காத்திருந்த கண்கள் - 2

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே...☺️

சிவா : அவன் ரூம்ல இருந்தான்...

க்ரிஷ் : அவன் பேக் வச்சிட்டு வாசல்லயே நின்னான்...

சிவா : ( எதர்ச்சியா திரும்பும் போது க்ரிஷ் நிக்குறத பார்த்துட்டான்)  ஹேய் ஏன் வெளிலயே நிக்குற உள்ள வா டா...

க்ரிஷ் : ( தயங்கிட்டே உள்ள வந்தான்) என்னை உங்க ரூம்ல தங்கிக்க சொன்னாங்க...😌

சிவா : இதுக்கு ஏன் தயங்குற உள்ள வா ( அவன் பேக் வாங்கி டேபிள்ல வச்சிட்டு அவன பேட்ல உட்கார வச்சான்) ஏன் இப்படி பயப்பிடுற....

க்ரிஷ் : இதுக்கு முன்னாடி உங்க கூட பேசுனது இல்லல அதான் தயக்கமா இருக்கு...😞

சிவா : முதல்ல வாங்க போங்கனு பேசாம உரிமையா மாமானு சொல்லு...😊

க்ரிஷ் : சரி மாமா..

சிவா : குட் என்ன படிக்குற...

க்ரிஷ் : +2

சிவா : என் கூட பேசவே பயப்பிடுறியே ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் போகனும் அங்க ரேக்கிங் எல்லாம் நடக்கும் அப்பறம் நியூ ஃப்ரண்ட் நியூ அட்மாஸ்பியர் இதெல்லாம் ஃபேஸ் பண்ணனும் அப்பறம் ப்ராஜெக்ட், செமினார்னு எல்லார் முன்னாடியும் தைரியமா பேசனும் இப்படி நிறைய இருக்கு...

அதனால முதல்ல பயப்பிடுறத நிறுத்து யாரா இருந்தாலும் தைரியமா பேசனும் புரியுதா...☺️

க்ரிஷ் : புரியுது மாமா உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

சிவா : ( h.v ) உனக்கு மட்டும் புடிச்சா போதுமா உன் அக்காக்கும் புடிக்க வேண்டாமா...😊

க்ரிஷ் : என்ன மாமா...

சிவா : ஒன்னும் இல்லடா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணிட்டு வந்தது டயர்டா இருக்கும்...

க்ரிஷ் : சரி மாமா..

சிவா : ரூம் விட்டு வெளில வந்தான்...

மகி : ( அவன் மேல இடிச்சிட்டா) டேய் வளர்ந்து கெட்டவனே எப்போ பாரு என் மேல இடிச்சிட்டே இருக்க...

சிவா : எது நான் இடிச்சேனா நான் ரூம்ல இருந்து வெளில வரும் போது உன்னை யாரு குறுக்க வர சொன்னா...

மகி : நான் என் தம்பிய பார்க்க வந்தேன்...

சிவா : அப்போ தப்பு யார் மேல...

மகி : என் மேல தான் ( ஒரு ஃபுலோல சொல்லிட்டா)

சிவா : 😂😂😂 சிரிக்க ஆரம்பிச்சிட்டான்...

மகி : இல்ல இல்ல தப்பு உன் மேல தான், நீ என்னை குழப்புற...😏

சிவா : 😄 அப்படியா ( அவ ஹைட்க்கு குனிஞ்சி கேட்டான்)

மகி : 😍😍😍 ( மகி அவன் கண்ணை பார்க்காத டி) ப்பே 😏 ( அவன தள்ளி விட்டு போனா)

சிவா : ☺☺☺ வெளில போய்ட்டான்...

மகி : அவன் தம்பி கூட கொஞ்ச நேரம் பேசிட்டு மாடில நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தா ( அந்த ஊர்லயே அவங்க வீடு தான் பெரிய வீடு சோ அங்க இருந்து பார்த்தா அந்த மொத்த ஊர்மே தெரியும்) 😍😍😍 சிட்டில வண்டிகளோட ஹாரன் சத்தமும் புகை கலந்த காற்றையும் சுவாசிச்சிட்டு இங்க சுத்தமான காற்றும் பறவைகளோட சத்தத்தையும் கேட்க அவளுக்கு ரொம்ப புடிச்சிருந்தது... அப்படியே கீழ பார்த்தா அங்க மரத்தோட கிளைல கட்டிருந்த ஊஞ்சல்ல உட்கார்ந்து லேப்டாப்ல எதோ பண்ணிட்டு இருந்தான்...👩‍💻

மகி உடனே வேக வேகமா கீழ இறங்கி போய் சிவா பக்கத்துல நின்னா...

சிவா : என்னங்குறா மாதிரி பார்த்தான்...

மகி : உனக்கு லேப்டாப் எல்லாம் யூஸ் பண்ண தெரியுமா...

சிவா : அவ அப்படி கேட்கவும் அவனுக்கு சிரிப்பு வந்துடுச்சி ஏன்னா சிவா MBA கோல்டு மெடலிஸ் சூப்பரா படிப்பான் நல்ல டேலண்ட் ஒரு கம்பெனில அசிஸ்டண்ட் மேனேஜரா வொர்க் பண்றான் ஆனா டெய்லி ஆஃபிஸ் போக மாட்டான் வீட்டுல இருந்தே அவனோட வொர்க்க முடிச்சிடுவான் எதாவது முக்கியமான மீட்டிங் இருந்தால் மட்டுமே போவான்... அவனுக்கு விவசாயம் தான் முக்கியம் மத்ததெல்லாம் அப்பறம் தான்... அவனுக்கு நிறைய ஃபாரின் ஆஃப்பர்ஸ் வந்தும் அவன் போகல... இவ்ளோ டேலண்ட் உள்ளவன் கிட்ட போய் லேப்டாப் யூஸ் பண்ண தெரியுமானு கேட்கவும் தான் அவனுக்கு சிரிப்பு வந்துடுச்சி...

மகி : சரி எதோ பண்ணிட்டு போ... எனக்கும் ஊஞ்சல் ஆடனும்...

சிவா : சரி அந்த ஊஞ்சல்ல போய் ஆடு ( இன்னொரு ஊஞ்சலை காட்டி சொன்னா)

மகி : அது ஹைட்டா இருக்கு எனக்கு எட்டாது..

சிவா : குள்ளச்சி...

மகி : 😒 என்ன..

சிவா : நீ குள்ளமா இருந்துட்டு என்னை வளர்ந்து கெட்டவனு சொன்னல...

மகி : அதெல்லாம் இப்போ ஆராய்ச்சி பண்ண முடியாது நீ அங்க போ நான் இந்த ஊஞ்சல்ல ஆடுறேன்...😊

சிவா : முடியாதுனா என்ன பண்ணுவ ( லேப்டாப்ப ஊஞ்சல்ல வச்சிட்டு அவ கிட்ட நெருங்கி வந்தான்)

மகி : இப்போ நீ ஏன் கிட்ட வர ( பின்னாடி போய்கிட்டே பேசுனா)

சிவா : அவ இடுப்ப புடிச்சி தூக்கி அந்த பெரிய ஊஞ்சல்ல உட்கார வச்சான்...

மகி : அவன் அவள தொட்டு தூக்கவும் அவளுக்கு உடம்பு சிலிர்த்து போச்சி...

சிவா : அவ முன்னாடி சொடக்கு போட்டான்..

மகி : சுய நினைவுக்கு வந்தா...

சிவா : உட்கார வச்சிடன்ல ஆடிக்க ( திரும்புனான்)

மகி : டேய் அப்படியே போனா எப்படி எனக்கு கால் எட்டல ஆட்டி விட்டுட்டு போ...

சிவா : ( அடங்க மாட்றாளே ) வேகமா ஆட்டி விட்டான்...

மகி : ஆஆஆ அடேய் பழிவாங்குற நேரமா இது புடி டா புடி டா பயமா இருக்கு 😣😣😣

சிவா : மாமா சொல்லு அப்போ தான் புடிப்பேன்...

மகி : கீழ விழுந்தாலும் சரி மாமா சொல்ல மாட்டேன் போடா...😏

சிவா : அப்படியா ( இன்னும் வேகமா ஆட்டி விட்டான்)

மகி : 😖😖😖 ஆஆ மாமா மாமா ப்ளீஸ் மாமா ப்ளீஸ் புடி மாமா புடி...

சிவா : ( 😍 ஐ மாமா சொல்லிட்டா சக்ஸஸ்) ஊஞ்சல  புடிச்சான்...

மகி : ஊஞ்சல் திடீர்னு நிக்கவும் ஸ்லிப் ஆகி அவன் மேல விழுந்தா...

சிவா : அவள புடிச்சிட்டே கீழ விழுந்தான் 😍😍😍

மகி : ( அவன் மேல இருந்தா ) 😍😍😍

சிவா : பாக்க தான் குட்டியா இருக்க ஆனா செம்ம வெய்ட்டு..

மகி : என்ன..

சிவா : எழுந்திரி டி...

மகி : ( அப்போ தான் அவன் மேல இருக்கிறத உணர்ந்தா) ச்சி ப்பே ( எழுந்து போய்ட்டா)

சிவா : அப்படியே தலைக்கு பின்னால கைய வச்சிட்டு வானத்தை பார்த்து சிரிச்சிட்டு இருந்தான்...☺️

அடுத்தநாள் காலை,

காலைலயே பெரியவங்க எல்லாரும் பொங்கல் வைக்க தேவையான எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டு இருந்தாங்க...

மகி அப்போ தான் குளிச்சிட்டு டார்க் க்ரீன் அண்ட் கோல்டன் கலர் கலந்த ஹால்ஃப் சேரி கட்டிட்டு ஃப்ரி ஹேர் விட்டு காதுல ஜிமிக்கி தோடு கழுத்துல பெரிய செயின் கை நிறைய வளையல் காலுல கொலுசு  பாவாடை லைட்டா தூக்கிட்டு மாடில இருந்து குதிச்சி குதிச்சி வந்தா...

சிவா : அவனும் க்ரீன் ஷர்ட் வொய்ட் வேஷ்டி கட்டி கழுத்த ஒட்டி குட்டி செயின் வலது கைல காப்பு இடது கைல ப்ரேஸ்லெட் நெத்தில குட்டியா சந்தனம் வச்சி செம்ம ஹேண்ட்சம்மா இருந்தான்...

மகி : 😍😍😍 அவனையே பார்த்துட்டு இருந்தா...

சிவா : செல்லம் என்ன அப்படியே நிக்குற இதான் அழகுல மயங்குறதா 😉😉😉

மகி : ஓஓஓ அந்த ஆசை வேற இருக்கோ...

சிவா : ஏன்டி இந்த மாமன் அழகு இல்லயா...

மகி : ( m.v ) 😍 அழகு தான் ஆனா உன்கிட்ட சொன்னா நீ ஓவரா ஆடுவியே 😒

அழகுலாம் இல்ல சுமாரா தான் இருக்க...

சிவா : சரிங்க மேடம் ( வெளில போய்ட்டான்)

மகி : நான் எப்படி இருக்கேனு சொல்லாமலே போறான் பாரு இடியட் 😏😏 ( அவளும் வெளில போனா)

சிவா அம்மா : அழகா இருக்க டா ( நெட்டி முறிச்சாங்க)

மகி : தேங்க்ஸ் அத்தை...

க்ரிஷ் : அப்போ தான் வந்தான் ( அவன் ப்ளூ ஷர்ட் அண்ட் வொய்ட் வேஷ்டி கட்டிருந்தான்)

மகி : உனக்கு தான் வேஷ்டி கட்ட தெரியாதே எப்படி கட்டுன...

க்ரிஷ் : சிவா மாமா தான் கட்டி விட்டாரு...

மகி : அவன் உனக்கு மாமா வா...

மகி அம்மா : ( அவ தலைல அடிச்சாங்க) அவன் உனக்கும் மாமா தான் ஒழுங்கா மாமானு சொல்லு...

மகி : 😨😨😨 சிவாவ பார்த்தா...

சிவா : அவள பார்த்து கண் அடிச்சான் 😉😉😉

மகி : ப்பே 😏

சிவா : 😚😚😚 உதட்டை குவிச்சி முத்தம் குடுக்குறா மாதிரி பண்ணான்...

மகி : திரு திருனு முழிச்சா 😳😳😳

சிவா : 😄😄😄 சிரிச்சிட்டே அவன் தாத்தா பக்கத்துல போய் நின்னுகிட்டான்...

அப்பறம் நல்ல நேரம் வந்ததும் சூரிய பகவான் முன்னாடி தான் பொங்கல் வைக்கனும் சோ வீட்டுக்கு முன்னாடி சுத்தி மறைவு கட்டி மண் பானைல அரிசி கழுவுன தண்ணி வச்சி அடுப்ப பத்த வச்சாங்க, கொஞ்ச நேரத்துல அந்த தண்ணி பொங்கவும் எல்லாரும் பொங்கலோ பொங்கல்னு கத்துனாங்க...

ஒரு பானைல வெண் பொங்கலும், இன்னொரு பானைல சர்க்கரை பொங்கலும் பொங்கி கடவுள் முன்னாடி வச்சி சாமி கும்பிட்டுட்டு முதல்ல காக்காக்கு வச்சிட்டு அப்பறம் எல்லாரும் சாப்பிட்டாங்க...

தொடரும்....

# Sandhiya