மைவிழி பார்வையிலே - சிறு கதை - part 3
அடுத்தநாள் காலைல நாலு பேரும் எப்போதும் போல காலேஜ் போனாங்க...
காலேஜ்க்கு போற பாதி வழிலயே கார்த்திக் வண்டிய நிறுத்திட்டு கௌதம்மயும் நிறுத்த சொன்னான்...
கௌதம் : என்ன டா ஏன் இப்போ நிறுத்த சொன்ன...
கார்த்திக் : நானும் மீராவும் இன்னைக்கு அவ்டிங் போறோம் சோ நீ அவளை இறக்கி விட்டுட்டு கயல அழைச்சிட்டு காலேஜ்க்கு போ...
கௌதம், கயல் : நோ ( ஒரே நேரத்துல இரண்டு பேரும் கத்துனாங்க)
கார்த்திக் : ஏன் இப்ப இரண்டு பேரும் இப்படி கத்துறீங்க...
கௌதம் : எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டயே என் தங்கச்சிய அவ்டிங் அழைச்சிட்டு போறனு சொல்லுவ 😠😠😠
கார்த்திக் : எனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணுறதா ஏற்கனவே முடிவு பண்ணது தான இப்போ என்ன புதுசா கேட்குற...
கௌதம் : அதுக்கு காலேஜ்ஜ கட் அடிச்சிட்டு போவீங்களா...
கார்த்திக் : வீட்டுல விட்டா நாங்க ஏன்டா இப்படி திருட்டு தனமா போக போறோம்...
கௌதம் : உனக்கு மாமா கிட்ட பர்மிஷன் கேட்க பயம் அதுக்கு அவங்க மேல தப்பு சொல்லுவியா...
கார்த்திக் : இந்த நேரத்துல எங்க அப்பாவ ஏன்டா நியாபகப்படுத்துற 😩😩😩
கௌதம் எதோ சொல்ல வந்தான் அதுக்குள்ள கயல் பேச ஆரம்பிச்சா...
கயல் : அண்ணா நீங்க ஏன் இப்போ தேவை இல்லாம இவங்க கிட்ட பேசிட்டு இருக்கீங்க மீரா அக்காவ அழைச்சிட்டு போங்க...
கௌதம் : ஏய் குள்ளச்சி நான் தான் பேசிட்டு இருக்கேன்ல நீ ஏன் குறுக்க வர...
கயல் : அண்ணா முதல்ல அக்காவ அழைச்சிட்டு போங்க...
கார்த்திக் : அவ உனக்கு அக்கா இல்ல அண்ணி! எங்க அண்ணினு சொல்லு பார்க்கலாம்...
கௌதம் : ரொம்ப முக்கியம் 😏😏😏
கார்த்திக் : மீரா என்ன அமைதியா இருக்க நீ தான வெளில போலாம்னு சொன்ன உங்க அண்ணா கிட்ட பர்மிஷன் கேளு...
கௌதம் : 😒😒😒 மீரா என்ன இதெல்லாம்...
மீரா : சாரி அண்ணா நான் தான் அவன் கிட்ட வெளில போலாம்னு சொன்னேன் ப்ளீஸ் இன்னைக்கு ஒரு நாள் பர்மிஷன் குடுங்க...
கயல் : ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி பிறந்திருந்தாலும் உங்களை எவ்ளோ அழகா அண்ணானு சொல்லி கூப்பிடுறாங்க, போக விடுங்க கௌதம் அவங்க பாவம் தான...
கௌதம் : 😒😒😒 ( மூனு பேரையும் பார்த்தான்) சரி போங்க...
கார்த்திக் : 😁😁😁 தேங்க்ஸ் டா மச்சான்...
மீரா : 😅 தேங்க்ஸ் அண்ணா அம்மா கிட்ட சொல்லிடாதீங்க...
இரண்டு பேரும் பைக்ல ஏறி போய்ட்டாங்க...
கௌதம் : 😡😡😡 கயலை கோவமா பார்த்தான்...
கயல் : ஏன் இப்போ இப்படி பார்க்குறீங்க...
கௌதம் : நடுவுல என் பெயரை சொல்லி பேசுனல...
கயல் : 😅 அது பேச்சுவாக்குல வந்துருக்கும் கண்டுக்காதீங்க...
கௌதம் : சரி காலேஜ்க்கு டைம் ஆகுது வண்டில ஏறு...
கயல் : அய்யயோ நான் எல்லாம் உங்க கூட வண்டில வரல நீங்க போங்க நான் பஸ்ல வந்துடுறேன்...
கௌதம் : என்னாது பஸ்ல வறியா, நீ மட்டும் இப்போ வண்டில வரலனா அவங்க அவ்டிங் போனதை கார்த்திக் வீட்டுலயும் நீ தான் அனுப்பி வச்சனு உங்க வீட்டுலயும் சொல்லிடுவேன் பார்த்துக்க..
கயல் : 😱😱😱 இதெல்லாம் ரொம்ப அநியாயம்ங்க...
கௌதம் : அது அவங்களை அனுப்புறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்...
கயல் : 😏 எல்லாம் நேரம் ( வாய்க்குள்ள முனங்குனா)
கௌதம் : 😒 என்ன...
கயல் : 😷😷 ஒன்னும் இல்ல...
இரண்டு பேரும் வண்டில ஒன்னா போனாங்க...
கயல் ஒரு பக்கமா உட்கார்ந்து இருந்தா, கௌதம் வேக தடைல ஏறி இறங்கவும் கயல் சீட்ல இருந்து வழுக்கி கீழ விழ போய்ட்டா...
கௌதம் : ( வண்டிய நிறுத்திட்டான்) ஏய் ஒழுங்க டபுள் சைடு உட்கார்ந்து என்னை புடிச்சிக்க, இல்லனா கீழ விழுந்து உனக்கு தான் அடிப்படும்...
கயல் : இவன் கூட வண்டில வந்ததுக்கு என்னென்ன எல்லாம் சொல்லுறான் பாவி 😤😤😤 ( புலம்பிட்டே டபுள் சைடு உட்கார்ந்து அவனை புடிச்சிகிட்டா)
கௌதம் : அவ ஒழுங்கா உட்கார்ந்ததும் வண்டி ஓட்ட ஆரம்பிச்சான்...
காலேஜ் போற வழி இல்லாம வேற ரூட்ல பைக் போகவும் கயல் கௌதம் கிட்ட கேட்டா...
கயல் : இது காலேஜ் போற வழி இல்லயே எங்க போறீங்க...
கௌதம் : ம்ம்ம் உன்னை கடத்திட்டு போறேன்...
கயல் : விளையாடாதீங்க எங்க போறீங்க...
கௌதம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு ரோட்டுல வண்டிய நிறுத்துனான்...
கயல் சுத்தி பார்த்தா யாருமே இல்ல ரோட்டோட இரண்டு பக்கமும் மரம் மட்டும் தான் இருந்தது " இங்க ஏன் என்னை அழைச்சிட்டு வந்தீங்க "னு கயல் திரும்பும் போது கௌதம் அவளுக்கு முன்னாடி மண்டி போட்டு ஒரு மோதிரத்தை நீட்டுனான்...
கயல் : 😱😱😱 ஷாக் ஆகி அவனை பார்த்தா...
கௌதம் : ஐ லவ் யூ குள்ளச்சி 😍😍😍
கயல் : என்ன 😱😱😱
( அவ அதிர்ச்சியாகி நிக்கும் போது எங்கயோ தூரமா ஒரு குரல் கேட்டுச்சி)
கௌதம் : ஏய் குள்ளச்சி இறங்கு ...
கயல் : 😰😰😰 என்ன...
கௌதம் : ஏய் இறங்கு டி காலேஜ் வந்து எவ்ளோ நேரம் ஆகுது! என்ன பகல் கனவா?
கயல் : ( அப்போ தான் கண் திறந்து பார்த்தா) அப்போ எல்லாம் கனவா? (தலைய சொறிஞ்சிட்டே கீழ இறங்குனா)
கௌதம் : கீழ விழுந்துட கூடாதுனு புடிச்சிக்க சொன்னா நல்லா மேல சாஞ்சி தூங்கிட்டு வர குள்ளச்சி 😏😏😏 நான் என்ன உனக்கு மெத்தையா? க்ளாஸ்க்கு போய் படிக்குற வேலைய பாரு அங்கயும் போய் தூங்காத...
கயல் : 😓😓😓 ( ச்ச காலைல யார் மூஞ்சில முழிச்சனோ இவன் கிட்ட எல்லாம் திட்டு வாங்குறேன்)
கௌதம் : என்ன இன்னும் இங்கயே நிக்குற க்ளாஸ்க்கு போ...
கயல் : போறேன் போறேன் ( ஓடிட்டா)
கௌதம் : இவ ஏன் இப்படி லூசு மாதிரி நடந்துக்குறா ( யோசிச்சிட்டே க்ளாஸ்க்கு போய்ட்டான்)
கயல் : அவ க்ளாஸ்க்கு போனாலும், நினைப்பு மொத்தமும் அவளுக்கு வந்த கனவை பத்தியே இருந்தது...
தொடரும்...
# Sandhiya.
1 Comments
Epa story poduviga...15 days aaga poguthu
ReplyDelete