🌹 ROSE DAY 🌹

ஹீரோ         : சரண்
ஹீரோயின் : மகா

மகா : காலேஜ் முடிஞ்சதும் அவ ஸ்கூட்டிய எடுக்க வந்தா...🛵

அவ ஸ்கூட்டி மேல ஒரு சிவப்பு ரோஜாவும் 🌹 ஒரு துண்டு சீட்டும்📝 ( Sticky note) இருந்தது....

மகா : 😍😍😍 அந்த ரோஜா பூவை கைல எடுத்து பார்த்தா... அவளுக்கு ரோஜா பூ ரொம்ப புடிக்கும்... அந்த நோட் எடுத்து படிச்சா... அதுல " ஹாய் ஏன்ஜல் " 😨 யார் இதை வச்சிருப்பா ( சுத்தி தேடுனா)

சரண் : ☺ மரத்துக்கு பின்னாடி ஒழிஞ்சிகிட்டான்...

மகா : யாரும் இல்லனதும் போய்ட்டா...🚶🏻‍♀️

சரண் : அவ போனதும் அவன் பைக் எடுத்துத்து வீட்டுக்கு போய்ட்டான்...🏍️

மகா : அடுத்த நாள் அதே போல ஸ்கூட்டி எடுக்க வந்தா...🛵🚶🏻‍♀️

ஸ்கூட்டி சீட்ல வெள்ளை ரோஜாவும் 🌹, நோட்டும் 📝 இருந்தது...

ரோஜா எடுத்து வச்சிகிட்டா, நோட் எடுத்து படிச்சா அதுல " இந்த வொய்ட் ட்ரெஸ்ல தேவதை மாதிரி இருக்க டி "

மகா : 😊 ( லைட்டா ஸ்மைல் பண்ணா ) யாரு வைக்குறாங்கனு தான் தெரியல நாளைக்கு சீக்கிரம் வந்து கண்டுபுடிக்கனும்... ( ஸ்கூட்டி எடுத்துட்டு கிளம்பிட்டா)

சரண் : அவனும் அவ போனதும் பைக் எடுத்துட்டு கிளம்பிட்டான்...🏍️

மகா : அடுத்த நாள் ஈவ்னிங் மகா சீக்கிரமே வந்து ஒழிஞ்சி நின்னு பார்த்துட்டு இருந்தா... ஆனா ரொம்ப நேரமா யாருமே வரல, " ச்ச என்ன யாரையுமே காணும் " அவ ஸ்கூட்டி கிட்ட போனா ஆனா அங்க ஏற்கனவே  மஞ்சள் ரோஜா, நோட் இருந்தது.. 😨 " இவ்ளோ நேரம் இங்க தான இருந்தோம் யாருமே வரல அப்பறம் எப்படி இதெல்லாம் இங்க வந்தது... ஒருவேளை முன்னாடியே வந்து வச்சிட்டு போய்ட்டாங்களோ "

சரண் : பாவம் என் செல்லம் ரொம்ப கன்ஃபூஸ் ஆகுறா...

மகா : அந்த ரோஜா எடுத்து வச்சிட்டு, நோட் படிச்சா அதுல " என்ன செல்லம் நான் யாருனு கண்டுபுடிக்க முன்னாடியே வந்துட்டியா பட் நான் உனக்கு முன்னாடியே வந்து வச்சிட்டு போய்ட்டனே... உனக்கு என்னை பார்க்கனும்னு ஆசை இருந்தா சொல்லு மாமா உன் முன்னாடி வந்து நிக்குறேன் "

மகா : ( சுத்தி சுத்தி பார்த்தா ஆனா யாரும் இல்ல) நீங்க யாருனு தெரியல ஆனா இங்க தான் எங்கயோ மறஞ்சி நின்னு பார்குறீங்கனு தெரியும், நல்லா கேட்டுக்கோங்க எனக்கு உங்களை பார்க்கனும்னு ஆசை இல்ல புரிஞ்சதா ( அவ ஸ்கூட்டி எடுத்துகிட்டு போய்ட்டா)

சரண் : ( மரத்துக்கு பின்னால இருந்து வெளிவ வந்தான்)  😌 பார்க்கனும்னு ஆசை இல்லயா அதையும் பார்த்துடலாம் ( பைக் எடுத்துட்டு கிளம்பிட்டான்)

மகா : அடுத்தநாள் ஈவ்னிங் இன்னைக்கு என்ன கலர் ரோஸ் இருக்கும் என்ன நோட் இருக்கும்னு  பார்க்க ஆர்வமா வந்தா ஆனா அங்க ஒன்னுமே இல்ல...

😔😔😔 என்ன ஒன்னுமே இல்ல ஒருவேளை நேத்து நாம பேசுனதை கேட்டு தப்பா எடுத்துகிட்டாங்களோ... ( சோகமா வீட்டுக்கு போய்ட்டுக்கு போய்ட்டா)

இப்படியே 2,3 நாள் போச்சி ஆனா அவ எதிர் பார்த்த ரோஸ், நோட் அங்க இல்ல...

நாளாவது நாள் மகா ரொம்ப சோகமா வந்தா பார்க்கிங்க்கு அங்க ஒரு நோட் மட்டும் இருந்தது அதை பார்த்ததும் மகா முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் அந்த நோட் எடுத்து படிச்சா அதுல " இதுக்கு மேலயும் என் தேவதைய காக்க வைக்க விரும்பல என்னை பார்க்கனும்னு ஆசை இருந்தா இந்த அட்ரஸ்க்கு வா "

மகா அந்த நோட்ல எழுதிருந்த அட்ரஸ்க்கு போனா...🚶🏻‍♀️

அது ஒரு ஃப்லவர் ஷாப் ( Flower shop )

மகா : இங்க ஏன் வர சொன்னாங்க ( மெதுவா உள்ள போனா அங்க நிறைய பேர் ஃப்லவர்ஸ், பொக்கேனு வாங்கிட்டு இருந்தாங்க)

திடீர்னு லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆச்சி மகா கொஞ்சம் பயந்துட்டா... 2 நிமிடத்துல லைட் எல்லாம் திரும்ப ஆன் ஆச்சி...🔅💡🔆

அப்போ அவள சுத்தி யாருமே இல்ல அவ மட்டும் தான் இருந்தா...மகாக்கு மேல கட்டிருந்த ஒரு பலூன் வெடிச்சி அவ மேல நிறைய ரோஜா இதழ்கள் கொட்டுச்சி...

மகா : 😍😍😍 கைய விரிச்சி அதை அழகா ரசிச்சா...

அந்த ஷாப்ல வேலை செய்யுற எல்லாரும் அவ கைல ஒவ்வொரு கலர் ரோஸ் கொண்டு வந்து குடுத்தாங்க...  மகா அதை வாங்கி கிட்டா...

அப்பறம் லைட் எல்லாம் ஆஃப் ஆகி ஒரு லைட் மட்டும் ஆன்ல இருந்தது அதுக்கு கீழ சரண் வொய்ட் ஷர்ட் ப்ளூ சீன்ஸ் போட்டு கைல ஒரு ரோஸ் பொக்கே வோட நின்னுட்டு இருந்தான்...

மகா : 😍😍😍 அவனையே மெய் மறந்து பார்த்துட்டு இருந்தா... ( சரண்க்கு காலேஜ்ல நிறைய க்ரஷ் ( crush) இருக்காங்க அதுல மகாவும் ஒருத்தி)

சரண் : அவள நோக்கி நடந்து வந்தான் அவன் வர வர அவனுக்கு மேல உள்ள லைட் எல்லாம் ஒவ்வொன்னா ஆன் ஆச்சி...

மகா : 😍😍😍 கண்ணுல காதலோட அவனை பார்த்துட்டு இருந்தா...

சரண் : ( அவளுக்கு கீழ மண்டி போட்டு பொக்கேவ நீட்டி ) மகா வில் யூ மேரி மீ ( Will you marry me)

மகா : ( அவளும் அந்த பொக்கெவ வாங்குனா) எஸ் சரண் ஐ லவ் யூ...☺️

சரண் : ( எழுந்தான்) லவ் யூ டூடூடூ (அவள ஹக் பண்ணி நெத்தில கிஸ் பண்ணான்)

அங்க இருந்த எல்லாரும் க்ளாப் பண்ணாங்க...👏👏👏

         🌹🌹🌹 முற்றும் 🌹🌹🌹

# Sandhiya.