உன்னோடு பேச வேண்டும்...

அதிகாலையில் சீக்கிரம் எழுந்து வீட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து பின்பு சமையல் அறைக்கு சென்று காய்கறிகளை வெட்டி சமையல் செய்து முடித்த பிறகு உன்னை காண வந்தேன்...

நீயோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாய்...

சிறிது நேரம் காத்திருந்து 

உனக்கு உணவு பரிமாறி அன்பாய் பேசலாம்னு பேசிட்டு இருந்தேன்...

நீயோ! எதுவும் காதில் வாங்காத போல் கையில் உன் தொலைபேசியை பார்த்து கொண்டு சாப்பிட்டு வேலைக்கு சென்றாய்...

மாலையில் உன்னிடம் பேசலாம் னு காத்துகிட்டு இருந்தேன்...

நீயோ! மணிக்கணக்கில் உன் நண்பர்களோடு பேசிட்டு இருந்தாய்...!

காத்திருந்தேன் நான்

இரவிலும் நான் சாப்பிடாமல் 

உனக்கு உணவு பரிமாறினேன்...

நீயோ! தொலைகாட்சியை பார்த்து கொண்டு உணவு சாப்பிட்டு  கொண்டிருந்தாய்...

நீ சாப்பிட்ட பிறகு உன்னிடம் 

பேசலாம் னு  இருந்தேன்...

நீயோ! உறக்கத்திற்கு சென்றாய்...

கரம் விரித்து உயிரை தந்தேன்...

நீயோ! பல காயங்கள் பரிசாகக் கொடுக்க 

என்றாவது ஒரு நாள் என்னிடம் 

பேசுவாய் என காத்துகிட்டு இருக்கேன்...

நேற்று இன்று நாளை மட்டும் மல்ல காலங்காலமாக காத்துகிட்டு இருக்கேன்...

என்னிடம் பேச வருவாயாக மகனே...

இப்படி உன் அம்மா...

படித்ததில் பிடித்தது நானும் சில வரிகள் சேர்ந்து எழுதுனது...