மைவிழி பார்வையிலே - சிறு கதை
- part 2
கௌதம், மீரா, கார்த்திக், கயல் நாலு பேருக்குமே இது முதல் வருஷத்தோட முதல் நாள் காலேஜ் அதனால க்ளாஸ் எடுக்கல வெறும் இன்ட்ரொடக்சன் மட்டுமே நடந்துச்சி...
மதியம்,
கயல் : கேண்டீன்ல உட்கார்ந்து சாக்லேட் சாப்பிட்டுட்டு இருந்தா...
கௌதம், கார்த்திக், மீரா மூனு பேரும் அப்போ தான் கேண்டீன்க்கு வந்தாங்க...
கார்த்திக் : ஹேய் கயல் அங்க இருக்கா வாங்க நாமலும் அங்க போலாம்...
கௌதம் : காலைல என்னை தென்னைமரம்னு சொன்னாள வாங்க அவளை ஒருவழி பண்ணுறேன்...
மீரா : அண்ணா அந்த பொண்ண பார்த்தா பாவமா இருக்கு வீணா ப்ரச்சனை பண்ணாத...
கார்த்திக் : யாரு அவ பாவமா! விட்டா உன்னையே வித்துடுவா, இப்போ தான இங்க வந்துருக்கீங்க போக போக உங்களுக்கே தெரியும்...
( பேசிட்டே கயல் இருந்த டேபிள்ல போய் உட்கார்ந்தாங்க)
கௌதம் : அவ கைல உள்ள சாக்லேட்ட புடுங்குனான்...
கயல் : 😣😣😣 ஆஆஆ என் சாக்லேட்...
கௌதம் : ஆமா உன்னோடது தான்...
கயல் : 😐 பச் குடுங்க...
கௌதம் : முடியாது...
கயல் : அண்ணா வாங்கி குடுங்க ( கார்த்திக் கிட்ட சொன்னா)
கௌதம் : வாங்குனது நான் அவனை ஏன் நடுவுல இழுக்குற...
கயல் : 😓 என்ன வேணும் உங்களுக்கு ஏன் இப்படி பண்ணுறீங்க...
கௌதம் : எங்க மூனு பேருக்கும் மூனு ஜூஸ் வாங்கிட்டு வா...
கயல் : 😥 என்கிட்ட காசு இல்லயே...
கௌதம் : அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது...
கயல் : 😏 சரி ( கார்த்திக் ஷர்ட் பாக்கெட்ல இருந்த பணத்தை அவன் கவனிக்காத நேரம் எடுத்துட்டு ஓடிட்டா)
கார்த்திக் : 😨 ஹேய் என் பணம்...
மீரா : அதான் அவ எடுத்துட்டு ஓடிட்டாளே அப்பறம் ஏன் கத்துற...
கார்த்திக் : உன் பணத்தை எடுத்துருந்தா தெரிஞ்சிருக்கும் 😏😏😏
இவங்க இரண்டு பேரும் சண்டை போடுறதை கண்டுக்காம கௌதம் கயலயே பார்த்துட்டு இருந்தான்...
கயல் ஜூஸ் ஆர்டர் பண்ணிட்டு திரும்பி பார்க்கும் போது கௌதம் அவளையே பார்க்குறதை பார்த்துட்டா...
கயல் : வளர்ந்து கெட்டவன் எப்படி பார்க்குறான் பாரு, என்னையே மிரட்டுறியா இரு டா உனக்கு இருக்கு...
இவ ஆர்டர் பண்ண ஜூஸ் வந்ததும் கேண்டீன்ல சால்ட் வாங்கி ஒரு ஜூஸ்ல மட்டும் நிறைய கலந்து எடுத்துட்டு போனா...
கயல் : இந்தாங்க உங்களுக்கு ஸ்பெஷல் ஜூஸ்...
கௌதம் கிட்ட சால்ட் கலந்த ஜூஸ் வச்சிட்டு கார்த்திக், மீராக்கு நல்ல ஜூஸ் குடுத்தா...
கௌதம் : அது என்ன எனக்கு மட்டும் ஸ்பெஷல்...
கயல் : அதுல நிறைய சுகர் கலந்து உங்களுக்காக ஸ்பெஷலா போட சொன்னேன், அப்போ தான என் சாக்லேட்ட திரும்பி தருவீங்க.. குடிச்சி பாருங்க நல்லா இருக்கும்...
கௌதம் : சரி இந்தா உன் சாக்லேட்..
கயல் : தேங்க்ஸ்... ஜூஸ்ஸ மறக்காம குடிச்சிடுங்க பாய் ( எழுந்து ஓடிட்டா)
கார்த்திக் : ஐய்யயோ பேலஸ் பணத்தை குடுக்காம ஓடிட்டா...
மீரா : அந்த பணத்தை மறந்துடு...
கார்த்திக் : 😣 ம்ம்ம் வேற வழி எல்லாம் என் நேரம்...
கௌதம் ஜூஸ்ஸ குடிக்காம வேடிக்கை பார்க்கவும் கார்த்திக்கு கடுப்பாகிடுச்சி...
கார்த்திக் : டேய் ஜூஸ் குடிக்காம என்ன வேடிக்கை பார்க்குற அதை குடிச்சி தொல எல்லாம் உன்னால தான்...
கௌதம் : சரி டா மச்சான் டென்சன் ஆகாத ( ஒரு வாய் ஜூஸ் குடிச்சான் அதை அப்படியே எதிர்ல இருந்த கார்த்திக் மேல துப்பிட்டான்) 😖😖😖
கார்த்திக் : 😒😒😒 ஏன் டா என் மூஞ்சில துப்புன...
கௌதம் : நிறைய சுகர் போட்டு ஜூஸ் போட சொன்னனு சொல்லி சால்ட் அள்ளி கொட்டி வச்சிருக்கா டா 😤😤😤
கார்த்திக் : இதுக்கு தான் அவகிட்ட வம்பு வச்சிக்காதனு சொன்னேன் கேட்டியா...
கௌதம் : சரி சரி (m.v ) குட்டி சாத்தான் தனியா மாட்டுவல அப்போ பார்த்துக்குறேன் உன்னை 😬😬😬
ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சதும் எல்லாரும் வீட்டுக்கு போய்ட்டாங்க...
கயல் வீடு,
க. அம்மா : கயல் காலைல சர்க்கரை இல்லனு எதிர் வீட்டுல போய் வாங்கிட்டு வந்துருந்தேன், இப்போ இதை போய் குடுத்துட்டு வாயேன்...
கயல் : சர்க்கரை இல்லனா கடைல போய் வாங்கு இல்லனா பக்கத்துல பெரியம்மா ( கார்த்திக் அம்மா) வீட்டுல போய் வாங்கு எதுக்கு எதிர் வீட்டுக்கு போன...
க. அம்மா : அடியே அவங்களே இப்போ தான் புதுசா குடி வந்துருக்காங்க, இதுபோல போனா தான அவங்கள்ட பேசி பழக முடியும்...
கயல் : அப்போ நீயே போய் குடுத்துட்டு இன்னும் நல்லா பேசி பழகிட்டு வா மா என்னை ஏன் போக சொல்லுற...
க. அம்மா : 😬😬😬 கூட கூட பேசாம போய் குடு கயல் எனக்கு நிறைய வேலை இருக்கு...
கயல் : சரி போறேன் ( சர்க்கரைய வாங்கிட்டு கௌதம் வீட்டுக்கு போனா)
கயல் கௌதம் வீட்டு காலிங்பெல் அழுத்திட்டு வெளில வெய்ட் பண்ணும் போது கௌதம் வந்து கதவை திறந்தான்...
கயல் : ( m.v ) யாரை பார்க்க கூடாதுனு நினைச்சனோ அவனே வந்து கதவை திறக்குறானே 😒😒😒
கௌதம் : சொல்லுங்க மேடம் என்ன வேணும்...
கயல் : ஆண்ட்டி கிட்ட இதை குடுத்துடுங்க ( சர்க்கரைய நீட்டுனா)
கௌதம் : நான் என்ன நீ வச்ச ஆளா நீயே போய் குடு...
கயல் : 😬 எங்க அவங்க...
கௌதம் : கிட்சன்ல இருக்காங்க...
கயல் : 😏 அவனை க்ராஸ் பண்ணி போனா ( கௌதம் புதுசா வீடு கட்டி பால் காய்ச்சும் போதே கயல் இங்க வந்துருக்கா, சோ நேரா கிட்சன்க்கு போனா)
அங்க யாருமே இல்ல கிட்சன் காலியா இருந்தது...
கயல் : இங்க இருக்குறதாதான அந்த தென்னைமரம் சொன்னான் எங்க காணும் ( புலம்பிட்டே இவ திரும்பும் போது கௌதம் கிட்சன் டோர க்ளோஸ் பண்ணிட்டு இவ கிட்ட வந்தான் )
கயல் : ஏன் இப்போ கிட்ட வறீங்க ஆண்ட்டி எங்க...
கௌதம் : அம்மா, தங்கச்சி ரெண்டு பேரும் ஷாப்பிங் போய்ருக்காங்க வீட்டுல வேற யாரும் இல்ல... மதியம் ஜூஸ்ல சால்ட் கலந்து குடுத்தல அதுக்கு உன்னை பழிவாங்க வேண்டாமா...
கயல் : 😥😥😥 என்ன பண்ண போறீங்க...
கௌதம் : அங்க சமையல்க்கு வச்சிருந்த தண்ணிய எடுத்து அவ மேல ஊத்திட்டான்...
கயல் : 😖😖😖 ஆஆஆ ஏன் இப்படி பண்ணீங்க...
கௌதம் : 😂😂😂 எப்படி நனைஞ்ச கோழி மாதிரி இருக்க பாரு, இனிமேலாவது என் கிட்ட வம்பு வச்சிக்காத இல்லனா அடுத்த முறை மிளகாய் தூள எடுத்து கொட்டுவேன்...
கயல் : 😬 உங்கள ( அவனை அடிக்க கிட்ட போனவ தண்ணில கால் வச்சி அவன் மேலயே வழுக்கி விழுந்தா)
கௌதம் : பேலன்ஸ் இல்லாம அவனும் கீழ விழுந்தான்...
கௌதம் கீழயும் கயல் அவனுக்கு மேலயும் இருந்தா...
கயல் : 😍😍😍 அவளுக்கு ஏற்கனவே கௌதம் மேல ஒரு ஈர்ப்பு இருக்குறதால அவனை நெருக்கத்துல பார்க்கவும் கன்னம் சிவந்து அவனையே ரசிச்சி பார்த்துட்டு இருந்தா...
கௌதம் : காலைல இருந்து அவ குறும்பு தனத்தை மட்டும் பார்த்தவனுக்கு இப்போ அவளோட வெட்க முகத்தை பார்க்கவும் அவனும் அவளை மெய் மறந்து பார்த்துட்டு இருந்தான்...
கயல் : 😍😍😍
கௌதம் : குள்ளச்சி எவ்ளோ நேரம் இப்படி என்மேலயே படுத்துருக்க போற...
கயல் : 😅😅😅 சாரி ( எழுந்து கிட்சன் கதவை திறந்து வெளில ஓடிட்டா )
கௌதம் : அவனும் கிட்சன்ல இருந்த தண்ணிய க்ளீன் பண்ணிட்டு ட்ரெஸ் மாத்த ரூம்க்கு போய்ட்டான்...
கயல் : வீட்டுக்குள்ள போனா...
க. அம்மா : என்னடி ட்ரெஸ் எல்லாம் ஈரமா இருக்கு வெளில மழை பெய்யுதா?
கயல் : 😤😤😤 ஆமா மழை பெய்யுது போய் எல்லா பாத்திரத்துலயும் தண்ணி புடிச்சி வை 😡😡😡 ப்பே! போக மாட்டனு சொன்னவளை வம்படியா அனுப்பி வச்சிட்டு கேள்வியா கேட்குற 😠 ( கோவமா கத்திட்டு அவ ரூம்க்கு போய்ட்டா)
க. அம்மா : இப்ப என்ன சொல்லிட்டனு இப்படி கத்திட்டு போறா ( அவங்க வேலைய பார்க்க போய்ட்டாங்க)
இரண்டு பேரும் நைட் தூங்கும் போது இன்னைக்கு நடந்ததை நினைச்சி பார்த்துட்டே தூங்கிட்டாங்க...
தொடரும்...
# Sandhiya.
3 Comments
Hi sis how r u rombah days kalichu story pottu irukinga. I miss ur story sis
ReplyDeleteNice story
ReplyDeleteStory super sister😊
ReplyDelete