வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 1
தஞ்சாவூரை அடுத்த ஒரு அழகான கிராமம் அங்க தான் நம்ம ஹீரோ இருக்காரு முதல்ல ஹீரோ பத்தி பார்த்துடலாம் ரீடர்ஸ்...
ஹீரோ பெயர் தமிழ்மாறன் எல்லாரும் தமிழ்னு கூப்பிடுவாங்க, மாநிறம், நல்லா உயரமா இருப்பான், எந்த வித உடற்பயிச்சியும் இல்லாம வயல்லயே வேலை செஞ்சி முறுக்கேறிய உடம்புல பார்க்க கம்பீரமா இருப்பான்...
+2 வரை தான் படிச்சான் அதுக்கு பிறகு விவசாயம் பண்ண ஆரம்பிச்சிட்டான்...
விடியற்காலை 5 மணி,
காலைலயே ரேடியோல ஒலிச்ச சுப்ரபாதம் சத்தம் கேட்டு எழுந்தான் தமிழ்... எழுந்ததும் கொல்லை புரம் போய் பல்விலக்கிட்டு தலைல முண்டாசு மாதிரி துண்டை கட்டிட்டு ஒரு பால் கேன், ஒரு சொம்பு எடுத்துட்டு மாட்டு கொட்டகைக்கு போனான்...
அங்க இரண்டு பசுமாடு, இரண்டு கன்றுகுட்டி அப்பறம் இரண்டு வண்டி மாடு இருந்தது...
கன்றுகுட்டிய அவிழ்த்து விட்டு இரண்டு பசுமாடு கிட்டயும் பால் கறந்து பால்கேன்ல ஊத்தி வச்சிட்டு வீட்டுக்கு தேவையான பால்ல சொம்புல எடுத்துட்டு வீட்டுக்குள்ள போனாங்க...
அங்க அவனோட அம்மா மகாலெட்சுமி குளிச்சிட்டு முகத்துக்கு மஞ்சள் பூசி பெரிய பொட்டு வச்சி நெத்திலயும் வகுடுலயும் குங்குமம் வச்சி மங்கள கரமா அவன் முன்னாடி வந்தாங்க...
தமிழ் : அம்மா இந்தாங்க பால்...
மகாலெட்சுமி : குளிச்சிட்டு வா ராசா நான் காபி போட்டு வைக்குறேன்...
தமிழ் : சரிங்க மா...
மகாலெட்சுமி பால்ல சமையல்கட்டுல வச்சிட்டு பூஜை அறைக்கு போய் சாமி கும்பிட்டு வீடு முழுக்க சாம்பிராணி காட்டி தீபாராதனை காட்டும் போது தமிழும் குளிச்சிட்டு அங்க வந்தான்...
மகாலெட்சுமி : அவன் நெத்தில விபூதி வச்சி ஊதி விட்டாங்க..
தமிழ் : ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா ( அவங்க காலுல விழுந்தான்)
மகாலெட்சுமி : எந்த குறையும் இல்லாம சந்தோஷமா இருப்பா...
" நாங்களும் இங்க தான் தமிழ் இருக்கிறோம் " சொல்லிட்டே தமிழோட தாத்தாவும் ஆச்சியும் வந்தாங்க...
தமிழ் : அவங்க இரண்டு பேர் காலுலயும் விழுந்தான்...
தாத்தா, ஆச்சி : நல்லா இரு பா...
அந்த நேரம் தமிழோட அப்பா தேவேந்திரன் மீசைய முறுக்கிட்டே அங்க வந்தாரு...
தமிழ் : அப்பா ஆசிர்வாதம் பண்ணுங்க ( அவர் காலுல விழுந்தான்)
தேவேந்திரன் : நல்லா இரு பா...
தமிழ் எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு எங்க போறானு யோசிக்காதீங்க ரீடர்ஸ் இது டெய்லி அவங்க வீட்டுல நடக்குற நிகழ்வு தான்...
அப்பறம் தேவேந்திரன், மகாலெட்சுமி தமிழோட தாத்தா, பாட்டி காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாங்க...
எல்லாம் முடிஞ்சி தாத்தா, ஆச்சி, தேவேந்திரன், தமிழ் கூடத்துல போய் உட்காரவும் மகாலெட்சுமி காபி கொண்டு வரவும் சரியா இருந்தது...
எல்லாரும் ஒன்னா சேர்ந்து காபி குடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்க...
மகாலெட்சுமி : சமைக்க போய்ட்டாங்க...
தாத்தா : ஏன் பா தேவேந்திரா இன்னைக்கு எதாவது பஞ்சாயத்து இருக்கா...
தேவேந்திரன் : ( அவர் தான் இந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்) இல்ல பா...
தாத்தா : தமிழ் உனக்கு...
தமிழ் : வயல்க்கு போனும் தாத்தா அங்க கொஞ்சம் வேலை இருக்கு...
தாத்தா : அடுத்த வாரம் என் பேத்தி அஞ்சலி வரா டா அதுக்குள்ள அவ ரொம்ப நாள் கேட்டுட்டே இருக்க ஸ்கூட்டிய வாங்கி வச்சிடுங்க பா புள்ள ஒரு வருஷத்துக்கு அப்பறம் ஊருக்கு வரா வந்ததும் அந்த வண்டிய பார்த்து சந்தோஷப்படனும்...
தேவேந்திரன் : அப்பா நீங்க கவலையே படாதீங்க தமிழ் டவுனுக்கு போய் அதுக்கான ஏற்பாடு பண்ணிட்டான் நாளைக்கு நம்ம வீட்டு வாசல்ல வண்டி வந்து நிக்கும் பாருங்க...
தாத்தா : ரொம்ப சந்தோஷம் பா தமிழு அஞ்சலி வந்த பிறகு தான் நம்ம வீடு கல கலனு இருக்க போது...
ஆச்சி : இதுக்கு தான் என் பேத்தி இங்கயே இருக்கட்டும்னு சொன்னேன் யாராவது கேட்டீங்களா, அவளை மெட்ராஸ்ல படிக்க அனுப்பிட்டு இப்போ அவளுக்காக ஏங்கிட்டு இருக்கோம்...
தமிழ் : ஆச்சி அவ இங்கயே இருந்தா வெளி உலகம் தெரியாமலே போய்டுவா வெளியூர் போய் படிச்சி நாலு பேர் கூட பழகுனா தான் அவளுக்கும் தைரியம் வரும்...
ஆச்சி : அவ உன்னோட தங்கச்சி தமிழ் அவளுக்கு அந்த ஒரு தைரியம் பத்தாதா...
தமிழ் : சரி விடுங்க ஆச்சி அவ தான் படிப்ப முடிச்சிட்டாலே இனிமேல் கல்யாணம் பண்ணி போற வரை அவ உங்க கூட தான் இருக்க போறா அப்பறம் ஆசை திற அவளை கொஞ்சிக்கோங்க...
தாத்தா : சரி விடு பா இவ தான் தேவை இல்லாம புலம்புறானா நீயும் பதில் சொல்லிட்டு இருக்க...
தமிழ் : சரி நான் வயலுக்கு போறேன்...
மகாலெட்சுமி : கரண்டியோட சமையல்கட்டுல இருந்து வெளில வந்தாங்க " தமிழ் சாப்பிட வந்துடுவல ".
தமிழ் : வருவேன் மா...
மகாலெட்சுமி : சரி பா...
தமிழ் வீட்டுக்கு சைடுல உள்ள செட்ல ட்ராக்டர், மாட்டு வண்டி, கார், ஜீப், புல்லட் பைக், சைக்கிள் கூட இருந்தது...
இவ்ளோ வண்டி இருந்தும் வயல் கொஞ்ச தூரத்துலயே இருக்கிறதால எதையும் எடுக்காம நடந்தே போய்ட்டான்...
காலைல சாப்பாட்டுக்கு வரனு சொன்ன தமிழ் மதியம் ஆகியும் வராததால அவன் அம்மாவே சாப்பாடு எடுத்துகிட்டு வயல்க்கு வந்தாங்க...
தமிழ் : வயல்க்கு தண்ணி பாய்ச்சிட்டு இருந்தவன் அவங்க அம்மாவ பார்த்ததும் அவங்க கிட்ட வந்தான்...
" அம்மா நான் தான் வரனு சொல்லிருந்தனே அதுக்குள்ள ஏன் நீங்க வந்தீங்க ".
மகாலெட்சுமி : காலைல வரனு சொன்ன ஆனா இப்போ மதியம் ஆகிடுச்சி இன்னும் வரல அதான் நானே கொண்டு வந்துட்டேன்...
தமிழ் : வெயில்க்கு முன்னாடி தண்ணி பாய்ச்சிட்டு வீட்டுக்கு வரலானு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க...
மகாலெட்சுமி : சரி கை, கால் கழுவிட்டு வா நான் எல்லாத்தையும் எடுத்து வைக்குறேன்...
தமிழ் : சரி மா...
வயலுக்கு நடுவுல ஒரு மேடான இடம் அந்த இடத்தை சுத்தி தென்னைமரமும், வாழைமரமும் இருக்கும் அந்த இடத்துல ஒரு பக்கம் மோட்டார் வச்சில அதுல இருந்து வர தண்ணி தொட்டில விழுந்து அது வழியா வயல்க்கு போய்ட்டு இருந்தது..
மகாலெட்சுமி : அங்க இருந்த வாழைமரத்துல இருந்து ஒரு இலைய பறிச்சி கழுவிட்டு சூடான சாதம், சாம்பார், பொறியல் எல்லாத்தையும் கேரியர்ல இருந்து எடுத்து வச்சாங்க...
தமிழ் : முகம், கை, கால் கழுவிட்டு வாட்டர் பாட்டில்ல தண்ணி கொண்டு வந்து அவன் அம்மா பக்கத்துல வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சான்...
மகாலெட்சுமி : இப்படிலாம் காலைல சாப்பிடாம இருக்க கூடாது பா, இந்த மூனு வேலை சாப்பாட்டுக்காக தான இவ்ளோ உழைக்குறோம் அதையே சாப்பிடாம இருந்தா எப்படி....
தமிழ் : மன்னிச்சிடுங்க அம்மா முருகன் அண்ணா வருவாரு அவர் கிட்ட விட்டுட்டு வரலாம்னு இருந்தேன்... அவரு எதோ அவசர வேலையா வெளியூர் போய்ட்டாராம் அதான் என்னால வர முடியல...
மகாலெட்சுமி : சரி பா சாப்பிடு...
தமிழ் : நீங்க சாப்டீங்களா அம்மா...
மகாலெட்சுமி : சாப்டேன் பா...
அப்பறம் தமிழ் சாப்பிட்டதும் அவன் அம்மா மகாலெட்சுமி வீட்டுக்கு கிளம்பிட்டாங்க...
தொடரும்...
ஹாய் ஃப்ரண்ட்ஸ் ஸ்டோரி உங்களுக்கு புடிச்சிருக்கா கண்டினியூ பண்ணலாமானு கமெண்ட்ல சொல்லுங்க...
ஹீரோயின் யாரு எங்க இருக்கானு நாளைக்கு எபிசோட்ல சொல்லுறேன் ஃப்ரண்ட்ஸ்...
# Sandhiya.
14 Comments
Super sis ❤️ Nalla iruKu sis continue pannunga 😊😊nalaiku heroin paththi sollirunga ❤️😊😊
ReplyDeleteThank you
DeleteStarting super unmaiyave villagela iruka feel varuthu continue pannunga 💖💖 heroine yaarunu pakalam
ReplyDeleteSuper starting keep continue😍😍
ReplyDeleteSuper..... Continue pannunga
ReplyDeleteThank you
Deleteசூப்பர் சிஸ்டர் ஃபர்ஸ்ட் எபிசோட் ரொம்ப அமர்க்களமா இருந்தது தமிழ்மாறன் ஹீரோ கிராமத்துக் கலந்த காதல் கதை ரொம்ப அருமையா இருக்கு கண்டினு பண்ணுங்க உங்க ஸ்டோரியை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் சகோதரர்
ReplyDeleteThank you
DeleteSuper iruku 😍😍
ReplyDeleteThank you
DeleteSprr sissy❤️🥰😍😍😍 story introductions sprrb 🥰😍😍😍😍hero family and hero character sprbbb 🥰🥰😘😘😘🥰village kiyaa ponaa mari feel aguthuu padika padikaa semaa sissy continue panukaa 🥰🥰🥰🥰kandipaa itha story vera levels pogum 🥰🥰
ReplyDeleteStory rmba nallaruku sis 😍 hero rmba simple ah nalla paiyana irukaru 💖💖 heroin epdi iruka poranganu therila.. village la start pannirukinga adhuvay semmaya irundhuchu ❤
ReplyDeleteStory rmba nallaruku sis 😍 hero rmba simple ah nalla paiyana irukaru 💖💖 heroin epdi iruka poranganu therila.. village la start pannirukinga adhuvay semmaya irundhuchu ❤
ReplyDeleteEnaku hero thamizh ah romba pidichiruku sissy ma🥰🥰🥰🥰🥳
ReplyDelete