எனக்குள் உறைந்தவளே - 69

இளா, தன்ஷி நல்லபடியா அவங்க வாழ்க்கைய தொடங்கிட்டாங்க...

மறுநாள் காலை,

தன்ஷிகா : இளா தோள்ல சாஞ்சி தூங்கிட்டு இருந்தா...

இளமாறன் : முதல்ல கண் விழிச்சான், அவனுக்கு நெருக்கமா இருந்த தன்ஷி நெத்தில முத்தம் குடுத்தான்...

தன்ஷிகா : ம்கூம் ( சினுங்கிட்டே திரும்பி படுத்தா)

இளமாறன் : தன்ஷி டைம் ஆச்சி எழுந்திரி டி...

தன்ஷிகா : போ இளா நைட் எல்லாம் நீங்க என்னை தூங்கவே விடல...

இளமாறன் : அடிப்பாவி ஆபிஸ் போக வேண்டாமா...

தன்ஷிகா : நான் வரல நீங்க மட்டும் போங்க...

இளமாறன் : ஏன்டி காலைல புருஷனுக்கு காபி குடுத்து குட்மார்னிங் சொல்லி எழுப்புவனு பார்த்தா இப்படி தூங்குறியே...

தன்ஷிகா : நீங்க போய் எனக்கு காபி போட்டு கொண்டு வாங்க...

இளமாறன் : கொழுப்பு டி உனக்கு ( நேரா பாத்ரூம் போய் பாத்டப் ஃபுல்லா தண்ணி நிரப்புனான்)

தன்ஷிகா : 😪😪😪 நல்லா தூங்கிட்டு இருந்தா...

இளமாறன் : அவளை அப்படியே அவன் இரண்டு கைகள்ல தூக்கிட்டான்...

தன்ஷிகா : 😪 எங்க தூக்கிட்டு போறீங்க...

இளமாறன் : அவளுக்கு பதில் சொல்லாம நேரா பாத்ரூம் உள்ள போய் பாத்டப்ல அவளை தூக்கி போட்டான்...

தன்ஷிகா : ஆஆஆ அம்மா ( அலறி அடிச்சி எழுந்தா)

இளமாறன் : 😂😂😂 சத்தமா சிரிச்சான்...

தன்ஷிகா : 😠😠😠 அவனையும் இழுத்து அந்த பாத்டப்லயே தள்ளி விட்டா...

இளமாறன் : உன்னை என்ன பண்ணுறேன் பாரு ( ஷவரை ஓபன் பண்ணி அவளை மொத்தமா நனைச்சான்)

தன்ஷிகா : அவளும் அவன் மேல தண்ணி அடிச்சி விளையாண்டா...

இவங்க இப்படி விளையாடிட்டு இருக்கும் போதே சூர்யா அவங்க ரூம்க்கு வெளில இருந்து கதவை தட்டுனான்...

தன்ஷிகா : அச்சோ சூர்யா கூப்பிடுறான்...

இளமாறன் : விடு டி கொஞ்ச நேரம் கதவை தட்டிட்டு போய்டுவான்...

தன்ஷிகா : பச் போய் என்னனு கேளுங்க...

இளமாறன் : சூர்யா தொடர்ந்து கதவை தட்டுனதால ட்ரெஸ் கூட மாத்தாம வேகமா போய் கதவை நிறந்தான்...

சூர்யா : இளாவ மேலேருந்து கீழ பார்த்தான்...

இளமாறன் : என்ன டா என்ன வேணும்...

சூர்யா : நேத்து கார்க்குள்ள பெய்ஞ்ச மழை இன்னைக்கு ரூம்க்குள்ளயும் வந்துட்டா அண்ணா இப்படி நனைஞ்சி நிக்குற 😉😉😉 ( கிண்டலா கேட்டான்)

இளமாறன் : பச் நீ ஏன்டா வந்த...

சூர்யா : எப்போதும் சீக்கிரமா எழுந்து எனக்கு காபி குடுக்குற அண்ணிமாவ இன்னைக்கு காணும் அதான் நானே உங்களுக்காக காபி போட்டு கொண்டு வந்துருக்கும்...

இளமாறன் : சரி குடு...

சூர்யா : ஆமா அண்ணிமா எங்க காணும் ( ரூம் உள்ள எட்டி பார்த்தான்)

இளமாறன் : குளிக்குறா டா என்கிட்ட குடு...

சூர்யா : சரி இந்தா ( அவன் கிட்ட காபி ட்ரேவ குடுத்துட்டு கிளம்பிட்டான்)

இளமாறன் : ட்ரெஸ் மாத்தலாம்னு கப்போர்டுல ட்ரெஸ் எடுத்துட்டு இருந்தான்...

தன்ஷிகா : இளா ட்ரெஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன் எடுத்து குடுங்க ( வெளில கை நீட்டி கேட்டா)

இளமாறன் : அவன் ட்ரெஸ்ஸை எடுத்து குடுத்தான்...

தன்ஷிகா : இளா நான் என்னோடதை கேட்டேன்...

இளமாறன் : அதுக்கெல்லாம் நேரம் இல்ல சீக்கிரம் மாத்திட்டு வா நான் குளிக்கனும்...

தன்ஷிகா : உங்களோட ஒரே இம்சையா போச்சு இளா ( அவன் குடுத்த ட்ரெஸ்ஸ வாங்கி மாத்திட்டு வந்தா)

இளமாறன் : 😂 என்ன டி சோள கொல்லை பொம்மை மாதிரி இருக்க...

தன்ஷிகா : அவன் சிரிக்கவும் கடுப்பாகி அப்படியே அவன் மேல பாய்ஞ்சா...

இதை எதிர்பார்க்காத இளா கட்டில்ல விழுந்தான் அவனுக்கு மேல தன்ஷி இருந்தா...

தன்ஷி எழுந்திரிக்கவும் இளா அவ விடாம ஹக் பண்ணிகிட்டான்...

தன்ஷிகா : பச் இளா விடுங்க...

இளமாறன் : நீ தானடி என் மேல வந்து விழுந்த நான் என்ன பண்ணுறது...

தன்ஷிகா : உங்க ட்ரெஸ் எனக்கு அவ்ளோ லூசா இருக்கு இதுக்கு தான் நான் என்னோடதை கேட்டேன், ஆனா நீங்க உங்களோடதை குடுத்ததும் இல்லாம சோள கொல்லை பொம்மைனு கிண்டல் வேற பண்றீங்களா...

இளமாறன் : அவளை பக்கத்துல தள்ளி விட்டு அவன் அவளுக்கும் மேல வந்தான்...

தன்ஷிகா : ( அவன் தலைல இருந்து தண்ணி சொட்டு சொட்டா அவ மேல விழுந்தது ) இளா தள்ளி போங்க...

இளமாறன் : அவளுக்கு இன்னும் நெருக்கமா போனான்...

தன்ஷிகா : இளா என்ன பண்றீங்க ( இமைகள் படபடக்க கேட்டா)

இளமாறன் : ( அவ கிட்ட போய் காது கிட்ட பேசுனான்) நைட் விட்டதை இப்போ ஆரம்பிக்கலாமா...

தன்ஷிகா : 😃😃😃 ச்சி போங்க இளா ( அவனை தள்ளி விட்டுட்டு எழுந்து அவ கப்போர்டுல போய் ட்ரெஸ் எடுத்தா)

இளமாறன் : ( அவளை பின்பக்கமா கட்டி புடிச்சி அவ தோள்ல முகத்தை புதைச்சான்) இரண்டு பேரும் ஆபிஸ்க்கு லீவ் போட்டுடுடலாம் டி...

தன்ஷிகா : ம்கூம் உங்களை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது ( அவனை தள்ளிட்டே போய் பாத்ரூம் உள்ள விட்டு கதவை வெளில லாக் பண்ணா)

இளமாறன் : தன்ஷி கதவை திற டி ( உள்ள இருந்து கத்துனான்)

தன்ஷிகா : குளிச்சிட்டு வாங்க ஆபிஸ்க்கு டைம் ஆச்சி...

இளமாறன் : சரி உன் கொழுந்தன் உனக்காக காபி போட்டு கொண்டு வந்து குடுத்தான் மறக்காம குடிச்சிடு...

தன்ஷிகா : ம்ம்ம்...

அப்பறம் ஒருவழியா இரண்டு ஆபிஸ் கிளம்பி போய்ட்டாங்க...

இரண்டு மாதத்திற்க்கு பிறகு,

ஜெனிக்கு இது ஏழாவது மாசம், சந்தீப் சொன்னா மாதிரி பெரிய மண்டபத்துல சொந்தபந்தம், பிஸ்னஸ் பார்ட்னர்ஸ், ஆபிஸ் ஸ்டாஃப்ஸ்னு எல்லாருக்கும் சொல்லிருந்தாங்க...

மண்டபத்துல ஒரு ரூம்ல ஜெனிய ப்யூட்டிசியன் தயார் பண்ணிட்டு இருந்தாங்க, அவ கூடவே தன்ஷி இருந்தா...

தன்ஷிகா : ஜெனி சந்தீப் அன்னைக்கு சொல்லும் போது கூட சும்மா சொல்றாருனு நினைச்சேன் ஆனா இன்னைக்கு நிஜமாவே எல்லாரையும் கூப்பிட்டு பன்க்ஷன் வச்சிருக்காரே...

ஜெனி : எல்லாம் அவர் குழந்தைக்காக தான் எனக்காக இல்ல...

தன்ஷிகா : இல்ல டி அவர் உன்னை லவ் பண்ணுறாருனு நினைக்குறேன்...

ஜெனி : அதெல்லாம் இல்ல தன்ஷி அவர் குழந்தை என் வயித்துல இருக்குறதால அப்படி நடந்துக்குறாரு வேற ஒன்னும் இல்ல...

தன்ஷிகா : திருவிழால நீ வந்து அவர் குழந்தை உன் வயித்துல வளர்றதா சொன்னதும் அவர் ஒத்துக்காம இது அவரோட குழந்தை இல்லனு சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்காம இருந்துருந்தா என்னடி பண்ணிருப்ப...

ஜெனி : 😱 தன்ஷி ( அவளை அதிர்ச்சியா பார்த்தா )

தன்ஷிகா : அவர் அப்படி சொல்லிருந்தா நாங்க சும்மா விட்டுருக்க மாட்டோம் டி, ஆனா அவர் ஏன் அப்படி சொல்லல...

ஜெனி : அப்போ அவர் அம்மாக்காக சொல்லல...

தன்ஷிகா : சரி அப்படியே வச்சிப்போம், அவர் அம்மா இல்லாத நேரம் எப்படி நடந்துக்குறாரு...

ஜெனி : கல்யாணம் ஆனா புதுசுல எரிஞ்சி விழுந்தாரு ஆனா இப்போ அப்படி இல்ல...

தன்ஷிகா : அப்போ நீயே ஒத்துக்குறியா அவருக்கு உன்னை புடிக்கும்னு..

ஜெனி : இப்பவும் சொல்லுறேன் அவருக்கு என்மேல விருப்பம் இல்ல, முதல்ல அவர் அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிகிட்டாரு அப்பறம் அவர் குழந்தைக்காக நல்லா நடந்துக்குறாரு...

தன்ஷிகா : அப்போ குழந்தை பிறந்த பிறகு உன்மேல அன்பா இருந்தா ஒத்துப்பியா...

ஜெனி : 😄 அன்பாவா? அவரா? சான்சே இல்ல...

தன்ஷிகா : ஏன்டி அன்னைக்கு வந்த எங்களுக்கே அவரோட மாற்றம் நல்லா தெரியுது! கூட இருக்குற உனக்கு தெரியாதா...

ஜெனி : ஒருவேளை கூடவே இருக்குறதால தெரியலையோ என்னவோ...

தன்ஷிகா : அடிப்போடி...

அப்போ ரூம் கதவை தட்டிகிட்டு சந்தீப் உள்ள வந்தான்...

சந்தீப் : அவன் கொண்டு வந்த மாதுளை ஜூஸை ஜெனி கிட்ட குடுத்தான்...

ஜெனி : அவனையும் ஜூஸையும் மாறி மாறி பார்த்தா...

சந்தீப் : ஃபன்க்ஷன் முடிய லேட் ஆகுமாம் இப்போ தான் மாம் சொன்னாங்க அதான் ஜூஸ் கொண்டு வந்தேன் குடி...

ஜெனி : அவளுக்கும் தன்ஷி கூட பேசுனது தொண்டை வறண்டு போய்ருந்ததால வாங்கி குடிச்சா...

சந்தீப் : மேம் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் ( ப்யூட்டிசியன் கிட்ட கேட்டான்)

ப்யூட்டிசியன் : கொஞ்ச நேரம் தான் சார் முடிஞ்சிடும்...

சந்தீப் : சீக்கிரம் முடிங்க அவ எவ்ளோ நேரம் இப்படியே உட்கார்ந்துருக்க முடியும் இடுப்பு வலிக்கும்ல...

ப்யூட்டிசியன் : ஓகே சார்...

சந்தீப் : ஜெனி குடிச்சிட்டு வச்ச க்ளாஸ்ஸ எடுத்துட்டு வெளில போய்ட்டான்...

தன்ஷிகா : 😄 ஆஹா எவ்ளோ அக்கரை பாரு டி அவருக்கு உன்மேல...

ஜெனி : அவர் குழந்தைக்கு பசிக்குமேனு கொண்டு வந்துருக்காரு அவ்ளோதான்...

தன்ஷிகா : 😏😏😏 உன்னை எல்லாம் திருத்த முடியாது...

ஜெனி : தன்ஷி என்ன டி...

தன்ஷிகா : நான் சொன்னதை எல்லாம் தனியா இருக்கும் போது யோசிச்சி பாரு உனக்கே புரியும்...

ஜெனி : ம்ம்ம்..

அப்பறம் ஜெனிய மேடைக்கு அழைச்சிட்டு போய் சேர்ல உட்காரவச்சாங்க...

முதல்ல பார்வதி ஜெனி கழுத்துல மாலை போட்டு சந்தனம் குங்குமம் வச்சி விட்டு வேம்பு காப்பும் வெள்ளி காப்பும் அவ கைகள்ல போட்டு விழாவ ஆரம்பிச்சி வச்சாங்க...

அடுத்து சந்தீப் பன்னீர் எடுத்து அவ தலைல தெளிச்சிட்டு சந்தனத்தை எடுத்து அவ கன்னம், கைல வச்சிட்டு குங்குமத்த எடுத்து அவ நெத்திலயும் வகுடுலயும் வச்சி விட்டான் அப்பறம் அவன் பேண்ட் பாக்கெட்ல இருந்து ஒரு பாக்ஸ் எடுத்து அதுல இருந்த தங்க வளையல்களை அவ கைல போட்டு விட்டான்...

எல்லாம் முடிஞ்சதும் சந்தீப் அவ பக்கத்துலயே நின்னுகிட்டான்...

அடுத்து பெண்கள் ஒவ்வொருத்தரா வந்து ஜெனிக்கு சந்தனம், குங்குமம் வச்சி அவளுக்கு கண்ணாடி வளையல் போட்டு விட்டாங்க...

மத்த எல்லாரும் ஜெனிக்கு கிஃப்ட்ஸ் கொண்டு வந்து குடுத்தாங்க...

அப்பறம் ஏழு வகையான வளைகாப்பு சாப்பாடு வந்த எல்லாருக்கும் பரிமாறப்பட்டது...

எல்லாம் முடிஞ்சதும் மண்டபத்தை காலி பண்ணிட்டு எல்லாரும் வீட்டுக்கு போய்ட்டாங்க...

இளா, தன்ஷி, சூர்யா மட்டும் அவங்க கூட வீட்டுக்கு போனாங்க மத்த எல்லாரும் தஞ்சாவூர்க்கும் சென்னைக்கும் கிளம்பிட்டாங்க...

பார்வதி, தன்ஷி : எல்லாருக்கும் ஜூஸ் கொண்டு வந்து குடுத்தாங்க...

இளமாறன் : அத்தை எப்போ ஜெனிய அழைச்சிட்டு போறது...

பார்வதி : அவ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் பா நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ஈவ்னிங் போகலாம்...

சந்தீப் : மாம் எங்க அழைச்சிட்டு போகனும்னு பேசுறீங்க ஹாஸ்பிட்டல்க்கா? ஆனா செக்கப் தான் முடிஞ்சிடுச்சே...

( அவனே கேள்வி கேட்டு அவனே பதிலும் சொன்னான்)

பார்வதி : ஹாஸ்பிட்டல் இல்லடா வளைகாப்பு முடிஞ்சதும் பிரசவத்துக்கு அந்த பொண்ணை அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போவாங்க அதை பத்தி தான் பேசிட்டு இருக்கோம்...

சந்தீப் : ஆனா ஜெனிக்கு தான் அம்மா, அப்பா சொந்த வீடுனு எதுவும் இல்லயே...

அவன் அப்படி சொல்லவும் எல்லாருக்கும் அதிர்ச்சியாகிடுச்சி...

ஜெனி : தன்ஷிய பார்த்து கண் காட்டுனா ( இவன் சுயரூபம் இதுதானு சொல்லுறா மாதிரி)

பார்வதி : 😠 சந்தீப் என்ன பேச்சு பேசுற...

சந்தீப் : மாம் நான் எதுவும் தப்பா சொல்லல இப்போ தான் எங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சுல இனிமேல் இதுதான அவ வீடு அப்போ நாம தான அவளை பார்த்துக்கனும்...

இப்போ தான் எல்லாருக்கும் நிம்மதியா இருந்தது...

தன்ஷிகா : ஜெனிய பார்த்து புருவத்தை உயர்த்துனா 😄😄😄

ஜெனி : 😏 உதட்டை சுளிச்சா...

இளமாறன் : நீங்க சொல்லுறது எல்லாம் சரிதான், ஆனா நான் தான் அண்ணன்னு ஒருத்தன் இருக்கனே அப்போ நான் அழைச்சிட்டு போகலாம் தான...

சந்தீப் : மாம் அப்போ ஜெனி அங்க போய்டுவாளா குழந்தை பிறந்து தான் வருவாளா...

பார்வதி : இளா அப்படி தான் சொன்னான் நான் தான் ஒரு பத்து நாள் மட்டும் அழைச்சிட்டு போய்ட்டு வந்துடுனு சொல்லிருக்கேன்...

சந்தீப் : 😖😖😖 பத்து நாளா...

பார்வதி : ஆமா டா, சரி நீயும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு சீக்கிரம் கிளம்பி வா...

சந்தீப் : என்னை எங்க போக சொல்லுறீங்க மாம்...

பார்வதி : நீயும் தான்டா ஜெனி கூட போகனும் அதான் சம்பிரதாயம் இன்னைக்கு போய்ட்டு நாளைக்கு வந்துடு...

சந்தீப் : 😍 மாம் அப்போ நானும் ஜெனி கூட போகலாமா...

பார்வதி : அதை தான டா நானும் சொன்னேன்...

சந்தீப் : அப்போ நானும் அவ கூடவே பத்து நாள் தங்கிட்டு கூடவே அழைச்சிட்டு வந்துடவா ( ஆசையா கேட்டான்)

இளமாறன் : 😱 சந்தீப் இந்த ஒரு நாள்க்கே அவன் வீட்டுல வந்து தங்க மாட்டானு நினைச்சான் ஆனா இப்போ பத்து நாள் தங்குறனு சொன்னது அவனுக்கு அதிர்ச்சியா இருந்தது...

ஷ்யாம் : டேய் நீ அங்க பத்து நாள் போய்ட்டா ஆபிஸ்ஸ யார் பார்த்துக்குறது...

சந்தீப் : நீங்க தான் டாட் பார்த்துக்கனும்...

ஷ்யாம் : டேய் என்னடா இப்படி சொல்லிட்ட...

சந்தீப் : டாட் இத்தனை வருஷம் நீங்க தான பார்த்துகிட்டீங்க ஒரு பத்து நாள் பார்த்துக்க மாட்டீங்களா...

ஷ்யாம் : சரி டா மகனே உனக்காக போறேன்...

அப்பறம் எல்லாரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் டீ குடிச்சிட்டு இளா, தன்ஷி, சூர்யா ஒரு கார்லயும் சந்தீப், ஜெனி, சந்தோஷ் ஒரு கார்லயும் சென்னைக்கு கிளம்பிட்டாங்க...

தொடரும்...

# Sandhiya.