வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 96

அர்ஜுன், அஞ்சலி கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் டைம் இருக்குறதால எந்த டென்சனும் இல்லாம பொறுமையா கல்யாண வேலை பார்க்க ஆரம்பிச்சாங்க...

அர்ஜுன், அஞ்சலி அடிக்கடி கால் பண்ணி பேசிக்குறது சேட் பண்ணுறதுனு அவங்க லவ் ஒருபக்கம் நல்லாவே போய்ட்டு இருந்தது...

மிரு காலேஜ்ல இறுதி ஆண்டு படிக்குற மாணவர்களை கேரளா டூர் மூனு நாள் அழைச்சிட்டு போறதா சொல்லி விருப்பம் உள்ளவங்களை பேர் குடுக்க சொல்லிருந்தாங்க...

அதை மிரு வீட்டுல வந்து சொல்லவும் எல்லாரும் அவளை டூர் போக சொன்னாங்க ஆனா அவ தமிழ பிரிஞ்சி மூனு நாள் இருக்க முடியாது போகலனு சொல்லிட்டா, மிரு போகாததால நிவின், யாதவ்வும் போகலனு சொல்லிட்டாங்க...

அன்னைக்கு நைட் ரூம்ல இருக்கும் போது தமிழ் இதை பத்தி மிரு கிட்ட பேசுனான்...

தமிழ்மாறன் : யாழினி மூனு நாள் தான ஏன் இப்படி அடம்பண்ற உன்னால நிவின், யாதவ் கூட வரலனு சொல்லுறாங்க பாரு...

மிருனாழினி : மாறன் கல்யாணத்துக்கு பிறகு நாம இதுவரை பிரிஞ்சதே இல்ல இப்போ எப்படி என்னால தனியா போக முடியும்...

தமிழ்மாறன் : யாழினி மா இது உங்களுக்கு கடைசி வருஷம் டா இதுக்கு பிறகு இதுபோல நண்பர்களோட இப்படிலாம் ஜாலியா இருக்க முடியாது அதனால போய்ட்டு வா டா...

மிருனாழினி : நீங்க இல்லாம நான் மட்டும் எப்படி தனியா போறது...

தமிழ்மாறன் : நீ காலேஜ் முடிச்சதும் நாம எல்லாரும் தனியா ஃபேமிலியா டூர் போலாம் சரியா...

மிருனாழினி : சரி...

அப்பறம் மிருனாழினி, நிவின், யாதவ் டூர் போக பேர் குடுத்து பணமும் கட்டிட்டாங்க...

டூர் போற அன்னைக்கு காலைல தமிழ் மிருனாழினிய காலேஜ் அழைச்சிட்டு போய் விட்டுட்டு மூனு பேருக்குமே செலவுக்கு பணம் குடுத்துட்டு வந்தான்...

இந்த மூனு நாள்ல மிரு எங்க போனலும் தமிழ் கூட வீடியோ கால் பண்ணி அந்த ப்ளேஸ் பத்தி சொல்லுவா, இல்லனா நார்மல் கால் பண்ணி பேசுவா...

தமிழும் மிரு இல்லாத இந்த மூனு நாளும் எதோ வெறுமையா இருக்குறா மாதிரி உணர ஆரம்பிச்சான்...

மிருனாழினி அங்க போய் இடங்களை சுத்தி பார்த்ததை விட தமிழ் கூட கால் பண்ணி பேசுன நேரங்கள் தான் அதிகம், நிவின், யாதவ் கிண்டல் பண்ணாலும் தமிழ் கூட பேசுறதை நிறுத்த மாட்டா...

தமிழ்க்கு மிருவ பிரிஞ்ச இந்த மூனு நாள்ல அவ மேல உள்ள காதல் அதிகம் ஆகி அவ காலேஜ் முடிக்காட்டியும் பரவாயில்ல அவ வந்ததும் தன் காதலை சொல்லிடனும்னு ஆசையா இருந்தான்...

டூர் முடிஞ்சி சனிக்கிழமை ஈவ்னிங் கேரளால கிளம்பி ஞாயிறு காலைல தஞ்சாவூர் வரா மாதிரி ப்ளான் பண்ணி கிளம்பிருந்தாங்க... நைட் ஃபுல்லா மிரு தூங்காம தமிழ் கூட பேசிட்டு வந்தா அவனும் மிருக்காகவே தூங்காம ரூம்ல உட்கார்ந்து பேசிட்டு இருந்தான்... நிவின், யாதவ் மிரு பக்கத்துலயே உட்கார்ந்து தூங்கிட்டு வந்தாங்க...

நிச்சயம் ஆனதால அர்ஜுன் தமிழ் வீட்டுக்கு வரதை சுத்தமா நிறுத்திட்டான் ஆனா இப்போ மிரு டூர் போய்ட்டு வரதால அர்ஜுனும் தமிழ் வீட்டுக்கு வந்துருந்தான்... பஸ் காலேஜ்க்கு வர அரை மணி நேரத்துக்கு முன்னாடியே மிரு தமிழ் கிட்ட காலேஜ் வர சொல்லிட்டு கட் பண்ணிட்டா...

தமிழும் வேற ட்ரேஸ் மாத்திட்டு அவன் புல்லட் வண்டில கிளம்பிட்டான்...

ஆனா தமிழ் காலேஜ்க்கு போற வழில அவன் பைக் பஞ்சர் ஆகிடுச்சி, டயர்ல ஆணி குத்தி இருக்கவும் யாரோ வேணும்னே பண்ணாங்கனு தெரிஞ்சி சுத்தி தேடுனான் ஆனா யாரையும் காணும்...

அப்பறம் அர்ஜுன்க்கு கால் பண்ணி கார் எடுத்துட்டு வர சொல்லிட்டு மிருக்கு கால் பண்ணி வர லேட் ஆகும் அதுவரை வெய்ட் பண்ணுங்கனு சொல்லிட்டான்...

மிருவும் நிவின், யாதவ் கூட காலேஜ்க்கு வெளில நின்னு பேசிட்டு இருந்தா... அந்த நேரம் ஒரு கார் ஃபாஸ்ட்டா வந்து அவங்க முன்னாடி நின்னது அந்த கார்ல இருந்து ஷ்யாம் இறங்குனான்...

மிருனாழினி : 😱 நீயா நீ இங்க என்ன பண்ற...

ஷ்யாம் : என்ன மிரு இத்தனை நாள் ஆள காணும் இப்போ வந்து நிக்குறானேனு பார்க்குறியா...

மிருனாழினி : நீ எங்க போனா எனக்கு என்னடா நான் ஏன் உன்னை தேட போறேன்...

ஷ்யாம் : அந்த பட்டிகாட்டானை கட்டிகிட்டாலும் உனக்கு இன்னும் திமிரு அடங்கல டி...

மிருனாழினி : டேய் என் புருஷனை காட்டான் அது இதுனு சொன்னா செருப்பு பிஞ்சிடும் ஒழுங்கா போய்டு...

ஷ்யாம் : 😠 ஏய் ( கட்டி நீட்டி அவளை அடிக்க போனான்)

நிவின், யாதவ் : மிரு முன்னாடி வந்து நின்னாங்க...

நிவின் : என்னடா எதோ பேசுறியேனு அமைதியா இருந்தா கை நீட்டுற கைய முறிச்சிடுவேன் ஜாக்கிரதை...

ஷ்யாம் : நீங்க என்னடா அவளுக்கு பாடிகார்டா...

யாதவ் : ஆமா டா அப்படியே வச்சிக்க மறியாதையா இடத்தை காலி பண்ணிடு இல்ல அடிச்சி துரத்திடுவோம்...

ஷ்யாம் : 😂😂😂 நீங்க என்னை துரத்துறீங்களா... டேய் வாங்க டா...

அவன் கூப்பிட்டதும் இன்னொரு கார்ல இருந்து 4 ரவுடி பசங்க இறங்கி வந்தாங்க...

ஷ்யாம் : நிவின், யாதவ்வ தாண்டி மிரு கிட்ட போக போனான்

நிவின்,யாதவ் மிருவ தள்ளி நிக்க வச்சிட்டு ஷ்யாம்ம போட்டு அடிச்சாங்க... அதுக்குள்ள 4 ரவுடி பசங்களும் வந்து நிவின், யாதவ்வ புடிச்சி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க...

அது விடியற்காலையா இருக்கவும் அங்க சுத்தி ஆளுங்க யாரும் இல்ல டூர் போய்ட்டு வந்தவங்களும் முன்னாடியே கிளம்பிட்டாங்க...

ஷ்யாம் : மிரு கைய புடிச்சி கார் கிட்ட இழுத்துட்டு போனான்...

மிருனாழினி : டேய் விடு டா விடு ( அவன் கைலயே அடிச்சா) மாறன் மட்டும் வந்தாருனா நீ அவ்ளோ தான்...

ஷ்யாம் : 😂😂😂 அவனா அவன் பைக் பஞ்சர் ஆகி நடு ரோட்டுல நின்னுட்டு இருப்பான்...

மிருனாழினி : விடு டா பொறுக்கி...

ஷ்யாம் : பொறுக்கியா பரவாயில்ல என்ன பேர் வேணாலும் வச்சிக்க, உனக்கு கல்யாணம் ஆகிட்டா மட்டும் சும்மா விட்ருவனு நினைச்சியா என்னைக்கா இருந்தாலும் நீ எனக்கு மட்டும் தான்...

மிருனாழினி : 😭😭😭 அவர் மட்டும் வந்தாருனா இப்படிலாம் பேச உன் உடம்புல உயிர் இருக்காது டா...

ஷ்யாம் : அவன் வந்தா பார்த்துக்கலாம்... டேய் அவனுங்களை விடுங்க அந்த தமிழ் வந்தா நான் தான் இவளை அழைச்சிட்டு போனேனு சொல்லவாது உயிரோட இருக்கட்டும்...

டேய் அந்த தமிழ் வந்தானா "  உன் பொண்டாட்டிய ஷ்யாம் கடத்திட்டு போய்ட்டானு " சொல்லுங்க...

நிவின்,யாதவ் : ரவுடிங்க அடிச்சதுல உடம்பு ஃபுல்லா காயத்தோட எழுந்திரிக்க கூட முடியாம விழுந்து கிடந்தானுங்க...

ஷ்யாம் மிருவ கார்ல ஏத்துற நேரம் மிரு அவ போட்ருந்த ஹீல்ஸ் செப்பல் வச்சி ஷ்யாம் கால மிதிச்சா, ஷ்யாம் நார்மல் செப்பல் போட்ருந்ததால அவ ஹீல்ஸ் குத்தி  நிறைய ரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சி...

ஷ்யாம் : ஆஆஆ அம்மா ( கத்திட்டே மிருவ விட்டுட்டான்)

மிரு தப்பிச்சி ஓடலாம்னு நினைக்குற நேரம் ஒரு ரவுடி அவளை புடிச்சி மயக்க மருந்து ஸ்ப்ரே அடிச்சிட்டான், மிரு அப்படியே மயங்கி விழுந்துட்டா...

ரவுடி : பாஸ் இப்போ என்ன பண்ணுறது...

ஷ்யாம் : நான் என் கார்ல ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்துடுறேன் நீங்க அதுவரை இவளை அந்த ராஜாராமன் வீட்டுல வச்சிருங்க நான் வந்த பிறகு சென்னை போய்க்கலாம், நான் அவருக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்...

ரவுடி : ஓகே பாஸ் ( அவங்க வந்த கார்ல மிருவ தூக்கி போட்டு ராஜாராமன் வீட்டுக்கு போய்ட்டாங்க)

ஷ்யாம் : அவன் கார்ல ஹாஸ்பிட்டல் போய்ட்டான்...

அவங்க போன கொஞ்ச நேரத்துலயே தமிழ், அர்ஜுன் அங்க வந்துட்டாங்க...

நிவின், யாதவ் அடிப்பட்டு இருக்குறதை பார்த்து பதறி போய் ஓடி வந்தாங்க...

தமிழ்மாறன் : டேய் என்னடா என்ன ஆச்சி உங்களுக்கு...

நிவின் : அண்ணா அந்த ஷ்யாம் மிருவ கடத்திட்டு போய்ட்டான் அண்ணா அவளை காப்பாத்துங்க...

தமிழ்மாறன் : 😱😱😱 என்ன ஷ்யாம்மா....

அர்ஜுன் : என்னடா சொல்லுறீங்க அவன் எப்படி திடீர்னு வந்தான் இத்தனை நாள் எங்க இருந்தானே தெரியாம இருந்தான்...

யாதவ் : தெரியல அர்ஜுன் சீக்கிரம் போங்க அவன் மிருவ எதாவது பண்ணிட போறான்...

தமிழ்மாறன் : அர்ஜுன் இவனுங்களை சீக்கிரம் ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போ நான் யாழினி எங்கனு பார்க்குறேன்...

நிவின் : ( தமிழ் கைய புடிச்சான்) சாரி அண்ணா எங்களால ஒன்னும் பண்ண முடியல 4 ரவுடி  இருந்தாங்க அவங்களை திருப்பி அடிக்க கூட முடியல...

தமிழ்மாறன் : யாழினிக்காக இப்படி அடிப்பட்டு கிடக்குறீங்களே டா எனக்கு கஷ்டமா இருக்கு, அர்ஜுன் யாதவ்வ தூக்கு டா...

தமிழ், அர்ஜுன் இரண்டு பேரும் நிவின், யாதவ்வ தூக்கி கார்ல படுக்க வச்சி அர்ஜுன் அவங்களை ஹாஸ்பிட்டல் கொண்டு போனான், போற வழில உதய்க்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லி தமிழ்க்கு துணையா போக சொல்லிட்டு கார் ஓட்டுனான்...

தமிழ்மாறன் : எங்க போறது யாரை கேட்குறதுனு ஒன்னும் புரியாம ரோட்ல ஓடிட்டு இருந்தான்...

மிருவோட அந்த ரவுடி பசங்க வந்த கார் ராஜாராமன் வீட்டுக்குள்ள வந்தது...

கதிர், மல்லிகா முதல் நாள் உதய் வீட்டுக்கு போனவங்க வரவே இல்ல அந்த தைரியத்துல தான் மிருவ அவர் வீட்டுக்கே வர வச்சிருந்தாரு...

ஆனா இவங்க வந்த நேரம் கதிர் பைக்கும் வீட்டுக்குள்ள வந்தது...

கதிரேசன் : காலைலயே கார்ல யார் வந்துருக்கானு இவன் பார்த்துட்டு இருக்கும் போதே மிருவ இரண்டு ரவுடி பசங்க உள்ள தூக்கிட்டு போனாங்க...

கதிரேசன் : டேய் டேய் யார் நீங்க அவளை எங்க தூக்கிட்டு போறீங்க ( கேட்டுட்டே அவங்க கிட்ட போய்ட்டான்)

ராஜாராமன் : கதிர் சும்மா இரு,  நீங்க போய் இவளை அந்த ரூம்ல படுக்க வைங்க...

மிருவ தூக்கிட்டு போய் ஒரு ரூம்ல படுக்க வச்சிட்டு வந்தாங்க...

கதிரேசன் : அப்பா என்னா நடக்குது இங்க அவ தமிழ் பொண்டாட்டி பா, அவளை ஏன் இங்க கொண்டு வந்தாங்க இவங்க எல்லாம் யாரு...

ராஜாராமன் : அந்த ஷ்யாம் இருக்கான்ல அவன் தான இவளை முன்னாடி லவ் பண்ணது அவன் இன்னும் இவளை மறக்கல அதான் கடத்திட்டான் ஆனா இப்போ அவனால சென்னைக்கு போக முடியல அதான் அவன் வர வரை இவளை இங்க வச்சிருக்க போறாங்க...

கதிரேசன் : அப்பா அவன் தான் அடுத்தவன் பொண்டாட்டினு கூட பார்க்காம ஆசை படுறானா நீங்களும் அதுக்கு துணை போறீங்களா... இருங்க தமிழ்க்கு ஃபோன் பண்ணி சொல்லுறேன்...

அவன் ஃபோன் எடுத்த நேரம் ஒரு ரவுடி அந்த ஃபோன்ன புடிங்கிட்டான்...

ரவுடி : சார் உங்க பையனாச்சேனு பார்க்குறேன் இல்லனா அடிச்சி போட்டு போய்ட்டே இருப்பேன் ஒழுங்கா அமைதியா இருக்க சொல்லுங்க...

ராஜாராமன் : இல்ல இவனால எந்த ப்ரச்சனையும் வராது நான் பார்த்துக்குறேன் ( கதிர தனியா இழுத்துட்டு போய்ட்டாரு)

கதிர் : அப்பா விடுங்க இதெல்லாம் தப்பு பா அவளும் நம்ம கனி மாதிரி ஒரு பொண்ணு தான கனிக்கு எதாவது ஆனா நாம இப்படி தான் இருப்போமா...

ராஜாராமன் : நம்ம கனி கூட இவளை ஒப்பிடாத கதிர் எனக்கு எப்படியாவது தமிழ் குடும்பத்தை அசிங்கப்படுத்தனும் அதுக்கு என்ன வேணாலும் பண்ணுவேன்...

அந்த ஷ்யாம் மட்டும் இவளை அழைச்சிட்டு போய்ட்டானா தமிழ் பொண்டாட்டி எவன் கூடயோ ஓடி போய்ட்டானு ஊர் முன்னாடி அவங்க குடும்பத்தை அசிங்கப்படுத்துறேன் பாரு...

கதிரேசன் : ச்சி நீங்க இவ்ளோ கேவலமானவரா இருப்பீங்கனு நினைச்சி கூட பார்க்கல, தமிழ் குடும்பத்தை பத்தி நீங்க தப்பா சொல்லி சொல்லியே என் மனசுல பகைய உண்டு பண்ணிட்டீங்க ஆனா அவங்க தப்பானவங்க இல்ல ரொம்ப நல்லவங்க நீங்க தான் தப்பானவரு இனிமேல் உங்க பேச்சை என்னைக்கும் கேட்க மாட்டேன்...

சொல்லிட்டு மிரு இருந்த ரூம் பக்கம் போனான் அதுக்குள்ள இரண்டு பேர் கதிரை புடிச்சி பக்கத்துல இருந்த ரூம்ல போட்டு பூட்டி வச்சிட்டாங்க...

கதிரேசன் : டேய் கதவை திறங்க டா அப்பா கதவை திறக்க சொல்லுங்க ( உள்ள இருந்து கத்திட்டே இருந்தான்)

ராஜாராமன் : ஓரமா போய் உட்கார்ந்துட்டாரு...

கதிரேசன் : கொஞ்ச நேரம் கதவை தட்டிட்டு திரும்புனான் அப்போ தான் அந்த ரூம்ல ஒரு லேண்ட்லைன் ஃபோன் இருக்குற நியாபகம் வந்தது உடனே தேவேந்திரன்க்கு கால் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட்டான்...

தமிழ், அர்ஜுன் இரண்டு பேருமே ஃபோன் எடுத்துட்டு வரல அதனால அவங்கள்ட சொல்ல முடியல...

தேவேந்திரன் உதய்க்கு கால் பண்ணி சொன்னாரு, அவனும் தமிழ் எங்க இருக்கானு பார்த்து நான் சீக்கிரம் அழைச்சிட்டு போறேன் நீங்களும் வந்துடுங்கனு சொல்லி வச்சிட்டான்...

கதிர் தேவேந்திரன்க்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு அவங்க வர வரை வெய்ட் பண்ண முடியாதுனு தப்பிக்க ட்ரை பண்ணான்...

அந்த ரூம்ல கண்ணாடி ஜன்னல் தான் இருக்கும் அதை உடைச்சிட்டு வீட்டுக்கு பின்பக்கம் வந்து யாருக்கும் தெரியாம வீட்டுக்குள்ள நுழைஞ்சி யாரும் பார்க்காத நேரம் மிருவ வச்சிருந்த ரூம்க்குள்ள போய்ட்டான்...

மிருனாழினி : மயக்கத்துல இருந்தா...

கதிரேசன் : அங்க இந்த தண்ணி எடுத்து அவ முகத்துல தெளிச்சான்...

மிருனாழினி : கண்ணு மங்களா தெரியவும் ஷ்யாம் தான் இருக்கானு நினைச்சி கத்த போனா...

கதிரேசன் : ( அவ வாய மூடிட்டான்) மிரு நான் தான் கத்தாத...

மிருனாழினி : 😭😭😭 கதிர் அவங்க அந்த ஷ்யாம் ஷ்யாம் அவன் தான் 😭😭😭 பயமா இருக்கு மாறன் கிட்ட போனும்  😭😭😭 ( எதேதோ பேசி அழுதா)

கதிரேசன் : ( அவனுக்கே அவளை பார்க்க பாவமா இருந்தது) நான் அழைச்சிட்டு போறேன் வா...

மிருனாழினி : அவன் கை புடிச்சிகிட்டு அவனை ஒட்டியே வந்தா...

இவங்க வெளில வந்ததுமே ரவுடி பசங்க இவங்களை பார்த்துட்டாங்க...

கதிரேசன் : எல்லாரையும் தள்ளி விட்டுட்டு மிரு கைய புடிச்சி இழுத்துட்டு ஓடுனான்...

ராஜாராமன் : டேய் கதிர் டேய் ( கத்திட்டே பின்னாடி போக போனாரு)

ரவுடி : யோவ் எங்க போற எங்க பாஸ் இங்க தான் வந்துட்டு இருக்காரு அவர் வந்ததும் விஷயத்தை சொல்லு நாங்க போய் அவங்களை கண்டுபுடிக்குறோம் ( எல்லாரும் அவங்களை துரத்திட்டு போய்ட்டாங்க)

அவங்க போன கொஞ்ச நேரத்துலயே ஷ்யாம் அங்க வந்தான் அவன் கிட்ட ராஜாராமன் எல்லாத்தையும் சொன்னாரு...

ஷ்யாம் : எல்லாம் உன் பையனால தான் யா அவனை நான் கொல்லாம விட மாட்டேன்...

ராஜாராமன் : டேய் என் பையனை மட்டும் எதாவது பண்ண அப்பறம் நீ உயிரோட இருக்க மாட்ட ஜாக்கிரதை...

ஷ்யாம் : பண்ணறதையும் பண்ணிட்டு திமிரா பேசுறியா ( அவரை புடிச்சி தள்ளி விட்டுட்டு போய்ட்டான்)

ராஜாராமன் : விழுந்த வேகத்துக்கு அங்க உள்ள டேபிள்ல தலை மோதி மயக்கம் போட்டுட்டாரு...

கதிர், மிரு ஓடும் போதே ஒருத்தன்  கல் எடுத்து அவங்களை நோக்கி அடிக்கவும் கதிர் தலைல அந்த கல் பட்டு கீழ விழுந்தான்...

மிருனாழினி : 😭😭😭 கதிர் வாங்க போய்டலாம் பயமா இருக்கு கதிர் எழுந்திரிங்க...

கதிரேசன் : ( தலைல பயங்கர அடி கண்ணு எல்லாம் கலங்க ஆரம்பிச்சிடுச்சி) மிரு போய்டு போய்டு...

மிருனாழினி : கதிர் நீங்களும் வாங்க...

கதிரேசன் : போ மா போய்டு ( அவளை தள்ளி விட்டான்)

மிருனாழினி : எழுந்து ஓடுனா...

எல்லாரும் கதிரை விட்டுட்டு மிருவ துரத்த ஆரம்பிச்சிட்டாங்க...

உதய், தமிழ் கதிர் வீட்டுக்கு போற வழில கதிர் கீழ விழுந்து கிடக்குறதை பார்த்தாங்க...

உதய் : டேய் மச்சான் ( கதிர் கிட்ட ஓடுனான்)

கதிரேசன் : மிரு மிருவ அந்த பக்கம் துரத்திட்டு போனாங்க போங்க டா...

தமிழ்மாறன் : உதய் இவனை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போ நான் அவங்களை பார்த்துக்குறேன்...

கதிரேசன் : வேண்டா தமிழ் இவனையும் அழைச்சிட்டு போ என்னை பத்தி கவலை படாத...

தமிழ்மாறன் : நீயும் எனக்கு முக்கியம் தான் டா தலைல அடிப்பட்ருக்கு முதல்ல அதை பாரு, உதய் அழைச்சிட்டு போ டா ( சொல்லிட்டு கதிர் சொன்ன பக்கம் ஓடுனான்)

அதுக்குள்ள அந்த ரவுடி பசங்க மிருவ புடிச்சி திரும்ப இழுத்துட்டு வந்தாங்க...

மிருனாழினி : 😭😭😭 விடுங்க விடுங்க டா...

தமிழ் அந்த இடத்துக்கு வந்துட்டான் " யாழினி "...

மிருனாழினி : மாறன் மாறன் 😭😭😭 ( கத்துனா)

தமிழ்மாறன் : அந்த நாலு பேரையும் அடிக்க ஆரம்பிச்சான்...

அவங்களும் தமிழை அடிச்சாங்க, தமிழ் அங்க இருந்த ஒரு மரகட்டைய எடுத்து நாலு பேரையும் பயங்கரமா அடிச்சான், ஒரு கட்டத்துல அடி வாங்க முடியாம நாலு பேருமே விழுந்து கிடந்தாங்க... அந்த நேரம் அங்க ஷ்யாம் வந்துட்டான்...

ஷ்யாம் : டேய் தமிழ் எல்லாம் உன்னால தான், உன்னால தான் மிரு எனக்கு கிடைக்காம போனா உன்னை உயிரோட விட மாட்டேன்...

தமிழ்மாறன் : அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசை படுற நீ எல்லாம் என்னா மனுஷன் டா த்தூ...

ஷ்யாம் : நீ உயிரோட இருக்குற வரை மிரு எனக்கு கிடைக்க மாட்டா டா ( அவன் முன்னாடி துப்பாக்கி நீட்டுனான்)

மிருனாழினி : ஷ்யாம் ப்ளீஸ் வேண்டாம் அவரை விட்டுடு ஒன்னும் பண்ணாத...

ஷ்யாம் : தமிழை நோக்கி சுட்டான்...

மிருனாழினி : கடைசி நேரத்துல தமிழ்க்கு முன்னாடி வந்து நின்னுட்டா துப்பாக்கி குண்டு அவ வலது தோள்ல பட்டு மிரு கத்திட்டே பின்னாடி தமிழ் மேல சாஞ்சா...

தமிழ்மாறன் : 😱😱😱 யாழினி ( அவளை தாங்கி புடிச்சான்)

தொடரும்...

# Sandhiya.