வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) -25

அஞ்சலி : அவ வாசல் கிட்ட வரும் போதே வீட்டுக்குள்ள பேச்சு சத்தம் கேட்டவ உள்ள எட்டி பார்த்தா...

அர்ஜுன்க்கு இரண்டு பக்கமும் மிருவும் கனியும் உட்கார்ந்து பேசி சிரிச்சிட்டு இருந்தாங்க...

அஞ்சலி : 😠😠😠 கோவத்துல வேக வேகமா மூச்ச இழுத்து விட்ட படி அவங்கள்ட போனா...

இவ வந்தது கூட தெரியாம மூனு பேரும் பேசிட்டு இருந்தாங்க... கனி இங்க வந்ததை விட அர்ஜுன் பக்கத்துல உட்கார்ந்து பேசுனது அவளுக்கு இன்னும் கோவத்தை உருவாக்குச்சி அது ஏன்னு அவளுக்கே தெரியல...

அஞ்சலி : கனி கைய புடிச்சி இழுத்தா...

திடீர்னு அவளை புடிச்சி இழுக்கவும் கனி கீழ விழ போய்ட்டா அர்ஜுன் தான் அவளை புடிச்சி நிக்க வச்சான்...

அஞ்சலி : நீங்க ஏன் அவ கைய புடிக்குறீங்க ( அவன் கைய தட்டி விட்டா)

அர்ஜுன் : கீழ விழ போனாங்களேனு புடிச்சேன் அது தப்பா மா...

அஞ்சலி : ஆமா தப்பு தான் பேசுனது மட்டும் இல்லாம அவ கூட 32 பல்லையும் காட்டி பேசி சிரிச்சிட்டு இருக்கீங்க...

மிருனாழினி : நானும் தான் பேசுனேன் நீ ஏன் அவனை மட்டும்
சொல்லுற...

அஞ்சலி : நான் உன் கிட்ட கேட்கல மிரு ( அர்ஜுன் பக்கம் திரும்புனா ) நீங்க சொல்லுங்க அவ கூட ஏன் சிரிச்சி பேசுறீங்க...

அர்ஜுன் : நான் சும்மா சாதாரணமா தான் மா பேசுனேன்...

அஞ்சலி : 😒😒😒 நிஜமாவா..

அர்ஜுன் : நிஜமா...

அஞ்சலி : ஏய் கனி நீ ஏன் இங்க வந்த...

கனிமொழி : நான் பெரியம்மாவ பார்க்க வந்தேன்...

அஞ்சலி : அவங்க கிட்சன்ல இருப்பாங்க போய் பேசிட்டு கிளம்பு...

கனிமொழி : பெரியம்மா தான் இவங்க கூட பேசிட்டு இருக்க சொன்னாங்க...

அஞ்சலி : அவங்க சொன்னா உடனே பேசுவியா இவங்களுக்கு பொண்ணுங்க கூடலாம் பேச புடிக்காது ( அர்ஜுனை காட்டி சொன்னா)

அர்ஜுன் : 😱😱😱 ( அவன் நெஞ்சுல கை வச்சான்) நான் எப்போ சொன்னேன்...

மிருனாழினி : அவனை பார்த்து நக்கலா சிரிச்சா...

கனிமொழி : இல்லயே நல்லா தான பேசுனாங்க...

அஞ்சலி : அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம் அம்மாவ பார்க்க வந்தா அவங்களை பார்த்துட்டு போய்ட்டே இரு இவங்கள்ட பேசுற வேலை எல்லாம் வச்சிக்காத புரிஞ்சதா...

கனிமொழி : ம்ம்ம்... சரி நான் இன்னொரு நாள் வரேன் பாய் மிரு, பாய் அர்ஜூ...

அஞ்சலி : என்ன மிரு, அர்ஜூனா அந்த அளவுக்கு ஆகிடுச்சா... இவங்க என்னோட ஃப்ரண்ட்ஸ் எனக்காக வந்துருக்காங்க நீ ஒன்னும் உரிமை கொண்டாட வேண்டா புரிஞ்சதா...

கனிமொழி : 😖 ( நாம ஸ்கூல் படிக்கும் போது என்கூட யாராவது பேசுனாலும் இதான் டி பண்ணுவ இப்போ நான் வேண்டாதவ ஆகிட்டேன்ல எல்லாம் என்னோட தப்பு தான் 😭 ) ம்ம்ம் ( அவ போய்ட்டா)

அஞ்சலி : அவளும் ரூம்க்கு போய்ட்டா...

அர்ஜுன் : அடேங்கப்பா சர வெடி  மாதிரி வெடிச்சிட்டு போய்ட்டா... அந்த பொண்ணுக்கு உன்மேல அவ்ளோ பொசசீவ்னஸ் போல...

மிருனாழினி : என்மேல இல்ல உன்மேல தான் அந்த பொண்ணு கனி உன் பக்கத்துல உட்கார்ந்ததுக்கே இப்படி ரியாக்ட் பண்றாளே ஒருவேளை லவ்வா இருக்குமோ...

அர்ஜுன் : ஹேய் ச்சி அதெல்லாம் இல்ல மிரு நீயா ஒன்னு சொல்லாத...

மிருனாழினி : அவளே வந்து லவ் சொன்னாலும் நீ ஓகே சொல்ல மட்ட போலயே...

அர்ஜுன் : மிரு கிராமங்கள்ல வயசு பொண்ணு இருக்குற வீட்டுல ஒரு பையனை தங்க வைக்குறது அவ்ளோ ஈசியான விஷயம் இல்ல என்னை நம்பி இந்த வீட்டுல தங்க வச்சிருக்காங்க...

நாம இருக்குற வரை இந்த வீட்டுக்கும் அஞ்சலிக்கும் எந்த கெட்ட பெயரும் ஏற்படுத்திடாம போய்டனும்...

மிருனாழினி : அப்போ அஞ்சலி லவ் சொன்னா ஏத்துக்க மாட்டியா அர்ஜூ 😖

அர்ஜுன் : ஒருவேளை அஞ்சலி என்னை லவ் பண்ணுறதா சொன்னா அப்பா, அம்மா கிட்ட சொல்லி முறைபடி பொண்ணு கேட்க சொல்லுவோம் இவங்களும் ஒத்துகிட்டா அப்பறம் கல்யாணம் தான்...

மிருனாழினி : அப்பவும் நீ லவ் பண்ணுறனு சொல்ல மாட்டியா அர்ஜூ..

அர்ஜுன் : கல்யாணம் பண்ணி என் பொண்டாட்டி ஆனா பிறகு அந்த உரிமைல லவ் பண்ணுவேன்... உனக்கே தெரியும் என் அப்பா, அம்மா லவ் மேரேஜ் தான் சோ எந்த ப்ரச்சனையும் இல்ல அவங்க ஈசியா சம்மதம் சொல்லிடுவாங்க...

மிருனாழினி : ஐ நோ அர்ஜூ பெரியப்பா, பெரியம்மா உன் கூட
ஃப்ரண்ட்லியா தான் பழகுவாங்க உனக்கு சூப்பர் மாம், டேட் கிடைச்சிருக்காங்க...

😢😢😢 பட் நான் பாரு அப்பா, அம்மா இருந்தும் அனாதை மாதிரி இருக்கேன்... அவ்ளோ பெரிய வீட்டுல நான் மட்டும் தனியா சாப்பிட்டியானு கேட்க கூட ஆள் இல்லாம...

அர்ஜுன் : மிரு என்னடா இப்படி சொல்லிட்டா நாங்க எல்லாம் இருக்கோம்ல... நீ எங்களோட பேபி டால் உனக்காக நான், அப்பா, அம்மா முதல் ஆளா வருவோம் சோ ஃபீல் பண்ணாத...

மிருனாழினி : ம்ம்ம்...

அர்ஜுன் : ஓகே வா பின்பக்கம் போய் கன்று குட்டி கூட விளையாடலாம்...

மிருனாழினி : ம்ம்ம் வா...

இவங்க போனதும் இதுவரை இவங்க பேசுனதை தூண்க்கு பின்னாடி இருந்து கேட்டுட்டு இருந்த ஆச்சியும் தாத்தாவும் வெளில வந்தாங்க...

தாத்தா : ஏன்டி இந்த பிள்ளைங்க ஊர்ல இருந்து வந்தப்ப ஆர்ஜுன் இங்க தங்குனா ஊர் காரங்க தப்பா பேசுவாங்க அது இதுனு அன்னைக்கு ராத்திரி புலம்புனியே இப்போ அந்த புள்ள பேசுனதை கேட்டியா...

ஆச்சி : ஆமா யா நாலு நாள் தங்குன இந்த வீட்டோட மானம் போக கூடாதுனு இந்த புள்ள எவ்ளோ யோசிக்குறான் இவனை போய் தப்பா நினைச்சிட்டேனே...

தாத்தா : அதுக்கு தான் யாரா இருந்தாலும் பார்த்து பேசனும்னு சொல்லுறது...

ஆச்சி : இனிமேல் அந்த தப்ப பண்ண மாட்டேன்...

தாத்தா : அஞ்சலி மனசுல மட்டும் அர்ஜுன் இருக்கானு தெரிஞ்சா நானே இந்த கல்யாணத்தை முன்ன நின்னு நடத்துவேன்...

ஆச்சி : அதை பத்தி அப்பறம் பேசலாம் இப்போ இந்த மிரு பொண்ணோட மன கஷ்டத்தை எப்படியாவது போக்கனும்...

தாத்தா : நம்மளால என்ன பண்ண முடியும்...

ஆச்சி : ஆடி மாசம் நம்ம ஊர்ல திருவிழா நடக்கும்ல அப்போ அர்ஜுன், மிருவோட அப்பா, அம்மாவயும் இவங்க கூட வர வைக்கனும்... அவங்க வந்ததும் மிரு அப்பா, அம்மாவோட மனசை மாத்தி எப்படியாவது மிரு கூட அன்பா நடந்துக்க வைக்கனும்... அப்படியே அர்ஜுன் அப்பா, அம்மாவும் எப்படி பட்டவங்கனு பேசி தெரிஞ்சிகனும்...

தாத்தா : கிழவி திட்டம் எல்லாம் பெருசா தான் இருக்கு ஆனா நடக்குமா...

ஆச்சி : அதெல்லாம் நடக்கும், நான் கிழவினா நீ மட்டும் என்ன குமரனா போய் வேலைய பாரு யா கிழவா...

தாத்தா : 😏 போ டி...

( இவங்க நினைக்குற அளவு மிரு அப்பா, அம்மா மனசை மாத்துறது ஈசியான காரியம் இல்லங்குறதை கூடிய சீக்கிரம் தெரிஞ்சிப்பாங்க)

தொடரும்...

# Sandhiya.