சொல்லாமல் யார் பார்த்தது - 4

படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் எல்லாரும் அந்த படத்துல வந்த சீன் பத்தி பேசிட்டு இருக்காங்க.

ப்ரீத்தி வீட்டுக்கு போய் படுத்துட்டா..

அஸ்வின் : ஹே..எங்க டா உங்க அக்கா ??

வசந்த் : அவ வீட்டுக்கு போய்ட்டா மாமா..நாமா பேய் கதை பேசிட்டு இருக்கோம் ன்னு..

திவ்யா : அண்ணா ?? நீயும் வரீயா..அவளை பயமுறுத்தி விளையாடலாம்.

அஸ்வின் : ஹே...வேண்டா.. ஏதாவது ஆகிட போது.

வசந்த் : ஒன்னும் ஆகாது மாமா..

பூஜா : ஹே‌‌...சும்மா இரு டா நீ..அவ பயந்து காய்ச்சல் வந்தா அம்மா நம்மளை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.

அஸ்வின் : உங்க அக்காவே சொல்றா..வேண்டா டா..

வசந்த் : சரி நீங்க ரெண்டு பேரும் வர வேண்டா.. திவ்யா வா..நாமா போலாம்.

பூஜா : சொன்னா கேளு..

திவ்யா : ஏய்..ஓட்ட வாய்.. ரொம்ப பண்ணாம கூட வா..

பூஜா : ஹே...

வசந்த் : வா பூஜா.. எனக்கு தெரியும்..நீ தான் ரொம்ப நல்லவே அவள பயமுறுத்துவ..வா ன்னு இழுத்து போறாங்க..

ப்ரீத்தி சாமி கும்பிட்டு திருநீறை பூசிட்டு உட்கார்ந்து இருக்கா..

வசந்தி : எதுக்கு போகணும்.. இப்படி பயந்துட்டு இருக்கணும்.

ப்ரீத்தி : மா..உன் வேலையை பாரு மா..

வசந்தி : என்னமோ பண்ணு.. நான் கடைக்கு போய்ட்டு வரேன்.

ப்ரீத்தி : அந்த கதவை திறந்து வைச்சுட்டு போ.

வசந்தி : ம்ம்...

வசந்தி வெளியே போறதை பாத்துட்டு.. வசந்த் பூஜா திவ்யா மெதுவா உள்ள வந்து ஒளிஞ்சுக்குறாங்க.

திவ்யா மெதுவா கால் கொலுசை சத்தம் வர மாதிரி பண்றா..

பூஜா சமையல் ரூம்ல இருந்து பாத்திரத்தை கீழே போடுறா..

ப்ரீத்தி நல்லவே பயப்படுறா..

வசந்த் லைட்டை ஆஃப் பண்ணி ஆன் பண்றான்..

ப்ரீத்தி ரொம்பவே பயந்து போய் கத்திட்டு சாமி ரூமுக்கு ஓடுறா..

அவ கத்துற சத்தம் கேட்டு அஸ்வின் அவ வீட்டுக்கு போறான்..

அஸ்வின் : ஹே.. ப்ரீத்தி.. பயப்படதா..இது திவ்யா வசந்த் பண்ற வேலை தான்...
ப்ரீத்தி எங்க இருக்க..

அப்போ பேக்ரவுண்ல நிஜமா பேய் வந்தா எப்படி இருக்குமோ அப்படி சத்தம் வருது.

அஸ்வின் : ஹே.. போதும்.. திவ்யா..

எந்த சத்தமும் இல்ல.. அஸ்வின் சாமி ரூமுக்கு போறான்..

ப்ரீத்தி : மாமா..மாமா ப்ளீஸ் மாமா உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போ.. ப்ளீஸ்..பயமா இருக்கு.. ப்ளீஸ்.

அஸ்வின்: சரி வா போலாம்..ன்னு கூட்டிட்டு போறான்.

உடனே வசந்த் பின் வழியா அஸ்வின் வீட்டுக்கு போறான்.

அஸ்வின் : ஹே.‌இந்த தண்ணீயை குடி..

ப்ரீத்தி வாங்கி குடிக்குறா..

அஸ்வின் பின்னாடி வசந்த் கருப்பு கலர் போர்வை போர்த்திட்டு நிக்க..

ப்ரீத்தி பயத்துல மாமா... பின்னாடி பின்னாடி ன்னு அவனை இழுத்து விடுறா..

இவ டக்குன்னு இழுக்க..அவன் அவ மேலயே விழுந்து கிஸ் பண்ணிட்டுறா..

ப்ரீத்தி : மாமா...

அஸ்வின் : சாரி..சாரி...ன்னு எழுந்துட்டு அவளை பாக்க முடியாம..
டேய்..நீ அடி வாங்க போற பாரு...போடா..ன்னு கத்த.. வசந்த் ஓடிட்டான்.

ப்ரீத்தி பேய் அறைஞ்ச மாதிரி அவ வீட்டுக்கு போய் படுத்துக்குறா.

அஸ்வினும் அப்படியே..

ரெண்டு பேரும் நைட் சாப்பிடாம தூங்குறாங்க.

அடுத்த நாள் காலையில..

வசந்தி : என்னாங்க??

தியாகு : சொல்லு மா..

வசந்தி : ப்ரீத்திக்கு காய்ச்சல் அடிக்குதுங்க..

தியாகு : நேத்து படத்துக்கு போனாதல தானே.

வசந்தி : அப்படி தான் இருக்கும்..

சத்யா : அண்ணா..

தியாகு : சொல்லு மா ??

சத்யா : அஸ்வினுக்கு உடம்பு நெருப்பா கொதிக்குது ணா..

தியாகு : அவனுக்குமா ??

சத்யா : அவனுக்குமா னா..வேற யாருக்கு இன்னும் காச்சல்.

வசந்தி : வேற யாருக்கு?? ப்ரீத்திக்கு தான்.

தியாகு : சரி..ரெண்டு பேரையும் நானே கூட்டிட்டு போறேன்.

அவனை வரச்சொல்லு மா.

சத்யா : சரி ணா..

ப்ரீத்தி அவ அப்பா பின்னாடி உட்கார..

சத்யா : உட்காரு டா..

அஸ்வின் : எப்படி மா..

சத்யா : அட உட்காரு டா..

அவனும் அவளுக்கு பின்னாடி உட்காரான்.

ரெண்டு பேரும் திருதிருன்னு முழிச்சுட்டு..

போற வழியிலே ரோடு போடுறாங்க..அதனால அங்க அங்க குண்டும் குழியுமா இருக்கு. வண்டி குதிச்சு குதிச்சு போக..

ஒரு இடத்துல அஸ்வின் தடுமாற.. அவசரத்துல ப்ரீத்தி இடுப்பை பிடிக்க... ஸ்பீடு ப்ரேக் லா ஏறி இறங்க.. அவளோட தோள்பட்டையில இவன் உதடும் இடிக்குது.

அவ ஷாக் ரியாக்ஷன்ல வாயை பிளக்க..

அதை அஸ்வின் முன்னாடி இருக்க மிரர் ல பாக்குறான்.

ஆனா எதுவும் பேசால...பேசுனா ப்ரீத்தி அப்பாக்கு கேட்டுரும்ன்னு..

ஹாஸ்பிடல் வருது.. ரெண்டு பேரும் இறங்குறாங்க.

தியாகு : ரெண்டு பேரும் உள்ள போங்க. நான் வண்டியை நிறுத்திட்டு வரேன்.

அவரு போக..

அஸ்வின் : ஹே...சாரி டி.. நான் எதுவுமே வேணும்ன்னு பண்ணால... தெரியாம நடந்தது தான் எல்லாமே.

ப்ரீத்தி : எவ்வளவு சாதரணமா சொல்றீங்க.. நீங்க என்ன பண்ணீங்கன்னு புரிதா.. உங்களால தான் எனக்கு காச்சல் வந்து இருக்கு.

அஸ்வின் : எனக்கும் தான் டி..இது தா பர்ஸ்ட் டைம்.

ப்ரீத்தி : சரி நேத்து என் மேல தான் தப்பு..ஆனா இப்ப

அஸ்வின் : ரோடு மேல ..

ப்ரீத்தி : அதுக்குன்னு...

அஸ்வின் : சாரி..டி

ப்ரீத்தி : சாரி சொல்லிட்டா போதுமா.

அஸ்வின் : வேற என்ன பண்ணணும்னு சொல்லு.

ப்ரீத்தி : அதுலா எனக்கு தெரியாது..சரி பண்ணுங்க.

அஸ்வின் : எப்படி ??

ப்ரீத்தி : எனக்கு தெரியாது.

தியாகு : உங்கள உள்ள போக சொன்னேன் தானே.

அஸ்வின் : நீங்க வந்த அப்பறம் போலாம் ன்னு தான் மாமா..

உள்ள போய் டாக்டர் பாக்குறாங்க. ரெண்டு பேரும் நார்மல் லா இருக்காங்க.. ஒன்னும் பயப்படுற மாதிரி இல்ல...இந்த மாத்திரை போதும் ன்னு கொடுத்து அனுப்புறாங்க.

வீட்டுக்கு போகும் போது ப்ரீத்தி அப்பா காலுல இடிச்சுக்க... அவரால வண்டி ஓட்ட முடியாது.. அஸ்வின் நீ ஓட்டுறாயன்னு கேட்டு அவன் கிட்ட வண்டியை தர..

அவனும் ஸ்டார்ட் பண்றான்.

தியாகு : நீ உட்காரு மா..

ப்ரீத்தி : நீங்க உட்காருங்க பா.

தியாகு : இல்ல மா.‌நீ கடைசியில உட்காரா வேண்டா..நீ உட்காரு

அவளும் உட்காரா.. அவளுக்கு பின்னாடி அவங்க அப்பா உட்கார அவனும் ரொம்ப மெதுவா போறான்.

ரெண்டு பேருக்கும் சங்கடமா இருக்கு.ஒரு வழியா வீட்டுக்கு வந்து சேருராங்க.

தொடரும்.

#  Bhuvi