காதல் கண்ணாமூச்சி - 42

ரேகா அர்ஜூனுக்கு கால் ட்ரை பண்ணிட்டே இருக்கா..

ஆனா அர்ஜூன் போன் ஆன் பண்ணவே இல்ல.

அர்ஜூன் அபி ரெண்டு பேரும் ஷாப்பிங் மால் அங்க இங்கன்னு சுத்திட்டு ஒரு நர்சரி கார்டன் போறாங்க..அங்க நிறைய அழகு அழகா செடிகள் இருக்கு...அபி அதை எல்லாம் ரசிச்சு பக்கத்துல போய் தொட்டு தொட்டு பாக்குறா..
அவ ரசிக்கும் அழகை பார்த்து அர்ஜூன் அபியை ரசிக்குறான்.

அபி : அர்ஜூன்..இது..

அர்ஜூன் : ம்ம்..

அபி : அப்பறம் இதுவும்..

அர்ஜூன் : வாங்கிக்கோ டி..

அபி : ஒரு ரெட் ரோஸ், எல்லோ கலர், பிங்க் கலர், ல வாங்குறா..

அர்ஜூன் : போதுமா..

அபி : இல்ல.. இன்னும் வேணும்.

அர்ஜூன் : வாங்கிக்கோ..

அபி: அண்ணா.. துளசி செடி இருக்கா..

விற்பனையாளர் : இருக்கு மா..இந்தாங்க.

அபி : அப்பறம்..குண்டு மல்லி பூ எடுத்து தாங்க அண்ணா.. நிறைய பூ வைக்குற மாதிரி.

அவரும் எடுத்து தராரு...

அபி : அப்பறம் அந்த செவ்வந்தி பூ அந்த ரெண்டு கலரும் வேணும் ன்னு வாங்குறா... அர்ஜூன் போதும்.

அர்ஜூன் : ம்ம்..வேற எதுவும் வேண்டாமா..

அபி : அப்பறம் வாங்கிக்கலா..இப்போவே ஒரேயடியா வாங்க வேண்டா..

அர்ஜூன் : ஹோ..

அபி : ஏன் அப்பறம் வாங்கி தர மாட்டியா..

அர்ஜூன் : நான் எப்படி அப்படி சொன்னேன். வாங்கி தரேன்.

அபி வாங்கிய எல்லாத்துக்கும் ஃபில் போட்டு கொடுத்துட்டு கார்ல வைச்சுட்டு கிளம்புறாங்க.

வீட்டுக்கு போனதும்.. வாங்கிட்டு வந்த செடியை பால்கனி நீட்டா வைக்குறாங்க..

அர்ஜூன் : அழகா இருக்கு டி.

அபி : ம்ம் ஆமா..ஆனா இன்னும் நிறைய வைக்கணும் டா..

அர்ஜூன் : அதா அங்கேயே கேட்டேன் இல்ல.

அபி : இல்ல டா.. மெடிசின் ரிலேட்டா வைக்கணும்.. கறிவேப்பிலை, கொத்தமல்லி,புதினா , தூதுவளை, வெற்றிலை இது மாதிரி.

அர்ஜூன் : அங்கேயே கேட்க வேண்டியது தானே.

அபி : நான் தனியா கேட்டேன் டா..லேட் ஆகும் ன்னு சொன்னாங்க..இதுலா நம்ம ஊருல இருக்கு. ஊருக்கு போய்ட்டு வரும் போது எடுத்துக்கிட்டு வரலாம்.

அர்ஜூன் : ம்ம் சரி..

அபி : அர்ஜூன்.. ஊருக்கு போலாமா !! அம்மா அப்பாவை பாக்கணும் போல இருக்கு.

அர்ஜூன் : ஏய்..அதா தினமும் வீடியோ கால்ல பேசுறீங்க இல்ல.

அபி : இருந்தாலும் நேருல பாக்குற மாதிரி இருக்குமா..

அர்ஜூன் : ஏய்.. இப்போ லீவ் இல்ல டி.. நான் வேற நிறைய லீவ் போட்டுட்டேன்.

அபி : யாரு டா போட சொன்னா..

அர்ஜூன் : உனக்காக தான் டி.

அபி : நான் போட சொன்னேன்னா..

அர்ஜூன் : ஏய்..நல்ல தானே இருந்தா..என்ன திடீர்னு இப்படி பேசுற.

அபி : எனக்கு ஊருக்கு போகணும்.

அர்ஜூன் : காலேஜ் க்கு

அபி : கட்டு தா அடிக்கணும்.

அர்ஜூன் : முடிவே பண்ணிட்டியா..

அபி : ஆமா... நான் ஊருக்கு போனும்.

அர்ஜூன் : சரி ஒரு ரெண்டு நாள் வைட் பண்ணு..சனி கிழமை கிளம்புலா..

அபி : இல்ல நான் இப்போவே போகணும்...ன்னு அழுகுறா..

அர்ஜூன் : ஏன் டி இப்படி குழந்தை மாதிரி பண்ற..
ஸ்சோ.. இப்போ போனும்னா நீ மட்டும் தான் போகணும்.

அபி : சரி பரவாயில்ல..

அர்ஜூன் : சரி கிளம்பு.. ட்ரயின் ஏத்தி விடுறேன்.

அபி : ம்ம்...ன்னு கிளம்புறா..

அவளை கூட்டிட்டு போய்ட்டு ட்ரயின் ஏத்தி விடுறான்.

ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து அர்ஜூனை பாக்குறா..

அர்ஜூன் : பாத்து பாத்திரமா போய்ட்டு வா..

அபி : ம்ம்..

அர்ஜூன் : யாராவது ஏதாவது தந்தா வாங்கதா..தயவு பண்ணி உன் ஹேல்பிங் மைண்டா இங்கயே கொடுத்துட்டு போ மா..வந்து வாங்கிக்குவ.. ஊருக்கு போறா வரை ட்ரயின் விட்டு இறங்கதா.. நான் மாமாக்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அவரு அங்க வந்துரு வாரு.

அபி : ம்ம் ...ன்னு அர்ஜூனையே பாக்குறா..

அர்ஜூன் : என்ன டி இப்படி வெறிக்க வெறிக்க பாக்குற.. ஏதாவது வேணுமா.

அபி : நான் இல்லமா இருந்துப்பீயா..

அர்ஜூன் : தெரியலை.. கல்யாணத்துக்கு அப்புறம் இப்போ தான் முதல் தடவை என்னை விட்டு போற..சோ எப்படி இருக்க போறேன்னு தெரியலை.. கஷ்டமா தா இருக்கும் எப்படியும்..உனக்கு என்ன அங்க போனா என்னை மறந்துருவ..

அபி : ஏய்.. இப்படி லா பேசாதா..

அர்ஜூன் : ஆமா.. என்கூட இருக்கும் போது உனக்கு அவங்க தான் வேணும்.. சரி விடு..பாத்திரமா போய்ட்டு வா...
ட்ரயின் கிளம்ப விசில் சத்தம் கேட்குது.

அபி : ஐ லவ் யூ சொல்லு..

அர்ஜூன் : ஐ லவ் யூ டி..

அபி : நீயும் வா..

அர்ஜூன் : இல்ல டி.. கண்டிப்பா நாளைக்கு போயே ஆகணும்.

அபி : என்னால உன்ன விட்டு இருக்க முடியாது டா..

அர்ஜூன் : அப்போ போகாதா..

அபி : முடியாது..

அர்ஜூன் : அப்போ சந்தோஷமா போய்ட்டு சீக்கிரம் வா..

அபி : நீ வா டா ன்னு கை பிடிக்குறா..

ட்ரயின் லைட்டா மூவ் ஆகுது..

அர்ஜூன் : கை விடு டி.. ட்ரயின் மூவ் ஆகுது..

அபி : அர்ஜூன்...

அர்ஜூன் : என்ன மா..

அபி : ஒன்னும் இல்லன்னு கையை விட்டுட்டா..

அர்ஜூன் அங்கேயே நின்னுட்டான்..கண்ணுலா கலங்குது.

கொஞ்ச நேரம் ட்ரயினை பாத்துட்டு திரும்புறான். இரண்டு அடி எடுத்து வைக்குறான்.

அபி : டேய்..

அர்ஜூன் திரும்பி பாக்குறான்.

அபி பேக் ஓட நிக்குறா..

அர்ஜூன் சிரிச்சு கலந்த ஆச்சரியமா பாக்குறான்.

அபி : என்னால நீ இல்ல மா ஒரு நாள் கூட இருக்க முடியாது.  சனி கிழமை நீயே கூட்டிட்டு போ..

அர்ஜூன் சிரிச்சுட்டே கையை இரண்டு பக்கமும் விரிக்குறான்.

அபி ஓடி வந்து கட்டி பிடிச்சுக்குறா..

அங்க இருக்க நிறைய பேரு இவங்களை பாத்து சிரிக்குறாங்க..

அர்ஜூன் : எல்லாரும் பாக்குறாங்க டி.

அபி : பரவால்ல டா..

அர்ஜூன் : ம்ம்..ஆமா பரவால்ல.. வீட்டுக்கு போலாமா.

அபி : ம்ம்...

ரெண்டு பேரும் கார்ல வீட்டுக்கு போறாங்க.. கொஞ்ச நேரம் எதுவும் பேசமா வராங்க.. அப்பறம் ஒருத்தரை ஒருத்தர் பாத்து சிரிச்சுக்குறாங்க..

வீட்டுக்கு போறாங்க..கதவு திறந்து இருக்கு.

க்ரிஷ் : எங்க டா போனீங்க.. தங்கச்சி பசிக்குது மா..

அபி : அச்சோ அண்ணா. சாரி..

க்ரிஷ் : இன்னும் லேட் ஆகுமா..

அர்ஜூன் : சரி வா மச்சா... வெளியே போய் சாப்பிட்டு வரலாம்.

அபி : சமைச்சுடுறேன்.

அர்ஜூன் : வேண்டா டி..அவனே பசிக்குதுன்னு சொல்றா.. இப்போ நீ ஆரம்பிச்சு முடிக்குறதுக்குள்ள சாப்பிட்டு வந்துடலா..வா போலாம்.

அபி பேக் வைச்சுட்டு வாரா..

3 பேரும் பேசிட்டே சாப்பிடுறாங்க..

அபி எழுந்து வாஸ் ரூம் போறா...

க்ரிஷ் : ஹே..அந்த காட்டு எருமை உன்னை கேட்டா டா.

அர்ஜூன் : ரேகா வா..

க்ரிஷ் : அவளே தான்.

அர்ஜூன் : என்னவாம்??

க்ரிஷ் : உனக்கு கல்யாணம் ஆய்டுச்சுன்னு சொன்னா பொய் சொல்றேன்...கதை சொல்றேன்னு சொல்றா டா.

அர்ஜூன் : இவளை என்ன தான் டா பண்றது.

க்ரிஷ் : தெரியலை டா.. அடுத்த வாரத்துல பிக்னிக் டா

அர்ஜூன் : என்ன ப்ளேஸ் டா..

க்ரிஷ் : தெரியலை டா..

அர்ஜூன் : நீங்க போய்ட்டு வாங்க டா.. நான் வரலை டா

க்ரிஷ் : ஏய் என்ன விளையாடுறீயா..நீ இல்லமா எப்படி..நீ தான் ஹெட்டு.

அர்ஜூன் : ஏய்..அவளும் வருவா இல்ல

க்ரிஷ் : அதுக்கு..நீ வரமாட்டியா..எனக்கு தெரியாது நீ வர.. வேணும்னா அவளை வர வேண்டா சொல்லிரலாம்

அர்ஜூன் : அது எப்படி..

க்ரிஷ் : யோசிக்கலாம்.

அர்ஜூன் : அப்பறம் அபி..

க்ரிஷ் : அது..அபியை அப்போ வேணும்னா ஊருக்கு அனுப்பலாம்.. இல்லன்னா யாரையாவது ஊருல இருந்து வர சொல்லலாம்.

அர்ஜூன் : அதுலா சரியா வராது..டா.

க்ரிஷ் : ஏய்.. ஃபேமிலி மேம்பர்ஸ் யாரும் அலோடு இல்ல தானே..

அர்ஜூன் : தெரியும் டா.. அதுக்கு தா நானும் வரலை‌

க்ரிஷ் : என்னமோ பண்ணு...இத ஆப்பிஸ் லா சொல்லு.

அபி வரா.. இரண்டு பேரும் போய் வாஸ் பண்ணிட்டு வராங்க..

அபி போய் காருல உட்காரு ரா..அதே ஹோட்டல் க்கு ரேகா வரா..

தொடரும்..

# Bhuvi