வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 99

தமிழ்மாறன் : மிருனாழினிக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தான்...

மிருனாழினி : ரெட் கலர்ல நெட் சேரி கட்டி தலை நிறைய மல்லிகை பூ வச்சி அளவான மேக்கப்ல பால் சொம்போட உள்ள வந்தா...

தமிழ்மாறன் : அவளை பார்த்ததும் எழுந்து நின்னான்...

மிருனாழினி : பால் சொம்ப டேபிள்ல வச்சிட்டு தமிழ் கால்ல விழ போனா...

தமிழ்மாறன் : ஹே யாழினி என்ன பண்ற ( அவளை கால்ல விழ விடாம தடுத்து புடிச்சிகிட்டான்)

மிருனாழினி : அத்தை சொன்னாங்க இதெல்லாம் சம்பிரதாயம்னு...

தமிழ்மாறன் : இதெல்லாம் வேண்டாம் வா உட்காரு...

மிருனாழினி : ( பால் சொம்பு எடுத்து குடுத்தா) இந்தாங்க குடிச்சிட்டு பாதி என்கிட்ட குடுங்க...

தமிழ்மாறன் : நீ முதல்ல குடி...

மிருனாழினி : இல்ல நீங்க முதல்ல குடிச்சிட்டு குடுங்க...

தமிழ்மாறன் : சரி...

அவன் குடிச்சதும் மிருவும் வாங்கி குடிச்சிட்டு டேபிள்ல வச்சிட்டு வந்து அவன் பக்கத்துல உட்கார்ந்தா...

தமிழ்மாறன் : அவ உதட்டுல ஒட்டிருந்த பால துடைச்சி விட்டான்...

மிருனாழினி : சாரி மாறன் நான் படிச்சி முடிக்குற வரை நீங்க இதெல்லாம் வேண்டானு சொல்லிருந்தீங்க ஆனா அம்மா, அத்தை நான் எவ்ளோ சொல்லியும் கேட்கவே இல்ல...

தமிழ்மாறன் : பரவாயில்ல மா அவங்க பெரியவங்க எப்போதும் நம்மள பத்தி தான் யோசிச்சிட்டு இருப்பாங்க அதனால அவங்க மேல தப்பு இல்ல...

மிருனாழினி : ஆனா மாறன் நான் தான் இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜ் முடிச்சிடுவேன்ல அதனால இதுல ஒன்னும் தப்பு இல்லயே...

தமிழ்மாறன் : அப்போ உனக்கு விருப்பமா யாழினி மா...

மிருனாழினி : ஆமா ஏன் உங்களுக்கு இல்லயா 😞😞😞

தமிழ்மாறன் :  அப்படி இல்ல டா நான் அதுக்காக கேட்கல உனக்கு படிப்பு முடிஞ்சதும் வேலைக்கு போகனும்னு ஆசை இருக்கலாம், அதான் அதுக்கு பிறகு பார்த்துக்கலாம்னு நினைச்சேன்..

மிருனாழினி : எனக்கு வேலைக்கு போக எல்லாம் ஆசை இல்ல மாறன், கல்யாணத்துக்கு பிறகே படிக்க வேண்டாம் எப்போதும் உங்க கூடவே இருக்கனும்னு நினைச்சேன் ஆனா நான் படிப்ப நிறுத்திட்டா அதுக்கு நீங்க தான் காரணம்னு என் அம்மா பேசிட கூடாதுனு தான் நீங்க படிக்க வைக்குறனு சொன்னப்ப நான் ஓகே சொன்னேன்...

நானே எப்போ படிப்பு முடியும் நாள் முழுக்க உங்க கூட இருக்கலாம்னு ஆசையா இருக்கேன் அதனால வேலைக்கு போக எல்லாம் விருப்பம் இல்ல...

தமிழ்மாறன் : ஆனா உன் கை அடிப்பட்டது...

மிருனாழினி : ம்கூம் இப்போ சுத்தமா வலி இல்ல...

தமிழ்மாறன் : அப்போ சரி ( பெட்ல படுத்து மிருவ அவன் மேல படுக்க வச்சிகிட்டான் )

மிருனாழினி : ( அவன் சட்டை பட்டனை கழட்டி அவன் பச்சை குடுத்துன இடத்துல முத்தம் குடுத்தா) ஏன் இப்படிலாம் பண்ணீங்க வலிச்சிருக்கும்ல...

தமிழ்மாறன் : வலிச்சது தான் ஆனா நீ இப்படி அடிக்கடி முத்தம் தருவனு தெரிஞ்சிருந்தா உடம்பு முழுக்க பச்சை குத்திப்பேன்...

மிருனாழினி : ( அவனை அடிச்சா) இதுக்கே எனக்கு வருத்தமா இருக்கு இதுல உடல் முழுக்க குத்திப்பீங்களா...

தமிழ்மாறன் : அடிச்ச அவ கைய புடிச்சி முத்தம் குடுத்தான்...

மிருனாழினி : 😊😊😊 விடுங்க ( கைய உறுவுனா)

தமிழ்மாறன் : அவ நெத்தில முத்தம் குடுத்தான்...

மிருனாழினி : அன்னைக்கு மட்டும் உதட்டுல குடுத்தீங்க அப்பறம் தரவே இல்ல...

தமிழ்மாறன் : அன்னைக்கு செத்துடுவேன் அது இதுனு உலறுனியா அதான் முத்தம் குடுத்து வாய அடைச்சேன்...

மிருனாழினி : ஓஹோ இப்போ நீங்களும் ஓவரா பேசுறீங்க ( அவன் உதட்டுல முத்தம் குடுத்தா)

தமிழ்மாறன் : எக்கி பெட் பின்னாடி இருந்த லைட் ஸ்விட்ச் ஆஃப் பண்ணான்...

அப்பறம் அவங்க வாழ்க்கைய தொடங்கிட்டாங்க...

அடுத்தநாள் காலைல இரண்டு ஜோடியுமே அங்க பக்கத்துல உள்ள கோவில்க்கு போய்ட்டு வந்தாங்க...

அன்னைக்கு நைட் ஒரு பெரிய மண்டபத்துல அர்ஜுன், அஞ்சலிக்கு ரிசப்ஷன் வச்சிருந்தாங்க, அங்க போன பிறகு தான் தெரிஞ்சது மிரு, தமிழ்க்கும் சேர்த்து ரிசப்ஷன்னு அவங்களுக்கு ராஜன், மாலதி சேர்ந்து ஏற்பாடு பண்ணிருந்தாங்க...

அர்ஜுன், தமிழ்மாறன் : வொய்ட் ஷர்ட் ப்ளூ கோர்ட் போட்டு செம்ம ஹேண்ட்சமா வந்து நின்னாங்க...

தமிழ் கோட்சூட்ல அவ்ளோ அழகா இருந்தான் அவன் கிராமத்துல இருந்து வந்தவனு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க அந்த அளவுக்கு இருந்தான்...

மிருனாழினி, அஞ்சலி : ப்ளூ அண்ட் வொய்ட் கலர் லெகாங்கால தேவதை மாதிரி அவங்க துணை பக்கத்துல வந்து நின்னாங்க...

அர்ஜுன் கம்பெனி ராஜன், மாலதி கம்பெனில வேலை பார்க்குற எல்லாரும் வந்துருந்தாங்க, பிஸ்னஸ் பார்ட்னர்ஸ், கிளைண்ட்ஸ் எல்லாரும் வந்துருந்தாங்க...

எல்லார் கிட்டயும் தமிழ் குடும்பத்தை அறிமுகம் பண்ணி வச்சாங்க...

மறுநாள் காலைல அஞ்சலிய அர்ஜுன் வீட்டுல விட்டுட்டு மத்த எல்லாரும் தஞ்சாவூர் கிளம்பிட்டாங்க...

அப்படியே நாட்கள் வேகமா போக அஞ்சலி அர்ஜுன் கூட சேர்ந்து அவன் கம்பெனிக்கு போக ஆரம்பிச்சா...

மிருனாழினிக்கும் காலேஜ் முடிஞ்சி இப்போ வீட்டுல தான் இருக்கா அவ சொன்னா மாதிரி இப்போ நாள் முழுக்க தமிழ்மாறன் கூட தான் இருக்கா, அவன் வயல்க்கு வந்தாலும் சாப்பாடு கொண்டு வரேன் அது இதுனு சொல்லி அவளும் வயல்க்கு வந்துடுவா...

கனிமொழிக்கு இப்போ ஆறாவது மாசம் நடக்குது உதய் அவளை பத்திரமா பார்த்துகிட்டான் ராஜாராமன், மல்லிகா, கதிரேசன் வந்து அடிக்கடி அவளை பார்த்துட்டு போவாங்க...

கதிரேசன் ராஜாராமன் கூட பேசுறதே சுத்தமா நிறுத்திட்டான் உதய் கூட அவர் வீட்டுக்கு வந்தா வாங்கனு சொல்லுவான் அதுக்கு பிறகு ஒருவார்த்தை கூட பேச மாட்டான்...

ராஜாராமனும் இந்த வருஷம் தமிழ் குடும்பத்து மேல வச்ச பகைக்கு ஏத்த தண்டனைனு  விட்டுடுவாரு...

ராஜன், மாலதி அடிக்கடி தமிழ் வீட்டுக்கு வந்து மிருவ பார்த்துட்டு போவாங்க...

நிவின், யாதவ் காலேஜ் முடிச்சதுமே அரஜுன் அவங்களை சென்னைல உள்ள அவன் கம்பெனில வேலைக்கு சேர்த்துகிட்டான்... ரூம் எடுத்து தங்குறனு சொன்னவங்களை விடாம அவன் வீட்டுலயே தங்க வச்சிகிட்டான்...

அர்ஜுன், அஞ்சலி ஊருக்கு வரும்போது எல்லாம் அவங்களும் ஊருக்கு வந்துடுவாங்க...

ஒருநாள் மிருனாழினி எப்போதும் போல தமிழ்க்கு மதிய சாப்பாடு எடுத்துகிட்டு வயல்க்கு வந்தா...

வயல்ல ஆளுங்க களை எடுத்துகிட்டு இருந்தாங்க அவங்க கூட தமிழும் வயல்ல இறங்கி களை எடுத்துட்டு இருந்தான்...

மிருனாழினி : என்னங்க என்னங்க ( வரப்புல நின்னு கத்தி கூப்பிட்டா )

தமிழ்மாறன் : ( நிமிர்ந்து பார்த்தான்) என்ன மா...

மிருனாழினி : சாப்பாடு கொண்டு வந்துருக்கேன் வாங்க ( சாப்பாட்டு கேரியரை தூக்கி காட்டுனா)

தமிழ்மாறன் : எடுத்து வை மா வரேன்...

மிருனாழினி : ஓகே ( வாழையிலைய விரிச்சி வச்சி சாதம், கூட்டு, பொறியல் எல்லாம் எடுத்து வச்சா)

தமிழ்மாறன் : மத்த ஆளுங்களையும் சாப்பிட போக சொல்லிட்டு கை, கால் கழுவிட்டு வந்து உட்கார்ந்தான்...

மிருனாழினி : ஒரு கரண்டி சாம்பார் எடுத்து சாதத்து மேல ஊத்திட்டு வாட்டர் பாட்டில்ல இருந்த தண்ணிய ஓபன் பண்ணி வச்சா...

தமிழ்மாறன் : அவளுக்கு ஊட்டி விட்டுட்டே அவனும் சாப்பிட்டான்...

மிருனாழினி : போதும் மாறன் நீங்க மட்டும் சாப்பிடுங்க...

தமிழ்மாறன் : நானும் சாப்பிட்டுட்டு தான இருக்கேன்...

மிருனாழினி : நீங்க மட்டும் தனியா சாப்பிடுங்க, நீங்க சாப்பிடும் போதே எனக்கும் ஊட்டி விடுறீங்க அப்பறம் வீட்டுக்கு போய் சாப்பிட முடியாம கொஞ்சமா சாப்பிட்டா அத்தை என்ன இதான் சாப்பிடுற நிறைய சாப்பிடுனு சொல்லி அள்ளி வைக்குறாங்க சாப்பிடவே முடியல அவங்கள்ட நீங்க ஊட்டி விட்டீங்கனா சொல்ல முடியும்...

தமிழ்மாறன் : அப்போ நாளைல இருந்து உனக்கும் சேர்த்தே எடுத்துட்டு வந்துடு ஆனா நான் தான் ஊட்டி விடுவேன்...

மிருனாழினி : நீங்க இப்படிதான் சொல்லுவீங்கனு தெரியும் அதான் இன்னைக்கு நிறைய எடுத்து வந்துருக்கேன்...

தமிழ்மாறன் : அப்பறம் என்ன பேசாம சாப்பிடு ( ஊட்டி விட்டான்)

மிருனாழினி : அவளும் தமிழ்மாறன்க்கு ஊட்டி விட்டா...

அப்பறம் சாப்பிட்டு முடிச்சதும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க...

தமிழ்மாறன் : யாழினி மா நீ வீட்டுக்கு போ டா எல்லாரும் வயல்ல இறங்க ஆரம்பிச்சிட்டாங்க நானும் போறேன்...

மிருனாழினி : மாறன் இன்னைக்கு நானும் களை எடுக்கவா, அதான் உங்க கூட சேர்ந்தே சாப்பிட்டுட்டனே இனி வீட்டுக்கு போய் என்ன பண்ண போறேன்...

தமிழ்மாறன் : இன்னைக்கு வேண்டா டா வெயில் அதிகமா இருக்கு...

மிருனாழினி : ப்ளீஸ் ப்ளீஸ் மாறன்...

தமிழ்மாறன் : சரி வா..

களை எடுத்துட்டு இருக்கும் போதே கொஞ்ச நேரத்துல மிருனாழினி மயங்கி பக்கத்துல இருந்த தமிழ் மேல சாஞ்சா...

தமிழ்மாறன் : 😱 யாழினி யாழினி ( அவ கன்னத்தை தட்டுனான்)

ஆனா அவ எழுந்திரிக்கவே இல்ல, உடனே தூக்கிட்டு போய் மாமரத்துக்கு கீழ இருந்த கயிறு கட்டில்ல படுக்க வச்சான்...

களை எடுக்க வந்த ஆளுங்களும் சுத்தி கூடிட்டாங்க...

அதுல ஒரு பாட்டி " யாராவது போய் தண்ணி கொண்டு வாங்க பா "

ஒருத்தர் தண்ணி கொண்டு வரவும் தமிழ் வாங்கி மிரு முகத்துல தெளிச்சான்...

மிருனாழினி : மெதுவா கண்ணை திறந்தா...

தமிழ்மாறன் : இதுக்கு தான் வெயில்ல களை எடுக்க வேண்டானு சொன்னேன் கேட்டியா டி ( திட்டிட்டே துண்டு எடுத்து அவ முகத்துல இருந்த தண்ணிய துடைச்சி விட்டான்)

மிருனாழினி : 😞 திடீர்னு தலை சுத்திடுச்சி நான் என்ன பண்ணுறது...

பாட்டி : அட தமிழு திட்டாத பா ( சொல்லிட்டே மிரு கை புடிச்சி பார்த்தாங்க) நல்ல விஷயம் தான் இரட்டை நாடி துடிக்குது, அம்மாடி தலைக்கு குளிச்சி எத்தனை நாள் ஆகுது...

மிருனாழினி : ஆமா பாட்டி பத்து நாள்க்கு மேல தள்ளி போய்ருக்கு..

பாட்டி : அப்போ அதுவா தான் இருக்கும், யப்பா தமிழு நல்ல விஷயம் சொல்லிருக்கேன் இனிப்பு கிடையாதா...

தமிழ்மாறன் : ஆச்சி நீ வீட்டுக்கு போ இனிப்பு கடையவே கொண்டு வந்து இறக்குறேன்...

பாட்டி : 😂😂😂அதுசரி முதல்ல புள்ளைய அழைச்சிட்டு வீட்டுக்கு போ...

தமிழ்மாறன் : சரி ஆச்சி...

அன்னைக்கு வேலை பார்த்த எல்லாருக்கும் இரண்டு மடங்கு சம்பளம் குடுத்து வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு மிரு கிட்ட வந்தான்...

மிருனாழினி : 😊 வெட்கத்தோட அவனை பார்த்தா...

தமிழ்மாறன் : அவளை இறுக்கி ஹக் பண்ணி முகம் முழுக்க முத்தம் குடுத்தான்...

மிருனாழினி : அவன் நெத்தில அழுத்தி முத்தம் குடுத்தா...

தமிழ்மாறன் : சொல்ல வார்த்தைகளே இல்ல யாழினி மா அவ்ளோ சந்தோஷமா இருக்கேன்...

மிருனாழினி : நானும் தான் வாங்க முதல்ல வீட்டுக்கு போலாம் அத்தை, மாமா, ஆச்சி, தாத்தா கிட்ட சொல்லனும்...

தமிழ்மாறன் : ம்ம்ம் போலாம் ( அவளை அப்படியே இரண்டு கைகள்ல தூக்கிட்டான்)

மிருனாழினி : என்ன அதிசயமா தூக்குறீங்க பிள்ளை பிறக்க போறதால வந்த சலுகையா ( அவன் கழுத்தை சுத்தி கைய போட்டுகிட்டு கேட்டா )

தமிழ்மாறன் : ஏன் இதுக்கு முன்னால நான் உன்னை தூக்குனதே இல்லயா...

மிருனாழினி : நான் கேட்டா தான் தூக்குவீங்க நீங்களா இதுவரை தூக்குனது இல்லயே 😏😏😏

தமிழ்மாறன் : அவ உதட்டுல முத்தம் குடுத்து லைட்டா கடிச்சி வசிட்டான்...

மிருனாழினி : ஆஆ ஏன் கடிச்சீங்க...

தமிழ்மாறன் : வம்பு பண்ணி வாய் சுளிச்சில அதான் தண்டனை குடுத்தேன் ( தூக்கிட்டே வயல்ல இருந்து ரோட்டுக்கு வந்துட்டான்)

மிருனாழினி : அதான் பைக் கிட்ட வந்தாச்சே இறக்கி விடுங்க...

தமிழ்மாறன் : இறக்கி விட மனசே வரல டி...

மிருனாழினி : அப்போ வீடு வரை தூக்கிட்டே போக போறீங்களா...

தமிழ்மாறன் : ம்ம்ம் இதுவும் நல்ல ஐடியா தான் தூக்கிட்டு போகட்டா...

மிருனாழினி : நீங்க செஞ்சாலும் செய்வீங்க ( அவளா கீழ இறங்குனா) ம்ம்ம் பைக் எடுங்க...

தமிழ்மாறன் பைக் ஸ்டார்ட் பண்ணதும் மிரு ஏறி உட்கார்ந்தா, வீட்டுக்கு போனதும் தமிழ் எல்லார் கிட்டயும் விஷயத்தை சொல்லிட்டான் எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்...

சீதா, உதய், கனி உடனே தமிழ் வீட்டுக்கு வந்துட்டாங்க... அப்பறம் கதிர் அவன் அப்பா, அம்மா வந்து பார்த்துட்டு போனாங்க...

அடுத்த நாளே சென்னைல இருந்து எல்லாரும் வந்து மிருவ பார்த்துட்டு போனாங்க.. மாலதி மட்டும் ஒரு வாரம் மிரு கூட தங்கிட்டு போனாங்க...

தொடரும்...

# Sandhiya.