எனக்குள் உறைந்தவளே - 74

சந்தோஷ், தீபனா ஒன்னா தோட்டத்துல உட்கார்ந்து பேசிட்டு இருந்ததை மொத்த குடும்பமும் பார்த்துட்டாங்க...

அஞ்சலி : 😠 தீபனா என்னடி இதெல்லாம்! வந்த இடத்துல ஏன் எங்க மானத்தை வாங்குற ( அவளை அடிக்குறா மாதிரி கிட்ட போனா )

அஞ்சலி தீபனாவ அடிக்க வரவும் சந்தோஷ் அவளுக்கு முன்னாடி வந்தான், தீபக் அஞ்சலி கைய புடிச்சி தடுத்துட்டான்...

தீபக் : மா எதுக்கு இப்போ அவளை அடிக்க போறீங்க, லவ் பண்ணுறது  அவ்ளோ பெரிய தப்பா...

அஞ்சலி : நாங்க யாரும் காதல்க்கு எதிரி இல்லடா ஆனா வந்த இடத்துல எப்படி நடந்துக்கனும்னு ஒரு வரைமுறை இல்லயா?

அர்ஜூன் : அஞ்சு சும்மா இரு, தீபு இங்க அப்பாகிட்ட வா டா...

தீபனா : சந்தோஷ் பின்னால இருந்து அர்ஜூன் கிட்ட போனா...

அர்ஜுன் : நீ சந்தோஷ்ஷ லவ் பண்ணுறியா...

தீபனா : ஆமா பா...

அர்ஜுன் : ஏன் எங்ககிட்ட சொல்லல...

தீபனா : எதாவது சொல்லுவீங்களோனு பயமா இருந்தது பா அதான்...

அர்ஜுன் : சரி விடு ஃபீல் பண்ணாத...

பார்வதி : அஞ்சலி எங்களை மன்னிச்சிடு மா...

அஞ்சலி : அய்யோ அண்ணி நீங்க ஏன் சாரி சொல்லுறீங்க...

பார்வதி : இவங்க லவ் பண்ணுற விஷயம் எனக்கு முன்னாடியே தெரியும், நானே உங்ககிட்ட முறைபடி தீபனாவ பொண்ணு கேட்கலாம்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சி...

தமிழ்மாறன் : தெரிஞ்ச வரை நல்லது தான் சந்தோஷ் ரொம்ப நல்ல பையன் நாமலும் எல்லாரும் இன்னைக்கு இங்க தான் இருக்கோம் இன்னைக்கே நல்ல நேரம் பார்த்து தட்டு மாத்திகிட்டா கல்யாணத்தை பெருசா பண்ணிக்கலாம்...

அர்ஜுன், அஞ்சலி நீங்க என்ன சொல்லுறீங்க, தீபனா உங்க பொண்ணு நீங்க தான் முடிவு பண்ணனும்...

அர்ஜுன் : எனக்கு சம்மதம் மாமா...

தமிழ்மாறன் : பாப்பா நீ என்னடா சொல்லுற...

அஞ்சலி : அதான் எல்லாருக்கும் புடிச்சிருக்குல எதாவது பண்ணுங்க...

தீபனா : மா அப்படிலாம் சொல்லாதீங்க உங்க விருப்பம் தான் எனக்கு முக்கியம்...

அஞ்சலி : ( தீபனா காதை புடிச்சி திருகுனா) அப்போ லவ் பண்ணும் போது ஏன்டி பர்மிஷன் வாங்கல...

தீபனா : ஆஆஆ அம்மா வலிக்குது...

தீபக் : அம்மா விடுங்க அவ பாவம்...

அஞ்சலி : ( தீபக் காதை புடிச்சி திருகுனா) நீயும் தான டா அவளுக்கு கூட்டு களவாணி...

தீபக் : அம்மா நாங்க பாவம் எங்களை விட்டுடுங்க...

அர்ஜுன் : அஞ்சு விடு டி...

அஞ்சலி : உங்களுக்காக விடுறேன்...

தீபனா : மாமா முதல்ல அண்ணாக்கு கல்யாணம் ஆகட்டும் அப்பறம் நான் பண்ணிக்குறேன் ( தமிழ் கிட்ட போய் சொன்னா)

தீபக் : இல்ல மாமா ஒரு நண்பனா சந்தோஷ்க்கும் அண்ணனா தீபனாக்கும் தேவையான எல்லா உதவியும் நான் கூடவே இருந்து பண்ணனும்னு நினைக்குறேன் அதனால இப்போ இவங்க கல்யாணத்தை முடிச்சிடலாம்...

தீபனா : மாமா அண்ணனுக்கு இன்னும் மேரேஜ் முடியாம நான் மட்டும் எப்படி பண்ணிக்குறது...

தமிழ்மாறன் : தீபு குட்டி உன் அண்ணன், அபர்ணா அப்பறம் அருண், ரிதண்யா இவங்களுக்கு ஒரே மேடைல ஒரு வருஷத்துக்கு அப்பறம் பண்ணிக்கலாம் இப்போ நீ உன் கல்யாணத்துக்கு ரெடியாகு டா...

தீபனா : சரிங்க மாமா...

அப்பறம் தட்டு மாத்துறதுக்கு தேவையான எல்லா பொருளும் வாங்கிட்டு சந்தோஷ், தீபனாக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வந்தாங்க...

நல்ல நேரம் பார்த்து ஐயரை வர வச்சி நிச்சயத்துக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் பண்ணாங்க...

ஷ்யாம், பார்வதி, அர்ஜுன், அஞ்சலிய எதிர் எதிர்ல உட்கார வச்சி நிச்சய பத்திரிக்கை வாசிச்சி அவங்கள்ட கையெழுத்து வாங்குனதும் இரண்டு பேரையும் தட்டு மாத்திக்க சொல்லி சந்தோஷ், தீபனா கைல புது ட்ரெஸ் குடுத்து மாத்திட்டு வர சொன்னாங்க...

அவங்க ட்ரெஸ் மாத்திட்டு வந்ததும் இரண்டு பேரையும் மோதிரம் மாத்திக்க சொல்லி பெரியவங்க எல்லாரும் சந்தனம், குங்குமம் வச்சி ஆசிர்வாதம் பண்ணாங்க...

ஈவ்னிங் நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் அன்னைக்கு நைட்டே எல்லாரும் ஊருக்கு போய்ட்டாங்க...

சில நாட்களுக்கு பிறகு,

சென்னை,

தன்ஷிகா : எதையோ யோசிச்சிட்டு படுத்துருந்தா...

இளமாறன் : ( அவ பக்கத்துல வந்து உட்கார்ந்தான்) தன்ஷி என்ன யோசிக்குற...

தன்ஷிகா : ஒன்னும் இல்லங்க...

இளமாறன் : எதுவா இருந்தாலும் சொல்லு மா...

தன்ஷிகா : ஜெனிக்கு சுதர்சன் பிறக்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டுட்டாளங்க...

இளமாறன் : அதைபத்தி யோசிக்காத மா...

தன்ஷிகா : அது இல்லங்க அவ அவ்ளோ கஷ்டப்பட்டும் குழந்தை பிறந்ததும் அவன் முகத்தை பார்த்து அழகா சிரிச்சா அப்போ அவப்பட்ட கஷ்டம் எல்லாம் காணாம போய்டுச்சி...

நானே அவ கத்தவும் பயந்துட்டேன்ங்க ஆனா அப்பறம் அவளையும் குழந்தையயும் பார்த்ததும் அவ்ளோ ஹேப்பியா இருந்தது...

இளமாறன் : நான் எப்போதும் உன்கூடவே இருப்பேன் அதை மட்டும் மனசுல வச்சிக்க, நான் இருக்குற வரை உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன் நீயும் நம்ம குழந்தையும் ஆரோக்கியமா இருப்பீங்க...

தன்ஷிகா : உங்களுக்கு என்ன குழந்தை வேணும் இளா...

இளமாறன் : என் அம்மாவே எனக்கு மகளா பிறந்தா நல்லா இருக்கும் தன்ஷி...

தன்ஷிகா : கண்டிப்பா நமக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் அதுவும் என் மாமியார் தான் எனக்கு மகளா வர போறாங்க...

இளமாறன் : 😄😄😄 லவ் யூ தன்ஷி மா ( அவளை சைடா ஹக் பண்ணான்)

இரண்டு பேரும் அப்படியே தூங்கிட்டாங்க...

கோயம்பத்தூர்,

சந்தீப் : பெட்ல சாஞ்சி உட்கார்ந்து ஆபிஸ் விஷயமா எதோ ஃபோன் பேசிட்டு இருந்தான்...

ஜெனி : சுதர்சனை தூக்கிட்டு வந்து அவன் பக்கத்துல படுக்க வச்சி பார்த்துக்க சொல்லிட்டு வெளில போய்ட்டா...

குழந்தை கொஞ்ச நேரத்துல அழ ஆரம்பிக்கவும் ஃபோன்ன கீழ வச்சிட்டு குழந்தைய தூக்க தெரியாம தூக்கி மடில வச்சி சமாதானம் பண்ணான்...

திரும்பவும் ஃபோன் வரவும் அட்டன் பண்ணி பேசிட்டே குழந்தைக்கு தட்டி குடுக்கவும் குழந்தை அவன் மடிலயே தூங்கிட்டான்...

அப்பறம் குழந்தைய பெட்ல படுக்க வச்சி ஒரு பக்கம் பில்லோ வச்சி இன்னொரு பக்கம் இவன் படுத்துகிட்டான்...

வேலைய முடிச்சிட்டு ஜெனி வந்ததும் குழந்தைக்கு ஒரு முத்தம் குடுத்து தூக்கி தொட்டில்ல படுக்க வச்சிட்டு சந்தீப் நெத்திலயும் முத்தம் குடுத்தா...

சந்தீப் : ( அவளை இழுத்து அப்படியே ஹக் பண்ணிகிட்டான்) நெத்தில இல்ல உதட்டுல குடு...

ஜெனி : 😌 அச்சோ நீங்க இன்னும் தூங்கலையா...

சந்தீப் : இல்ல நீ என்ன பண்ணுறனு பார்க்கலாம்னு தூங்குறா மாதிரி நடிச்சேன்...

ஜெனி : பச் விடுங்க என்னை...

சந்தீப் : நான் கேட்டா மாதிரி உதட்டுல முத்தம் குடு விடுறேன்...

ஜெனி : முடியாது...

சந்தீப் : சரி நான் தரேன் ( அவ கன்னம், காது, மூக்கு, உதடு, கழுத்துனு கொஞ்சம் கொஞ்சமா கீழ இறங்கிட்டே போனான், அப்பறம் எதோ நியாபகம் வந்தவனா டக்குனு அவளை விட்டு விலகுனான்) சாரி சாரி ஜெனி எதோ உணர்ச்சி வேகத்துல அப்படி நடந்துகிட்டேன், உன் விருப்பம் தெரிஞ்சிக்காம இப்படிலாம் நடந்துகிட்டேன் மன்னிச்சிடு மா...

ஜெனி : இப்போ ஏன் எதோ கொலை குத்தம் பண்ணா மாதிரி இவ்ளோ பதட்டப்படுறீங்க...

சந்தீப் : இல்ல மா முதல் முறை தான் உன் விருப்பம் இல்லாம கட்டாயப்படுத்தி இப்படி பண்ணேன்,  ஆனா இப்போ உன் சம்மதம் கேட்காமலே நான் நடந்துகிட்டது தப்பு தான...

ஜெனி : போயா விட்டா லூசு மாதிரி பேசிட்டே போவ ( அவனை பேச விடாம லிப்லாக் பண்ணிட்டா )

இந்த முறை கட்டாயம் இல்லாம காதலோட அவங்க வாழ்க்கைய தொடங்கிட்டாங்க...

தஞ்சாவூர்ல மீத்ராக்கு ஏழாவது மாசம் ஆரம்பிச்சதும் சொந்தபந்தத்தை கூட்டி வளைகாப்பு பண்ணி கதிரேசன் அவன் வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டான்...

சந்தோஷ், தீபனாக்கு இரண்டு மாசத்துல கல்யாண தேதி குறிச்சி அதற்கான வேலையயும் ஆரம்பிச்சிட்டாங்க...

தொடரும்...

# Sandhiya.