மைவிழி பார்வையிலே - 75
கௌதம் : கயல வீட்டுல விட்டுட்டு வேலைக்கு போனான்...🚶🏻
ஆதிரா : ஹாய் கௌதம்...🙋🏻
கௌதம் : ஹாய்
ஆதிரா : காலேஜ் முடிஞ்சதும் நேரா இங்க தான் வறீங்களா...🤔
கௌதம் : இல்ல கயல்ல வீட்டுல விட்டுட்டு அப்பறம் தான் இங்க வந்தேன்.
ஆதிரா : யாரு கயல்...🤔
கௌதம் : அவ என்
பாய் : அண்ணா அண்ணா...🚶🏻
கௌதம் : என்னடா.
பாய் : அண்ணா வந்ததும் கடலை போட்டது போதும் வந்து சொல்லி குடுங்க...😑
கௌதம் : ( அந்த பாய் முதுகுல ஒரு அடி அடிச்சான்) சும்மா பேச கூடாதா டா உடனே கடல போடுறனு வந்துடுவியே...🙂
பாய் : அட வாங்க அண்ணா ( இழுத்துட்டு போய்ட்டான்)
ஆதிரா : கௌதம் எதோ சொல்ல வந்தான் அதுகுள்ள அந்த பையன் இழுத்துட்டு போய்ட்டானே.... ஒருவேளை அவன் தங்கச்சியா இருக்குமோ... சரி இன்னொரு நாள் கேட்டுகலாம் ( அவளும் அவ வேலைய பார்க்க போய்ட்டா)
கௌதம் : வேலை முடிஞ்சி 8.30 க்கு வீட்டுக்கு வந்தான்...🚶🏻
அப்பறம் நாலு பேரும் சேர்ந்து சாப்பிட்டாங்க.
அப்படியே ஒருவாரம் போச்சி சரண் அவனோட சஸ்பென்ஷன் முடிஞ்சி காலேஜ் வர ஆரம்பிச்சிட்டான்...😊
சரண், மகா : பைக் பார்க் பண்ணிட்டு நடந்து வந்துட்டு இருந்தாங்க...😌
அப்ப ஒரு பையன் வந்து மகாவ ஹக் பண்ணான்.
சரண் : 😡😡😡 டேய் யார் நீ ( அடிக்க கை ஓங்குனான் )
மகா : ( அவன தடுத்தா) அடிச்சிடாத டா அவன் என் தம்பி தான்...😊
சரண் : அதுக்கு ஹக் பண்ணுவானா.
அஜய் : என் அக்கா நான் ஹக் பண்ணுவேன் யார் கேட்பா...😑
சரண் : நான் கேட்பேன் டா
அஜய் : ஏன்?
சரண் : இது காலேஜ் இங்க இப்படிலாம் நடந்துக்க கூடாது.
அஜய் : இதெல்லாம் ரொம்ப ஓவர் பா.
சரண் : 😠😠😠
மகா : முதல்ல இரண்டு பேரும் சண்டை போடுறத நிறுத்துங்க.... சரண் இவன் என் சித்தப்பா பையன் பேர் அஜய்...😌
சரண் : ம்ம்ம்.
மகா : அஜய் இவன் சரண் என் ஃப்ரண்ட்.
சரண் : ஃப்ரண்ட்னு சொன்னதும் கொஞ்சம் கஷ்டமா இருந்தது...😔
அஜய் : ஹாய்.
சரண் : ஹாய்... மகா பேசிட்டு வா நான் க்ளாஸ்க்கு போறேன் ( அவளோட பதில் எதிர் பார்க்காமலே போய்ட்டான்)
மகா : போற அவனையே பார்த்துட்டு இருந்தா.
அஜய் : விட்டா அடிச்சிருப்பாரு அக்கா நல்ல வேளை காப்பாத்துன.
மகா : 😂😂😂 நீ எப்போ டா வந்த.
அஜய் : இப்போ தான் வந்தேன் பெரியம்மா நீ ஐடி கார்ட வீட்டுல வச்சிட்டு போய்ட்டனு சொன்னாங்க அதான் உன்கிட்ட குடுத்துட்டு உன்னை பார்த்துட்டு போலானு வந்தேன்...😌
மகா : சரி டா நீ வீட்டுக்கு பார்த்து போ நான் ஈவ்னிங் வந்ததும் பேசிகலாம்.
அஜய் : அக்கா நைட் நான் ஊருக்கு கிளம்பிடுவேன் காலேஜ் விட்டதும் சீக்கிரம் வந்துடு நாம ஃப்ரி யா பேசியே ரொம்ப நாள் ஆகுது...🙂
மகா : ம்ம்ம் பாய்.
அஜய் ஐடி கார்டு குடுத்துட்டு போனதும் மகா க்ளாஸ்க்கு போய்ட்டா...🆔
ஈவ்னிங்,
கௌதம் : கயல வீட்டுல விட்டுட்டு வேலைக்கு போய்ட்டான்...😌
மீரா : சோஃபால உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தா...📖
கார்த்திக் : ( அவங்க வீட்டுக்கு வந்தான்) பாப்பா என்ன பண்ற...🤔
மீரா : பார்த்தா தெரியல படிச்சிட்டு இருக்கேன்...😣
கார்த்திக் : ஆனா உன் முகத்தை பார்த்தா எதோ குழப்பத்துல இருக்கிறா மாதிரி இருக்கு.
மீரா : ஆமா இந்த பார்ட் எனக்கு புரியல ( அவ புக்க காமிச்சி சொன்னா) அண்ணா வேற நைட் தான் வருவாங்க...😔
கார்த்திக் : ஏன் என் கிட்ட கேட்டா நான் சொல்லி தர மாட்டனா.
மீரா : அப்படியா அப்போ சொல்லி தா ( புக் க அவன் கைல குடுத்துட்டா)
கார்த்திக் : ( வாங்கி பார்த்தான்) 😳😳😳 ( அய்யோ ஒன்னுமே புரியலயே)
மீரா : என்னடா சீக்கிரம் சொல்லி குடு.
கார்த்திக் : 😨😨😨
கயல் : ( கார்த்திக் ரியாக்ஷன பார்த்துட்டு வந்து அவன் பக்கத்துல உட்கார்ந்தா) ( h.v ) அண்ணா என்ன ஆச்சி.
கார்த்திக் : ( h.v ) கயல் ஒன்னுமே புரியல டா ப்ளீஸ் மீரா கிட்ட இருந்து என்ன காப்பாத்து...😢
கயல் : ( h.v ) வெய்ட் ( பொருமையா எழுந்து வெளில போனா)
மீரா : புக்க பார்த்துட்டு இருந்ததால கயல் போனத பார்க்கல...😊
கயல் : ( வெளில இருந்து கத்துனா) அண்ணா பெரியம்மா உன்னை கூப்பிடுறாங்க.
கார்த்திக் : 😄😄😄 மீரா அம்மா கூப்பிடுறாங்கலாம் நீ நைட் கௌதம் வந்ததும் கேட்டுக்க ( அவ கைல புக் வச்சிட்டு வேகமா போனான்)
மீரா : கார்த்திக் சொல்லிட்டு அப்பறம் போடா...
கார்த்திக் : காதுல வாங்காத மாதிரி போய்ட்டான்.
கயல் : வெளில நின்னுட்டு இருந்தா.
கார்த்திக் : கயல் குட்டி தேங்க்ஸ் டா நாளைக்கு ஒரு சாக்லேட் பாக்ஸ்ஸே வாங்கி தறேன்...🍫
கயல் : ஐஐஐ 😁😁😁
கார்த்திக் : அவன் வீட்டுக்கு போய்ட்டான்.
கயல் : மீரா பக்கத்துல வந்து உட்கார்ந்தா
மீரா : அண்ணனும் தங்கச்சியும் என்ன ரகசியம் பேசுனீங்க...🤔
கயல் : ஒன்னும் இல்ல ஒன்னுமே இல்ல ( கயல் எஸ்கேப்) எழுந்து ரூம்க்கு ஓடிட்டா.
மீரா : இரண்டும் சேர்ந்து என்ன திருட்டு வேளை பாக்குதுங்கனு தெரியல ( படிக்க ஆரம்பிச்சிட்டா)
அப்படியே நாட்கள் மாதங்களா போச்சி எல்லாரும் அவங்களோட ஆட் செமஸ்டர ( odd semester) முடிச்சிட்டாங்க.
லீவ் முடிஞ்சி அடுத்த செமஸ்டர்கான க்ளாஸ் ஆரம்பிச்சிட்டாங்க...😊
ஒரு நாள் காலை,
கௌதம் : ( காலைல தூக்கம் கலைஞ்சி எழுந்து பார்த்தான் பக்கத்துல கயல் இல்ல ) கயல் கயல்.
கயல் : இதோ இருக்கேன் ( அவன் பக்கத்துல போய் முகத்தை காட்டுனா)
கௌதம் : அம்மா 😱😱😱 ( கத்திட்டே பெட்ல இருந்து கீழ விழுந்தான்)
கயல் : அய்யோ கௌதம் ( அவன் கிட்ட ஓடுனா)
கௌதம் : என்னடி கோலம் இது...🤔
கயல் : ( ஸ்வெட்டர் போட்டு தலைல மங்கி குல்லா போட்டு இருந்தா ) ஏன் இதுக்கு என்ன...😑
கௌதம் : ஜாக்கிங் போக போறியா.
கயல் : இல்ல கௌதம்
கௌதம் : பின்ன ஏன் இப்படி இருக்க அதுவும் காலைல 5 மணிக்கெல்லாம்...🤔
கயல் : கௌதம் இன்னைக்கு மார்கழி 1 இந்தா மாசம் ஃபுல்லா பெரிய பெரிய கோலம்மா வாசல்ல போடுவாங்க...☺️
கௌதம் : அதுக்கு ?
கயல் : நான் தான் இன்னைக்கு கோலம் போட போறேன்... ரொம்ப குளிருதுல அதுக்காக தான் இவ்ளோ செட்டப்...☺️
கௌதம் : பேசாம வந்து தூங்கு கயல் 6 மணிக்கு எழுந்து சின்ன கோலமா போட்டுகலாம்.
கயல் : முடியாது போ ( ரூம் விட்டு வெளில போய்ட்டா)
கௌதம் : சொன்னா கேட்குறாளா பாரு ( அவனும் போய் ஃபரஸ் பண்ணி ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு அவனோட ஜர்கின் போட்டுட்டு வெளில போனான் )
அங்க கயல், மீரா சேர்ந்து கோலம் போட்டுட்டு இருந்தாங்க, மீரா சொல்ல சொல்ல கயல் போட்டு இருந்தா.
அந்த தெருல உள்ள எல்லாருமே அந்த டைம்க்கு எழுந்து அவங்கவங்க வீட்டு வாசல்ல கோலம் போட்டுட்டு இருந்தாங்க...☺️
கயல் அம்மா இவங்க வீட்டையே பார்த்துட்டு இருந்தாங்க.
கௌதம் : கயல் ஏன்டி உங்க அம்மா இங்கயே பார்த்துட்டு இருக்காங்க...🤔
கயல் : பின்ன பார்க்காம என்ன பண்ணுவாங்க... ஒவ்வொரு வருஷமும் என்னை எழுப்பி கோலம் போட சொல்லுவாங்க நான் எழுந்திரிக்கவே மாட்டேன் 😂😂😂
கௌதம் : அடிப்பாவி நீ இப்படி பண்ணா நாங்க உன்னை எழுப்பி கொடுமை படுத்துறதா நினைச்சிக்க போறாங்க.
கயல் : நினைச்சா நினைச்சிட்டு போட்டும் எனக்கு என்ன...😒
கௌதம் : அடிப்பாவி உன்னை ( அங்க கோலத்துல போட்றதுக்கு வச்சிருந்தா கலர் பொடி எடுத்து கயல் கன்னத்துல பூசுனான்)
கயல் : டேய் உன்னை சும்மா விட மாட்டேன் டா ( அவளும் எடுத்து அவன் முகம் ஃபுல்லா பூசி விட்டுட்டா)
கௌதம் : அவன் இன்னொரு கலர் பொடி எடுத்து கயல் மேல கொட்ட போனான்...😌
கயல் நகரவும் அது மீரா மேல பட்டுட்டு.
மீரா : அண்ணா ( அவளும் எடுத்து அவன் மேல போட்டா)
இப்படியே மூனு பேரும் மாறி மாறி கலர் பொடி தூவி விளையாடுனாங்க.
லெட்சுமி : ( சத்தம் கேட்டு வெளில வந்தா) என்ன நடக்குது இங்க...🧐
மூனு பேரும் அமைதியா நின்னாங்க...😑😑😑
லெட்சுமி : கோலம் போட சொன்னா ஹோலி விளையாடிட்டு இருக்கீங்களா.
கௌதம், கயல், மீரா : 😅😅😅
லெட்சுமி : போய் குளிங்க மூனு பேரும்.
விட்டா போதும்னு மூனு பேரும் ஓடிட்டாங்க, லெட்சுமி அம்மா பேலன்ஸ் இருந்த கோலத்தை முடிச்சிட்டு உள்ள போனாங்க.
தொடரும்....
# Sandhiya
0 Comments