மைவிழி பார்வையிலே - 2

அத்தியாயம் - 53

அந்த வீட்டுல 4 ரூம் மட்டும் இருந்ததால கேர்ள்ஸ் எல்லாரும் ரூம்லயும் பாய்ஸ் எல்லாரும் ஹால்ல பெரிய பெட்ஷீட் போட்டும் படுத்திருந்தாங்க...

காலைல ஒவ்வொருத்தரா எழுந்து குளிச்சிட்டு காபி குடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்க...

அப்பறம் கிளம்பி முதல்ல கிளியூர் அருவிக்கு போனாங்க 300 அடி உயரத்துல இருந்து கொட்டுற அந்த அருவிய பார்க்க எல்லாருக்கும் ஆச்சர்யமா இருந்தது...

கயல் : நாங்க இங்கயே இருக்கோம் நீங்க வேணும்னா போய் குளிச்சிட்டு வாங்க...

ஆதவ் : எதே குளிக்கனுமா இங்க குளிக்கனும்னா எதுக்கு காலைலயே வீட்டுல எழுப்பி விட்டு குளிக்க சொன்னீங்க...

ஹரி : டேய் சோப்பு போட்டு குளிக்கவும் இங்க சும்மா குளிக்கவும் வித்தியாசம் இல்லயா...

ஆதவ் : போ பா நான்லாம் குளிக்கல எனக்கு குளிருது ஒரு நாளைக்கு ஒரு தடவை குளிக்குறதே பெருசு இதுல இன்னொரு தடவை வேற குளிக்கனுமா 😏

ஆர்த்தி : அவனை தண்ணில தள்ளி விட்டுட்டா...

ஆதவ் : ஏய் லூசு ( அவ மேல தண்ணிய தெளிச்சான்)

ஆர்த்தி : போ டா...

பாய்ஸ் எல்லாரும் தண்ணில விளையாடிட்டே குளிச்சாங்க...

வைஷ்ணவி : அப்பா...

அகிலன் : என்ன டா...

வைஷ்ணவி : அப்பா நானும் வரேன் ஆசையா இருக்கு...

அனன்யா : வேண்டா டி ரொம்ப குளிரும்...

வைஷ்ணவி : அப்பா ப்ளீஸ் பா ப்ளீஸ்....

அகிலன் : சரி சரி வா...

வைஷ்ணவி : ரொம்ப உள்ள போகாம கரை கிட்டவே நின்னு தண்ணில விளையாண்டா...

அவ கூட மகதி, ஆர்த்தியும் சேர்ந்துகிட்டாங்க...

அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி அருவி விட்டு வெளில வந்து ட்ரேஸ் மாத்திட்டு ஹோட்டல் போய் சாப்பிட்டுட்டு அங்க உள்ள பார்க் போனாங்க...

எல்லாரும் தனி தனி குடும்பமா பிரிஞ்சி போனாங்க...

மித்ரன் : டேய் மயூ, மகதி நான் இங்க வச்சி தான் உங்க அம்மாக்கு ப்ரொபோஸ் பண்ணேன்...

மயூரன் : ஓஓஓ சூப்பர் பா...

ராகவி : 😊😊😊 வெட்கப்பட்டு சிரிச்சா...

மகதி : அம்மா நீ உடனே ஓகே சொல்லிட்டியா...

ராகவி : ஆமா டி...

மயூரன் : ஏன் மா உடனே ஓகே சொன்ன அப்பாவ கொஞ்ச நாள் அலைய விட்டுக்கலாம்ல...

ராகவி : அது அப்போ தோணலடா மகனே உங்க அப்பா ப்ரொபோஸ் பண்ண உடனே ஓகே சொல்லிட்டேன்...

மயூரன் : அட போ மா...

மித்ரன் : டேய் மயூ உனக்கு இன்னும் ஆர்த்தி கூட கல்யாணம் ஆகல அதை மனசுல வச்சிட்டு பேசு...

மகதி : ஆமா அப்பா ரொம்ப ஓவரா போறான் பேசாம இரண்டு பேரையும் பிரிச்சி விட்டுடலாம்...

மித்ரன் : ஆமா செல்லம் இவன் பேட் பாய் இவனுக்கு ஆர்த்தி வேண்டா அந்த பொண்ணாவாது சந்தோஷமா இருக்கட்டும்...

மயூரன் : என்ன பா உன் லவ் சேர்ந்த இடத்துல என் லவ்வ பிரிக்க பார்க்குறியா...

மித்ரன் : ஆமா டா அப்படி தான்...

ராகவி : என்ன மித்து நீங்களும் சின்ன பிள்ளை மாதிரி அவன் கூட போட்டி போட்டுட்டு இருக்கீங்க...

மித்ரன் : அப்பறம் என்ன மா என்னை போய் உன் பின்னாடி அலைய விட்ருக்கனும்னு சொல்லுறான்...

ராரவி : ஏன் எனக்காக என் பின்னாடி அலைய மாட்டீங்களா...

மித்ரன் : என்ன டி இப்படி கேட்டுட்ட உனக்காக என்ன வேணாலும் செய்யுவேன் ( அவ கைய புடிச்சான்)

மயூரன் : ம்கூம் நாங்களும் இங்க தான் இருக்கோம்...

மித்ரன் : இங்க என்ன பண்ணுறீங்க இரண்டு பேரும் போய் உங்க கேங் கூட சேர்ந்துக்கோங்க...

மகதி : என்ன பா எங்களை போக சொல்லுறீங்களா....

மித்ரன் : ஆமா போங்க போய் உங்க ஃப்ரண்ட்ஸ்ஸோட ஜாலியா இருங்க நாங்க கொஞ்ச நேரம் தனியா பேசனும்...

மயூரன், மகதி : ஓகே பாய்...

அவங்க போனதும் மித்ரன், ராகவி கொஞ்ச நேரம் பேசிட்டு ஒரு பென்ச்ல போய் உட்கார்ந்துட்டாங்க...

எல்லாரும் ஜோடி ஜோடியா ஃபோட்டோஸ் எடுத்துகிட்டு ஜாலியா இருந்தாங்க...

சரண்யா : நிஷாந்த் கூட பேசவே இல்ல மத்த எல்லார் கூடவும் நல்லா என்ஜாய் பண்ணா...

நிஷாந்த் : என்ன டா இவ கெஞ்சுனா மிஞ்சுறா மிஞ்சுனா கெஞ்சுறா இவள புரிஞ்சிக்கவே முடியலையே ( பொலம்பிட்டே அந்த பார்க்க சுத்திட்டு இருந்தான் )

அப்பறம் எல்லாரும் அங்கேருந்து கிளம்பி மரகத ஏரிக்கு போனாங்க...

தொடரும்...

# Sandhiya.