காதல் கண்ணாமூச்சி - 52

அபி : எங்க தா இந்த அம்மா போனாங்க..
ஆளையே காணோம்..ன்னு அவ வீட்டு மீன் கூட பேசிட்டு இருக்கா..

அப்போ கௌசல்யா வீட்டுக்கு வாராங்க..

அபி : எங்க மா அவ்வளவு அவசரமா போனா..

கௌசல்யா : இது வாங்க தான்...இந்தா இதை பிடி..
ன்னு ஸ்டோர் ரூம்க்கு போய் ஒரு ப்ளாஸ்டிக் கப் எடுத்துக் கிட்டு வராங்க..

அபி : என்ன மா பண்றா..இது எதுக்கு இப்போ..

கௌசல்யா : ஆளுதா வளர்ந்து இருக்க..படிச்சவா தானே நீ..பார்த்தா தெரியாதா..

அபி : எதுக்கு மா திட்டுற..

கௌசல்யா : நான் ஒன்னும் திட்டலை...இந்தா இதுல யூரின் செக் பண்ணா மாசமா இருக்கீயா இல்லையா ன்னு தெரிஞ்சுறும்...

அபி : ம்ம்.. நீயும் வா...

கௌசல்யா : பாத்ரூம் க்கு போ..வரேன்னு..போறாங்க..

இரண்டு செட்டு எடுத்து ப்ரக்னான்சி டெஸ்ட் பண்றது லா விடுறாங்க..

அபி : இதுல எப்படி மா..கண்டுபிடிக்குறது..ன்னு அதுல இருந்த கவரை எடுத்து பாக்குறா..

மா... இரண்டு கோடு வந்தா ப்ரக்னான்சி மா..ஒரு கோடு வந்தா இல்ல..

கௌசல்யா : சரி பாரு..கோடு வருது..

அபி : எங்க..காட்டுன்னு வாங்கி பாக்குறா..

ஒரு பிங்க் கலர் கோடு நல்லா பளின்னு தெரியுது.. இன்னோரு கோடு வரும்மான்னு ரொம்ப ஆர்வமா பாக்குறா... ரொம்ப லைட்டா இன்னோரு கோடு தெரியுது.

கௌசல்யா : என்ன டி ஆச்சு.. அப்படி பாக்குற..ரெண்டு கோடு தெரியுதா இல்லையா..

அபி : ஒன்னு தா நல்லா தெரியுது..இன்னோன்னு ரொம்ப லைட்டா தெரியுது.. அப்போ மாசமா இல்ல போல இருக்கு..
ன்னு கௌசல்யா கையில கொடுத்துட்டு வெளியே போய் உட்காரு ரா..

கௌசல்யா அந்த டெஸ்ட் ஸ்லீப்பை போட்டோ எடுத்து அவங்க ஃபேமிலி டாக்டர் மனோக்கு அனுப்புறாங்க..

அவரு அப்போ கொஞ்சம் பிஸியா இருந்தா காரணத்தால பாக்குல..

அபி முகம் சோகமா இருக்கு.

கௌசல்யா : எதுக்கு உம்முன்னு இருக்க..

அபி : உன்னால தான்

கௌசல்யா : நான் என்ன மா பண்ணேன்.

அபி : நீ தான் தேவை இல்லமா மாசமா இருந்தா தான் நாள் தள்ளி போகுன்னு சொன்னா.. நானும் ஒரு வேளை மாசமா இருக்கோம்ன்னு கொஞ்சம் நினைச்சேன்..ஆனா அது இப்போ இல்ல..கஷ்டமா இருக்கு.

கௌசல்யா : நீயா ஏதாவது முடிவு பண்ணாதா அபி..மனோ மாமாக்கு அனுப்பி இருக்கேன்...அவரு பாத்துட்டு சொல்வாரு..

அபி : அடப் போ மா.. எனக்கு தூக்கம் வருதுன்னு போய் தூங்குறா..

மனோ ஃப்ரீ ஆனதும் போன் எடுத்து பாக்குறாரு...அதோட கௌசல்யா க்கு காலும் பண்றாரு..

கௌசல்யா : அண்ணா சொல்லுங்க..

மனோ : என்ன மா போட்டோ மட்டும் அனுப்பி இருக்க..எங்க ட்ரீட்.

கௌசல்யா : அப்போ இது பாஸ்ட்டீவ் வா னா..அபி அம்மா ஆகப் போறாளா..

மனோ : ஆமா மா..இதுல என்ன சந்தேகம்..எங்க அபி..

கௌசல்யா : அவ இப்போ தான் அண்ணா தூங்க போனா..

மனோ : ஓ..சரி சரி..அவளை தொந்தரவு பண்ண வேண்டா..இனி எல்லா பிரச்சினையும் சீக்கிரமே தீர்ந்திடும்.. எதுக்கும் கவலை பட வேண்டா சரியா..இந்த மாதிரி நேரத்துல அவளை ரொம்ப நல்லா கவனமா பாத்துக்கணும்.. ஏற்கனவே அவளுக்கு உடம்புலா தெம்பு இருக்காது... கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கோ மா..

கௌசல்யா : சரி அண்ணா.. நீங்க சொல்ற மாதிரியே நடந்துக்குறேன்.

மனோ : அப்பறம் கௌசல்யா..அபி மாத்திரை தினமும் தானே சாப்பிடுறா..பாத்துக்கோ மா..அது ரொம்ப முக்கியம்.. இடையில சாப்பிடறது எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தவே கூடாது.

கௌசல்யா : ஆனா அண்ணா..

அப்போ நர்ஸ் வந்து அவசரம்னு கூப்பிட மனோ கால் கட் பண்ணிட்டு போறாரு..

கௌசல்யா : சரி அது அப்பறம் சொல்லிக்காலம் ன்னு சொல்லிட்டு..கணபதிக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்றாங்க..

அப்படியே அர்ஜூன் ஃபேமிலி க்கு கால் பண்ணி சொல்றாங்க.

எல்லாருக்கும் ஒரே சந்தோஷம்..தங்க முடியலை..உடனே எல்லாரும் கிளம்பி வராங்க..பூ பழம் அது இதுன்னு வாங்கிட்டு....
.
இவங்க எல்லாரும் வர வரைக்கும் அபி தூங்கிட்டு தா இருக்கா..

அபி தூக்கம் கலஞ்சு எழுந்து பாக்குறா.... அவளுக்கு பக்கத்துல நளினி ஆர்த்தி இருக்காங்க.

அபி : அத்தை, அண்ணி எப்போ வந்தீங்க...சொல்லவே இல்ல

ஆர்த்தி : நீயும் தா சொல்லவே இல்ல..

அபி : எது பத்தி அண்ணி..

நளினி : ஏய்‌‌..கம்முன்னு இரு டி..அவளை விடு மா‌... ரொம்ப சந்தோஷமா இருக்கு மா...ன்னு அவ நெத்தியில கிஸ் பண்றாங்க..

அபி : எனக்கு ஒன்னுமே புரியல அத்தை..

அசோக் : அண்ணி... ரொம்ப தேங்க்ஸ்.. நான் நினைச்சுக்கூட பாக்கலை‌‌... இவ்வளவு சீக்கிரமா நான் சித்தப்பா அவனேன்னு..

அபி கௌசல்யா வை பாக்குறா..

கௌசல்யா : என்ன முழிக்குற..மனோ மாமா கால் பண்ணி சொல்லிட்டாரு..நீ அம்மா ஆகா போறா..

அபிக்கு சிரிப்பு கலந்த ஆனந்த கண்ணீர் தா வந்தது..இதை அர்ஜூனுக்கு தா முதல்ல சொல்லணும் ன்னு ஆசைப்பட்டா...

அபி அர்ஜூனுக்கு கால் ட்ரை பண்றா...ஆனா கால் போகவே இல்ல..

நளினி ஆர்த்தி பாட்டி ன்னு எல்லாரும் அபியை தாங்கு தாங்குன்னு தாங்குறாங்க...

நளினி : செக் ஆஃப் பண்ணாணும் தானே.. ஹாஸ்பிடல் போலாமா..

கௌசல்யா : நாளைக்கு போலாம் அண்ணி.. நாளைக்கு நாள் நல்லா இருக்கு.

நளினி : அப்போ சரி.. நாளைக்கே போலாம்.

எல்லாரும் சமைச்சு சாப்பிட்டு அங்கேயே தாங்குறாங்க..
அன்னைக்கு நைட் அர்ஜூன் பாரிஸ் லா இருந்து கிளம்புறான்..மனசுல ஆயிரம் ஆசையோட...அபி சப்ரைஸ் சொன்னாலே அது என்னவா இருக்கும் ன்னு நினைச்சுட்டு...அதே சமயம் கண்டிப்பா கோவமா இருப்பா.. அதையும் சமாளிக்கணும்..ன்னு நினைச்சுட்டு வரான்..

அவன் பெங்களூர் வரும் போது காலையில 11 மணி...
அவன் ஏர்போர்ட் வந்து எம் டி கிட்ட பேசிட்டு இருக்கான்...ஒரு கால் வருது கட் பண்ணி விடுறான்..

அதே சமயம்...

அபியை கூட்டிக்கிட்டு மனோ டாக்டர் இருக்க ஹாஸ்பிடல் க்கு செக் ஆஃப் போறாங்க.. நளினி ஆர்த்தி, கௌசல்யா..

அங்க அபியை செக் பண்றாங்க... ஸ்கேன் பண்றாங்க.

டாக்டர் : நாள் தள்ளி போனதுக்கும் பேபி க்ரோத்தும் சரியா இருக்கு..அதோட உங்களுக்கு இன்னோரு சந்தோஷமானா விஷயம்.. உங்களுக்கு ட்வின்ஸ்....

எல்லாருக்கும் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம்.

அபிக்கு பார்க்ல ஒரு பாட்டி சொன்னாது தா ஞாபகம் வந்தது..
அவங்களை மனசுல நிறைச்சுக்கிட்டா..

டாக்டர் என்ன பண்ணணும் பண்ணக்கூடாதுன்னு அட்வைஸ் பண்ணி அனுப்புறாங்க..

அபியும் வீட்டுக்கு வந்து  ரெஸ்ட் எடுக்குறா..

அர்ஜூனுக்கு அதே நம்பர் லா இருந்து கால் வருது..

அர்ஜூன் கட் பண்றா..

மறுபடியும் கால் வருது..

டென்ஷன் ஆகி..கால் அட்டேன் பண்றா..

அர்ஜூன் : கட் பண்றேன்னா பிஸியா இருக்கேன்னு புரியமா ஏன் பண்ணிட்டே இருக்கீங்க..

யாரோ :::: மறுபடி மறுபடி பண்றேன்னா அப்போ எவ்வளவு முக்கியமா இருக்கும் ன்னு நீங்க ஏன் நினைக்க மாட்டிக்குறீங்க..

அர்ஜூன் : நீங்க யாரு...

யாரோ : நான் சீரஞ்சிவ் ஹாஸ்பிடல் எம்.டி..

அர்ஜூன் : அந்த ஹாஸ்பிடல்.. ஓகே..சாரி சார்.. எதுக்கு கால் பண்ணீங்க..

டாக்டர் : அபி யாரு.. உங்களுக்கு வைப் ஆ..

அர்ஜூன்: ஆமா..அது எப்படி உங்களுக்கு..அபிக்கு என்ன.. ஹாஸ்பிடல் லா இருக்காளா ன்னு ரொம்பவே பதறா..

டாக்டர் : கூல் மிஸ்டர் அர்ஜூன்..அவங்க இங்க இல்ல.. கொஞ்ச நாள் முன்னாடி அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு இல்ல..அது பத்தி உங்ககிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லணும்..ப்ளீஸ் கொஞ்சம் எங்க ஹாஸ்பிடல் வரைக்கும் வர முடியுமா..

அர்ஜூன் : உடனே வரேன் டாக்டர்..

அர்ஜூன் : சார்.. நீங்க க்ரிஷ் கூட போங்க.. நான் உங்களை அப்பறம் வந்து பாக்குறேன்... கொஞ்சம் அவசரமா வெளியே போகணும்னு காரை எடுத்துக் கிட்டு போறான்.

அடுத்த 20 நிமிஷத்துல ஹாஸ்பிடல் க்கு போய்டுறான்..

அங்க போய் எம்.டி ஐ பாக்கணும் ன்னு சொல்லி...அவரு ரூம்க்கு போறான்.

கதவை திறந்து உள்ள போறான்.

அங்க 3 பேர் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க..

அர்ஜூன் : சார்.. நான் அர்ஜூன்.கால் பண்ணி இருந்தீங்க..அபிக்கு என்ன ??

டாக்டர் : அர்ஜூன்...நீயா..

அர்ஜூன் : அரவிந்த் !! நீ இங்க ??

அரவிந்த் : ஆமா டா.. இன்னைக்கு தா இங்க வந்தேன்..ஒரு முக்கியமான கேஸ் காகா..
அபி... உன்னோட வைப் ஆ..

அர்ஜூன் : ஆமா...

எம் டி : அரவிந்த்..இவரை தெரியுமா..

அரவிந்த் : எஸ். டாக்டர்.. நானும் இவனும் ஒரே ஊர்..அதோட நல்ல ப்ரண்ஸ்.. நான் ஸ்டேட்ஸ் க்கு போனா அப்பறம் தா பேச டைம்மே இல்ல..

எம். டி : ம்ம்... அப்போ நீங்களே அவருக்கு புரியும் படி சொல்லிடுங்க..

அர்ஜூன் : என்ன சொல்லணும்.. ஏதாவது பிரச்சனையா..சொல்லு டா..

அரவிந்த் : இங்க வேண்டா..வா.. ரொம்ப டென்ஷன் ஆ இருக்க போல இருக்கு.. வெளியே போலாம் வான்னு கூட்டிக்கிட்டு போறான்...

இரண்டு பேரும் ஒரு ரெஸ்டாரன்ட் போறாங்க..

அரவிந்த் : எப்போ டா கல்யாணம் ஆச்சு..

அர்ஜூன் : 4 மாசம் முன்னாடி டா

அரவிந்த் : லவ் மெரேஜ் ஜா..

அர்ஜூன் : அம்மா அப்பா பாத்து தா முடிவு பண்ணாங்க..ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே நான் அவளை பாத்ததும் ஃபால் இன் லவ் டா..

அரவிந்த் : ம்ம்..என்ன பண்றாங்க அவங்க..அவங்க போட்டோ இருக்கா.. நான் பாக்கலாமா..

அர்ஜூன் அவன் ஃபோன்ல இருக்க அபி போட்டோவை பாக்க கொடுக்குறான்.

அர்ஜூன் : எம். பி. ஏ.. பஸ்ட் இயர் டா.. இப்போவது சொல்லு..அபிக்கு என்ன ??

அரவிந்த் : ரொம்ப அழகா இருக்கா..உனக்கு ஏத்த பொண்ணு..
அது எப்படி சொல்றதுன்னு தெரியலை டா..மாத்தவாங்கன்னா இன்னேரம் சொல்லி இருப்பேன்...

அர்ஜூன் : ப்ளீஸ்...எதுனாலும் சொல்லு.. இப்படி சஸ்பென்ஸ் வைச்சு பேசுறது தான் தாங்க முடியலை.

அரவிந்த் : அபிக்கு...இன்டர்குளோனால் பாடி டிபாள்ட்..டா...( முழுக்க முழுக்க கற்பனை யான பேரு தா..இப்படி ஒரு வியாதி இல்ல...இதுக்கு ஒரு அர்த்தமும் இல்ல கதைக்காக மட்டுமே)

அர்ஜூன் : அப்படின்னா ??

அரவிந்த் : அப்படின்னா ..இது ஒரு வியாதி டா.. உடம்புல இருக்க ஃப்ளாட் செல்ஸ் தானா டேமேஜ் ஆகி கடைசியா உயிர் போய்டும்..

அர்ஜூன் : டேய்.. ன்னு அரவிந்த் சட்டையை பிடிக்குறான்...
என் அபிக்கு ஒன்னும் இல்ல...ஒன்னு இல்ல..அவ ரொம்ப நல்லா இருக்கா.. அவளுக்கு ஒன்னும் ஆகாது.. ஆகவும் விட மாட்டேன் ன்னு கத்துறான்...

அரவிந்த் : பங்கு...ப்ளீஸ் டா...சொல்றதை பொறுமையா கேளு டா... எல்லாரும் பாக்குறாங்க..

அர்ஜூன் சுத்தி பாத்துட்டு...சாரி டா...நீ சொன்னாதை தாங்க முடியலை டா...

அரவிந்த் : புரியுது டா..உன் கஷ்டம்..ஆனா முதல்ல இது பத்தி நீ புரிஞ்சுக்க.. அப்போ தா அடுத்து என்ன பண்றதுன்னு தெரியும்.

அர்ஜூன் : ம்ம்...சொல்லு டா

அரவிந்த் : இந்த டிஸிஸ் உலகத்துல லட்சத்துல யாராவது ஒருத்தருக்கு தா வரும்.. இதுக்கு பெருசா மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கல டா. மரணத்தை தள்ளி போடலாம்..ஆனா உயிரை காப்பாத்த வழி ரொம்ப கம்மி தா..

அர்ஜூன் : ப்ளீஸ் டா.. இப்படி லா சொல்ல தா

அரவிந்த் : இரு டா...வழி இருக்கு.. அதுக்கு தா என்னை கூப்பிட்டாங்க..போனா மாசத்துல தா அமெரிக்கா லா ஒரு லேசர் ஆப்ரேஷன் மூலமா ஒருத்தரை குணப்படுத்துனாங்க...அது மட்டும் இல்ல..இதுக்கு முன்னாடி 3 பேரை ஸ்டெம் செல் வைச்சு குணப்படுத்தி இருக்காங்க...

அர்ஜூன் : அப்படின்னா..

அரவிந்த் : அப்படின்னா.... இப்போ உன் வைப் கன்சீவ்வா இருந்து.. அவங்களுக்கு குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தையோட தொப்புள் கொடி செல் வைச்சு உன் வைப் வை ஈஸியா காப்பாத்திடலாம்..

அர்ஜூன் : இனி கர்ப்பம் ஆனா..

அரவிந்த் : வாய்ப்பு இல்ல டா..ஏன்னா உன் வைப் ரிப்போர்ட் ரொம்ப மோசமா இருக்கு...ஐ ஆம் சாரி டா...அவ இன்னும் 6 மாசத்துக்கு தா உயிரோட இருப்பா.. அதுக்கு மேல கஷ்டம் தா..

அர்ஜூன் : உன்னா ப்ரண்டுன்னு கோட பாக்க மாட்டேன் டா...

அரவிந்த் : டேய்..அவசர படதா டா...அவளை அமெரிக்காக்கு கூட்டிட்டு போலாம் டா.... லேசர் பண்ணி பாக்கலாம்..90% சரி ஆகிடுவா..

அர்ஜூன் : அப்படியா...சரி உடனே கூட்டிட்டு வரேன்..

அரவிந்த் : இரு.. இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு அவளுக்கு தெரிய வேண்டா... ஹாஸ்பிடல் க்கு போலாம் வா..ஒரு மாத்திரை தரேன்...அதை கொடு...அது அவ வாழ்ற நாளை குறையமா பாத்துக்கும்..ஆனா இடையில நிறுத்த கூடாதுன்னு கிளப்புறாங்க..

அர்ஜூன் கார் லா அழுதுக்கிட்டே வாரான்.

அரவிந்த் : நீ அழுது நான் பார்த்ததே இல்ல டா..

அர்ஜூன் : அப்போ நான் யாரையும் இவ்வளவு லவ் பண்ணால டா.. நீயும் லவ் பண்ணி பாரு... அப்போ தெரியும் என் கஷ்டம்..ஆனா மச்சா என்னோட அபி இந்த பூமியில இல்லன்னா.. கண்டிப்பா நானும் இருக்க மாட்டேன் டா..

அரவிந்த் : அந்த அளவுக்கு போகாது டா..

அரவிந்த் அவனோட பேக்ல இருந்து கொஞ்சம் மாத்திரையை எடுத்து அர்ஜூன்கிட்ட தரான்..

அர்ஜூன் அந்த மாத்திரையை வாங்கி முன்னாடி பின்னாடி திருப்பி திருப்பி பாக்குறான்...

தொடரும்...

# Bhuvi