்துட்டு கிளம்பிட்டான்...

வேற வேற இடத்துல நின்ன அந்த இரண்டு பேருமே தமிழ் போனதும் ஒன்னா ஒரே பைக்ல அவனை பின்தொடர ஆரம்பிச்சிட்டாங்க...

கதிர்க்கு டவுட் வந்து அவனும் அவங்க பின்னாடியே போனான்...

தமிழ பின்தொடர்ந்து போன இரண்டு பேருமே பைக்ல போகும் போது யார் கூடவோ ஃபோன்ல பேசிட்டே போனாங்க...

சரியா மெயின் ரோட்ல இருந்து கிராமத்துக்கு போற வழில வண்டி திரும்புனதுமே அந்த வண்டி தமிழ் வண்டிய இடிக்க போனது, அதை கவனிச்ச கதிர் விடாம ஹாரன் அடிச்சான்...

ஓரமா போகும் போதே யார் இப்படி ஹாரன் அடிக்குறாங்கனு தெரிஞ்சிக்க தமிழ் திரும்பும் போது தான் அவனை இடிக்குறா மாதிரி வந்த வண்டிய கவனிச்சான் உடனே விலகலாம்னு நினைக்குற நேரம் இரண்டு வண்டியும் மோதிகிட்டு தமிழ் ஒரு பக்கமும் அந்த ரவுடி பசங்க ஒருபக்கமும் விழுந்தாங்க...

கதிரேசன் : ( வண்டிய நிறுத்திட்டு வந்து அந்த இரண்டு ரவுடி பசங்களையும் போட்டு அடிச்சான்) டேய் யார் டா நீங்க எந்த ஊர்...

தமிழ்மாறன் : ( அவனால எழுந்திரிக்க கூட முடியல கால் முட்டில நல்ல அடி) கதிர் டேய் அடிக்காத அவனுங்க எதோ தெரியாம இடிச்சிருப்பாங்க...

கதிர் விடாம அவங்களை அடிச்சான், ஆனா அவங்க இரண்டு பேரும் கதிரை தள்ளி விட்டுட்டு வண்டிய எடுத்துட்டு கிளம்பிட்டாங்க, அவசரமா கிளம்பும் போது ஒருத்தனோட ஃபோன் கீழ விழுந்துட்டு அதை கதிர் எடுத்து வச்சிகிட்டான்...

தமிழ்மாறன் : ஏன் அவங்களை அடிச்ச, தெரியாம இடிச்சிருப்பாங்க அதுக்கு இப்படி தான் அடிப்பியா...

கதிரேசன் : தெரியாம இடிக்குறவன் தான் காலேஜ்ல இருந்து ஃபாலோ பண்ணிட்டு வந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடமா பார்த்து இடிக்குறானுங்களா...

தமிழ்மாறன் : தெரிஞ்சே பண்ணாங்களா யார் அவங்க, இதுக்கு முன்னாடி பார்த்தது கூட இல்லயே...

கதிரேசன் : அதை பத்தி அப்பறம் பேசிக்கலாம் முதல்ல எழுந்திரி ( தமிழ் கை புடிச்சி தூக்கி விட்டான், அப்பறம் அவன் வண்டியயும் நிமிர்த்தி நிக்க வச்சான்)

தமிழ்மாறன் : ரொம்ப நன்றி கதிர் எதிரியா இருந்தாலும் உதவி பண்ணதுக்கு...

கதிரேசன் : என் மச்சானோட நண்பனாச்சேனு தான் உதவி பண்னேன் அதுக்காக உன்னை புடிக்கும்னு அர்த்தம் இல்ல ( முகத்தை திருப்பிகிட்டு சொன்னான்)

தமிழ்மாறன் : 😄 பரவாயில்ல ரொம்ப நன்றி ( அவன் வண்டி கிட்ட நொண்டி நொண்டி போனான், ஆனா வண்டில ஏறி அவனால ட்ரைவ் பண்ண முடியும்னு நம்பிக்கை இல்ல)

முட்டில இருந்து கசிஞ்ச ரத்தம் தமிழ் கட்டிருந்த வேஷ்டியவே நனைச்சி இருந்தது...

கதிரேசன் : ( அவனுக்கே தமிழ பார்க்க பாவமா இருந்தது ) எதாவது உதவி வேணுமா...

தமிழ்மாறன் : உதய்க்கு ஃபோன் பண்ணி வர சொல்லு என்னால வண்டி ஓட்ட முடியாது, நானும் ஃபோன் கொண்டு வரல...

கதிரேசன் : வா நானே அழைச்சிட்டு போறேன்...

தமிழ்மாறன் : வேண்டா உனக்கு ஏன் வீண் சிரமம்...

கதிரேசன் : அதெல்லாம் ஒன்னும் இல்ல வா...

தமிழ் பைக்க ஓரமா நிறுத்தி லாக் பண்ணி சாவி எடுத்துகிட்டான்...

தமிழ பத்திரமா பைக் பின்பக்கம் உட்காரவச்சி அவனும் ஏறி உட்கார்ந்து ஓட்டுனான், நேரா ஹாஸ்பிட்டல் போய் காயத்துக்கு கட்டு போட்டு இன்ஜக்ஷன் போட்ட பிறகு மருந்தும் மாத்திரையும் வாங்கிகிட்டு உதய் வீட்டுக்கு அழைச்சிட்டு போனான்...

காலைல போன கதிர் வருவான் அவனை வம்பு பண்ணலாம்னு உதய் வாசல்லயே உட்கார்ந்து இருந்தவன் கதிர் கூட தமிழும் காலுல கட்டோட வரவும் பதறி போய் ஓடி வந்தான்...

உதய் : தமிழ் என்ன டா ஆச்சி ஏன் இவ்ளோ பெரிய கட்டு என்ன நடந்தது...

கதிரேசன் : முதல்ல அவன் கை புடிச்சி கீழ இறக்கி விடு அப்பறம் எதா இருந்தாலும் கேட்டுக்க...

உதய் : ச்ச ஆமா தமிழ் வா டா ( அவன் கை புடிச்சி கீழ இறக்குனான்)

தமிழ்மாறன் : உதய் ஒன்னும் இல்ல டா வண்டில இருந்து கீழ விழுந்துட்டேன் அவ்ளோ தான்...

உதய் : பார்த்து வந்துருக்கலாம்ல டா ( உள்ள அழைச்சிட்டு போனான்)

சீதா : அச்சோ தமிழ் என்ன ஆச்சி..

தமிழ்மாறன் : ஒன்னும் இல்ல அத்தை வண்டில இருந்து கீழ விழுந்துட்டேன் அவ்ளோ தான்...

கனிமொழி : ( ஓடி போய் தண்ணி கொண்டு வந்து குடுத்தா) இந்தாங்க அண்ணா தண்ணி குடிங்க...

கதிரேசன் : கனி சாப்பிட எதாவது கொண்டு வந்து குடு மாத்திரை குடுத்துருக்காங்க சாப்பிட்டு முழுங்கட்டும்...

தமிழ்மாறன் : வேண்டா வீட்டுலயே சாப்பிட்டுட்டேன் இப்போ வேண்டா...

சீதா : அப்போ இரு பால் கொண்டு வரேன்...

பால் கொண்டு வந்து குடுத்ததும் பால் குடிச்சிட்டு மாத்திரை போட்டான் தமிழ்...

உதய் : சரி கொஞ்ச நேரம் ரூம்ல வந்து தூங்கு டா நான் வீட்டுக்கு கால் பண்ணி கார் கொண்டு வர சொல்லுறேன் இந்த கால வச்சிட்டு இனிமேல் வண்டில உன்னால உட்கார முடியாது...

தமிழ்மாறன் : சரி டா...

உதய், கதிர் இரண்டு பேருமே தமிழ உதய் ரூம்ல அழைச்சிட்டு போய் உட்காரவச்சாங்க...

உதய் : என்ன நடந்தது கதிர், தமிழ் விழுந்தப்ப நீ அங்க தான் இருந்தியா...

கதிரேசன் : ( நடந்ததை சொன்னான்) எனக்கு என்னுமோ அவனுங்க வேணும்னே பண்ணா மாதிரி தான் தெரியுது நான் மட்டும் அங்க வரலனா இடிச்சி கீழ தள்ளி விட்டு கை, கால உடைச்சிருப்பானுங்க போல...

உதய் : உனக்கு யாரு டா அப்படிபட்ட எதிரி இருக்கா...

தமிழ்மாறன் : தெரியலையே யாரு இப்படிலாம் பண்ணுறாங்கனு...

கதிரேசன் : இந்தா மாத்திரை, மருந்து அவன் வீட்டுக்கு போகும் போது மறக்காம கொண்டு போ ( சொல்லிட்டு வெளில போக போனான்)

உதய் : ( அவன் கைய புடிச்சிகிட்டான்) ரொம்ப நன்றி கதிர் அவனுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு...

கதிரேசன் : எதோ ரோட்டுல கிடந்தானேனு கூப்பிட்டு வந்தேன் அதுக்குனு ஆளாளுக்கு நன்றி சொல்லாதீங்க...

தமிழ்மாறன் : 😄😄😄 ( கொழுப்ப பார்த்தியா உதய்ய வர சொன்னதுக்கு நானே அழைச்சிட்டு போறனு சொல்லி எப்படிலாம் பேசுறான்)

உதய் : ஆஹான் நீங்க இல்லனா தமிழால வந்துருக்க முடியாதா...

கதிரேசன் : ஆமா வந்துருக்க முடியாது நொண்டி நொண்டி நடந்தான் நான் தான் போனா போகுதேனு அழைசிட்டு வந்தேன்...

உதய் : ஓவரா பேசுறவங்க வாய அடைக்க என்கிட்ட ஒரு நல்ல வழி இருக்கு கொஞ்சம் தனியா வா அடைச்சிடலாம் ( அவன் உதட்டை தடவி பார்த்துட்டே சொன்னான்)

கதிரேசன் : ( காலைல உதய் கடிக்குறனு சொல்லி கிட்ட இழுத்தது நியாபகம் வரவும் இவனுக்கு உடல் சிலிர்த்துடுச்சி ) 😠😠😠 உதய்ய பார்த்து முறைச்சான்...

நான் கிளம்புறேன் ( வெளில போய்ட்டு திரும்ப உள்ள வந்தான்) இது அவங்க இரண்டு பேர்ல ஒருத்தனோட ஃபோன் ( பாக்கேட்ல இருந்து எடுத்து உதய் கைல குடுத்தான்) இதை வச்சி எதாவது கண்டுபுடிக்க முடியுமானு பாரு, அப்பறம் அவனை எதுக்கும் ஜாக்கிரதையா இருக்க சொல்லு...

சொல்லிட்டு வெளில போனவன் அவங்க அம்மாவ அழைச்சிட்டு வீட்டுக்கு போய்ட்டான்...

உதய் : அந்த மொபைல்ல ஆன் பண்ணி பார்க்க ஆரம்பிச்சான், அதுல தமிழ இடிக்குறதுக்கு முன்னாடி கால் வந்த நம்பர்க்கு கால் பண்ணான் அந்த நம்பர் உபயோகத்தில் இல்லனு வந்தது...

வேற எந்த நம்பரும் இல்ல ஒரே நம்பர்ல இருந்து தான் கால் வந்ததும் போனதும் இருந்தது அதுவும் இப்போ உபயோகத்தில் இல்லனு வரவும் வேற என்ன பண்ணுறதுனு தெரியல...

உதய் : வேற எந்த குழுவும் கிடைக்கல டா தமிழ் பேசாம போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்துடலாமா...

தமிழ்மாறன் : அதெல்லாம் வேண்டா உதய் நாளைக்கு அர்ஜுன் வீட்டுல இருந்து பாப்பாவ பொண்ணு கேட்டு வராங்க இந்த நேரத்துல இப்படி போலீஸ் அது இதுனு அழைய முடியாது...

அப்பறம் எல்லார் கிட்டயும் பைக்ல இருந்து விழுந்தா மாதிரியே சொல்லிடு, நடந்த விஷயம் நம்ம மூனு பேரை தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டாம்...

உதய் : ஏன்டா சொல்ல வேண்டானு சொல்லுற...

தமிழ்மாறன் : எல்லாரும் பயந்துவாங்க டா நமக்கே யார் பண்ணாங்க என்னனு தெரியாம அவங்கள்ட என்னனு சொல்லுறது அதான் வேண்டானு சொல்லுறேன்...

உதய் : இருந்தாலும் இதை இப்படியே விட்டுட முடியாதே...

தமிழ்மாறன் : எதிர்பாராத நேரத்துல இப்படி நடந்துடுச்சி இனிமேல் நான் ஜாக்கிரதையா இருந்துப்பேன் அதனால கவலை படாத...

உதய் : சரி டா...

அப்பறம் தமிழ் வீட்டுக்கு கால் பண்ணி கார் வர வச்சி உதய்யும் அவன் கூடவே போய் அவனை வீட்டுல விட்டுட்டு தமிழ் விழுந்த இடத்துக்கு வந்து வேற எதாவது குழு கிடைக்குதானு பார்த்தான், ஒன்னும் கிடைக்காததால தமிழ் பைக் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பிட்டான்...

தமிழ் வீட்டுக்கு வந்ததுமே எல்லாரும் பயந்துட்டாங்க தமிழ்தான் பைக்ல இருந்து விழுந்துட்டேன் சின்ன அடி தானு சொல்லி சமாளிச்சிட்டான்...

அன்னைக்கு ஈவ்னிங் காலேஜ் விடுற டைம் உதய் மிருவ அழைச்சிட்டு போக காலேஜ் வந்துருந்தான்...

மிருனாழினி : அண்ணா அவர் எங்க ( தேடுனா)

உதய் : அது அது அவனுக்கு ( தயங்குனான்)

மிருனாழினி : அண்ணா அவருக்கு  ஒன்னும் இல்ல தான நல்லா இருக்காருல ( பதட்டமா கேட்டா)

உதய் : ஏன் மா ஏன் அப்படி கேட்குற...

நிவின் : மாமா காலைல நல்லா தான் எங்க கூட வந்தா க்ளாஸ்க்கு போனதுல இருந்து மனசு சரியில்ல மாறனை பார்க்கனும் நான் வீட்டுக்கு போறேனு ஒரே அடம்...

யாதவ் : ஆமா மாமா இவளை சமாளிக்கவே முடியல டைம் கிடைக்கும் போது எல்லாம் தமிழ் அண்ணா நம்பர்க்கு கால் பண்ணிட்டே இருந்தா ஆனா அவர் எடுக்கல...

நிவின் : நாங்க தான் ஈவ்னிங் அண்ணா வந்ததும் பார்த்துக்கலாம்னு சொன்னோம் ஆனா நீங்க வந்துருக்கீங்க...

யாதவ் : இப்போ கூட நாம பேசுறதை கேட்காம அவ பாட்டுக்கு கால் பண்ணிட்டு இருக்கா பாருங்க...

உதய் : ( மிரு கைல உள்ள ஃபோன் வாங்குனான்) மிரு என்ன மா வீட்டுக்கு தான போக போறோம் வா அங்க போய் அவனை பார்த்துக்க...

மிருனாழினி : இல்ல அண்ணா எனக்கு என்னமோ பயமா இருக்கு அவருக்கு கால் பண்ணா எடுக்க மாட்டாரு வீட்டுக்கு கால் பண்ணா அவங்களும் அவர் கிட்ட குடுக்காம அவன் வேலையா இருக்கானு சொல்லுறாங்க...

உதய் : ( அவன் மாத்திரை போட்டு தூங்குறான் அதான் எடுக்கல போல) அவனுக்கு வயல்ல வேலை அதான் எடுத்துருக்க மாட்டான் நீ இங்க பேசி டைம் வேஸ்ட் பண்ணாம என்கூட வந்தா அவனை போய் பார்க்கலாம்...

மிருனாழினி : ஆமா அண்ணா சீக்கிரம் வாங்க, டேய் பாய் பார்த்து ஹாஸ்ட்டல் போய்டுங்க ( பைக் கிட்ட போய்ட்டா)

நிவின் : மாமா மிரு பயப்பிடுறா மாதிரி அண்ணனுக்கு ஒன்னும் இல்லயே...

உதய் : அவ பயம் உண்மை தான் டா தமிழ் காலைல பைக்ல இருந்து கீழ விழுந்து காலுல அடிப்பட்டுட்டு அதான் அவளுக்கு மனசுக்கு கஷ்டமா இருந்துருக்கும் போல இப்போ சொன்னா பயந்துடுவா நான் அவளை அழைச்சிட்டு போறேன் நீங்க போங்க...

மிருனாழினி : அண்ணா டைம் ஆகுது வாங்க போலாம் ( பைக் கிட்ட நின்னு கத்துனா)

யாதவ் : மாமா நாங்களும் பார்க்க வரவா...

உதய் : வேண்டா டா சின்ன அடி தான் பயப்பிடாதீங்க நான் கால் பண்ணி அவனை உங்க கூட பேச வைக்குறேன் இப்போ நீங்க ஹாஸ்ட்டல் போங்க நாளைக்கு பார்த்துக்கலாம்...

நிவின், யாதவ் : சரி மாமா ( அவங்க போய்ட்டாங்க)

உதய் : பைக் ஸ்டார்ட் பண்ணான்...

மிருனாழினி : ( ஏறி உட்கார்ந்தா) சீக்கிரம் போங்க அண்ணா...

உதய் : கொஞ்சம் ஃபாஸ்ட்டா போனான்...

மிருனாழினி : டென்சனாவே இருந்தா...

உதய் : கண்ணாடி வழியா அவளை தான் பார்த்தான் ( m.v ) ஒன்னும் இல்லனு சொல்லும் போதே டென்சனா இருக்கா அவன் நிலைமைய நேர்ல பார்த்தா என்னா பண்ணுவாளோ...

உதய் வீட்டு முன்னாடி பைக் நிறுத்துனதும் மிருனாழினி இறங்கி உள்ள ஓடுனா...

தொடரும்...

# Sandhiya.