கேள்விகள்
நள்ளிரவை நெருங்கி கொண்டு இருக்க...
ஏதோ மனதில் சொல்ல முடியாத கவலையோ இல்லை அறையின் புழுக்கமோ தெரியவில்லை...
என் உறக்கத்தை கெடுத்தது... உறக்கமின்றி தவித்தேன்...
என் தலையணை எடுத்து கொண்டு மாடிக்கு சென்றேன்...
கருவிழிகள் போல் இருள் சூழ்ந்து அங்காங்கே ஏதோ வரைந்தது போல் வெண்மேகம் படர்ந்து வைரத்தை நட்டு வைத்தது போல் நட்சத்திரம் பரவி இருந்தது...
சுற்றும் முற்றும் தேடினேன்... கண்ணில் அகப்படவில்லை நிலா...
சில்லென்று வீசிய காற்று ஏதோ சொல்ல முடியாத உணர்வை தர... உடலுக்கும் மனதிற்கும் இதமாக இருக்க...
கைகளை விரித்து காற்றை வரவேற்று உள் வாங்கி கொண்டேன்...
அவ்ளோ நேரம் வராத தூக்கம் இப்போது வர... அயரந்து தூங்கினேன்...
கூவு....கூவு...
கூவு...கூவு...
குயிலின் சத்தம் என் காதில் விழ... தூக்கம் கலைந்து கண் விழித்து பார்த்தேன்... அருகில் இருந்த மின்கம்பியில் குயில் அமர்ந்து கூட்பாடு போட்டது...
என் mobile ஐ எடுத்து மணியை பார்த்தேன்...
5.30...
எழுந்து சோம்பல் முறித்து கொண்டு தெருவை பார்த்தேன்...
பால் கறந்து கொண்டு அனைவரும் பால் நிலையத்திற்கு சென்று கொண்டு இருந்தனர்...
என் தலையணையை எடுத்து கொண்டு கீழே இறங்கினேன்...
பால் ஐ எடுத்து அந்த வழியே சென்ற ஒருத்தரை என்னை பார்த்து "என்ன கிருஷ்ணா மாடில தூக்கமா..."என்று கேட்க...
நா தலையை ஆட்டி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்...
இன்னும் என் கண்ணில் சிறிது தூக்கம் ஒட்டி கொண்டு இருக்க... கட்டில் விழித்தேன்...
ஏதோ ஒரு சத்தம் என் உறக்கத்தை கலைக்க... எழுந்து கண்ணை தேய்த்து கொண்டே மணியை பார்த்தேன்...
6.30...
வெளியே வந்து எட்டி பார்த்தேன்...
குடிநீர் குழாய் இரு பெண்கள் குடத்துடன் சண்டையிட்டு கொண்டு இருக்க...
"வழக்கமான சண்டை தானே.."என்று நினைத்து கொண்டு காலை கடனை முடித்து கொண்டு வாசலை பெருக்கி கொண்டு இருந்தேன்...
எதிர் வீட்டுக்காரர் பல் துலக்கி கொண்டே "என்ன கிருஷ்ணா காலகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி இருந்தா இந்த வேலை எல்லாம் உன் பொண்டாட்டி பாத்து இருப்பா ல...இப்ப பாரு நீ கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க...சொன்னா கேளு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ..."என்று சொல்ல...
அவருக்கு புன்னகையை பதிலாக தந்து விட்டு வீட்டிற்குள் சென்றேன்...
சமையலறைக்குள் நுழைந்து என்ன சமைப்பது என்று யோசித்தேன்... ஏனோ சமைக்க தோணவில்லை...
கடையில் சாப்பிடலாம் னு முடிவெடுத்து கொண்டு TV on செய்து பாடலை வைத்து விட்டு ராத்திரி சாப்பிட்ட தட்டை கழுவி கலைந்து இருந்த பொருட்களை இருந்த இடத்தில் வைத்து வீட்டை கூட்டி குப்பை அள்ளி கொட்டி விட்டு குளித்து கிளம்ப ஒரு மணி நேரம் ஆனது...
வீட்டை பூட்டி விட்டு என் வண்டியை எடுத்து கொண்டு தெருவிற்கு வர...
இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஒரு பெண்மணி தன் குழந்தையை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தவள் என்னை கண்டதும் "என்ன கிருஷ்ணா வேலைக்கு கிளம்பிட்டீயா..."என்று கேட்க...
"ஆமா..."என்பது போல் தலையை ஆட்ட...
அந்த பெண்மணி "நீ போற வழி தானே school இருக்கு... என் பிள்ளைய விட்டுறேன்..."என்று கேட்க...
வேறு வழி இன்றி குழந்தையை அழைத்து சென்று பள்ளியில் விட்டுட்டு சாப்பிட கடைக்கு சென்றேன்...
ஒருவர் வந்து " என்ன சாப்டுறீங்க..."என்று கேட்டார்...
"ரெண்டு இட்லி ஒரு தோசை..."என்று சொல்லி கொண்டு எனக்குள்ளேயே சிரித்து கொண்டேன்...
சாப்டு முடித்து bill கட்டி விட்டு நான் வேலை பார்க்கும் agency க்குள் நுழைந்தேன்...
என்னை கண்டு அனைவரும்..."Good morning..." என்று சொல்ல...
நானும் பதிலுக்கு "Good morning..."என்று சொல்லி கொண்டு supervisor room க்கு சென்றேன்...
அனுமதி பெற்று அறைக்குள் நுழைந்து "நா எந்த area line போய் order எடுக்கனும்..."என்று கேட்டேன்...
அவர் சொன்ன area வுக்கு கிளம்பினேன்...
அங்கே bill அடித்து கொண்டு இருந்த இளம்பெண் என்னை பார்த்ததும் "Good morning கிருஷ்ணன் sir... சாப்டீங்களா..."என்று கேட்டாள்...
"ம்ம்ம்... சாப்டேன் மா..."என்று order note ஐ எடுத்து நகர...
"கிருஷ்ணன் sir... பாத்து போயிட்டு வாங்க..."என்றாள் அந்த இளம்பெண்...
அந்த பெண்ணை பார்த்து மெலிதாக புன்னகையே உதிர்த்து விட்டு கிளம்பினேன்...
வண்டியில் செல்லும் போது எனக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு...
முகம் முழுவதும் சந்தோஷம் பரவியே இருந்தது...
நான் Order எடுக்க போன இடம் எல்லாம் அனைவரும் என்னிடம் கேட்டது " என்ன பா கிருஷ்ணா... இன்னக்கி என்ன பா விசேஷம்... உன்னோட முகம் பளிச்சுன்னு இருக்கு..."என்று தான் கேட்டாங்க...
கேட்ட எல்லாருக்கும் வழக்கம் போல சிரிப்பை மட்டுமே பதிலா காட்டிட்டு வந்துட்டேன்...
Line முடித்து agency சென்று order note ஐ bill அடித்துக்கும் அந்த இளம் பெண்ணிடம் கொடுத்தேன்...
அந்த பெண் அதை வாங்கி கொண்டு "நாளைக்கி போடலாம் sir..."என்று சொல்ல...
"சரி மா..."என்று சொல்ல...
அந்த பெண் என்னையே உற்று பார்த்து விட்டு "கிருஷ்ணன் sir... உங்க முகத்துல ஒரு பிரகாசம் தெரியுதே..."என்று கேட்க...
அதற்கும் சிரிப்பை மட்டுமே தந்து விட்டு வீட்டிற்கு கிளம்பினேன்...
கடையில் சாப்டு வீட்டிற்கு வந்து மணியை பார்க்க...
8.30
அங்கே இருந்த sofa வில் அமர்ந்து கண் மூடினேன்...
காலையில் இருந்து என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி எல்லாம் என் காதில் விழுந்தது...
"என்ன கிருஷ்ணா... மாடில தூக்கமா..."
இந்த கேள்வி ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காக கேட்கப்பட்ட ஏதார்த்தமான கேள்வி....
"என்ன கிருஷ்ணா காலகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி இருந்தா இந்த வேலை எல்லாம் உன் பொண்டாட்டி பாத்து இருப்பா ல...இப்ப பாரு நீ கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க...சொன்னா கேளு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ..."
இந்த கேள்வி அவனிடம் இருக்கிறது என்னிடம் என்பதை குத்தி காட்டுவதற்காக கேட்கப்பட்ட நக்கலான கேள்வி...
"என்ன கிருஷ்ணா வேலைக்கு கிளம்பிட்டீயா..."
இந்த கேள்வி தன் குழந்தைகளை பள்ளி அழைத்து செல்ல சிரமப்பட்டு என்னுடன் அனுப்பதற்காக கேட்கப்பட்ட பொய்யான கேள்வி...
"என்ன சாப்டுறீங்க..."
இந்த கேள்வி தன் வேலையே அது தான் கேட்க வேண்டுமே என்பதற்காக கேட்கப்பட்ட கடமைக்கான கேள்வி...
இந்த கேள்வி அனைத்தும் எனக்கு புதியதல்ல...பழகி போனது...
ஆனா...
அந்த பெண்...
"சாப்டீங்களா..."
இந்த கேள்வியே எனக்கு வித்தியாசம் தான்...
யாரும் இது போல் கேட்டது இல்லை...
கடமைக்காக நக்கலுக்காக பொய்யான எதார்த்தமான இந்த மாதிரியான கேள்விக்குள்ளேயே சுற்றி இருந்த என் வாழ்க்கையில்...
புதிதான ஒரு கேள்வி...
அதுவே எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது...
"அக்கறையான கேள்வி"
அவள் கேட்டதில் உண்மையா அக்கறையை பார்த்தேன்...
அதுவே என் சந்தோஷத்திற்காக காரணம்...
அந்த சந்தோஷத்துடன் படுக்கையில் படுத்தேன்...
படுத்தவுடன் உறங்கி போனேன்...
# nancy
'முற்றும்
0 Comments