காத்திருந்த கண்கள் - 1

மகிழினி - ( சுருக்கமா மகி)  நம்ம ஸ்டோரியோட ஹீரோயின் குள்ளமா இருப்பா, வொய்ட் கலர், லாங் ஹேர், பிங்க் லிப்ஸ், ஷார்ட் நோஸ், கூர்மையான கண்கள் அதற்க்கும் மேல வில் போன்ற புருவம் பார்க்க ரொம்ப அழகா இருப்பா காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறா...

( ஹீரோ பத்தி அப்பறம் சொல்லுறேன் )

மகி : 😒😒😒 முகத்தை உர்னு வச்சிட்டு அவளோட ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருந்தா...

மகி அம்மா : அடியேய் ரெடி ஆகிட்டியா இல்லயா ( கீழ இருந்து கத்துனாங்க)

மகி : வரேன் வரேன் இரு ( அவ ஃபோன், ஜார்ஜர், கெட்செட் எல்லாம் சைடு பேக்ல எடுத்து வச்சிட்டு பேக் எடுத்துட்டு கீழ போனா )

அங்க அவ அப்பா, அம்மா பேக்ஸ் யோட வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க...

க்ரிஷ் : ( அவனும் அவன் பேக் எடுத்துட்டு வந்தான்) அம்மா போய் தான் ஆகனுமா...

( க்ரிஷ் மகியோட தம்பி, +2 படிக்குறான்)

மகி அப்பா : போய் தான் ஆகனும், பேக் எல்லாம் கார்ல எடுத்து வைங்க...🚗

அப்பறம் பேக் எல்லாம் எடுத்து வச்சிட்டு நாலு பேரும் கார்ல கிளம்புனாங்க...🚗

அவங்க இப்போ எங்க போறாங்கனா ஒரு கிராமத்துக்கு அங்க மகி அம்மாவோட அப்பா, அம்மா, அவங்க அண்ணா ஃபேமிலி எல்லாம் கிராமத்துல இருக்காங்க மகி, க்ரிஷ் குட்டியா இருக்கும் போதே இரண்டு ஃபேமிலிக்கும் சண்டை வந்து மகி அப்பா, அம்மா சென்னைக்கு வந்துட்டாங்க, இப்போ ஒரு கல்யாணத்துல மீட் பண்ணப்போ இரண்டு ஃபேமிலியும் பேசி ஒன்னாகிட்டாங்க, அதனால மகி அப்பா, அம்மாவ பசங்களோட பொங்கல் கொண்டாட கிராமத்துக்கு வர சொல்லிருக்காங்க.... மகியும் க்ரிஷ்யும் சின்ன வயசுல இருந்து சிட்டிலயே வளர்ந்ததால கிராமத்துக்கு போக புடிக்கல அதான் இரண்டு பேரும் இவ்ளோ வெறுப்போட கிளம்புறாங்க..

அவங்க நைட் பத்து மணி போல கிளம்புனாங்க அந்த கிராமத்துக்கு போக காலைல ஆகிடும்...

மகி அப்பா கார் ஓட்டிட்டு இருந்தாங்க மகி அம்மா அவங்க கூட பேசிட்டே வந்தாங்க தூங்கிட கூடாதுனு பசங்க இரண்டு பேரும் பின் சீட்ல படுத்து தூங்கிட்டு இருந்தாங்க....😴😴😴

காலை அழகா விடிஞ்சது,

மகி : அப்போ தான் கண் விழிச்சா 😍😍😍

சுத்தி பச்சை பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது வயல்வெளில அறுவடைக்கு காத்திருக்கும் நெற்கதிர் அழகா முத்து முத்தா பார்க்க அவ்ளோ அழகா இருந்தது, ரோட்டோட இரண்டு சைடும் வளர்ந்திருந்த மரங்கள் லைட்டா ஆட அதிலிருந்து வர காற்றுக்கு முன்னாடி ஏசி யே தோர்த்து போய்டும்....😍

க்ரிஷ் : அது எல்லாத்தையும் அவனோட கேமிரால ஃபோட்டோ எடுத்துட்டு வந்தான்....📸

கார் ஊருக்குள்ள நுழைஞ்சதும் மகி அம்மா, அப்பா அவங்களோட பழைய நினைவுக்கு போய்ட்டாங்க... இரண்டு பேருமே இந்த ஊர்ல தான் பிறந்து வளர்ந்தாங்க...

ஒரு பெரிய வீட்டுக்கு முன்னாடி கார் போய் நின்னுச்சி நாலு பேரும் கீழ இறங்குனாங்க...🚶🏻‍♂️🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♂️

அந்த காலத்து வீடு ரொம்ப அழகா அரண்மனை மாதிரி இருந்துச்சி, வீட்டை சுத்தி மரம், செடி, கொடினு எல்லாமே இருந்துச்சி...🏡

மகி, க்ரிஷ் : ரொம்ப வியப்போட அந்த வீட்டை பார்த்தாங்க...😍

மகி : அம்மா இதான் உன் வீடா...

மகி அம்மா : ஆமா டி எவ்ளோ அழகா இருக்கு பாத்தியா...

மகி : ஆமா மா...

அப்போ வயசான இரண்டு பேர் இவங்க கார் சத்தம் கேட்டு வெளில வந்தாங்க...

மகி அம்மா, அப்பா : இரண்டு பேரும் அவங்க காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாங்க...

தாத்தா,  பாட்டி : நல்லா இருங்க எழுந்துறீங்க...

தாத்தா நல்லா மீசைய முறிக்கி விட்டு, தலை முடி, தாடி எல்லாம் நறச்சி இருந்தாலும் அந்த கம்பீரம் இன்னும் போகாம நெஞ்ச நிமிர்த்தி நின்னாரு... பாட்டி முகத்துக்கு மஞ்சள் பூசி நெத்தில பெரிய பொட்டு அதுக்கும் மேலயும் வகுடுலயும் குங்குமம் வச்சி மகா லெட்சுமி மாதிரி இருந்தாங்க...☺️

மகி அம்மா : என்ன பாக்குறீங்க ஆச்சி, தாத்தா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க ( மகி, க்ரிஷ் பார்த்து சொன்னாங்க)

மகி, க்ரிஷ் : அவங்க காலுல விழுந்தாங்க...😊

பாட்டி, தாத்தா : நல்லா இருங்க கன்னுங்களா...🤔

எல்லாரும் உள்ள போனாங்க...

மகி அம்மா : "எங்க மா அண்ணா, அண்ணிய காணும்..."

பாட்டி : "கோவில்க்கு போய்ருக்காங்க இப்ப வந்துடுவாங்க..."

அவங்க எல்லாரும் பேசிட்டு இருக்கவும் மகி ஃபோன்ல நெட்வொர்க் கிடைக்கலனு வீட்டை விட்டு வெளில வந்தா...🚶🏻‍♀️

மகி : "ஃபோன்னயே பார்த்துட்டு வந்ததால எதிர்ல வந்தவங்களை கவனிக்காம அவங்க மேல இடிச்சிட்டா..."

சிவா : ( நம்ம ஸ்டோரியோட ஹீரோ) மாநிறம், முறுக்குன மீசை, அளவான தாடி, அவனோட முடி காத்துல அழகா ஆடுச்சி, உடம்பை ரொம்ப ஃபிட்டா வச்சிருந்தான், வசீகரிக்கும் கண்கள் கூர்மையான பார்வை....😊

மகி : "அவன வெறுப்பா பார்த்துட்டு இருந்தா..."

சிவா : இவ்ளோ ஹேண்ட்சம்மா இருக்குறவன ஏன் அப்படி பார்க்குறானா அவன் வயல்க்கு போய்ட்டு வந்ததால உடம்பெல்லாம் சேரா இருந்தது மகி இடிக்கவும் அவ மேலையும் அந்த சேர் ஒட்டிகிச்சி...

மகி : "இடியட் அறிவில்லையா உனக்கு இப்படி வந்து இடிக்குற கண்ண எங்க வச்சிட்டு வர..."

சிவா : "கண் இமை கூட சிமிட்டாம அவள மட்டும் தான் பார்த்துட்டு இருந்தான்..."

மகி : "உன் காது என்ன செவுடா அப்படியே நிக்குற எதாவது பேசு டா..."

சிவா : "இவ்வளவு நாள் காத்திருந்த அவன் கண்களுக்கு அவளோட வருகை ஒரு வரமா கிடைச்சது அதனால இமைக்க மறந்து அவள பார்த்துட்டு இருந்தான்..."

( மகிக்கு தான் சிவாவ தெரியாது ஆனா சிவாக்கு மகிய நல்லாவே தெரியும் அவங்க இந்த ஊரை விட்டு போகுறப்போ மகிக்கு 5 வயசு, சிவாக்கு 10 வயசு அவ இருந்த வரை மாமா மாமானு இவன் பின்னாடி தான் சுத்திட்டு இருப்பா)

மகி : ச்ச இவன் கூட பேசுறதே வேஸ்ட் ( அவ போய்ட்டா)

சிவா : அவ போன பிறகு தான் சுயநினைவுக்கு வந்தான் ( தலைல அடுச்சிகிட்டு குளிக்க கொல்லை புறம் போய்ட்டான்)

மகி : அம்மா ( கத்திட்டே உள்ள வந்தா) 
மகி அம்மா : ஏன்டி கத்துற... என்ன மேல் எல்லாம் சேரா இருக்கு...

மகி : "ஒரு இடியட் வந்து இடிச்சிட்டான் அவன் மேல உள்ள சேர் எல்லாம் என் மேல ஒட்டிகிட்டு..."

மகி அம்மா : "சரி சீக்கிரம் போய் ப்ரஸ் ஆகிட்டு வா அத்தை, மாமா வந்துடுவாங்க..."

மகி : ம்ம்ம் ( ரூம்க்கு போய்ட்டா)

மகி : "ஃப்ரஸ் ஆகிட்டு வொய்ட் ஷர்ட் ப்ளூ ஜீன்ஸ் போட்டுட்டு வெளில வந்தா..."

அதே நேரம் சிவாவும் வொய்ட் ஷர்ட் ப்ளூ ஜீன்ஸ் போட்டுட்டு அங்க வந்தான்...🚶🏻‍♂️

சிவா : அழகா தலை முடிய கோதிட்டே சிரிச்சிட்டே வந்தான்...😂

மகி : அவனையே பே னு பார்த்துட்டு இருந்தா ( இவன தான் இதுக்கு முன்னாடி பார்த்தோமானு அவளுக்கே டவுட் வந்துடுச்சி  )

சிவா : அத்தை, மாமா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க ( அவங்க காலுல விழுந்தான்)

மகி அம்மா, அப்பா : 'நல்லா இருப்பா..."

மகி அம்மா : "எவ்ளோ பெருசா வளர்ந்துட்டான் பாருங்க..."

மகி அப்பா : ஆமா மா..

அந்த நேரம் சிவா அம்மா, அப்பா உள்ள வந்தாங்க...

மகி அம்மா : ( சிவா அப்பாவ ஹக் பண்ணாங்க) அண்ணா எப்படி இருக்க...

சிவா அப்பா : "நல்லா இருக்கேன் மா நீ மச்சான் பசங்க எல்லாம் எப்படி இருக்கீங்க..."

மகி அம்மா : எல்லாரும் நல்லா இருக்கோம் அண்ணா....மகி, க்ரிஷ் வந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க...

மகி, கிரிஷ் : "சிவா அப்பா, அம்மா காலுல விழுந்தாங்க..."

சிவா அப்பா, அம்மா : நல்லா இரு மா, நல்லா இரு பா...

பெரியவங்க எல்லாரும் இத்தனை வருஷம் பேசாத கதை எல்லாம் பேசிட்டு இருந்தாங்க....

மகி : ( அவ ரூம்க்கு போனா அப்போ யாரோ அவ கைய புடிச்சி இழுத்தாங்க ) ஆஆஆ

சிவா :  உஸ்ஸ்ஸ்ஸ் ( அவள சுவரோட லாக் பண்ணான்)

மகி : "ஏய் என்ன பண்ற கைய எடு நான் போனும்..."

சிவா : ஏய் யா ஒழுங்கா மாமானு சொல்லு...😑

மகி : என்ன மாமா வா...😱

சிவா : ஆமா சின்ன வயசுல மாமா மாமானு தான என் பின்னாடி சுத்திட்டு இருப்ப...😏

மகி : அது விவரம் தெரியாத வயசுல சொன்னது இப்போவும் அப்படியே கூப்பிட முடியுமா...🤨

சிவா : "கூப்பிட்டு தான் ஆகனும் நான் உன்னை விட பெரியவன் தான..."

மகி : சோ வாட் என்னாலலாம் அப்படி கூப்பிட முடியாது...🤷🏻‍♀️

சிவா : ( அவ உதட்டை புடிச்சி இழுத்தான்) சொல்லாத இந்த உதட்டை என்ன பண்ணலாம்...

மகி : 😳😳😳 கண்ணை உருட்டி உருட்டி பார்த்தா...

சிவா : பார்த்து கண்ணு வெளில வந்து விழுந்துட போது...

மகி : ச்சி போடா ( அவன தள்ளி விட்டுட்டு போய்ட்டா)

சிவா : 😄😄😄 உன்னை எப்படி மாமா சொல்ல வைக்கனும்னு எனக்கு தெரியும் டி.. ( அப்பறம் அவன் வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டான்)

தொடரும்...

Hi friends ellarukum intha story pidichiruka illa ethavathu change pannanuma sollunga...

# Sandhiya