ரணமாய் - 30 



"வெளிய போ என் முன்னாடி நிக்காம என் வீட்டை விட்டு வெளிய போ டா..."என சாரு கத்த...

அஸ்வின் கன்னத்தை பிடித்தவாறு "சின்னு சின்னும்மா நா அஸ்வின் உன்னோட அஸ்வின் உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் என் மனைவி குழந்தைய விட்டுட்டு வந்து இருக்கேன் யாருக்காக உனக்காக என் சின்னும்மாக்காக..."

"வாய மூடு முத அப்படி கூப்டுறத நிறுத்து எரிச்சலா இருக்கு உனக்கு செல்ல பேரு வச்சு கூப்ட நீ யாரு..."

"சின்னும்மா..."

"Don't call me that..."என கத்த

"That's what I call you, because you're mine,You are the only one for me..."என அவனும் கத்தினான்...

பின்னால் இருந்த பிரதீப் அவனை ஓங்கி உதைக்க தடுமாறி முன்னால் நின்ற சாரு மேல் விழ போக சாரு நகர்ந்து திலீப்புடன் ஒட்டி நிற்க கீழே விழுந்தான் அஸ்வின்...

"இங்க என்ன டா உனக்கு வேலை..."என கீழே விழுந்து கிடந்த அஸ்வின் சட்டையை கொத்தாக பிடித்து தூக்கி முகத்தில் குத்த கண் திறக்க முடியாமல் நின்றான்...

"ஏன் டா அங்க கை குழந்தை அம்போனு விட்டுட்டு எதுக்கு டா வந்த உன் ஆசைக்கு ஒரு குழந்தையை பெத்துக்கிட்டு இப்ப எனக்கு என்னனு விட்டுட்டு வந்து இருக்க உங்க ரெண்டு பேர் என்ன அவங்க நினைச்சு பாத்தியா அனிதாக்கு கால் வரும் போது நினைச்சேன்டா, நீங்க தான் வந்து இருப்பனு இங்க வந்து பாத்தா நீ சாரு கிட்ட ச்சீ வெக்கமா இல்ல கல்யாணம் ஆகி அவங்கவங்க வாழ்க்கைய பாத்து போயாச்சுல டா அப்போ என்ன புடுங்குறதுக்கு வந்த ஏன்டா இப்ப தானடா உன் பொண்டாட்டி உன்னை புரிஞ்சுக்கலன்னு இந்த வீடியோவை போட்ட யாரு தேவை இல்லைன்னு சொல்லி நீ அந்த வீடியோவை போட்டு உன் பொண்டாட்டி கூட சேர்ந்தீயோ இப்ப அவ தான் வேணும்னு உன் பொண்டாட்டிய விட்டுட்டு வந்து இருக்க நீ எப்படியோ எனக்கா தெரியாது தெரியவும் தேவை இல்ல ஆனா எங்க சாருவ பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும் அவ அப்படி இல்ல உன் மூஞ்சில கூட முழிக்க மாட்டா டா எந்த நம்பிக்கையில் சாரு உன் கூட வருவான்னு நீ வந்த ஒரு காலத்துல சாருவுக்கு உன்னை புடிச்சிருக்கலாம் ஆனா இப்ப அவளுக்கு எல்லாமே திலீப்பும் அந்த குழந்தையை மட்டும் தான் நீ எல்லாம் தேவை இல்லடா அவளுக்கு இனி நீ இந்த பக்கமே வர கூடாது வெளிய போ..."என தள்ளி விட தடுமாறி கதவில் மோதி நின்ற அஸ்வின் "என்னை வெளிய போனு சொல்ல நீ யாரு டா சாருவ எனக்கு தெரியும் அவளால நா இல்லாம இருக்க முடியாது அவ ஒவ்வொரு நாளும் என்னை தான் நினைச்சுக்கிட்டு இருக்கா பாரு சாரு கண்டவன் எல்லாம் என்னைய அடிக்கிறான்..."என அவளை நெருங்க

சாரு திலீப் முதுகின் பின்னால் சென்று சட்டையை இழுக்க பிடித்து சாய்ந்து கொள்ள திலீப் அமைதியாகவே இருந்தான்...

"சின்னும்மா..."என்று அவன் அழைக்க அழைக்க அவனோடு இன்னும் ஒன்றி போனாள்...

"சாரு நா அஸ்வின் டி என்னை பாத்து ஏன் டி பயப்படுற..."

"என்னங்க அவனை போக சொல்லுங்க..."என முதுகில் முகம் புதைத்து இறுக்கி கட்டி கொள்ள...

அவனை கட்டி கொண்டதை பார்த்து கோபமான அஸ்வின் "ஏ நா சொல்றது காதுல விழல அவன் வேணாம் டி உனக்கு நா இருக்கேன் முத அவனை விட்டா தள்ளி வா டி என்னை கட்டிக்கோ..."என  அவளை நெருங்க திலீப் அவன் மார்பில் கை வைத்து தடுத்தான்...

தன் மார்பில் இருந்த அவன் கையையும்  அவனையும் மாறி மாறி பார்த்து "எடு டா கைய மரியாதையா கை எடு டா உன்னை பாக்க பாக்க எனக்கு கொலைவெறி ஆகுது உன்னால தான் டா இவ்ளோ பிரச்சினையும் நீ மட்டும் இல்லைனா நானும் சாருவும் கல்யாணம் பண்ணி ரொம்ப சந்தோஷமா வாழ்ந்து இருப்போம் எங்களுக்கு பிரச்சினை நீ தான் நீ மட்டும் எங்களை விட்டு போய் தொலை டா..."என்று ஓங்கி அறைய அதை எதிர்ப்பார்க்காத திலீப் தடுமாறி விழ அவனை அணைத்திருந்த சாருவும் சேர்ந்து விழுந்தாள்...

சாரு விழுந்ததை பார்த்து அஸ்வின் அவளை தூக்க போக பிரதீப் அவனை தள்ளி விட்டு திலீப்பையும் சாருவையும் தூக்கினான்...

"டேய் மச்சி ஒன்னும் இல்லையே..."என சட்டையை சரி செய்ய

சாரு திலீப் முகத்தை தொட்டு பார்த்து "அடி பட்டுச்சாங்க..."என கண்ணீரோடு பார்க்க தன்னோடு அணைத்து கொண்ட திலீப் "நா இடைஞ்சல் இருக்கேனா சாரு நா இல்லைனா நல்லா இருந்திருக்குமா நா உன்னை தொட கூடாதா சாருமா..."என உதடு துடிக்க வலியுடன் கேட்க

"அய்யோ இல்லங்க என்னை தொட உங்களுக்கு மட்டும் தான் முழு உரிமையும் இருக்கு நீங்க மட்டும் எனக்கு போதும்..."என கதறினாள்...

"அப்போ நா..."என முன்னால் வந்த அஸ்வினை பார்க்க மறுத்து முகத்தை திரும்பிய சாரு பிரதீப்பிடம் "அவனை போக சொல்லு பிரதீப் என் கண்ணு முன்னாடி நிக்க வேணாம் போக சொல்லு..."என்றிட

"டேய் போடா..."என்று பிடரியில் கை வைத்து வெளியே தள்ளி விட முயல அவன் பிடியை தட்டி விட்டு "உன் அவ்ளோ தான் மரியாதை..."என அஸ்வின் பிரதீப் பார்த்து விரல் நீட்டி எச்சரித்து கோவத்துடன் சாருவை பார்த்து " ஏ என்ன டி தேடி வந்தா வெளிய தள்ளுவீயா தப்பு பண்ற சாரு மறுபடியும் நீ தப்பு பண்ற உன் கூட சேர்ற வாய்ப்பை நா மறுபடியும் இழக்க விரும்பல..."என கை நீட்டி "வந்துடு சாரு உன் காதல் எனக்கு மட்டும் தான் கிடைச்சுது அது யாருக்கும் சொந்தம் இல்ல என் பேச்சை கேளு சாரு அதுவுமா வேணாம் நீ மட்டும்  அவன் கட்டுன தாலிய கூட கழட்டி கொடுத்துட்டு வா இந்த நாட்டுலேயே இருக்க வேணாம் வேற நாடு போயிடலாம் வந்துடு டி நீ தான் என் வாழ்க்கை..."என சொல்லி வாயை மூடுவதற்குள் சாரு விறுவிறுவென வந்து அவனை தள்ளி விட வாசல் கதவில் மோதி வெளியே விழுந்தான்...

"ச்சீ ச்சீ உன்னை உன்னை போய் நா  காதலிச்சுருக்கேன்னு நினைக்கும் போது எனக்கே என் மேல வெறுப்பா இருக்கு கட்டுன பொண்டாட்டி குழந்தைய விட்டுட்டு வந்து இருக்க அசிங்கமா இல்ல உனக்கு உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்கு உன்னை பாக்கவே பிடிக்கல எனக்கு என் திலீப் போதும் இனிமே என்னை பாக்கனும்னு நினைச்சு கூட பாக்காத என் வாழ்க்கை ஒரே ஒரு தடவையாவது உன்னை பாத்தடனும் னு இருந்தேன் ஆனா இப்ப அப்படி நினைச்சேன்னு யோசிக்கும் போது ச்சீனு இருக்குனு உன்னை மாதிரி ஒருத்தன் என் வாழ்க்கையில இருந்தாங்குறத கெட்ட கனவா  நினைச்சு மறந்துடுறேன் என் வாழ்க்கை விட்டு என் முன்னாடி வராம போயிடு ப்ளீஸ் நா என்‌ புருஷன் என் குழந்தைனு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தயவு செய்து என் வாழ்க்கைய கெடுக்க வராது போயிடு உன்னை கெஞ்சி கேட்குறேன்..."என கை கூப்பி அழுதவள் வாசல் கதவை சாத்த முயல கதவை எட்டி உதைக்க கீழே விழ போன சாரு தாங்கி பிடித்தான் திலீப்...

தொடரும்...


*Nancy