வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 12

தமிழ்மாறன் : அத்தை நாங்க வீட்டுக்கு போறோம்... உதய் நீயும் வா டா...

உதய் : நான் நாளைக்கு வரேன் டா...😌

சீதா : "அச்சோ! உதய் மகா உன்னை இன்னைக்கு வர சொன்னா டா நீ இப்போ போலனா அப்பறம் நான் அவ்ளோ தான்..." 😑

அஞ்சலி : "ஏன் அத்தை எங்க அம்மா உங்க ஃப்ரண்டு தான அப்பறம் ஏன் பயப்பிடுறிங்க?..."

சீதா : "உதய் காலைல வந்தவன் இன்னும் அங்க போகததுக்கே என்ன பண்ண போறானு தெரியல... பாவம் என் புள்ள..." 😖😖😖

உதய் : "என்ன மா இப்படி பயமுறுத்துற..." 😳

அஞ்சலி : நான் இருக்கேன்ல பயப்பிடாத மாமா வா போலாம் ( அவனை இழுத்துட்டு போனா)

உதய் : நீ இருக்குறது தான் என் பயமே ( புலம்பிட்டே போய்ட்டான்)

அர்ஜுன், மிருனாழினி : "நாங்களும் போறோம் மா..." 🚶🏻‍♀️🚶🏻‍♂️

சீதா : "போய்ட்டு வரேனு சொல்லுங்க பா... நாளைக்கு வயல் பக்கம் வந்தா இங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டு போங்க..." 😊

அர்ஜுன் : "சரி மா..."

தமிழ்மாறன் : "வரேன் அத்தை..."

சீதா : "சரி பா..."

"ஐந்து பேரும் வயல் வரப்புல நடந்து போய்ட்டு இருந்தாங்க..."🚶🏻‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♂️

அர்ஜுன் : "என்ன தமிழ் வீட்டுல அவ்ளோ வண்டி வச்சிகிட்டு இப்படி காலைல இருந்து நடந்துட்டு தான் இருக்கோம்..." 😑

தமிழ்மாறன் : "ரோடா இருந்தா பரவாயில்ல இப்படி வயல்க்கு நடுவுல போகும் போது எந்த வண்டில போறது..."

அர்ஜுன் : "அதுவும் சரிதான் ஆனா எனக்கு உங்க ஜீப் மேல ஒரு க்ரஷ்..." 😍

தமிழ்மாறன் : "அதுக்கென்ன நாளைக்கு ஜீப் எடுத்துட்டு போய் ஊரை சுத்தி பாருங்களேன்... இன்னைக்கு எங்கயுமே போகலல..."

அர்ஜுன் : "எனக்கு வழி தெரியாதே..." 🤷🏻‍♂️

தமிழ்மாறன் : "அஞ்சலிய அழைச்சிக்கோங்க அவளுக்கு வழி தெரியும்..."

அஞ்சலி : "அண்ணா இன்னைக்கு உன்னால ஸ்கூட்டி ஓட்டவே இல்ல ஒழுங்கா நாளைக்கு வீட்டுலயே இரு..."

உதய் : "என்ன ஸ்கூட்டி..." 🤔

அஞ்சலி : "ஹேய் உதய் தமிழ் அண்ணா எனக்கு ஸ்கூட்டி வாங்கி குடுத்துருக்காங்க வீட்டுக்கு வா காட்டுறேன்..." 😊

உதய் : 😯 "உனக்கு ஸ்கூட்டியா எத்தனை பேரை சாகடிக்க போறியோ..." 😅

அஞ்சலி : "போ டா எரும மாடே..." 😏

மிருனாழினி : "என்ன டி இவ்ளோ நேரம் மாமா மாமானு கொஞ்சிட்டு இருந்த இப்போ வாடா போடா எருமனு சொல்லுற..." 🤔

உதய் : "மரியாதை எல்லாம் வீட்டுல இருக்கும் போது மட்டும் தான் மா வெளில வந்துட்டா இவள்ட மரியாதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது..." 😅

அஞ்சலி : "தெரிஞ்சா சரிதான்..." 😉

"பேசிட்டே தமிழ்மாறன் வீட்டுக்கு போய்ட்டாங்க..." 🏡

"தாத்தா வாசல்லயே மர சேர்ல உட்கார்ந்து இருந்தாரு ஆச்சி அவங்களுக்கு கீழ உட்கார்ந்து வெத்தலை, பாக்கு இடிச்சிட்டு இருந்தாங்க..."

உதய் : ஹாய் தாத்தா, ஹலோ ப்யூட்டி ( தாத்தா கால தொட்டு வணங்கிட்டு ஆச்சி தோள்ல கை போட்டு உட்கார்ந்தான்)

தாத்தா : "ஏன் டா ராஸ்கல் எத்தனை முறை சொல்லுறது என் பொண்டாட்டிய ப்யூட்டி சொல்லாதனு..." 😒

உதய் : "தாத்தா நீதான் கிழவனாகிட்ட என் ஆச்சிக்கு இன்னும் அழகு குறையவே இல்ல அதான் ப்யூட்டினு சொல்லுறேன் உனக்கு என்ன பொறாமை..." ☹️

தாத்தா : "தமிழு முதல்ல இவனை உள்ள அழைச்சிட்டு போ வந்ததும் ஆரம்பிச்சிட்டான்..."

தமிழ்மாறன் : 😄😄😄 உள்ள வா டா...

"மகாலெட்சுமி அப்போ தான் கிட்சன்ல இருந்து வெளில வந்தாங்க..." 👩‍🍳

உதய் : 😍 அத்தை ( அவங்க கன்னத்தை கிள்ளுனான்)

மகாலெட்சுமி : காலைலயே ஊர்ல இருந்து வந்துருக்க ஆனா, இப்போ தான் நம்ம வீட்டுக்கு வரனும்னு தோனுச்சா டா ( அவன் காதை புடிச்சி திருகுனாங்க)

உதய் : 😖😖😖 ஆஆஆ அத்தை வலிக்குது...

மகாலெட்சுமி : "அவன் காதை விட்டாங்க..."

உதய் : "வயல்ல தமிழ பார்த்துட்டு இங்க வரலாம்னு தான் இருந்தேன் அத்தை ஆனா, அப்போ தான் தெரிஞ்சது நம்ம அஞ்சலி அவ ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இருக்குறது அதான் அப்படியே நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டேன்..."

மகாலெட்சுமி : "நேத்து தான் புள்ளைங்க எல்லாம் வந்தது அவங்களுக்கு புடிச்சதை கூட சமைச்சி போட விடாம அண்ணனும் தங்கச்சியும் வயல்க்கு இழுத்துட்டு போய்ட்டாங்க..."

தமிழ்மாறன் : "இன்னும் ஒருமாசம் இங்க தான மா இருப்பாங்க அவங்க ஆசை படுறதை கேட்டு சமைச்சி போடு யாரு வேண்டானு சொன்னா..." 😌

மிருனாழினி : அச்சோ! அம்மா எங்களை பத்தி தான் சொன்னீங்களா எங்களுக்குனு நீங்க ஸ்பெஷலா எதுவும் பண்ண வேண்டா மா...🙃🙂

அர்ஜுன் : "ஆமா மா மிச்சம் மீதி எது இருந்தாலும் போடுங்க மிரு திம்பா..."

தமிழ், உதய், அஞ்சலி : 😂😂😂 சத்தமா சிரிச்சாங்க...

மிருனாழினி : எரும எரும ( அவனை போட்டு அடிச்சா)

அர்ஜுன் : "ஆஆஆ வலிக்குது டி பிசாசு..."

அஞ்சலி : "உதய் வா என் ஸ்கூட்டிய காட்டுறேன்..."

மகாலெட்சுமி : பேர் சொல்லாத டி மாமா சொல்லு ( அவ முதுகுல அடிச்சாங்க)

அஞ்சலி : உதய் மாமா வா 😬 ( பல்ல கடிச்சிகிட்டு கூப்பிட்டா)

உதய் : 😄😄😄 வா...

தமிழ்மாறன் : "அவங்க போகட்டும் நீங்க டிவி பாருங்க நான் மாட்டுக்கு தண்ணி வச்சி வைக்கோல் போட்டுட்டு வந்துடுறேன்..."

மிருனாழினி : "நாங்களும் வரோம் மாறன்... வா அர்ஜூ போலாம் அங்க இரண்டு கன்றுகுட்டி இருக்கு அழகா இருக்கும்..." 😍

அர்ஜுன் : "அப்படியா அப்போ வா போலாம்..." 🤔

"தமிழ்க்கு முன்னாடியே இரண்டு பேரும் அங்க போய்ட்டாங்க..."

தமிழ்மாறன் : தண்ணி தொட்டில தவுடு, புண்ணாக்கு போட்டு கலக்கி ஒவ்வொரு மாடா அவிழ்த்து கொண்டு வந்து தண்ணி காட்டிட்டு திரும்ப போய் கட்டுனான்...

மிருனாழினி, அர்ஜுன் : "இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு கன்றுகுட்டிய கொஞ்சுட்டு இருந்தாங்க..." 🐄🐄

அஞ்சலி : "உதய் ஸ்கூட்டி எப்படி இருக்கு..." 🛵

உதய் : "செம்மயா இருக்கு..."😍

அஞ்சலி : வா டவுண்டு போலாம்...

உதய் : "தமிழ்ல வச்சி தான் முதல்ல போகனும்னு சொன்ன..."

அஞ்சலி : "அண்ணனும் நீயும் ஒன்னு தான் மாமா முதல்ல நீ வா அப்பறம் அண்ணாவ அழைச்சிட்டு போறேன் அண்ணா ஒன்னும் நினைச்சிக்க மாட்டாங்க..."

உதய் : "சரி வா..."

"அஞ்சலி ஸ்கூட்டி ஸ்டார்ட் பண்ணவும் உதய் பின்னாடி உட்கார்ந்தான்..." 🛵

அஞ்சலி : "போலாமா..."

உதய் : "போ போ உன்னை நம்பி தான் பின்னாடி உட்காருறேன் உயிரோட கொண்டு வந்து திரும்ப விட்டுடு..."

அஞ்சலி : "பச் உதய் இப்படியே பேசுனா கீழ தள்ளி விட்டுடுவேன் டா..."

உதய் : ஓகே ( வாய்ல விரல வச்சி உட்கார்ந்தான் )

அஞ்சலி : 😄😄😄 சமத்து டா நீ ( கண்ணாடில தெரிஞ்ச அவன் முகத்தை தொட்டு முத்தம் குடுத்தா)

உதய் : "அட போ டி குட்டி சாத்தானே இருட்ட ஆரம்பிச்சிட்டு..."

அஞ்சலி : "ஓகே ஓகே டென்சன் ஆகாத...'

"அஞ்சலி ஸ்லோவா மூவ் பண்ணி அப்பறம் கொஞ்சம் வேகமா போனா..." 🛵

"கொஞ்ச தூரம் போனதும் ஒரு வண்டி குறுக்க வந்து நின்னுச்சி..."

அஞ்சலி : இடியட் அறிவில்ல...

          : இல்ல உனக்கு இருந்தா கொஞ்சம் குடேன்...

உதய் : டேய் கதிர் என்ன வேணும் உனக்கு ( கீழ இறங்குனான்)

கதிரேசன் : "டேய் மச்சான் எப்ப வந்த ஊர்ல இருந்து..." 🤔

உதய் : "அதை கேட்டு நீ என்ன பண்ண போற..." 😏

கதிரேசன் : "எப்ப வந்தனு தான கேட்டேன் அதுக்கு ஏன் கோவபடுற..."

உதய் : "உங்களுக்குலாம் என்ன தான் டா ப்ரச்சனை சாய்ந்தரம் உன் தங்கச்சி இப்போ நீயா என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா..."

கதிரேசன் : "ஓஓஓ சாய்ந்தரம் அங்க தான் வந்தாளா அதான் கனி சோகமா இருக்கா போல..." 😯

உதய் : "எனக்கு அதெல்லாம் தேவை இல்லாதது வழி விடு ஒழுங்கா..."

கதிரேசன் : சரி கோவபடாத ( அவன் வண்டிய பின்னாடி கொண்டு போனான்)

உதய் : "பாப்பா பின்னாடி போ நான் ஓட்டுறேன்..."

அஞ்சலி : "கதிர முறைச்சிட்டே பின்னாடி தள்ளி உட்கார்ந்தா..."

கதிரேசன் : "அவன் வண்டில கைய கட்டி உட்கார்ந்துகிட்டு அவளை பார்த்து என்னனு புருவத்தை உயர்த்துனான்..." 🤨

அஞ்சலி : 😏😏😏 "உதட்டை சுளிச்சிட்டு முகத்தை திருப்பிகிட்டா..."

உதய் : "அவனை முறைச்சிட்டே வண்டி ஸ்டார்ட் பண்ணி கிளம்பிட்டான்..." 🛵

கதிரேசன் : " யப்பா இரண்டு பேரும் பார்வையாலே எரிச்சிடுவாங்க போலயே " அவங்க இரண்டு பேரையும் பார்த்து சிரிச்சிட்டு அவனும் போய்ட்டான்...

தொடரும்...

# Sandhiya.