மைவிழி பார்வையிலே - 2
அத்தியாயம் - 124
மூன்று மாதத்திற்கு பிறகு,
ஐஸ்வர்யா, அதிதி, சஞ்சனா மூனு பேருக்குமே சில நாள் இடைவெளி தான் டெலிவரி டேட் குடுத்துருக்காங்க...
சஞ்சனாக்கு இரண்டாவது குழந்தைங்குறதால அவளுக்கு எந்த வித பயமும் இல்ல ஆனா ஐஷூ, அதிதி கொஞ்சம் பயந்து போய்ருந்தாங்க...
சஞ்சய் இப்போ சித்து வீட்டுல இருந்து தான் ஆபிஸ் போய்ட்டு இருக்கான்...
இரண்டு கர்பினி பெண்கள் ஓரே வீட்டுல இருக்க கூடாதுனு சஞ்சனா கௌதம் வீட்டுக்கு போய்ட்டா கூடவே சித்து, சஞ்ஜித்தும் போய்ட்டாங்க...
சஞ்சனா : காலைலயே கார்டன் சுத்தி வாக்கிங் போய்ட்டு ஸ்டோன் பென்ச்ல வந்து உட்கார்ந்தா...
சித்து : சஞ்ஜித்த தூக்கிட்டு அங்க வந்தான்...
சஞ்ஜித் : அம்மா ( சித்து கைல இருந்து இறங்கி ஓடுனான்)
சஞ்சனா : சஞ்ஜித் குட்டி ( அவனை தூக்க போனா)
சித்து : சஞ்சு குனியாத நான் தூக்கி உட்கார வைக்குறேன் ( சொல்லிட்டே சஞ்ஜித்த தூக்கி சஞ்சனா பக்கத்துல உட்கார வச்சி அவனும் உட்கார்ந்தான்)
சஞ்சனா : சித்து நியாபகம் இருக்கா சஞ்ஜித் என் வயித்துல இருக்கும் போது இப்படி தான் ஒரு நாள் வாக்கிங் போய்ட்டு வந்து உட்காரும் போது தான் எனக்கு வலி வந்தது...
சித்து : இப்பவும் என்னால அதை மறக்க முடியல டி இந்த இடத்தை பார்க்கும் போது எல்லாம் அதான் எனக்கு நியாபகம் வரும்...
சஞ்ஜித் : பாப்பா 😍😍😍 ( சஞ்சு வயித்துல கைய வச்சி தடவுனான்)
சஞ்சனா : பாப்பா சீக்கிரமே வெளில வந்துடுவா டா அவளை நல்லா பார்த்துபியா...
சஞ்ஜித் : ம்ம்ம் பாத்துப்ப...
சித்து : எல்லாத்தையும் நல்லா புரிஞ்சிக்குறான் இவனை பத்தி பயப்பிடவே வேண்டா...
சஞ்சனா : ஆமா நீங்க ஐஷூவ பார்த்துகிட்டா மாதிரி இவனும் அவன் தங்கச்சிய பார்த்துப்பான்...
சித்து : 😄😄😄 ம்ம்ம்...
அந்த நேரம் அப்பார்ட்மெண்ட்ல உள்ள எல்லாரும் அவசர அவசரமா கீழ வந்தாங்க...
சஞ்சனா : ஹேய் என்ன ஆச்சி ( அவசரமா எழுந்திரிக்குறனு புடலை தடுக்கி கீழ விழ போய்ட்டா)
சித்து : சஞ்சு பார்த்து ( அவளை விழாம புடிச்சிட்டான்)
சஞ்சனா : 😰😰😰 பயத்துல இதயம் வேகமா துடிக்க ஆரம்பிச்சது...
சித்து : ( அவ கைய இறுக்கி புடிச்சான்) சஞ்சு ஒன்னும் இல்ல ரிலாக்ஸ்...
சஞ்சனா : 😨😨😨 சித்து சித்து குழந்தை...
சித்து : ஒன்னும் இல்ல டி நான் பக்கத்துல இருக்கிற வரை உனக்கு ஒன்னும் ஆகாது ஆகவும் விட மாட்டேன் ( அவ முதுகை தடவி விட்டான்)
சஞ்சனா : சாரி சித்து..
சித்து : சரி சரி பயப்பிடாத வா ( அவளை அழைச்சிட்டு போனான் கூடவே சஞ்ஜித்தயும் தூக்கிட்டு போனான்)
சித்து : அபி என்னடா ஆச்சி...
அபினாஷ் : மாமா அதிதிக்கு பிரசவ வலி வந்துடுச்சி அதான் ( கார் ஸ்டார்ட் பண்ணி ரெடியா வச்சிருந்தான்)
ஆதவ் : அதிதி கை புடிச்சி அழைச்சிட்டு வந்தான்...
அருண், ஆதிரா, ஹரி, அபிநயா, அபினாஷ் மட்டும் அவங்க கூட போனாங்க...
அவங்க போன ஒரு மணி நேரத்துலயே ஆண் குழந்தை பிறந்திருக்கிறதா ஃபோன் வந்தது அப்பறம் எல்லாரும் போய் அதிதியயும் குழந்தையயும் பார்த்துட்டு வந்தாங்க...
அடுத்து இரண்டு நாள் வித்தியாசத்துல ஐஷூ, சஞ்சனா இரண்டு பேருக்கும் பெண் குழந்தை பிறந்தது...
முதல்ல ஐஷூக்கு அடுத்த இரண்டாவது நாள் சஞ்சனாக்கு, சஞ்சனாக்கு வலி வந்த பிறகு சஞ்ஜித் அம்மாவ பார்க்கனும்னு சொல்லி ரொம்ப அடம் பண்ண ஆரம்பிச்சிட்டான்...
குழந்தை பிறந்து பாப்பாவ வெளில நர்ஸ் எடுத்துட்டு வந்து காட்டும் போது கூட அவன் பார்க்கவே இல்ல அம்மா கிட்ட போகனும்னு தான் அழுதான்...
சித்து : சஞ்ஜித் இங்க பாரு பாப்பாவ...
சஞ்ஜித் : 😭😭😭 நானா பா அம்மாட போணு...
சித்து : போலாம் டா இங்க பாரு பாப்பா அழகா உன்னை மாதிரியே இருக்கா...
சஞ்ஜித் : 😭😭😭 அம்மா வேணு ( தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சிட்டான்)
சித்து : அம்மா குழந்தைய புடிங்க அவன் ரொம்ப அழுதா ஃபீவர் வந்துடும் நான் வெளில அழைச்சிட்டு போய் சமாதானம் பண்றேன்...
ஷாலினி : சரி டா ( குழந்தைய வாங்கிட்டா)
சித்து : சஞ்ஜித்த வெளில தூக்கிட்டு போனான்...
சஞ்ஜித் : ப்பா அம்மாட போணு 😢😢😢
சித்து : போலாம் டா அம்மா தூங்கிட்டு இருக்கா டா முழிச்சதும் போலாம்...
சஞ்ஜித் : அம்மா அம்மா 😭😭😭 ( அழுதுட்டே சித்து தோள்ல படுத்திருந்தான்)
சித்து : தட்டி குடுத்துட்டு இருந்தான்...
சஞ்ஜித் : ரொம்ப நேரம் அழுததுல அப்படியே தூங்கிட்டான் 😪😪😪
சஞ்ஜித் தூங்குனதும் சஞ்சு இருந்த ரூம்கிட்ட போனான்...
கௌதம் : சித்து சஞ்சுக்கு மயக்கம் தெளிஞ்சிட்டாம் நீங்க உள்ள போய் பாருங்க...
சித்து : சரி மாமா...
சஞ்சனா : சித்து என்ன குழந்தை...
சித்து : பெண் குழந்தை...
சஞ்சனா : இவன் அதுக்குள்ள தூங்கிட்டானா...
சித்து : இவ்ளோ நேரம் ஒரே அழுகை குழந்தைய கூட இவன் இன்னும் பார்க்கல உன்னை பார்க்கனும்னு தான் அழுத்தான்...
சஞ்சனா : 😥 ரொம்ப அழுதுட்டானா ( சஞ்ஜித் கைய புடிச்சா)
சித்து : நீ ஃபீல் பண்ணாத டி சின்ன பையன் தான...
சஞ்சனா : ம்ம்ம் பாப்பா எங்க...
ஷாலினி : குழந்தைய தூக்கிட்டு வந்து அவ பக்கத்துல படுக்க வச்சா...
சஞ்சனா : 😍😍😍 அழகா இருக்கா...
அப்பறம் சஞ்ஜித் எழுந்து அவன் அம்மாவ கட்டி புடிச்சி அவன் மிஸ் பண்ண கதைய அவன் மொழில சொல்லி அப்பறம் தான் அவனோட தங்கச்சி பாப்பாவயே பார்த்தான்...
சஞ்ஜித் : 😍😍😍 குழந்தை கைய புடிச்சிட்டு எதோ அதிசயத்தை பார்க்குறா மாதிரி குழந்தைய பார்த்துட்டு இருந்தான்...
சித்து : இப்போ தான் இவன் முகத்துல சிரிப்பே வந்துருக்கு...
ஐஷூவ அன்னைக்கு தான் டிஸ்சார்ஜ் பண்ணி ராகுல் வீட்டுக்கு அழைச்சிட்டு போனாங்க...
அப்பறம் மூனாவது நாள் சஞ்சனாவயும் டிஸ்சார்ஜ் பண்ணி கௌதம் வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க...
ஆதவ், அதிதியோட ஆண் குழந்தைக்கு ஆதிஷ்னு பேர் வச்சாங்க...
சஞ்சய், ஐஸ்வர்யா வோட பெண் குழந்தைக்கு சம்யுக்தா...
சித்து, சஞ்சனாவோட குழந்தைக்கு சுஜிதா ( சித்து அம்மா சுஜி நியாபகமா வச்சாங்க)
எல்லார் வீட்டுலயும் குழந்தைகளோட சிரிப்பு சத்தமும் அழுகை சத்தமும் தான் கேட்டுச்சி...
ஒருநாள் நைட்,
எல்லாரும் நைட் எப்போதும் போல மாடில சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் குழந்தைகளோட விளையாடிட்டு அவங்கவங்க வீட்டுக்கு வந்தாங்க...
நிரூபன் ரூம்,
மகதி : நிரூ உன்கிட்ட ஒன்னு சொல்லனும்...
நிரூபன் : என்ன மா சொல்லு...
மகதி : அது...
மீரா : மகதி...
மகதி : அத்தை...
மீரா : வந்து இரண்டு பேருக்கும் பால் எடுத்துட்டு போ டா...
மகதி : இதோ வரேன் அத்தை...
நிரூபன் : சரி போய்ட்டு வா நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணுறேன்...
மகதி : இல்ல இல்ல ட்ரெஸ் மாத்திடாத நான் இதோ வந்துடுறேன் ( வெளில ஓடுனா)
நிரூபன் : என்ன ஆச்சி இவளுக்கு வித்தியாசமா நடந்துக்குறா ( பெட்ல உட்கார்ந்தான்)
மகதி : அவனுக்கு பால் குடுத்துட்டு அவளும் குடிச்சா...
நிரூபன் : ம்ம்ம் இப்போ சொல்லு...
மகதி : வெளில எங்கயாவது அழைச்சிட்டு போ...
நிரூபன் : இந்த நேரத்துலயா...
மகதி : ஆமா...
நிரூபன் : சரி வா...
மகதி : கார் வேண்டா பைக்ல போலாம்...
நிரூபன் : சரி...
இரண்டு பேரும் பைக்ல போனாங்க...
மகதி : அவனை ஹக் பண்ணி முதுகுல சாஞ்சிட்டு வந்தா...
நிரூபன் : பைக் ஸ்டாப் பண்ணான்..
அந்த இடம் எப்படி இருந்ததுனா ரோட்டோட இரண்டு பக்கமும் மரம், தெரு லைட் மட்டும் தான் எரிஞ்சிட்டு இருந்தது நைட் ரொம்ப நேரம் ஆனதால ஆள் நடமாட்டம் இல்ல ரொம்ப அமைதியா இருந்தது...
மகதி : சூப்பர் ப்ளேஸ் நிரூ 😚😚😚 ( அவன் கன்னத்துல முத்தம் குடுத்தா)
நிரூபன் : 😘😘😘 சரி சொல்லு என்ன விஷயம்...
மகதி : கண்ணை மூடு...
நிரூபன் : சரி ( கண்ணை மூடுனான்)
மகதி : அவன் கைய புடிச்சி ஒரு குட்டி கிஃப்ட் பாக்ஸ் குடுத்தா...
நிரூபன் : என்ன இவ்ளோ குட்டியா இருக்கு...
மகதி : ஓபன் பண்ணி பாரு...
நிரூபன் : ( ஓபன் பண்ணான் ) 😳 ப்ரக்னன்ஸி கிட் இருந்தது அதுல டபுள் கோடு காமிச்சது...
😓😓😓 மகதி...
மகதி : நிரூ நீ அப்பா ஆகிட்ட டா...
நிரூபன் : அவளை அப்படியே ஹக் பண்ணி மண்டி போட்டு அவ வயித்துல கிஸ் பண்ணான்...
மகதி : நிரூ எழுந்திரி...
நிரூபன் : தேக்ங்ஸ் டி 😚😚😚 அவ முகம் முழுக்க முத்தம் குடுத்தான்...
மகதி : நிரூ போதும் நடு ரோட்ல நிக்குறோம்...
நிரூபன் : அதான் யாரும் இல்லயே...
மகதி : 😍 வீட்டுக்கு போலாமா இன்னும் யார் கிட்டயும் சொல்லல...
நிரூபன் : போலாம்...
மறுநாள் காலைல எல்லார் கிட்டயும் சொல்லிட்டாங்க எல்லாருக்கும் ரொம்ப ஹேப்பி... அடுத்து கொஞ்ச நாள்ல வைஷ்ணவியும் கன்சீவ் ஆகிருக்கிறதா எல்லாருக்கும் குட் நியூஸ் சொன்னா...
தொடரும்...
# Sandhiya.
8 Comments
Sanjith paaka apdiye kuttu sid mathiriye iruku ellathayum purinchipan sidhku sujiye marubadiyum vanthu poranthutanga ellarukum baby vanthachu 3 rd generation ready
ReplyDeleteThank you
Deleteசூப்பர் அதிதிக்கு ஐஸ்வர்யாவுக்கு சஞ்சனாவுக்கு மூன்று பேருக்கும் நல்லபடியா குழந்தை பிறந்தாச்சு அடுத்து மகதி அண்ட் வைஷ்ணவி கன்சீவ்வ இருக்காங்க
ReplyDeleteSemAa sissy 😍😍🥰🥰🥰full of good news and happiness🥰😍🥰🥰🥰😍😍
ReplyDeleteThank you
DeleteSo happy for them...😍😍😍😍😍romba happy ah iruku
ReplyDeleteThank you
DeleteSamikthaa enaku piticha name 😍😍😍💚💚💚💚❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete