காதல் கண்ணாமூச்சி - 54
சூரியன் மெல்ல உலா வர ஆரம்பிக்க..அபி தன் தூக்கம் தெளிஞ்சு கண் முழிச்சு பாக்குறா..அவளை யாரோ இறுக்கமா பிடிச்சு இருக்கிறதை அப்போதா ஃபீல் பண்றா..
அர்ஜூனை பாக்குறா.. சந்தோஷம் தாங்க முடியலை..அவன் முகம் முழுக்க முத்தம் கொடுக்குறா..
அர்ஜூனும் கண்ணைத் திறந்து பாக்குறான்..
அபி : ஏன் டா ?? நான் இருக்குறதையே மறந்துட்ட இல்ல..
அர்ஜூன் : ஹே..
அபி : நீ வாய் திறக்க கூடாது..நான் மட்டும் தான் பேசணும்..ன்னு அவன் உதட்டு மேலே கையை வைச்சு மறச்சுக்குறா..
உனக்காக எவ்வளவு வைட் பண்ண தெரியுமா..அறிவு இருக்கா இல்லையா உனக்கு.. மெயில் கூட செக் பண்ண மாட்டியா..என்னா டா புருஷன் நீ...
அர்ஜூன் பாவமா அவளையே பாத்துட்டு இருக்கான்..
அபி : உன்கிட்ட எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்ல துடிச்சேன் தெரியுமா.. அதுவும் உனக்கு தா பஸ்ட் சொல்லணும் ன்னு..ஆனா இப்போ உனக்கு தா லாஸ்ட்..
அர்ஜூன் : அபி கையை எடுத்துவிட்டு.. என்ன அது ??
அபி : சொல்ல மாட்டேன்..
அர்ஜூன் : சரி சொல்ல வேண்டா..நீ எழுந்து சீக்கிரம் கிளம்பு..நாமா பெங்களூர் போணும்.
அபி : என்ன சொல்ற... இப்போ வா ?? அது நான் சொல்ல வந்தது..
அர்ஜூன் : அதுலா அப்பறம் கேட்டுக்குறேன்..நீ முதல்ல கிளம்பு..
அபி : ம்ம்.. சரி..ஆனா ஏன் ஒரு மாதிரி இருக்க..
அர்ஜூன் : அதுலா ஒன்னும் இல்ல..நீ போ...ன்னு எழுந்து பாத்ரூம் போறான்.
அபி அப்படியே உட்கார்ந்து இருக்கா..
அர்ஜூன் கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே வரான்.
அர்ஜூன் : ஹே..போய் கிளப்புன்னு தானே சொன்னேன்.. அப்படியே இருக்க..
அபி : ஹே...லூசா டா நீ..
அர்ஜூன் : ஆமா டி.. நான் லூசு தான்..என்ன பாத்தா உங்களுக்கு அப்படி தான் இருக்கும்..
அபி : என்ன ஆச்சு ?? ஏதாவது பிரச்சனையா !!
அர்ஜூன் : ஆமா பிரச்சினை தான்..அது சொன்னா மட்டும் சரி பண்ணிடுவீயா.. கிளம்புன்னு தானே சொன்னேன்..
அபி : எப்படி கிளம்புறது..நீ தான் பாத்ரூம் குள்ள போய்ட்டா..நீ வந்த அப்பறம் தானே நான் போக முடியும்.
அர்ஜூன் : சாரி.. இப்போ போ...
அபி எதுவும் பேசாமல் அவனை ஒரு மாதிரியா பாத்துட்டே போறா..
அர்ஜூன் கீழே அரவிந்த் யை பாக்க போறான்..
அரவிந்த் டைனிங் டேபிள் கிட்ட உட்கார்ந்து காஃபி குடிச்சுட்டு இருந்தான்.
நளினி : எப்போ டா வந்தா... உனக்காக எவ்வளவு நேரம் வைட் பண்ணோம் தெரியுமா..
அர்ஜூன் : ம்ம்...சாரி மா.. அப்பறம் பேசிக்கலாம்..எனக்கு முக்கியமான வேலை இருக்கு.. அரவிந்த் க்கும் இருக்கு..சோ நாங்க கிளம்புறோம்..
மோகன் : என்ன டா சொல்றா..இந்த நேரத்துல போய்..லீவ் போடு டா...
அர்ஜூன் : லீவ் லா இல்ல பா..போய் தான் ஆகணும்..
கணபதி : நீங்க இங்க இருந்தா அபி சந்தோஷமா இருப்பா மாப்பிள்ளை..நீங்க இல்லன்னு உம்முன்னு தா இருந்தா..
அர்ஜூன் : அவளை என்கூட தா கூட்டிட்டு போறான் ன்னு அவர் முகத்தை பார்க்கமா சொல்றான்.
பாட்டி : ஏன் டா..
அர்ஜூன் : அது என்ன பாட்டி கேள்வி..என் பொண்டாட்டி என்கூட கூட்டிட்டு போறான்..இதுல என்ன இருக்கு.
ஆர்த்தி : லூசு..இந்த மாதிரி டைம்ல அவ ட்ரவல் பண்ண கூடாது.
அர்ஜூன் ஒன்னும் புரியமா முழிக்குறான்..
ப்ரியா :மாமா ப்ளீஸ் மாமா..தம்பி பாப்பா பொறாக்குற வரைக்கும் அக்கா இங்கேயே இருக்கட்டும் மாமா..
அர்ஜூன் : என்ன ??
அரவிந்த் : அப்படின்னா அபி கன்சீவ்வா இப்போ ??
கௌசல்யா : ஆமா தம்பி..
அர்ஜூன் டக்குனு திரும்புறான்..
அபி மெல்ல படியில இறங்கி வரா..
அர்ஜூனுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை..கண்ணுல இருந்து கண்ணீர் வருது..
அபி அவன் கிட்ட வந்து கண்ணீரை துடைச்சு விடுறா..
அர்ஜூன் : சாரி... உன்னை பேச விடமா தப்பு பண்ணிட்டேன்.
அபி : ஆமா..தப்பு தா பண்ணிட்ட ன்னா அவனுக்கு மட்டும் கேட்குற மாதிரி சொல்லி சிரிக்குறா..
அரவிந்த் முகம் மாறிப் போச்சு... இங்க எதுவும் பேச வேண்டாம்ன்னு வெளியே போய் செடியை பாத்துட்டு நிக்குறான்.
அசோக் : என்ன அண்ணா... இப்போ தான் உனக்கு தெரியுமா !!
அர்ஜூன் : ம்ம் ஆமா..
அபி : நைட் எவ்வளவு நேரம் நீ வருவான்னு பார்த்துட்டே இருந்தேன்.
அர்ஜூன் : சாரி..வரும் போது டயர் பஞ்சர் அதா லேட்..
கௌசல்யா : வாங்க பா சாப்பிடலாம்..
அர்ஜூன் : எனக்கு வேண்டா..
அபி நாமா ஊருக்கு கிளம்பலாம் தானே.
அபி : ம்ம்..
பாட்டி : என்ன உம்..நேத்து தானே சொன்னாங்க.. அதுக்குள்ள என்ன ம்ம்.. நான் போறேன் அவன்கூட..நீ இங்கேயே இரு..
ஆர்த்தி : டேய் அர்ஜூன்..உனக்கு இன்னோரு விஷயம் தெரியுமா !!
அர்ஜூன் : என்ன ??
ஆர்த்தி : நம்மலை மாதிரியே ட்வின்ஸ் டா..
அர்ஜூன் : ஹா.. தேங்க்ஸ் அபி..
அபி : எனக்கு இல்ல சாமிக்கு சொல்லு..
நளினி : சரி பா..நீ நேரம் ஆச்சுன்னு சொன்னா இல்ல..கிளம்பு..
அர்ஜூன் : அபி..
கௌசல்யா : அவ இங்கயே இருக்கட்டும் பா..
அர்ஜூன் : உங்களை விட நான் அவளை நல்லா பாத்துப்பேன்.
பாட்டி : என்ன டா பாத்துப்ப.. இவ்வளவு பேரும் சொல்றோம்..கேட்காமா நீ சொல்றதையே சொல்லிட்டு இருக்க..
தொடரும்...
# Bhuvi
5 Comments
😍😍😍😍
ReplyDeleteThanks pa
DeleteSprr sissy❤️ arjun nilamaa yaruku purila chaa 😒😒mansukula kastatha vachutu pavama ava 🥺🥺ithula iavanga elrum vera cha nerum kalam puryumaaa😤😤😤😤
ReplyDeleteMm ama pa
Deleteசூப்பர் அர்ஜுன் எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல
ReplyDelete