எனக்குள் உறைந்தவளே - 66

இளா, தன்ஷி கல்யாணம் நடக்க போறது தஞ்சாவூர்ல பெரிய கல்யாண மண்டபம் அழகா டெக்கரேட் பண்ணிருந்தாங்க...

சென்னைல இருந்து மிருனாழினி ஃப்ரண்ட்ஸ் நிவின், யாதவ் கல்யாணத்துக்கு முதல் நாள் தான் அவங்க ஃபேமிலியோட வந்துருந்தாங்க...

ரிஷ்வந்த், மித்ரா மண்டபம் வாசல்ல நின்னு வரவங்களை பன்னீர் தெளிச்சி சந்தனம், குங்குமம் குடுத்து வரவேற்த்துட்டு இருந்தாங்க...

ஆண்கள் உள்ள வந்தவங்கள வரவேற்று சேர்ல உட்கார சொல்லிட்டு இருந்தாங்க, பெண்கள் ஐயர் கேட்குற பொருள் எல்லாத்தையும் கொண்டு வந்து மணமேடைல வச்சிட்டு இருந்தாங்க...

இளமாறன் அவன் ரூம்ல ரெடியாகிட்டு இருந்தான் அவன் கூட சூர்யா, அருண், தீபக், சந்தோஷ், சந்தீப் இருந்தாங்க...

சந்தீப் ஒரு ஓரமா மொபைல் யூஸ் பண்ணிட்டு இருந்தான் மத்த நாலு பேரும் இளாவுக்கு மேக்கப் போடுறேன் ஹேர் ஸ்டைல் பண்ணுறேனு சொல்லி அவனை ஒருவழி பண்ணிட்டாங்க...

தன்ஷிகாவ ப்யூட்டிஷியன் வந்து ரெடி பண்ணாங்க, அவ ரூம்லயே அபர்ணா, ரிதண்யா, தீபனா, ஜெனி நாலு பேரும் ரெடி ஆகிட்டு இருந்தாங்க...

முதல்ல தன்ஷி, இளாவ தனி தனியா உட்கார வச்சி பண்ண வேண்டிய சடங்கு எல்லாம் பண்ணிட்டு முகூர்த்த சட்டை, வேஷ்டியும் புடவையும் குடுத்து மாத்திட்டு வர சொன்னாங்க...

முதல்ல இளமாறன் பட்டு சட்டை, வேஷ்டி கட்டிட்டு மாலை போட்டுட்டு வந்து அக்னி முன்னாடி உட்கார்ந்தான், ஐயர் சொல்ல சொல்ல இளா திரும்பி மந்திரம் சொல்லிட்டு இருந்தான்...

ஐயர் பொண்ணை அழைச்சிட்டு வர சொல்லவும் ஜெனி, மித்ரா தன்ஷிகாவ அழைச்சிட்டு வந்தாங்க...

தன்ஷிகா : சிவப்பு கலர்ல கோல்டன் கலர் பார்டர் வச்ச பட்டு புடவை கட்டி ப்ரைடல் மேக்கப் போட்டு அழகா வந்தா...

இளமாறன் : அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துட்டு திரும்பவும் மந்திரம் சொன்னான்...

தன்ஷிகா : இளா பக்கத்துல வந்து உட்கார்ந்தா...

தாலி இருந்த தட்டை ஐயர் மித்ரா கைல குடுத்து எல்லார் கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வர சொன்னாரு...

மித்ரா எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு அட்சதை குடுத்துட்டு வந்தா...

ஐயர் தாலிய எடுத்து கெட்டி மேளம் சொல்லி இளா கைல தாலிய எடுத்து குடுத்தார்...

இளமாறன் : தன்ஷிய பார்த்துட்டே அவ கழுத்துல இரண்டு முடிச்சி போட்டான் ஜெனி மூனாவது முடிச்சி போட்டா...

அப்பறம் அக்னிய மூனு முறை சுத்தி வந்ததும் இளா தன்ஷி கால் விரல்ல மெட்டி போட்டு விட்டான்...

அப்பறம் பெரியவங்க எல்லார் காலுலயும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குனதும் சொந்தபந்தம் எல்லாரும் இளா, தன்ஷி கூட நின்னு ஃபோட்டோ எடுத்துகிட்டு சாப்பிட்டு கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க...

கூட்டம் குறைஞ்சதும் இவங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு கிளம்பிட்டாங்க...

முதல்ல இளமாறன் வீட்டுக்கு போய் தன்ஷி விளக்கு ஏத்தி சாமி கும்பிட்டதும் இளா, தன்ஷிக்கு பால், பழம் குடுத்தாங்க...

அப்பறம் எல்லாரும் தமிழ்மாறன் வீட்டுக்கு போய்ட்டாங்க, போனதும் இளா, தன்ஷிய தனி தனி ரூம்ல ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு, மத்தவங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தாங்க...

நைட் சாப்பிட்டு முடிஞ்சதும் முதல் இரவுக்காக தன்ஷி ரூம்ம அழகா ரெடி பண்ணாங்க...

இளமாறன் பட்டு சட்டை, வேஷ்டி கட்டிகிட்டு ரூம்ல தன்ஷிக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தான்...

தன்ஷிகா : லைட் க்ரீன் கலர் சேரி கட்டி லைட் மேக்கப் போட்டு தலை நிறைய மல்லி பூ வச்சி பால் சொம்போட உள்ள வந்தா...

இளமாறன் : 😄 அவளை மேல இருந்து கீழ வரை ரசிச்சி பார்த்துட்டு இருந்தான்...

தன்ஷிகா : 😃 வெட்கத்தோட இளா கைல பால் சொம்பை குடுத்தா...

இளமாறன் : வாங்கி பாதி குடிச்சிட்டு அவ கிட்ட பாதி குடுத்தான்...

தன்ஷிகா : அவளும் பால் குடிச்சிட்டு சொம்ப டேபிள்ல வச்சிட்டு இளா பக்கத்துல வந்தா...

இளமாறன் : அவ கை புடிச்சி பக்கத்துல உட்கார வச்சான்...

தன்ஷிகா : இத்தனை நாள் அவன் பக்கத்துல இருந்தப்ப தோன்றாத உணர்வு எல்லாம் இப்போ வர வெட்கத்துல கன்னம் சிவந்தது...

இளமாறன் : நமக்கு கல்யாணம் நடந்ததை நினைச்சா கனவு மாதிரி இருக்கு தன்ஷி...

தன்ஷிகா : அவன் கைல கிள்ளுனா...

இளமாறன் : ஆஆஆ ஏன்டி கிள்ளுன...

தன்ஷிகா : கனவு இல்ல இளா நிஜம் தான்...

இளமாறன் : அடிப்பாவி ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி கிள்ளி வச்சிருக்கியே, இங்க பாரு கை சிவந்துடுச்சி...

தன்ஷிகா : சாரி இளா ( கிள்ளுன இடத்தை தடவி விட்டா)

இளமாறன் : சரி டயர்டா இருப்ப போய் தூங்கு...

தன்ஷிகா : 😱 என்ன தூங்குறதா...

இளமாறன் : தூங்க தான சொன்னேன் அதுக்கு ஏன் ஷாக் ஆகுற...

தன்ஷிகா : இளா இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் சாதாரணமா தூங்குனு சொல்லுறீங்க...

இளமாறன் : கல்யாணம் ஆகிட்டாலும் நீ எனக்கு இன்னும் உன்னோட காதலை சொல்லல... சடங்கு, சம்பிரதாயம்னு நாம சேர கூடாது முழு மனசோட காதலோட தான் சேரனும் அதுவரைக்கு இது வேண்டாம்...

தன்ஷிகா : 😒😒😒 தன்ஷி இளா கிட்ட காதலை சொல்லலையே தவிர செயல்ல நிறைய முறை அவனை லவ் பண்ணுறதா காட்டிருக்கா அப்படி இருக்கும் போது இளா இப்படி சொல்லவும் தன்ஷிக்கு செம்ம கடுப்பாகிடுச்சி சோ எதுவும் பேசாம போய் படுத்துட்டா...

இளமாறன் : லைட் ஆஃப் பண்ணிட்டு டிம் லைட்ட போட்டுட்டு வந்து தன்ஷி பக்கத்துல படுத்தான்...

தன்ஷிகா : இளாவ மனசுக்குள்ள செம்மயா திட்டிட்டு இருந்தா...

இளமாறன் : அவளை இழுத்து அவன் மேல படுக்க வச்சி அவ தலைய கோதி விட்டான்...

தன்ஷிகா : அதான் எதுவும் வேண்டானு சொன்னீங்கள அப்பறம் ஏன் இப்படி பண்ணுறீங்க விடுங்க ( அவன்கிட்ட இருந்து துள்ளிகிட்டு வெளில வர பார்த்தா)

இளமாறன் : ஹேய் பேசாம தூங்கு தன்ஷி அது தான் வேண்டானு சொன்னேன், ஆனா உன்னை பக்கத்துல வச்சிகிட்டு கட்டி புடிக்காம தூங்க முடியுமா...

தன்ஷிகா : 😏 போங்க பேசாதீங்க இளா...

இளமாறன் : ஹேய் தன்ஷி மா கடமைக்காக இல்லாம மனசார சேரனும்னு நினைக்குறேன், அதுல என்னடி தப்பு இருக்கு...

தன்ஷிகா : ( அவன் மேல படுத்த படியே அவன் சட்டை பட்டனை புடிச்சி திருகிட்டு இருந்தா) சரி...

இளமாறன் : என்ன சரி...

தன்ஷிகா : நீங்க சொன்னதுக்கு சரி...

இளமாறன் : இப்ப கூட உன் லவ்வ சொல்ல மாட்டியா...

தன்ஷிகா : இவ்ளோ நடந்த பிறகும் சொல்லுவனு நினைச்சீங்களா நோ வே நான் ரொம்ப கோவமா இருக்கேன் 😏😏😏

இளமாறன் : 😄 சரி சரி தூங்கு ( அவ தலைய கோதி விட்டான்)

தன்ஷிகா : 😒 இன்னும் என் கோவம் போகல...

இளமாறன் : சரி காலைல சமாதானம் ஆகிக்கலாம் இப்போ தூங்கு ( அவ முதுகுல தட்டி குடுத்தான்)

தன்ஷிகா : ம்ம்ம் ( கொஞ்ச நேரத்துல இளாவ பாதி அணைச்சா மாதிரி படுத்து தூங்கிட்டா)

இளமாறன் : தன்ஷி தூங்குனதும் அவ நெத்தில முத்தம் குடுத்துட்டு அவனும் தூங்கிட்டான்...

அப்பறம் மறுநாள் இரண்டு பேரும் இளமாறன் வீட்டுக்கு போய்ட்டாங்க... அங்க போன பிறகு சொந்தகாரங்க வீட்டுக்கு விருந்துக்கு போறது, குலதெய்வ கோவிலுக்கு போறதுனு இரண்டு பேரும் பிஸியா இருந்தாங்க...

எல்லாம் முடிஞ்ச பிறகு தமிழ்மாறன் வீட்டுல இரண்டு நாள் தங்கிட்டு தன்ஷி, இளா சென்னை கிளம்பிட்டாங்க...

தொடரும்...

# Sandhiya.