ஏதேதோ எண்ணம் - 3

     பரணி கதவை திறந்து வேகமாக வந்து செழியன் முகத்தை உற்று பார்த்தான்...

"என்ன டா..."

"இல்ல... தங்கச்சி call பண்ணி அண்ணா எனக்கு ஒரு help அவரு specs வீட்டுலேயே விட்டுட்டு வந்துட்டாரு... கொஞ்சம் கோச்சுக்காம வீட்டுல போய் எடுத்துட்டு வந்து அவர் கிட்ட கொடுக்க முடியுமா plz னு கெஞ்சுனா... அது தான் உன்னையே பாக்கலாம் னு வந்தேன்..."

"வேதா உனக்கு call பண்ணாளா..."

"ம்ம்ம்...நா கூட நீ வரும் போது specs போடல னு கவனிக்கல டா... ஆனா அவ ஞாபகம் வச்சு சொல்றா பாத்தீயா...இது வரைக்கும் அவ உன்னோட கடந்த காலத்தை பத்தி பேசுறது கூட இல்ல... அவளுக்கு உன் மேல காதல் இருக்கு... ஆனா அவ உனக்காக காத்திருக்குறா... அவ நம்பிக்கைய பொய் ஆக்காத... Key கொடு... specs எங்க வச்சு இருக்க நா போய் எடுத்துட்டு வரேன்..."

"இல்ல வேணாம்... நா பாத்துக்கிறேன்... இன்னக்கி எல்லா வேலையும் நீ தான் பார்க்கனும்... என் பொண்டாட்டி வேலை பாக்க கூடாது னு சொல்லிட்டா..."

"சரி தான்..‌ அப்போ நீ உன்னோட கடந்த காலத்தை மறந்து அவளை ஏத்துக்கிட்ட..."

"அவளை பிடிக்கும் டா... எனக்காக அவ ஒவ்வொன்னையும் பாத்து பாத்து செய்யுறது பிடிச்சு இருக்கு...‌அவ்ளோ தான்..."

"ஓ... இந்த ஒரு மாசத்துக்கே வா..."

"ஒரு மாசமா இருந்தா என்ன பத்து மாசமா இருந்தா என்ன... கடைசி வரைக்கும் அவ இப்படி தான் இருப்பா..."

"புருஷனும் பொண்டாட்டியும் என்னமோ பண்ணுங்க... என்ன கழுத்தை அறுக்காதீங்க... நா போய் என் வேலைய பாக்குறேன்... ஐயா சாமி உனக்கு புண்ணியமா போகும் system mobile ரொம்ப use பண்ணிடாத... நீ headache னு வீட்டுக்கு போனா வேதா உங்க கிட்ட அப்பவே சொன்னேன் ல ஏன் செய்யல னு சண்டைக்கு வந்துட போறா..."பரணி சென்று‌ விட்டான்...

செழியன் சாய்விருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண் மூட... வேதாவின் முகம் மட்டும் ஞாபகம் வந்தது...

*******

வேதா யோசனையோடு டீ எடுத்து கொண்டு அமர...

மனோ அவள் முன் அமர்ந்து அவள் எடுத்து வந்த டீ யை எடுத்து குடிக்க...

வேதா அவனை முறைத்தாள்...

"லூசு... இது டீ... நீ coffee தானே குடிப்ப..."

வேதா மனோ கையில் இருந்த டீ யை பார்த்து தலையில் அடித்து எழ முயல...

மனோ அவளை தடுத்து "இரு நா எடுத்துட்டு வரேன்..."அவளுக்கு coffee எடுத்து வந்து கொடுத்தான்...

வேதா குடிக்காமல் ஏதோ யோசித்து கொண்டு இருந்தாள்...

"என்ன ஆச்சு வேதா..."

"அவரு ஏன் என் மேல இவ்ளோ அக்கறையா இருக்காரு..."

"எவரு..."

"செழியன்... என்னோட கடந்த காலம் தெரிஞ்சும் என் கிட்ட அது பத்தி ஒரு வார்த்தை கூட பேசல...  எனக்காக காத்திருக்காரு... அவருக்கு நா சரியா இருப்பேனா னு கூட தெரியல..."

"கல்யாணம் ஆகி ஒரு மாசமா இல்லாத யோசனை இப்ப எதுக்கு... இங்க பாரு வேதா தேவை இல்லாம எதையும் யோசிக்காத... அது எல்லாம் முடிஞ்சு போன விசயம்... அது நினைச்சு உன்னோட நல்ல வாழ்க்கைய கெடுத்துக்காத... செழியனை பார்த்தா நல்லவரா இருக்காரு... எல்லாரும் தெரிஞ்சும் உன்னையே கல்யாணம் பண்ணதும் இல்லாம உன்னையே நல்லா பாத்துக்குறாரு... பழைய விசயத்தை கேட்டா எங்க நீ சங்கடப்படுவீயோ னு கேட்காம இருக்காரு...நடந்த எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு...இப்ப நடக்குது பாரு இது தான் நிஜம்... ஞாபகம் இருக்கட்டும்..."

வேதா யோசனையிலேயே இருக்க...

"நா சொன்னது புரிஞ்சதா இல்லையா வேதா... இன்னும் என்ன யோசனை..."

"இல்ல... இன்னைக்கு அவரு specs போடல...மறந்துட்டு போயிட்டாரு.. specs போடலைனா அவரு headache வரும்... என்ன பண்ணுவாரு னு யோசனை... அவர் friend பரணி அண்ணாவுக்கு call பண்ணி சொல்லி இருக்கேன்... இருந்தாலும் ஒரு மாதிரி இருக்கு..."என்ற வேதாவையே உற்று பார்த்தான் மனோ...

"என்ன டா..."

"இல்ல ஒரு மாசத்துக்கு இப்படி ஒரு மாற்றமா னு பாத்தேன்..."

"என்ன மாற்றம்..."

"உன்னோட மாற்றம்... பழைய நினைவுகள் னு அதேயே நினைச்சுக்கிட்டு இருப்பீயே... இப்ப அத மறந்துட்டு செழியனை பத்தி நினைச்சுக்கிட்டு இருக்கீயே... அது கேட்டேன்..."

அப்போது தான் அவளுக்கு அது தெரிந்தது... அவளின் எண்ணம் முழுதும் செழியன் இருப்பதை...

"லூசு மாதிரி பேசாத டா... ஒரு மாசம் ஒரு வீட்டுல அதுவும் ஒரே room ல இருந்திருக்கோம்... As a friend ஹ நா அவர் மேல் அக்கறை காட்டலாம் ல..."

மனோ நக்கலாக சிரித்து "எது நல்லா இருக்கு மா உன் கதை... உலகத்துலேயே கட்டுன புருஷன புருஷன் னு சொல்லாம என் நண்பன் னு சொல்ற...எல்லாரும் சொல்றது தான் My husband is my friend னு... ஆனா நீங்க ரெண்டு பேரும் ஒரு friend ஹ கூட பழகல... எனக்கு தெரிஞ்சு நீயும் அவரும் அதிகமா பேசிக்கிட்டு கூட இல்ல... ரெண்டு பேருமே யாரோ மாதிரி தான் இருக்கீங்க...அப்படி இருக்க எப்படி நீ அவர் friend னு சொல்லுவ..."கேள்வியில் அவளை மடக்க...

"நீ எப்படி நாங்க பேசிக்கிட்டதே இல்ல னு சொல்லலாம்... இன்னக்கி காலைல கூட நா அவருக்கு tie கட்டி விட்டேன்... ஏன் அவர் எனக்காக tiffen கூட பண்ணாரு... யாரோ ஒருத்தவங்களுக்காக ரெண்டு பேரும் எதுக்கு help பண்ணிக்கனும்..."

மனோ சிரித்து கொண்டே "என்னது tie கட்டி விட்டியா... அவரு tiffen பண்ணாரா...சரி தான்... அதோட effect தான் இப்ப இப்படி எல்லாம் நடக்குது..."என்றிட...

வேதா வேகமாக மறுத்து "அப்படி எல்லாம் இல்ல..."முகத்தை திருப்ப...

"அப்படியா... சரி நா தெரியாம தான் கேட்குறேன்... இந்த ஒரு மாசமா செழியனை பத்தி நீ பேசி இருக்கீயா... இல்ல இது மாதிரி feel பண்ணி இருக்கீயா... நீ பேசுவ... இன்னக்கி நா இது சமைச்சேன்... அவரு இன்னக்கி காலை ல சாப்டல... அப்புறம் இன்னொரு நாள் மதியம் சாப்பாடு வேணாம் னு சொல்லிட்டாரு... அப்புறம்..."தாடையை கட்டை விரலில் தாங்கி ஆட்காட்டி விரலால் தாடையை தடவி யோசித்து "ஹான் இன்னக்கி tired இருக்கு night dinner order பண்ணிக்கலாமா னு கேட்டேன் ம்ம்ம் சரி னு சொன்னாரு... இது தான் சொல்லுவ.. அதுவும் எந்த reaction ம் இல்லாம சொல்லுவ... ஆனா இன்னக்கி..."

"நீ அடி தான் வாங்க போற மனோ... தேவை இல்லாம ஏதேதோ பேசிட்டு இருக்காத... வந்த வேலைய பாரு..."வேதா எழுந்து வேகமாக சென்று விட...

மனோ சிரித்து கொண்டு அவளை தொடர்ந்தான்...

செழியன்‌ பொழுது போகாமல் mobile use பண்ண முதலில் கண்‌ வலிக்க...‌பின்பு மெதுவாக தலைக்கு சென்றது...

பரணியிடம் headache tablet வாங்கி வர சொல்லி போட்டு கொண்டு சாய்விருக்கையின் சாய்ந்து கண் மூட...

வலி குறைவதாக இல்ல...

மாலையில் bank வாசலில் செழியன் காத்திருக்க...

மனோ ஆராதனாவுடம் பேசி கொண்டே வந்த வேதா செழியனை பார்த்ததும் அவர்களிடம் இருந்து விடை பெற்று car ல் அமர்ந்தாள்...

அவன் முகம் வாட்டமாக இருக்க...

"என்ன ஆச்சுங்க..."

"Nothing... போலாமா..."

"ம்ம்ம்..."

தலைவலி கண்ணை விழிக்க முடியாமல் திணறினான்...

வேதா அவனை பார்த்து கொண்டே இருந்தாள்...

"ஏங்க car ஹ stop பண்ணுங்க..."

"ஏன்..."

"Stop பண்ணுங்க..."அழுத்தமாக சொல்ல

அவன் car விட்டு என்ன என்பது போல் பார்க்க...

வேதா car ஐ விட்டு இறங்கி சுற்றி வந்து  door open செய்து "இறங்குங்க..."அவன் கையை பிடித்து வெளியே இழுக்க...

அவனும் மறுப்பு சொல்லாமல் வெளியே வர...அவனை சுற்றி கூட்டி வந்து driver seat அருகில் அமர வைத்து driver seat அமர்ந்து start செய்தாள்...

"இதே தான் நானும் பண்ணேன்..."

"பேசாம இருங்க... headache வந்துடுச்சு ல... பரணி அண்ணா specs எடுத்துட்டா வந்து கொடுக்கலையா..."சற்று கோவமாக கேட்க...

"நா தான் வேணாம் னு சொல்லிட்டேன்..."

வேதா முறைத்து வைக்க...செழியன் அமைதியாக... இருவரும் வீட்டிற்கு வந்தனர்...

வேதா வேகமாக அறைக்கு சென்று specs எடுத்து வந்து செழியனிடம் கொடு சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்...

செழியன் தலையை பிடித்து sofa வில் அமர்ந்திருக்க...

"ஏங்க..."வேதாவின் அழைப்பில் நிமிர்ந்து பார்க்க...

கையில் ஒரு பாத்திரத்தோடு நின்றாள்...

"Specs கழட்டுங்க... ஆவி பிடிக்கனும்..."teapoy மில் வைத்து உள்ளே சென்று bedsheet எடுத்து வந்து அவனை நெருங்க...

செழியன் அவளையே பார்த்தான்...

வேதா அவனை மேலும் கீழுமாக பார்த்து "என்னங்க இது shirt remove பண்ணுங்க... ஆவி பிடிச்சா வேர்க்கும்..."சொல்லி கொண்டே அவளே tie கழட்டி button எடுத்து விட... அவன் shirt கழட்ட...அவன் மேல் bedsheet ஐ போர்த்தி விட்டாள்...

10 நிமிடம் கழித்து bedsheet ஐ விலக... முகம் உடல் முழுவதும் வேர்த்து இருந்தது...

வேதா துண்டை வைத்து துடைத்து விட்டு kitchen க்குள் சென்று cup ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டி "இந்தாங்க black coffee... Headache குறையும்..."என்றிட...

செழியனை அவள் முகத்தையே பார்த்தாள்...

தொடரும்

# nancy