ரணமாய் - 25

முதல் அழைப்பிலேயே அலைப்பேசியை எடுத்து காதில் வைத்து "சொல்லு தாரு..."என்றான் பிரதீப்..

"எங்க டா இருக்க..."

"வீட்டுல தான் கிளம்பிட்டு இருக்கேன்..."

"இன்னும் போகலையா..."

"கொஞ்சம் லேட் ஆகிடுச்சு  என்ன விசயம் சொல்லு..."

"சாரு அவ வீட்டுக்கு போயிட்டா டா..."

"அவ வீட்டுக்கு தானே போனா கோச்சுக்கிட்டா வீட்டை விட்டு போகலைல..."

"இன்னும் கொஞ்ச நேரத்துல அது கூட நடக்க வாய்ப்பு மிஸ்டர் பிரதீப் குமார்..."

"என்ன சொல்ற நீ...."

"காலைலேயே விடிஞ்சும் விடியாததுமா சாரு கிளம்பி என் காரை எடுத்துக்கிட்டு திலீப் ஹ பாக்க போறேன்னு கிளப்பிட்டா நானும் சந்தோஷமா இருந்தா சரி தான்னு  நானும் விட்டுட்டேன் என் காரை எடுக்கலாம் ஒரு அங்க போனேன் ரெண்டும் பேரும் சந்தோஷமா தான் இருந்தாங்க ஆனா திலீப் தான் உண்மைய சொல்ல போறேன்னு சொன்னான் நானும் பாத்து பக்குவமா அவ புரிஞ்சுக்குற மாதிரி சொல்லுன்னு சொல்லிட்டு வந்துட்டேன் நா வந்தேனே ஒரு மணி நேரம் ஆச்சு அங்க என்ன நடக்குதுனு தெரியல உனக்கு எதுவும் தெரியுமானு கேட்கலாம்னு தான் கூப்டேன் நீ பேசுறத பாத்தா உனக்கு எதுவுமே தெரியாது போலேயே..."

"நீ சொல்லி தான் எனக்கு விசயமே தெரியும் ஆமா உண்மைய சொல்லிட்டனா..."

"அடேய் எனக்கு தெரியலனு தான் உன் கிட்ட கேட்டேன் நீ மறுபடியும் என் கிட்டேயே கேட்குற..."

"அவன் கிட்ட கேட்கலாமா..."

"வேணாம் எல்லாம் பேசி முடிக்கட்டும் நம்ம எதுக்கு இடையில போயிட்டு அவனே பேசுவான் அதுக்கு வரைக்கும் wait பண்ணலாம்..."

"அதுவும் சரி தான் ஏதோ நல்லது நடந்தா சந்தோஷம் தான் சரி நா கிளம்புறேன் மணி ஆச்சு நீ எங்க இருக்க தாரணி.."

"நா office வந்துட்டேன்..."

"சரி ஏதாவது தகவல் வந்தா சொல்லு வைக்கிறேன்..."

*****************

சாரு திலீப்பை ஓங்கி அறைய கன்னத்தில் கை வைத்து அசையாமல் தலை குனிந்து நின்றான்...

"என்ன பத்தி யோசிச்சு பாத்தீங்களா நீங்க இல்லாம நா எப்படி இருப்பேன்னு நினைச்சு கூட பாக்கலை தானே..."என்று சாரு உணர்வற்ற குரலில் கேட்க

"நா சாகுறேன்னு சொல்லும் போது உனக்கு இப்படி இருக்கும் போது என் கண்ணு முன்னாடி நான் காதலிச்ச பொண்ணு இன்னொருத்தனை காதலிக்கும் போது எனக்கு எப்படி வலிச்சு இருக்கும் உண்மையை சொல்லனும்னா நான் செத்துட்டேன் உயிர் இல்லாத ஜடம் தான் இந்த பூமியில் சுத்தி விட்டு இருந்துச்சு போன உசுரு எப்ப வந்துச்சு தெரியுமா மறுபடி நீ வந்தப்ப நான் நினைச்சு கூட பாக்கல எனக்கு second chance கிடைக்கணும்னு முன்னாடி மாதிரி பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ண கூடாது நினைச்சு உன் பக்கத்துல தான் இருந்தேன் ஆனாலும் விலகி இருந்தேன் என் காதல் மறுபடியும் கிடைக்கும் நம்பிக்கை இல்லை பொறுமையா நிதானமா உன் மனசு இடம் புடிக்குற மாதிரி என் காதலை சொன்னேன் சத்தியமா எதிர்பார்க்கவில்ல நீ என் காதலை ஏற்றுக்குவனு அந்த நிமிஷமே உன் கிட்ட நா பண்ண accident ஹ சொல்லனும்னு நினைச்சேன் சுயநலமா இருந்துட்டேன் நீ எனக்கு கிடைக்காம போயிட்டா அது தான் நா சொல்லல அது என்னைய உறுத்திக்கிட்டே தான் இருந்துச்சு நீ என் பொண்டாட்டிக்கு ஆகும் போது என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை தெரியுமா சாரு..."என்று அவள் கண்ணையே பார்த்தான் அவளும் அவனை இமைக்காமல் பார்த்தாள்

"இந்த பார்வை தான் டி உன்னைய ஏமாத்தனும்னு நா நினைச்சது இல்ல உன் கிட்ட நா ஒவ்வொரு தடவ நெருங்கும் போது தப்பு பண்றேனோனு தோணும் அதே நேரம் நீ என் கூட சந்தோஷமா இருக்கியா னு ஒரு சந்தேகம் வரும் தாலி கட்டியாச்சு இனிமே இவன் கூட வாழ்க்கைனு கடமைக்கும்னு வாழ்றியோ னு கூட நினைச்சேன் நீயும் அஸ்வினும் காதலிச்சீங்க அது எல்லாம் மறந்து நீ என் கூட சந்தோஷமா தான் வாழ்ந்த அது போதும் எனக்கு..."என்றதும் புருவம் சுருக்கி பார்த்தாள்

"சாரு..."

சாரு மெதுவாக அவன் மார்பில் கை வைத்து சட்டையை கொத்தாக பிடித்து "அப்போ சந்தேகப்படுறீயா நீ..."

"சாரு..."என்று பதறினான்..

"நான் உன் கூட வாழ்ந்த வாழ்க்கையை சந்தேகப்படுறீயா நீ எனக்காக பண்ணு அதுவும் எனக்கு தப்பா தெரியல பெருசாவும் நினைக்கல ஆனா கடைசியா சொன்ன பாத்தியா நானும் அஸ்வின் காதலிச்சோம் அது எல்லாம் மறந்துட்டு நான் உன் கூட வாழ்ந்தேன்னு எனக்கு புரியல நீ எதுக்காக அப்படி சொன்ன அப்போ நா நா உன் கூட இருக்கும் போதெல்லாம் அஸ்வின் நினைச்சுகிட்டு தான் இருந்தேன்னு சொல்ல வரியா..."

"அய்யய்யோ..."என்று துடித்தே போய் விட்டான் "என்ன பேசுற சாரு நா அப்படி என்னைக்குமே நினைச்சுதில்ல டி..."என்று தலையில் அடித்து கொள்ள..

" அப்போ அதுக்கு என்ன அர்த்தம்..."

"உன் காதலை மறந்து என் கூட சந்தோஷமா வாழ்றனு சொல்ல வந்தேன் சாரு நா சந்தேகப்பட்ட சாரு..."என்று அழுத்தி சொல்ல

"இல்ல நீ பொய் சொல்ற..."

"உன்ன காதலிச்சேன் டி நீ எனக்கு கிடைக்கனும்னு தப்பு பண்ணேன் தான் டி ஆனா ஒரு நாள் கூட நா உன்னை தப்பா நினைச்சேன் இல்ல டி நா என்ன பண்ண நீ புரிஞ்சுக்கவ சாரு உண்மைய சொன்னா நீ என் மேல கோபப்படுவனு தான் நினைச்சேன் ஆனா நீ உன்னைய நீயே அசிங்கப்படுத்திக்கிறீயே டி இப்படின்னு தெரிஞ்சிருந்தா நா உன் கிட்ட உண்மைய சொல்லாமலே இருந்திருப்பேனே உன்னைய அசிங்கப்படுத்திக்கவா இந்த உண்மைய நா சொல்லனும் வேணாம் சாரு என்னைய அடி சாரு அடி ஆனா அப்படி சொல்லாத சாரு என் மனசே வெடிக்கிற மாதிரி இருக்கு டி..."என கதறி துடித்தான்

"உனக்கு தான் எல்லாம் தெரியுமே அப்போ ஏன் பையனுக்கு பேரு வைக்கும் போது நா அஸ்வத் னு சொல்லும் போது நீ வேணாம்னு சொல்லல அப்ப நா உன் கூட இருந்ததும் குழந்தைய பெத்துக்கிட்டதும் அஸ்வின் நினைப்பும் தான் அதனால் தான் அவன் பேரு மாதிரியே வச்சு இருக்கேன்னு நினைச்சு இருப்ப தானே..."

"என்னை கொன்னுடு டி..."என்று அவள் முன் மண்டியிட்டு "தயவு செய்து என்னைய கொன்னுடு கலங்கப்படுத்தாத டி அது என் புள்ள நம்ம குழந்தை அஸ்வத்ங்குற ஒரு பேரு அவ்ளோ தான் அப்படி தான் நினைச்சேன் நீ என் கூட இருந்த அது  எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு என் கூட வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே என்னைய நினைச்சு தான் என்னைய மட்டும் தான் நினைச்ச அஸ்வினை காதலிச்ச அவ்வளவுதான் ஆனா இந்த முழுசா என் கிட்ட தான் கொடுத்து என்கிட்ட மட்டும் தான் கொடுத்து அதுதான் உண்மை அஸ்வின் விரல் உன் மேல பட்டுச்சா இல்ல அஸ்வினுக்காக இந்த அளவுக்கு ஏங்கி இருக்கியா இல்ல நா மட்டும் தான் டி உன்ன தொட்டேன் என் பொண்டாட்டி அவ புருஷனை மட்டும் தான் தொட விட்டா இது என் குழந்தை தான் எனக்கும் உனக்கும் பிறந்த குழந்தை தான் இப்ப என்ன டி அந்த பேரு தானே டி சரி டி மாத்திக்கலாம் என் புள்ள பேரு மாத்திக்கலாம்..."

"அப்போ அந்த பேரு உன்னைய உறுத்துது..."

"சாரு சாரு சாரு சாருமதி..."என்று சடாரென்று எழுந்து அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து "என்ன தான் டி உன் பிரச்சினை ஏ இப்ப என்ன டி ஆமா நா தான் உன் காதலை பிரிச்சேன் அதுக்கு என்ன இப்ப நா பொய்யா இருக்கலாம் என் பொண்டாட்டி உண்மையா தான் இருந்தா என் பொண்டாட்டி பத்தி எனக்கு தெரியும் இச்சு இச்சா உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் உனக்கு என் மேல கோவம் இல்ல வருத்தம் அவனை வேணும்னா காதலிச்சுருக்கலாம் முழுச்சா கொடுத்தது என் கிட்ட தான் அதுவும் உன் விருப்பத்தோட நா எந்த நிமிஷம் நா உன் கழுத்துல தாலிய கட்டுனேனோ நீ எனக்கு சொந்தம் நா தாலி கட்டும் போது என்னைய தவிர உன்‌ மனசுல வேற யாரும் இல்ல போதுமா நா உன்னை முழுசா நம்புறேன் உன்னால இப்ப என்ன பண்ண முடியும் கோச்சுக்கிட்டு போறீயா போயிக்கோ ஒரு நாள் கூட உன்னால என்னைய விட்டு இருக்க முடியாது போ நா உனக்காக பண்ண தப்பு உனக்கு பெருசா தெரியல நீ என்னோட வாழ்ந்த வாழ்க்கையையே கலங்கப்படுத்தி வைக்கிறீயே டி உனக்கு கோவம் வந்தா எனக்கு தண்டனை கொடுத்த உன்னைய நீயே கேவலப்படுத்திக்காத டி ப்ளீஸ் உன்னைய கெஞ்சி கேக்குறேன்..."என்று கோபமும் கண்ணீரும் துக்கமும் கலந்து கை கூப்பி நின்றான்

சாரு அவன் அருகில் வந்து கண்ணீரை துடைத்து கலைந்து இருந்த கேசத்தை விரலால் சரி செய்து மீசையை முறுக்கி விட்டு அரை விரல் நிறம் வளர்ந்திருந்த தாடியை நீவி விட்டு இரு புறம் கொத்தாக பிடித்திட வலியில் முகம் சுருக்கினான் எங்கேயோ பார்த்தவாறு 

"என் செல்லத்துக்கு இவ்ளோ கோவமா நீ கோபப்பட்டா நா தாங்குவேனா பா..."என்று இடது கையை அவன் தோளை சுற்றி போட்டு வலது கையால் சட்டை பட்டனை மேற்புறம் மட்டும் கழற்றி நெஞ்சை தடவி "இங்க ரொம்ப வலிச்சது இருக்கும்ல.."என்று அவன்‌ முகத்தை பார்க்க அவன் நிமிர்ந்து விட்டத்தை பார்த்தவாறு நிற்க அவனை இன்னும் நெருங்கி நின்று வலது கையால் தாடியை பிடித்து இழுக்க குனிந்து அவளை பார்க்க கன்னத்தை தடவியவாறு பின்னந்தலையை விரலால் வருட இமை மூடி நிற்க குழந்தையின் அழுக்குரலில் இருவரும் பிரிந்தனர்

சாரு குழந்தையை பார்க்க ஓட திலீப் நெற்றியை தேய்த்தவாறு சோஃபாவில் அமர்ந்தான்...

தொடரும்

# nancy