காதல் கண்ணாமூச்சி - 45

அபியும் அர்ஜூனும் சந்தோஷமா பேசிட்டு இருக்காங்க..

அப்போ அர்ஜூன் க்கு கால் வருது..

அர்ஜூன் : ஹாலோ..சார் நாங்க சிரஞ்சீவி ஹாஸ்பிடல் லா இருந்து பேசுறோம்... ஃப்ளாட் ரிப்போர்ட் வாங்கிக்க சொல்லி கால் பண்ணி இருந்தோம்.. நீங்க இன்னும் வாங்கவே இல்ல.

அர்ஜூன் : சாரி மேடம்.. நான் கொஞ்சம் வோர்க் பிஸில மறந்துட்டேன்.

நர்ஸ் : ஓகே சார்.. கொஞ்சம் நாளைக்கு வந்து வாங்கிட்டு போங்க சார்..

அர்ஜூன் : ஓகே மேடம்.
ன்னு வைச்சுடுறான்.

அபி : என்ன ஆச்சு ?? யாரு கால் பண்ணா..நீ என்ன மறந்துட்ட..

அர்ஜூன் : அதுவா உன்னோட ஃப்ளாட் ரிப்போர்ட்..

அபி : ம்ம்.. அப்போ நான் மறக்கற அளவுக்கு தான் உன் மனசுல இருக்கேன் போல இருக்கே..

அர்ஜூன் : இப்படிலா சொல்லாதடி..கஷ்டமா இருக்கு.

அபி : சும்மா சொன்னேன் டா..
அதுக்கு என்ன அவசரம்..விடு நானே போய் வாங்கிட்டு வரேன்‌.

அர்ஜூன் : இல்ல டி..நானே போறேன்.

அபி : பரவால்ல டா.. எனக்கு காலேஜ் லீவ் தான்.. ஈவ்னிங் நானே வாங்கிக்குறேன்.

அர்ஜூன் : சரி ஓகே டி..நீயே வாங்கிட்டு வா...

அபி : சரி வா சாப்பிடலாம்..அண்ணா வாங்க..

3 பேரும் சாப்பிட்டு படுக்க போறாங்க..

அடுத்த நாள் விடியுது..வழக்கம் போல வேலையை முடிச்சிட்டு கிளம்புறாங்க.அபி மட்டும் வீட்டுல இருக்க தூசுலா துடைச்சு க்ளீன் பண்ணிட்டு இருக்கா..

அர்ஜூன் போகும் போது வழியில ரேகா இருக்கா..அவனை வழி மறிக்குறா..

அர்ஜூன் அவளை கண்டுக்கமா போறான்.

ரேகா : ரொம்ப பண்ணதா டா..நானா வழிய வந்து பேசுறதால என் அருமை உனக்கு புரியலை.

அர்ஜூன் : ஏய்..உன்ன எவன் டி என் பின்னாடி சுத்த சொன்னா.. நான் தான் சொல்றேன் இல்ல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு..அத புரிஞ்சுக்க மா சும்மா உயிரை வாங்குற.. உன்னால தேவை இல்லமா என் வைப் ஆ கஷ்டப்படுத்துறேன்.

ரேகா : எப்படி டா இல்ல ஒருத்தியை இருக்க மாதிரியே பேசுற..

அர்ஜூன் : ச்சீ.. உன்கிட்ட எவ்வளவு சொன்னாலும் வேஸ்ட் தா...போ..ன்னு அவன் வேலையை பாக்குறான்.

க்ரிஷ் வாரான்..

அர்ஜூன் : சொல்லு டா..

க்ரிஷ் : டூர் சிம்லா டா..

அர்ஜூன் : வாவ்.. சூப்பர் டா..

க்ரிஷ் : இந்தா... டிக்கெட் கூட வந்துருச்சு..ஸ்டாப்ஸ் மட்டும் தான் டா..

அர்ஜூன் : ம்ம்.. ஓகே டா..நோ ப்ராப்ளம்..
எல்லாருக்கும் சொல்லிரு..

க்ரிஷ் : ஹாய் ப்ரண்ஸ்..ஒரு நிமிஷம் கவனிங்க..நாமா பிக்னிக் போக டிக்கெட் வந்துருச்சு..ப்ளைட் லா.. சிம்லா டூர்..3 நாள்...

எல்லாரும் : ஹே...ன்னு கைத் தட்டி ஓஓஓஓ...ன்னு கத்துறாங்க.

க்ரிஷ் : நாளைக்கு நைட் ஃப்ளைட்..சோ தயவு பண்ணி எல்லாரும் கரெக்ட் டைம்க்கு வந்துடுங்க... அப்பறம் முக்கியமான விஷயம்.. டிக்கெட் உங்களுக்கு மட்டும் தா..நாட் ஃபார் ஃபேமிலி மேம்பர்ஸ்... ஓகே வா..

எல்லாரும் : ஓகே க்ரிஷ்...ன்னு சொல்றாங்க...

க்ரிஷ் : டேய்... அர்ஜூன் சொல்லிட்டேன் டா.. தங்கச்சி எப்படி டா தனியா இருப்பா..

அர்ஜூன் : அவ ஏன் டா தனியா இருக்கணும்..அதா நான் இருக்கேன்னே.

க்ரிஷ் : அப்போ நீ வரலையா ??

அர்ஜூன் : நான் வர மாட்டேன் ன்னு சொன்னேன்னா ??

க்ரிஷ் : டேய்..குழப்பாம சொல்லு டா !!!

அர்ஜூன் அவன் ட்ராலா இருந்து ஒரு கவர் எடுக்குறான்.. இதை பாரு..

க்ரிஷ் எடுத்து பாக்குறான். ஃப்ளைட் டிக்கெட்.

இது எப்படி டா..

அர்ஜூன் : என் பொண்டாட்டி க்கு தான் டா...அவளை எப்படி டா விட்டுட்டு வராது..சோ என் சொந்த காசுல வாங்குன்ன..

க்ரிஷ் : சூப்பர் மச்சா..

அர்ஜூன் : அப்பறம் நாங்க தனியா என்ஜாய் பண்றோம்..நீ இவங்க எல்லாரையும் பாத்துக்கோ..முக்கியமா அந்தா ராட்சசி என்கிட்ட வரவே கூடாது சரியா..

க்ரிஷ் : ஓகே மச்சா.. நான் பாத்துக்குறேன் டா..

அர்ஜூன் : ஓகே மச்சா...நீ பாத்துக்கோ.. நான் அபிக்கு ஜர்கி லா வேணும் இல்ல..வாங்கிட்டு வரேன்..

க்ரிஷ் : தங்கச்சியை கூட்டிட்டு போ டா..

அர்ஜூன் : ம்ம்..அவளை கூட்டிட்டு தான் டா..

அப்போ எம். டி கூப்பிட...ரெண்டு பேரும் போறாங்க...

ஏதோ பெரிய வோர்க்..அதை முடிக்க சாய்ந்திரம் ஆகிடுது..

அர்ஜூனும் க்ரிஷ் ஒன்னாவே வராங்க..

அர்ஜூன் அபிக்கு கால் பண்றான்..

அபி : ஹாலோ...சொல்லு டா

அர்ஜூன் : ஏன் டி ஒரு மாதிரி இருக்கு குரல்...

அபி : ஒன்னு இல்ல...என்னன்னு சொல்லு.

அர்ஜூன் : ஷாப்பிங் போலாம் டி.. ரெடியா இரு..

அபி : ம்ம் சரி..ன்னு ரெடி ஆகுறா..

கொஞ்ச நேரத்தில அர்ஜூன் கால் பண்ண...அபி கீழே வரா..
வந்து காருல ஏறுறா..

அர்ஜூன் : ஏன் டி டால்லா இருக்க.. தூங்கிட்டு இருந்தேன்..அதா இப்படி இருக்கு....

அர்ஜூன் : என்ன டி இப்போ போய் தூங்கிட்டு இருக்க..

அபி : சும்மாவே எவ்வளவு நேரம் இருக்கறது..அதா தூங்கிட்டேன்.

அர்ஜூன் : ரிப்போர்ட் வாங்குனீயா..

அபி : ம்ம்..

அர்ஜூன் : என்ன சொன்னாங்க..

அபி : ஒன்னும் இல்லன்னு தா சொன்னாங்க..

அர்ஜூன் ; ஓகே ஓகே..ஆமா எங்க போறோம்னு கேட்க மாட்டியா..

அபி : நீ கூப்பிட்டா எங்க வேணாலும் வருவேன் டா...

அர்ஜூன் : ஆச்சோ டச் பண்ணிட்டா டி...

அபி : இல்லையே.. நான் கம்முன்னு தானே இருக்கேன்.

அர்ஜூன் : மச்சா..பாரு டா உன் தங்கச்சி உன்ன மாதிரியே டியூப் லைட்டா இருக்கா..

அபி : என்ன நான் ட்யூப் லைட் டா...அது நீங்க தா..ஏதோ பாவம் சும்மா அந்த நேம் சொல்ல வேண்டா நினைச்சா...என்ன சொல்றீயா..ன்னு அவனை அடிக்குறா..

க்ரிஷ் : வேணும் வேணும்..உனக்கு நல்லா..

அர்ஜூன் : ஏய்.. போதும் டி..நீ ட்யூப் லைட் இல்ல.. பெட்டர் மார்ஸ் லைட் தான் டி..விடு.

அபி சரின்னு சைலண்ட் டா வரா..

அர்ஜூன் : ஹே.. பொண்டாட்டி !! நாங்க நாளைக்கு டூர் போறோம் டி.

அபி : எங்க ?? எத்தனை நாள்

அர்ஜூன் : சிம்லா.. நாளைக்கு கிளம்புறோம்..3 நாள்..டூர்

அபி : ஓகே..பாத்து போய்ட்டு வாங்க..

அர்ஜூன் : நீ தனியா இருந்துப்பீயா...

அபி : கஷ்டம் தா...ஆனா உனக்கு நல்லது தானே..போய்ட்டு வா..

அர்ஜூன் : என்னா நல்லது..

அபி : நான் இல்லமா இருக்க..என் இம்சை இருக்காது.. ஜாலியா இருப்பா.. நான் ஒன்னும் சொல்லல..போய்ட்டு வா..

அர்ஜூன் : ஆமா இல்ல..இந்த ஆங்கிள் லா இருந்து நான் யோசிக்கவே இல்ல..

க்ரிஷ் : டேய்...

அர்ஜூன் : ஏய் அழகு பொண்டாட்டி... நீயும் என் கூட தான் வரா.. உன்னை அப்படிலா விட மாட்டேன் டி..

அபி : எத்தனை நாளுக்கு..

அர்ஜூன் : இது என்ன டி கேள்வி... எப்பவும் உன்ன தனியா விட்டு போக மாட்டான்..

அபி : நான் விட்டுட்டு போனா என்ன பண்ணுவ அர்ஜூன்..

அர்ஜூன் : புரியலை..எங்க போவ...

அபி : அது..எங்க அம்மா வீட்டுக்கு.. காலேஜ் டூர்க்கு..

அர்ஜூன் : ஓ.. நானும் வருவேன் அவ்வளவு தான்..

அபி : ம்ம்..

ஒரு மால் கிட்ட நிறுத்திட்டு உள்ள போறாங்க...அபிக்கு வேண்டியது டூர்க்கு வேண்டியது எல்லாம் வாங்கிட்டு வராங்க..

அர்ஜூன் : சாப்பிட்டு போலாம் டி..

அபி : வேண்டா டா.. சாம்பார் வைச்சுட்டேன்..போனா தோசை சூடுறேன்... சாப்பிடலாம்.. அடிக்கடி ஹோட்டல் சாப்பாடு வேண்டா டா...

அர்ஜூன் : சரி.. போலாம் ன்னு வீட்டுக்கு போறாங்க..

அபி திங்ஸ் வைச்சுட்டு தோசை சூடுறா..

அவ முகம் சோகமாவே இருக்கு..அர்ஜூனும் அதை கவனிக்குறான்.

எல்லாரும் சாப்பிட்டு டிவி பாக்குறாங்க..

அபி மட்டும் ரூம்ல தனியா இருக்கா..
அவ ஃபேமிலி போட்டோ எடுத்து பாத்துட்டு இருக்கா.. அர்ஜூன் அதை பாக்குறான்.

அர்ஜூன் : ( ஹோ. ..அத்தை மாமா ஞாபகம் வந்துருச்சா...அதுக்கு தான் இப்படி இருக்காலா.. பாவம் ஊருக்கு போகணும் னு கேட்டா‌‌.. நான் தான் மறந்துட்டேன்..சிம்லா போய்ட்டு வந்தா அப்பறம் கூட்டிட்டு போலாம் ன்னு நினைச்சுக்குறான் )

அர்ஜூன் : ஹே.. பொண்டாட்டி..

அவன் குரல் கேட்டதும் அபி சிரிச்ச முகமா திரும்புறா..

அபி: என்ன டா..

அர்ஜூன் : நாளைக்கு நமக்கு 2 வந்து ஹனிமூன் டி..

அபி : ஓ..

அர்ஜூன் : என்ன ஓ..

அபி : ஒன்னும் இல்ல...அங்க உங்க ப்ரண்ஸ் லா வருவாங்க இல்ல

அர்ஜூன் : யாரு வந்தா என்ன டி...நாமா ஜாலியா இருக்கலாம்..

அபி : பாக்கலாம் பாக்கலாம்

அர்ஜூன் : ரூம்க்கு போனா வெளியேவே போக கூடாது டி..

அபி : அடப்பாவி... அதுக்கு எதுக்கு டா அங்க போகணும்.

அர்ஜூன் : ஈஈஈஈ...சும்மா..சுத்தி பாக்கா போலாம்.

அபி : ம்ம்..சரி படு.. தூக்கம் வருது.

அர்ஜூன் : ஹேய்..தூங்க போறீயா..

அபி : ஆமா..ஏன் ??

அர்ஜூன் : இல்ல..அது..

அபி : தெரியுது..லைட் ஆஃப் பண்ணிட்டு வா..

அர்ஜூன்: ஈஈஈ...

ரெண்டு பேரும் தூங்கிடுறாங்க..

அடுத்த நாள்..

ரேகா அவளுக்குன்னு 2 அடிமைகளை ரெடி பண்ணி இருந்தா ஆப்பிஸ் லா.. அவங்களுக்கு ஏதோ ட்ரயினிங் லா கொடுத்துட்டு இருந்தா காலையிலயே..

அர்ஜூன் க்ரிஷ் வோர்க் லா பிஸியா இருந்தாங்க..

மதியத்துக்கு அப்பறம் 3 மணிக்கு எல்லாருக்கும் லீவ் சொல்றாங்க.

அர்ஜூன் : ஹாய்ஸ் எல்லாரும் ஷார்ப்பா 6 மணிக்கு ஏர்ப்போர்ட் லா இருக்கணும்..பி கேர் ஃபுல்.. யாரும் மிஸ் ஆகாமா வந்துருங்க..இனி ஏர்ப்போர்ட் லா பாக்கலாம்..ன்னு கிளம்புறாங்க..

அபி வீட்டுல திங்ஸ் லா பேக் பண்ணிட்டு இருந்தா..

இவங்க வந்ததும் குளிச்சு ரெடி ஆகுறாங்க..

அர்ஜூன் லேப் டாப் லா எடுத்து வைக்குறான்.

க்ரிஷ் கேமரா அது இதுன்னு எடுத்து வைக்குறான்.

கிளம்பி ஏர்ப்போர்ட் போறாங்க..

தொடரும்...

# Bhuvi